இரண்டாம் அத்தியாயம்!
➦➠ by:
ஆதி வெங்கட்
அன்பு
நட்புகளே! அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்
கொள்கிறேன். புதிதாக பிறந்திருக்கும் இந்த ஆண்டில் உங்க எல்லாருடைய ஆசைகளும், கனவுகளும், விருப்பங்களும்
நிறைவேற எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்.
புதிதாக
பிறந்திருக்கும் இந்த 2014-ஆம் வருடத்தின் முதல் வலைச்சர
ஆசிரியராக என்னை அமர்த்திய சீனா ஐயாவுக்கும், என்னை பரிந்துரை
செய்த வை.கோபாலகிருஷ்ணன்
சார் அவர்களுக்கும் இவ்விடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
வலைச்சரத்தில்
இது எனது இரண்டாவது அத்தியாயம். 2011 அக்டோபர் மாதத்தில் தான் முதன்முதலில்
வலைச்சர ஆசிரியப்
பணியை செய்தேன். மீண்டும் இந்த
வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி தந்தது – வாரத்தின் முடிவில்
உங்களுக்கும் அறிமுகங்களைக் கண்டு மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புகிறேன்!
நான் பிறந்தது
சிவகங்கைச் சீமையில். படித்தது
வளர்ந்தது எல்லாம் கொங்கு நாடாம் கோவையில். திருமணமாகி பத்து
வருடங்கள் தலைநகர் தில்லியில் வாழ்க்கை. தற்சமயம் பூலோக
வைகுண்டமாம் திருவரங்கத்தில் புகுந்த வீட்டினருடன் வாசம்.....
கோவை
அரசினர் பாலிடெக்னிக்கில் இயந்திரவியலில் மூன்றாண்டுகள் பட்டயப்படிப்பும், திருமணத்திற்கு
முன்பு வரை ஒரு சில இடங்களில் பணி செய்த அனுபவமும் உண்டு. இப்போது முழு நேர
இல்லத்தரசி!
எனது
வலைப்பூவின் பெயர் ”கோவை2தில்லி” வலைப்பூ
உலகில் முதலடி எடுத்து வைத்தது 2010 ஆகஸ்டு மாதத்தில். ”வெங்கட் நாகராஜ்” என்ற
பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் என் கணவரின் பதிவுகளை
படித்து கருத்திட்டு கொண்டிருந்த எனக்கும் ஒரு வலைப்பூ துவங்கி கொடுத்து
ஊக்கப்படுத்தியதால் இதுவரை 208 பதிவுகள் எழுதியுள்ளேன். தற்சமயம்
மூன்று ஆண்டுகள்
நிறைவடைந்து நான்காம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளேன்.
ரசித்த
பாடல் என்ற வலைப்பூவில் நானும் என் கணவரும்
எங்களுக்கு பிடித்த
பாடல்களை வரிகளுடன் பகிர்ந்து கொண்டு வருகிறோம். நான்கைந்து உறுப்பினர்களைக் கொண்ட
சாப்பிட
வாங்க வலைப்பூவில் நானும் ஒரு உறுப்பினர்…
என்னுடைய
கோவை2தில்லி
வலைப்பூவில் சமையல், அனுபவங்கள், கல்லூரி, நினைவுகள், படித்ததில்
பிடித்தது, பயணம், பண்டிகைகள், தில்லி
போன்ற பிரிவுகளில் இதுவரை எனக்கு தோன்றிய
விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்துள்ளேன்..
சமையலில்
”புளியில்லா
சாம்பார்”, கொத்தமல்லி
சாதம், குடமிளகாய்
சாதம், கறிவேப்பிலைக்
குழம்பு, வட
இந்திய உணவான சோலே அல்லது சன்னா
மசாலா, பாலக்
பனீர், ஆகியவற்றை
நீங்கள் சுவைக்கலாம்!
கதம்பம்
என்ற பெயரில் நான் தொகுக்க ஆரம்பித்த குட்டி குட்டி விஷயங்களின்
பகிர்வின் முதல்
பகுதி.
