வலைச்சரத்தில் அடியேனின் அறிமுகம்...
➦➠ by:
மணிமாறன்
இணைய நட்புகளுக்கு வணக்கமுங்க ...!
'யாருடா இவன் கோமாளி' என்று மங்கிகேப் போட்ட விக்ரம்பிரபுவைப் பார்த்து வம்சி கிருஷ்ணா கேட்கிற மாதிரி கேட்டுடாதிங்க.. நானும் இந்தப் பதிவுலகத்தில் இரண்டு வருசமாக கூட்டிப் பெருக்கிகிட்டு இருக்கேன்.
அடியேன் மணிமாறன்..... திருவாரூர்காரன்.
எனக்கு பாலூட்டியதும் கடைசியில் பாலூற்றப்போவதும் அதே மண்தான். முதலில் என் தாய் மண்ணுக்கு வணக்கம்... தற்போது சிங்கையில் வசிக்கிறேன். வெளிநாட்டில் வசித்தாலும் இந்தியன் என்கிற அடையாளத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்கிற வைராக்கியத்தில் இருப்பவன். முதலில் இந்தியன்.. அப்பாலதான் தமிழன் என்ற கொள்கையுடையவன்.
" படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம். எடிட்டர்கள் ரொம்பச் சிறிய மாற்றத்தில் அந்தக் கதையைச் சிறப்பாக்கிவிடுவார்கள். கணையாழியில் இருந்தவரை ஒரு கதையை இரண்டு முறை படிக்காமல் வெளியிட்டதில்லை. உடனே உடனே எப்படி எழுதுகிறார்கள் என ப்ளாக்கில் எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது."
இது வெகு சமீபத்தில் வலைப்பூ எழுத்தாளர்களைப் பற்றி சமகால இலக்கிய ஜாம்பவான் அசோகமித்திரன் அவர்கள் சிலாகித்து சொன்னது. இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொண்டு...
திரும்பவும் என்னை அறிந்தவர்கள், அறிந்தும் அறியாமல் இருப்பவர்கள், முதல் முறையாக அறிபவர்கள் எல்லோருக்கும் வணக்கமுங்க...!
உண்மையிலேயே வலைப்பூ ஒரு மகா சமுத்திரம்ங்க. ஆரம்பத்தில், சிறிய குட்டை என்று நினைத்து குதித்து விட்டேன். பிறகுதான் புரிந்தது, பல திமிங்கிலங்கள், சுறாக்கள் சுழன்று அடிக்கும் இந்த வலைப்பூ கடலில் நான் ஒரு மீன் குஞ்சு என்று. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நீச்சல் பழகிகிட்டு இருக்கேன்.
கரையேறிவிடலாமா என்று நிறைய தடவை நினைத்ததுண்டு. திமிங்கிலங்கள், சுறாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் குஞ்சுகளாக நீச்சல் பழகியதுதானே.. நாமும் நீந்திப் பார்க்கலாம் என்று இரண்டு வருடமாக நீந்திக்கொண்டிருக்கிறேன்... ஆனால் இலக்கு என்று எதுவுமில்லை.
எனக்கு ஊசி என்றாலே பயம். யாரோ கத்தியை எடுத்து குத்துற மாதிரி ஒரு ஃபீலிங். என்ன.. ஊசி பார்ப்பதற்கு சின்னதாக இருக்கிறதே தவிர அதுவும் ஒரு கத்திதானே...! டாக்டர் எனக்கு ஊசி போடப் போகிறார் எனத் தெரிந்தாலே போதும்.கையை விறைப்பா வச்சிப்பேன். அவரு பார்த்துவிட்டு " தம்பி கையை லூசுல விடுப்பா.. அப்பத்தான் ஊசிப்போட முடியும்" என்பார். அவரு ஊசிய கிட்ட எடுத்துட்டு வந்த உடனே திரும்பவும் விறைப்பா வச்சிப்பேன். அவர் டென்சனாகி " இப்ப லூஸ்ல விடப்போறியா இல்ல படுக்க வச்சி பின்னாடி குத்தவா.." என்று டென்சனாகி கத்துற நிலைமைக்கு வந்துவிடுவார். இப்ப எதுக்கு இது என கேட்கிறீங்களா...?
