கபடி விளையாடலாம் வாங்க...!
➦➠ by:
அரசியல்,
மணிமாறன்,
விழிப்புணர்வு,
விளையாட்டு
சமீபத்தில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கபடி விளையாட்டின் வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய செய்தி ஊடகத்தில் வெளியானபோது மிகுந்த உற்சாகமாக மாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
அதுசரி....
"கபடி என்று ஒரு விளையாட்டு இருக்கு தெரியுமா..?"
"எது.. இந்த கில்லி படத்தில விஜய் ஒத்த ஆளா அஞ்சு பேரை தூக்கிகிட்டு வருவாரே அதுவா..? எதுத்தாப்ல உள்ளவன் விரல் இடுக்கில பிலேட வச்சி பாடி கிட்டு வர்றவன கையை கீறி விடுவானே அதானே...?
இன்னும் கொஞ்ச காலத்திற்கு அப்புறம் இப்படித்தான் பேசிப்பாங்க. ஏனெனில் கிராமப்புற மண்ணோடு ஜீவனாக கலந்திருந்த கபடி விளையாட்டு , தன் கடைசி மூச்சுக்காக இழுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சினிமாவின் இப்படித்தான் காட்சிப்படுத்திக் கேவலப்படுத்துகிறார்கள்.
என் பள்ளிப்பருவங்களில் கோடை விடுமுறை விட்டால் போதும். எங்களுக்கு இருக்கிற ஒரே எண்டர்டைன்மெண்ட் கபடிதான். கதிரறுத்து கட்டாந்தரையாக இருக்கும் வயல்வெளிகளை கபடி மைதானமாக்கிவிடுவோம். ஊரில் உள்ள இளவட்டங்கள் எல்லாம் தனித்தனியாக அணிபிரித்து அவர்கள் ஒரு பக்கம் விளையாட, சிறுவர்கள் நாங்களெல்லாம் ஒரு அணிசேர்த்து விளையாடுவோம்.
அந்தக் காலகட்டத்தில் எல்லா ஊரிலும் கபடி டோர்னமென்ட் நடக்கும். முதல் பரிசு 555.. இரண்டாம் பரிசு 333.. மூன்றாம் பரிசு 222. இது மாதிரி போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் ஒட்டியிருக்கும். இரவு எட்டு மணி வாக்கில் ஆரம்பிக்கும் இந்தப்போட்டிகள் மறுநாள் காலை 9..10..என நீண்டுக்கொண்டே செல்லும்.
அப்போதெல்லாம் ஊரில் திருவிழா, தேரோட்டம், பொங்கல் பண்டிகை என்று எந்த விசேஷமாக இருந்தாலும் ஒரு கபடி போட்டி கட்டாயம் இருக்கும். எங்க ஊரு மிராசுதார் ஒருத்தர் ( வயசானவர்தான் ) இறந்துவிட்டார். அவர் கருமாதியை சிறப்பா கொண்டாட வேண்டும் என்று அன்று கபடிப் போட்டியை நடத்தினாங்க எங்க ஊர் இளவட்டங்க.. அந்த அளவுக்கு கிராமப்புறங்களில் கபடி விளையாட்டு மேல் ஈடுபாட்டோட இருப்பாங்க.
எப்போது இந்த கபடி விளையாட்டின் மீதிருந்த மோகம் குறைய ஆரம்பித்தது என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை. 90 களின் ஆரம்பத்தில் கிராமப்புரங்களில் நடக்கும் விசேசங்களில் வீடியோ-டெக் எடுத்து விடிய விடிய நான்கு படங்கள் போட ஆரம்பித்தப் பிறகுதான் கபடி மீதிருந்த மோகம் குறைய ஆரம்பித்திருக்கும் என நினைக்கிறேன்.
தற்போதெல்லாம் ஊர்ப்பக்கம் சென்றால் முன்பு கபடி மைதானமாக இருந்த இடங்களெல்லாம் தற்போது கிரிக்கெட் மைதானமாக மாறிவிட்டது. பொடிப்பசங்க எல்லாம் கையில பேட்டோட சுத்துறாங்க. கபடிப் போட்டி தற்போது எங்கேயுமே நடப்பதில்லையாம். எங்க ஊர் பசங்க சொன்னாங்க.. கஷ்டமா இருக்கு.
கல்லூரியில் படித்த போது தமிழ்நாட்டுக் கல்லூரிகளுக்கிடையேலான ' TIES ' எனப்படும் போட்டியில் கல்லூரி கபடி அணியை என் தலைமையில் பிரதிநிதித்து அரை இறுதி வரை சென்றிருக்கிறோம். அதன் பிறகு நமக்கும் அந்த' டச்' இல்லாமல் போய்விட்டது.