இந்த தொகுப்பில் இதுவரை பத்தொன்பது பதிவுகள் வந்து விட்டன!
அனுபவங்களில்
வண்ட்டூ
மாமாவை பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள
வேண்டும். அவர் ஒரு அலாதியான மனுஷர்.
யாரோ
காணாமல் போயிருக்க வேண்டியதாக
சொல்லியிருந்த அனுபவம் இங்கே!
முஜே
பச்சாவ் நீங்களும் படிக்க வேண்டிய அனுபவம்
தான்.
தில்லியில்
வருடா வருடம் நடைபெறும் INDIA
INTERNATIONAL TRADE FAIR பற்றி போவோமா
கண்காட்சிக்கு எனும் பதிவும், ஃபிப்ரவரி மாதத்தில் பூக்கும்
மலர்களைக் காண ”ஜனாபதியின்
மாளிகைக்கு போகலாமா?”
என்பதின் மூன்று பகுதிகளில் முதலாம்
பகுதி, தில்லியின்
ஹோலிப்
பண்டிகை நினைவுகள் ஆகியவற்றையும்
இதுவரை படிக்கவில்லை எனில் இப்போது படித்துவிடலாம்!
பயணக்
கட்டுரைகள் எழுதுவதில் எனக்கும் ஆர்வம் வந்துவிடவே, 2012 டிசம்பரில்
சென்ற கோவை – கேரளா
சுற்றுலா பற்றிய எழுதியதின் முதல் பகுதி இதோ.
அப்படியே நூல் பிடிச்சிட்டு போனா,
தொடரின் எல்லா பகுதிகளையும் படிக்க முடியும்.
சென்ற
ஆகஸ்டில் கிழக்குக்
கடற்கரைச் சாலையில் செய்த ஒருநாள் பயணம் இங்கே!
இரண்டாம்
பதிவர் திருவிழாவுக்கு சென்று வந்த அனுபவங்கள் இங்கே!
படித்த
புத்தகங்களை பற்றிய எனது அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
அவற்றில் சில - சுஜாதா
அவர்களின் எப்போதும் பெண், துளசி
டீச்சரின் ஃபிஜித்
தீவு கரும்பு தோட்டத்திலே, கி.வா.ஜ
அவர்களின் குமரியின்
மூக்குத்தி, ஜோதிர்லதா
கிரிஜா அவர்களின்
அலைகளும்
ஆழங்களும்.
திருவரங்க
அனுபவங்களில் சென்ற வருட வைகுண்ட ஏகாதசியின் போது எழுதிய
பதிவு - ரங்கனைக்
கண்டேன்.
என்
அம்மாவை நினைவில் வைத்து நான் எழுதிய ஒரே சிறுகதை!
இங்கே
கொடுத்துள்ள என்னோட பதிவுகளில் நீங்க படிக்காதவற்றை, பொறுமையாக படித்து விட்டு
வாங்க. நாளை வரை உங்களுக்கு நேரம் இருக்கே! நாளை முதல் மற்ற
பதிவர்களின் அறிமுகங்களை இங்கே காணலாம். எதைப்பற்றியெல்லாம்
பார்க்கப் போகிறோம் என்று யோசனை இருந்தால், அதையும் யோசித்துக்
கொண்டிருங்களேன்! :)
மீண்டும்
சந்திப்போம்......
ஆதி
வெங்கட்
திருவரங்கம்.
|
|
சுருக்கமான அருமையான அறிமுகம்
ReplyDeleteபடிக்காத சில பதிவுகளும் இருந்தன
இன்று படித்து விடுவேன்
இவ்வார வலைச்சர பணி சிறக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
படிக்காத பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள் ரமணி சார்...
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, சார்.