என் பதிவுகளைப் பற்றி சொல்லத்தான். திடீர் என்று இரண்டு பதிவுகள் ரொம்ப விறைப்பா போடுவேன். கடுமையான அறச்சீற்றம் எல்லாம் இருக்கும். இவ்வளவு சீரியஸ்னஸ் நமக்கு ஆகாதே.. அது நம்ம இயல்பு இல்லையே என்று இரண்டு பதிவுகள் ஜாலியாக போடுவேன்..திரும்பவும் விறைப்பு.. பிறகு ஜாலி... இப்படியே இருநூறு பதிவுகள் தாண்டிவிட்டேன். என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு( அப்படி யாராவது இருக்காங்களா..?) என் இயல்பு என்னவென்று குழப்பமாக இருக்கும்.. ஆனால் நான் ரொம்ப ஜாலியான ஆளு...
ஆகட்டும்...
கடந்த வாரம் சீனா அய்யாவிடமிருந்து மெயில் வந்தது. நம்பவே முடியவில்லை. ஏப்ரல் 1 க்கு இன்னும் முழுசா மூணு மாசம் இருக்கே. அதுக்குள்ளே எப்படி என்று குழம்பி விட்டேன். இல்லை, தமிழ்புத்தாண்டு மாதிரி வருசத்துக்கு இரண்டு தடவை வருகிறதா.? பிறகு நிதானமாக படித்துப் பார்த்தபோதுதான் அது உண்மை என்று புரிய ஆரம்பித்தது.
தமிழ்மணத்தில் முன்பெல்லாம் வாரம் ஒரு பதிவரை அறிமுகம் செய்வார்கள். சிலருக்கு இரண்டு தடவை கூட அறிமுகம் கிடைத்திருக்கிறது. நிறைய பதிவர்கள் பிரபலமானது அப்படித்தான். அடியேனுக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று இலவு காத்த கிளி போல காத்திருந்தேன். கடைசில காய் வெடிச்சி பஞ்சாய் போனது போல அந்தப் பகுதியையே மொத்தமா தூக்கிட்டாங்க...
வலைச்சரம் தொடர்ந்து படித்து வருகிறேன். அவ்வப்போது பின்னூட்டமும் போட்டதுண்டு. என் வலைப்பூவை வலைச்சரத்தில் ஏற்கனவே சில பதிவர் நண்பர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவ்வகையில், T.N.முரளிதரன், பாலா, ஹாஜா மொகிதீன், சசிகலா மேடம் ஆகியோருக்கு நன்றிகள். இதேப்போல நானும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காதா என காத்திருந்தேன்.இங்கே இலவம் வெடிக்காமல் கனிந்துவிட்டது. வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
முதலில் சீனா அய்யாவைப்பற்றி சொல்லனும். கடந்த வாரத்தில் எங்களுக்கிடையே ஐந்தாறு மெயில் போக்குவரத்து நடந்திருக்கும். முதலில் ஆசிரியர் பொறுப்பை ஏற்க முடியுமா என்ற மெயில். சரியென்று பதில் மெயில் அனுப்பிவிட்டு என்னைப்பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் விட்டுவிட்டேன். பிறகு அதைக் கேட்டு திரும்பவும் சீனா அய்யாவிடமிருந்து ஒரு மெயில். நான் அனுப்பிய பதில் மெயில் அவருக்கு சேரவில்லை போல.. தகவல்கள் கேட்டேனே.. விரைவில் அனுப்பவும் என்று மற்றொரு மெயில். அதற்கு நான் ஒரு பதில் மெயில். கடைசியாக சிறப்பாக செய்யுங்கள் என்று ஒரு வாழ்த்து மெயில். இப்படியாக..., என் ஒருவனுக்கே இவ்வளவு பொறுமையாக மெயில் அனுப்பி ஆசிரியர் பொறுப்பேற்க வைப்பதை பார்க்கும் பொழுது , ஒவ்வொரு வாரமும் இதற்காக எவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்படுகிறார் என்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அவரது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
இதன் தொடர்ச்சி இன்றிரவு மற்றொரு பதிவாக வரும்...
நான் இப்படித்தாங்க.. சொல்ல வந்த விஷயத்தை நேரடியா சொல்லாம வளவளனு எழுதிகிட்டே இருப்பேன்.
மீண்டும் இன்று இன்னொரு பதிவில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..
அன்புடன் ..
மணிமாறன்......
(என்னது. என்னத்த கமெண்ட் போடுறதா...? ஒரு வாரம் கலக்குங்க... ஆரம்பமே அசத்தலா இருக்கு... தொடர வாழ்த்துக்கள்... அருமை..., :-), ஹி..ஹி.., தம..1235678.., இதுல ஏதாவது ஒன்னை காப்பி பண்ணி இப்போதைக்கு ஆதரவு நல்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..)
|
|
சோதனை(!) மறுமொழி..