அது ஒரு கனாக்காலம்..! போகட்டும்..!
கபடியைப் பற்றி ஒரு சில தகவல்கள் உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்..
கபடி, தெற்காசியாவில் மட்டுமல்லாது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் விளையாடப் படுகிறது. மொத்தம் 65 நாடுகளில் விளையாடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா அசைக்க முடியாத சாம்பியனாக இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய சாதனை..! ( சும்மா.. கிரிக்கெட்..கிரிக்கெட்.. பீத்திக்காதீங்கப்பா... :-) )
கபடி விளையாட பேட், பந்து, நெட் எதுவும் தேவை இல்ல. நம்ம கட்டுடல் மேனி தான் இதற்கு மூலதனம். மற்ற விளையாட்டுகளில் கை, கால், தலை என்று உடல் உறுப்புகளுக்கு மட்டும் வேலை இருக்கும்.ஆனால் கபடியில் இவைகளோடு சேர்த்து மூச்சுப்பயிற்சியும் தேவை.
கபடி என்ற சொல் தமிழிலிருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. கை +பிடி தான் கபடியாகியது. அதாவது,அணியினர் தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு விளையாடுவது என்று பொருள். ஆனால் இது ஹிந்தி வார்த்தை எனவும் KABBADI என்றால் மூச்சை விடாமல் நிறுத்திப்பிடித்தல் (HOLDING THE BREATH)எனவும் கூறுவார்கள்.
இந்த விளையாட்டு வெவ்வேறு நாடுகளில் அவர்களது அமைப்புக்கேற்ப விளையாடப் படுகிறது என்றாலும் இதன் ஆட்ட முறை ஒன்றுதான். கபடி விளையாடும் போது அவரவர் மொழிக்கேற்ப பாடும் முறை (chant word ) வேறுபடும் .
கபடி (kabbadi) --------------- இந்தியா ,பாகிஸ்தான்
ஹடுடு (hadudu) ----------------- பங்களாதேஷ்
டூ-டூ (do-do) ----------------- நேபாளம்
குடு (guddo) ----------------- ஸ்ரீ லங்கா
சடு-குடு (chado-guddo) ----------------- மலேசியா
டெசிப் (techib) ----------------- இந்தோனேசியா
கபடியின் வகைகள் ;
இந்தியாவில் கபடி மூன்று முறைகளில் விளையாடப்படுகிறது.
1 . சர்ஜீவ்னி
2 . காமினி
3 . அமர் (பஞ்சாப் ஸ்டைல்)
இதில் சர்ஜீவ்னி முறைதான் நம்ம தென்னிந்தியாவில் விளையாடப்படும் முறை. பஞ்சாப் பகுதியில் அமர் முறை விளையாடப்படுகிறது. இந்தியா தொடர்ந்து சாம்பியனாக இருப்பதும் இந்த அமர் முறை கபடியில்தான்.
இதைப்பற்றி ஒரு நீண்ட ஆய்வு செய்து வலைப்பூ ஆரம்பித்த புதிதில் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்...
கபடி.... கபடி..... கண்டுபிடி..
ஒலிம்பிக் போட்டியில் கபடியை சேர்க்கும்படி நீண்ட காலமாக இந்தியாவிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி சேர்க்கப்பட்டால் நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு தங்கம் நிச்சயம். யார் கண்டது... இப்படித்தான் ஹாக்கியில் முதலில் நம்மவர்கள் கலக்கினார்கள். பிறகு நம்மகிட்ட ஹாக்கி கத்துக்கிட்டவன் எல்லாம் இப்ப மெடல் வாங்குகிறான்..நமக்கு ஒரு ஐஸ்கிரீம் கப் கூட கிடைக்க மாட்டேங்கிறது. ஒருவேளை கபடியும் அப்படி ஆகலாம்.
----------------------((((((((((((((()))))))))))))-----------------
அடுத்து பதிவர்கள் அறிமுகம்...
கவிஞர் மகுடேசுவரன்.. பிரபலமானக் கவிஞர்.நிறைய பேருக்கு தெரிந்த முகம்தான் . சமீபத்தில் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து பேசினார். பேஸ்புக்கில் 'வலி மிகுதல்' தொடர்பாக தொடர் எழுதிவந்தார். மிகவும் ரசித்துப் படித்தப் பதிவு அது. வலைப்பூவில் எழுதும்போது நாம் பெரும்பாலும் சந்திப்பிழைகளில்தான் கோட்டை விடுவோம். இவரது தொடர்களைப் படித்தப் பின்புதான் கொஞ்சம் சந்திப்பிழைகளைத் திருத்திக் கொண்டேன்.