வலைச்சரத்தில் இரண்டாவது சுற்றா !! சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோவை டூ தில்லி, அடுத்து திருவரங்கம் தெரியும், இடையில் உள்ளவை எல்லாம் இன்றுதான் தெரிந்தது. எல்லா பதிவுகளையும் அழகாக எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். முதலில் அம்மா சிறுகதைக்குப் போகிறேன், மற்றவை அடுத்தது... வாழ்த்துக்கள்.
அம்மா சிறுகதையை படித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றிங்க.. மீதி பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து தெரிவித்தால் மகிழ்வேன்...
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...
சுய அறிமுகம் ஜோர். உங்கள் இந்த இரண்டாவது வலைச்சர வாரம் சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..
Deleteவாங்க மேடம்.. உங்க வலைதளத்தை இப்போது தான் பார்க்கிறேன்.. தொடர்ந்து படிக்கிறேன்..
ReplyDeleteதொடர்வதற்கும், கருத்திட்டதற்கும் மிக்க நன்றிங்க ஆனந்த்..
DeleteNice Intro friend! My happiest wishes to you for this second round in valaicharam. eagerly expecting to read your introductions.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்..
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
சிறப்பான சுய அறிமுகத்துடன் வலைச்சரத்தில் இன்று அசத்தியுள்ளீர்கள் தொடர்ந்து சிறப்பிக்க எனது வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்....
Deleteவலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்! அறிமுகம் அருமை! நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி சார்..
Deleteஅழகாய் மலர்ந்த வலைச்சர பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
Deleteசுய அறிமுகம் நன்று... தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..
DeleteHearty Congratulations for your second innings. :))))
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..
Deleteவலைச்சர பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்..
Deleteசிறப்பான சரம் தொடுக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சீனு..
Deleteஇந்த வாரம் முழுதும் தங்களின் வருகை தொடரட்டும்..
வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பா சார்..
DeleteNalla arimugam. Yelimayana arimugam. Melum melum munnera yengaladhu manamaarndha vazhththukkal.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி...
Deleteஇந்த வாரம் முழுதும் இங்கேயும் வருகை தாருங்கள்.
ஆதிவெங்கட், மிக அருமையாக இருக்கிறது உங்கள் அறிமுகம். வாழ்த்துக்கள் .வலைச்சர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
Deleteதொடர்ந்து ஆதரவை இந்த வாரம் முழுதும் தாருங்கள்.
தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்.
ReplyDeleteஇரண்டாம் அத்தியாயமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆதி. உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்க செல்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்....தொடருங்கள்......
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..
Deleteபொறுமையாக படித்து விட்டு கருத்துகளை சொல்லுங்கள்.
சுய அறிமுகமே மிக நன்றாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteதொடர்ந்து அசத்துங்கள்.
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..
Delete//புதிதாக பிறந்திருக்கும் இந்த 2014-ஆம் வருடத்தின் முதல் வலைச்சர ஆசிரியராக என்னை அமர்த்திய சீனா ஐயாவுக்கும், என்னை பரிந்துரை செய்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் இவ்விடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.//
ReplyDeleteஇந்த ஆண்டின் முதல் வலைச்சர ஆசிரியர் என்ற பெருமை உங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதற்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் உடனே என்னைத்தொடர்பு கொள்வார். இதுவும் அதுபோலவே அகஸ்மாத்தாக நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி மட்டுமே.
தங்களை நான் தொடர்புகொண்டு சம்மதம் கேட்ட உடனேயே [அடுத்த 24 மணி நேரங்களுக்குள்] சம்மதம் தெரிவித்த தங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
தங்களின் இந்த வாரம் [ இரண்டாம் முறை ] வெற்றிகரமாக அமையட்டும்.. மீண்டும் நல்வாழ்த்துகள்.
அன்புடன் VGK
சம்மதம் சொன்னாலும் வெறும் பத்து நாட்களே இருந்ததால்... கொஞ்சம் பதட்டமாகத் தான் இருந்தேன்.. :)) சென்ற முறை ஆசிரியராக இருந்த போது ஒரு மாத காலம் அவகாசம் கிடைத்தது...:)
Deleteமுடிந்த வரை பயனுள்ள பகிர்வுகளாக தர முயற்சிக்கிறேன்.. சார்..