ReplyDeleteதம..1235678. நீங்க சொன்னபடியே போட்டுட்டேன் .ஹி ஹி ...
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteமுதல் பின்னூட்டதிற்கு நன்றி... //தம..1235678.// கமெண்ட் மட்டும் போட்டுட்டு ஓட்டு போடாமல் எஸ்கேப் ஆகிட்டீங்களே பாஸ்... :-))
Deleteவிடுங்க பாஸ் ஒரு நல்ல ஓட்டும் 100 கள்ள ஓட்டும் போட்டுடுவோம்.
Deleteஹா..ஹா..
Deleteஒரு வாரம் கலக்குங்க... ஆரம்பமே அசத்தலா இருக்கு... தொடர வாழ்த்துக்கள்... அருமை..., :-), ஹி..ஹி.., தம..1235678..,
ReplyDeleteமிக்க நன்றி சார்.....
Deleteஅருமையான சுய அறிமுகம்
ReplyDeleteஇந்த வார வலைச்சர ஆசிரியர் பணி
சிறப்பாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா..
Deleteதொடர வாழ்த்துக்கள்... அருமை..., :-),
ReplyDeleteவலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்..!
மிக்க நன்றி மேடம்..
Deleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுய அறிமுகம் அருமை.
மிக்க நன்றி மேடம்..
Deleteவருக.. மணிமாறன்!.. வணக்கம்.
ReplyDeleteஆரூர் அல்லவா!.. அறச்சீற்றம் இல்லாமலா இருக்கும்.. அது இருக்கட்டும்..
இவ்வளவு நேரமாகியும் ஒன்றையும் காணோமே?.. தூங்கி (!) விட்டாரோ - என்று - உங்கள் வலைத் தளத்துக்குள் நுழைந்தால் -
மிகுந்த அர்ப்பணிப்புடன் - இருக்கின்றது.
தங்களது பணி மென்மேலும் செழிக்க நல்வாழ்த்துக்கள்.
ஹா..ஹா. மிக்க நன்றி சார் . பதிவு எல்லாம் எழுதி வைத்துவிட்டு கடைசியில் வலைச்சர அழைப்பை அக்சப்ட் பண்ணாமல் விட்டுவிட்டேன்... சீனா அய்யா வேற டென்சன் ஆகிவிட்டார்.. :-)
Deleteமணிமாறன் கலக்குங்க கலக்குங்க...ஆனால் ஜில்லா விமர்சனம் போட்டு என்னை பொங்க [[அவ்வவ்]] வச்சத நான் சொல்லவே மாட்டேன்..
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி மனோ...
Delete//ஆனால் ஜில்லா விமர்சனம் போட்டு என்னை பொங்க [[அவ்வவ்]] வச்சத நான் சொல்லவே மாட்டேன்..//
ஹா..ஹா.. அதற்கு பிராயசித்தமா அடுத்தப் படத்தை கழுவி ஊத்துறோம் .:-)
மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்! அறிமுகம் அமர்க்களம்! தொடர்க இனிதே!
ReplyDeleteமிக்க நன்றி சார்...
Deleteசூப்பரான அறிமுகம் தல....
ReplyDeleteஆனாலும் உங்க பதிவுகள் சிலவற்றை லிங்க் கொடுத்து குறிப்பிட்டு சொல்லியிருக்கலாமே...
நன்றி பிரகாஷ்...இன்று வரும் அடுத்தப் பதிவில் அதைப்பற்றி எழுதலாம்னு இருக்கேன்.
Deleteஅறிமுகம் அருமை..வாழ்த்துகள் மணிமாறன்!
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்...
Deleteஆரம்பமே இப்படி இருக்கே...! ம்... கலக்குங்க...
ReplyDeleteஇன்றிரவு இன்னொரு அறிமுக பதிவா...? வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி DD...
Delete//இன்றிரவு இன்னொரு அறிமுக பதிவா...? // ஆமா உங்களைப் பற்றியெல்லாம் எழுத வேண்டியிருக்கு... :-)
தங்கள் அறிமுகம் அழகு
ReplyDeleteஅச்சு ஊடக ஆக்குனர்களுக்கு நிகராக
வலைப்பூ ஆக்குனர்களும் (பதிவர்களும்) உள்ளனரே!
மிக்க நன்றி சார்..
Deleteஅட....இத்தனை நாள் உங்கள் பதிவை படிக்காமல் விட்டிருக்கிறேனே. இந்த அறிமுகப் பதிவை படிக்கும் போதே உங்கள் பதிவுகள் எப்படியிருக்கும் என்று விளங்கி விட்டது. இதோ உங்கள் தளத்திற்கு விரைகிறேன்.
ReplyDeleteஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
Deleteதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
புது வாத்தியாருக்கு வணக்கம்!
ReplyDeleteஹா..ஹா.. தல வணக்கம்..
Deleteவலைச்சர ஆசிரியர் பனி தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி கும்மாச்சி ...
Deleteவலைச்சர ஆசிரியர் பணி
ReplyDeleteசிறப்பாக தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்..
Deleteவாழ்த்துக்கள் தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஅன்புடன்
வர்மா
வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்..
Deleteவலைச்சர ஆசிரியர் பணி தொடர வாழ்த்துக்கள்! ஆரம்பம் "தல" ஆ....ரம்பம் மாதிரி இல்லாம நல்லதொரு ஆரம்பம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி சார்..
Deleteஅன்பின் மணீமாறன் - விதிமுறைகளின் படி
ReplyDelete"
தங்கள் பதிவுகள் "மணி மாறன் ” என்றோ அல்லது தங்களுக்குப் பிடித்த முறையிலோ லேபிள் இடப்பட வேண்டும். நாளை இந்த லேபிளைச் சொடுக்கினால் தங்களின் இடுகைகள் வரவேண்டும். அதற்காகத்தான்.
"
ஆனால் இன்னும் லேபிள் இட வில்லையே ? ஏன் ? - உடனடியாக லேபிளிடுக
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மிக்க நன்றி .. மாற்றிவிட்டேன்.
Deleteவணக்கம்
ReplyDeleteமிகச்சிறப்பான விளக்கத்துடன் இன்று வலைச்சரத்தை அசத்தியுள்ளிர்கள் ...தொடருங்கள்..வாழ்த்துக்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்..
Deleteபணிசிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்..
Deleteஆழ்கடல், திமிங்கிலம், சுறா,மீன்குஞ்சு, அசோகமித்திரன், டாக்டர். ஊசி....என்று ஆரம்பமே நன்றாகத்தான் இருக்கிறது. சிறப்பாகவே செய்யுங்கள்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்..
Deleteஜாலியாகப் படித்து...
ReplyDeleteதமிழ்மண வாக்கும் அளித்துவிட்டேன்.
தொடருங்கள், சிறப்புடன்!
மிக்க நன்றி பாஸ்...
Delete//தம..1235678.., //
ReplyDeleteஅந்த 4-ஆவது வாக்கு வேண்டாமா?
ஹா..ஹா. 4 விட்டுப்போச்சே...
Deleteதமிழுக்கு வந்த சோதனை...!!
ReplyDeleteசும்மா டமாசு வாத்யாரே..!! நடத்துங்க...!!
நாங்க இருக்கோம்..!!
மிக மிக நன்றி சார்
Deleteமீன் குஞ்சுக்கு நீந்தவா தெரியாது ?கலக்குங்க !
ReplyDeleteவாங்க தல... தன்னடக்கம்...தன்னடக்கம்... :-)
Delete//கரையேறிவிடலாமா என்று நிறைய தடவை நினைத்ததுண்டு. திமிங்கிலங்கள், சுறாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் குஞ்சுகளாக நீச்சல் பழகியதுதானே..// அட அட அட என்ன ஞானம் என்ன ஞானம் ...
ReplyDelete//பிறகு ஜாலி... இப்படியே இருநூறு பதிவுகள் தாண்டிவிட்டேன். // ஹா ஹா ஹா ஆமா ஆமா நீங்க ஒரு புரியாத புதிர்.. நான் எப்போவாவது தான் பொங்குவேன்.. நீங்க பொசுக்குன்னா பொங்கிருவீங்க :-)
ஒரு வாரம் கலக்குங்க... ஆரம்பமே அசத்தலா இருக்கு... தொடர வாழ்த்துக்கள்... அருமை..., :-), ஹி..ஹி.., தம..1235678.
ஹா.. ஹா.. நன்றி சீனு.
Deleteஅருமையான தொடக்கம்..... பாராட்டுகள் மணிமாறன்.
ReplyDeleteதொடர வாழ்த்துகள்.....
த.ம. +1
தங்களின் கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி சார்
Deleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி...
Delete