வலிமிகுதல் தொடர்பாக உள்டப்பியில் நான் கேட்ட சில சந்தேகங்களை அவர் தீர்த்து வைத்திருக்கிறார். அவரது தளம் இதுதான் வலி மிகுதல் - இலக்கணத் தொடரின் மொத்தத் தொகுப்பு. கண்டிப்பாக வலைப்பூ எழுதுபவர்கள் படிக்க வேண்டிய பதிவு.
சச்சினைப்பற்றி அவர் எழுதிய இன்னொரு பதிவு.
----------------------((((((((((((((()))))))))))))-----------------
----------------------((((((((((((((()))))))))))))-----------------
தோசைக்கு சீனி வாங்கி சாப்பிட்ட கதை தெரியுமா... நகைச்சுவை மிக நன்றாக வருகிறது இவருக்கு.
----------------------((((((((((((((()))))))))))))-----------------
----------------------((((((((((((((()))))))))))))-----------------
----------------------((((((((((((((()))))))))))))-----------------
என் பள்ளித்தோழன் பாலாஜி. யார் ஃபர்ஸ்ட் ரேங்க் என்பதில் எங்களுக்குள் கடுமையானப் போட்டி நடக்கும். 8 வது வரை அவன் 1ST நான் 2ND. எட்டாவது அரையாண்டுத்தேர்வில் நான் 1ST வந்தேன். அதற்குப் பிறகு அந்த இடத்தை நான் தக்க வச்சிகிட்டேன். பள்ளி முடிந்த பிறகு தொடர்பு விட்டுப் போய் விட்டது. வலைப்பூ மூலமாகத்தான் திரும்பவும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. "நடிகர்களின் நிஜ முகங்கள் " என்ற தலைப்பில் பரபரப்பாக தொடர் எழுதி வந்தான். யார் மிரட்டினார்களோ(!) தெரியவில்லை. எழுதுவதை நிறுத்திவிட்டான்.
----------------------((((((((((((((()))))))))))))-----------------
ராஜ்ப்ரியன்.எல்லோரும் அறிந்தவர்தான். சினிமா நடிகர்-நடிகைளும் பொங்கல் வாழ்த்தும் தேவையா ? என்று நச் கேள்வி கேட்கிறார் . கோயாபல்ஸ்சான கோபால்சாமி.வைகோவின் போர்வாள்களுக்கு சவால் விடுகிறார்.
----------------------((((((((((((((()))))))))))))-----------------
அருமைத்தம்பி ஸ்கூல் பையன் -ன் அனைத்துப் பதிவுகளையும் ரசித்துப் படிப்பேன். உணர்வுப்பூர்வமாக எழுதக்கூடியவர். நெஞ்சைப் பிசையும் நெகிழ்ச்சியானப் பதிவுகள் நிறைய எழுதுவார். தாத்தாவின் நினைவு நாளையொட்டி அவர் எழுதிய பதிவு, பரபரப்பான பதினைந்து நிமிடங்கள் - உண்மைச்சம்பவம் எல்லாமே அருமை. குறிப்பாக தன் சொந்த வாழ்வில் நடந்த நிகழ்வை நகைச்சவை கலந்து சுவைபட எழுதுவார்.
----------------------((((((((((((((()))))))))))))-----------------
விஜயபாஸ்கர் விஜய் : திரு.சி.சு.செல்லப்பா, திரு.சுந்தர ராமசாமி தொடங்கி இன்றைய சாரு, ஜெமோ வரையான அனைத்து இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைக் கரைத்துக் குடித்தவர். அது இவரது நிலைத்தகவல்களில் பிரதிபலிக்கும். பேஸ்புக்கில் இவர் எழுதும் ஒவ்வொரு விசயமும் அவ்வளவு சுவாரஸ்யம். பெரும்பாலும் இலக்கிய சம்மந்தமான பதிவுகளை எழுதுவார். அந்தரங்க விசயங்களையும் ஆபாசமில்லாமல் எழுதக்கூடியவர். கதை போல ஒன்று.... என்கிற தலைப்பில் குறுங்கதைகளை தொடர்ந்து பேஸ்புக்கில் எழுதிவந்தார். அதில் சதமும் அடித்தார். எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். சில கதைகளைப் படித்து அசந்துபோய் அவரது உள்டப்பியில் பாராட்டியிருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு மரப்பசு என்ற வலைப்பூவை ஆரம்பித்து அதிலும் எழுதிவருகிறார். நல்ல எழுத்தாளுமை உள்ளவர்.
----------------------((((((((((((((()))))))))))))-----------------
|
|
அன்பின் மணிமாறன் ..
ReplyDeleteஎன்னையும் தாங்கள் தேர்வு செய்து - அறிமுகம் செய்வித்தமைக்கு -
நன்றியும் ., மகிழ்ச்சியும்!..
முதல் கருத்துக்கு மிக்க நன்றி சார்
Deleteஅனைத்தும் தொடரும் சிறந்த தளங்கள்...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி DD
Deleteகபடி பற்றி பல விடயங்களை அறியமுடிந்தது.கபடி மட்டுமல்ல ஏனைய கிராமிய விளையாட்டுகளும் ஆபத்தில் தான் உள்ளன.
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்
Deleteஅனைத்தும் சிறப்பான தளங்கள்! என் தளம் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! தினமும் ஒரு பதிவு எழுதுகிறார். (காப்பி- பேஸ்ட் இல்லாமல்) வரிகள் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஒருவருடம் முன்பு வரை காப்பி-பேஸ்ட் பிளாக்கர் என்ற கருத்தை துடைத்தெறிந்துள்ளேன் என்பது மகிழ்ச்சிதானே! நன்றி!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி suresh
Deleteகபடி பற்றிய நிறைய பயனுள்ள தகவலுக்கு நன்றி .அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி தனிமரம்
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துக்கு மிக்க நன்றி ரூபன்
Deleteசிறு வயதில் கபடி ஆடிய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்.... இப்போது கபடி என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் இந்த விளையாட்டு இருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்....
ReplyDeleteஎன்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி மணி அண்ணே...
கருத்துக்கு மிக்க நன்றி தம்பி
Deleteகபடி பற்றிய தகவலுடன் உங்கள் அறிமுகப்பதிவு அருமை!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி கிரேஸ்
Deleteதோசைக்கு சீனி வாங்கி சாப்பிட்ட கதை தெரியுமா... நகைச்சுவை மிக நன்றாக வருகிறது இவருக்கு.
ReplyDelete----------------------((((((((((((((()))))))))))))-----------------
இங்கு நான் சுட்ட தோசையை திருப்பி போட்டதற்கு மிக்க நன்றி!
மேலும் மற்ற சிறப்பான பதிவுகளை சுவைபட அறிமுகம் செய்வித்தமைக்கு நன்றி!
கருத்துக்கு மிக்க நன்றி சார்
Deleteசமீபத்தில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கபடி விளையாட்டின் வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய செய்தி ஊடகத்தில் வெளியானபோது மிகுந்த உற்சாகமாக மாகவும் சந்தோசமாகவும் இருந்தது.////
ReplyDeleteநான் தாண்டி காத்தி
நல்லமுத்து பேத்தி ..
என்று ஒரு படத்தில் சடுகுடு விளையாடியவராயிற்றே முதல்வர் அம்மா..!
ஹா..ஹா.. நன்றி மேடம்
Deleteகபடி பற்றிய செய்திகள் அருமை.
ReplyDeleteஅறிமுகங்கள் சிறப்பு . சிலவற்றை இப்போதுதான் அறிகிறேன். வாழ்த்துக்கள்
கருத்துக்கு மிக்க நன்றி பாஸ்
Deleteகபடி பற்றிய அரிய தகவல்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி Viya Pathy..
Deleteஇந்தியப் பெண்கள் அணி கடந்த மாதம் உலகக் கோப்பை வென்றதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி..
ReplyDeleteகடந்த இரு வருடங்களுக்கு முன்பு உலகக் கோப்பை வென்ற இந்தியப் பெண்கள் கபடி அணியை கோப்பையுடன் ஆட்டோவில் வர வைத்து விட்டனர் .....
மறைந்து வரும் கபடியை மேலும் உக்கப் படுத்த வேண்டும்.
நிச்சயமாக... கருத்துக்கு மிக்க நன்றி
Deleteஸ்கூல் பையனின் அந்த தாத்தா பதிவு ஏ கிளாஸ்.
ReplyDeleteஉண்மைதான் பாஸ்... நன்றி
Deleteகபடி பற்றிய தகவல்கள் நன்று.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.