தங்களது இந்த ஆசிரியப்பணி மேன்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் சார்...
Deleteதொடர்ந்து ஆதரவை இந்த வாரம் முழுதும் தாருங்கள் ...
அறிமுகத்துடன் அருமையான துவக்கம்... தொடருங்கள்.... வாழ்த்துக்கள்
ReplyDeleteசென்ற வாரம் தாங்கள் சிறப்பாக செய்தீர்கள்.. அந்தளவு என்னால் முடியுமா என்று தெரியவில்லை...பார்க்கலாம்...
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பிரகாஷ் சார்...
இரண்டாவது அத்தியாயமும் சிறப்பாக அமையட்டும். வலைச்சர வாரத்துக்கு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்..
Deleteஇந்த வாரம் முழுதும் வருகை தந்தால் மகிழ்வேன்..
இன்று பூராவும்,கணினி தொடவே இல்லை., நேற்றும் அதிகம் இல்லை. உடனே ஓடிவந்தேன். அழகான அறிமுகம். மிகுதி எல்லாம் படிக்கிறேன். டைனிங் டேபிள் என்னுடைய கணினி. டேபிள் பிஸியாக இருந்தால் அவ்வளவுதான். தொடர்ந்து வருகிறேன். அருமையாக இருக்கிறது. அன்புடன்,வாழ்த்துகள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...
DeleteANBBU ADHI MANAM NIrAINTHA VAAZHTHTHUKAl.KAllAM KAPADILLAATHA EZHUTHTHU. NALLA THUnAI NALAM PErrA VEKATTUKKUM NALLA THAAYYAARAI ADAINTHA rOSHNIKKUM EN VAAZHTHUKAl MAA.
ReplyDeleteதங்களின் ஆசி கிடைக்கப் பெற்றேன்..மிக்க மகிழ்ச்சி..
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..
உங்களைப் பற்றிய அறிமுகமே சுவையாக உள்ளது! வலைச்சரப் பணிக்கு வாழ்த்து !
ReplyDeleteதொடருங்கள்!
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா..
DeleteIrandam murai aasiriyar padhavi kidaitthadharku vazhhthukkal. Aarambame arumai. Bayaminri munne sella engal vazhhthukkal.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீபதி அண்ணா...
Deleteதங்களின் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.... நன்றி.. தொடர்ந்து இந்த வாரம் முழுதும் வாசித்து கருத்திடுங்கள்..
Deleteவலைச்சரத்துக்கு மீண்டும் வருக... நீங்கள் சாப்பிட வாங்க தளத்திலும் ஒரு ஆசிரியர் என்பதை இப்போது தான் அறிகிறேன்..
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க ஸ்கூல் பையன்...
Deleteவலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள் ஆதி வெங்கட்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க எழில்..
Deleteசுய அறிமுகம் நன்று..ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி..
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி சிறப்பான ஆசியை வாரத்துக்கு .உங்களின் சுய
ReplyDeleteஅறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் பாராட்டுக்கள் !
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்...
ReplyDeleteஇன்றுதான் இந்தப்பக்கம் வந்தேன், ஆதி! இன்றுடன் முடியப்போகும் உங்கள் வலைச்சர ஆசிரியர் பணிக்கு தாமதமான நல்வாழ்த்துக்கள். உங்கள் கதையையும் இப்போதுதான் படித்தேன். இன்னும் நிறைய எழுதுங்கள், ஆதி! பாராட்டுக்கள்!
ReplyDeleteபொறுமையாக ஒவ்வொரு பகிர்வையும் வாசித்து, கருத்திட்டு ,ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி ரஞ்சனிம்மா...
ReplyDeleteஎழுத முயற்சிக்கிறேன்...
அன்பின் ஆதி வெங்கட் - தமிழ் மணத்தில் இணைத்து விடுங்களேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete