07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 28, 2014

பேஸ்புக் தமிழ் -ல் அசத்தும் பெண் பதிவர்கள்.....



பெண்கள் சிறப்புப் பதிவு ஒன்று எழுதவேண்டும் என்பதற்காக வலைப்பூவில் தொடர்ந்து எழுதி அசத்திவரும் பெண்களைப் பற்றிய பதிவு எழுதலாம் என்றிருந்தேன். ஆனால், ஏற்கனவே சிலர் வலைச்சரத்தில் அவ்வாறு எழுதியிருப்பதால் கொஞ்சம் வித்தியாசமாக பேஸ்புக் தமிழில் அசத்தும் பெண்களைப் பற்றி எழுதப்போகிறேன்.

முதலில் தலைப்பு "ஆண்களுக்கு நிகராக.." என்று ஆரம்பிப்பதாக இருந்தது. அது என்ன ஆண்களுக்கு நிகராக..? பெண்களுக்கு நிகராக ஆண்கள் என்று சொல்லும் அளவுக்கு நம் பெண்கள் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கும் சூழலில், அப்படிப்பட்ட தலைப்பு கொஞ்சம் அபத்தமாக இருக்கும் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டேன்.

பொதுவாக பெண்கள், வலைப்பூவில் எழுதுவதைவிட பேஸ்புக்கில் எழுதுவது கொஞ்சம் அபாயகரமானது. அரசியல் ரீதியான பதிவுகளுக்கு எதிர்மறையான விமர்சன அம்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனிமனித தாக்குதல் நிகழலாம். வக்கிர மனம்படைத்த சிலரின் ஆபாசத் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் தாண்டி, விமர்சனங்களை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு தொடர்ந்து பேஸ்புக்கில் எழுதிவரும் பிரபல பதிவர்களைப் பற்றிய தொகுப்பு இது.

Vijaya Lakshmi..


பேஸ்புக்கில் நான் நுழைந்தபோது ஆச்சர்யப்பட்ட முதல் பெண்மணி. தீவிர கலைஞர் அபிமானி. அரசியல், சினிமா, கிரிக்கெட் , இலக்கியம் என்று எதைத்தொட்டாலும் மிக சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். புனிதமான செவிலியர் பணி நிமித்தமாக இந்தியா முழுவதும் சுற்றுபவர். அவரது பணி சம்மந்தமான சில பதிவுகள் நெகிழ்ச்சியானவை. கேப்டனை காலாய்த்து இவர் எழுதிய சில பதிவுகள் இன்றளவும் நினைத்தால் சிரிப்பை வரவழைக்கக் கூடியது. மிகுந்த நகைச்சுவையுணர்வு மிக்கவர். கலைஞர் ஆதரவு பதிவுகள் என்றாலும் வில்லங்கமான பின்னூட்டங்கள் இவர் சுவரில் இருக்காதது ஆச்சர்யம். ஒரு காலத்தில் டிமிட்ரிக்கு இணையான 'லைக்' வாங்கியவர். தற்போது நிலைத்தகவல்களை குறைத்துக் கொண்டுள்ளார்.

---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------
Chelli Sreenivasan

சென்னைவாசி.பெங்களூருவில் வசிக்கிறார். பொறியியல் பட்டம் பெற்றவர். இவரது அசாத்திய பலம் நகைச்சுவை. தேவையில்லாமல் அரசியல் அறச்சீற்றமெல்லாம் அடையமாட்டார். குடும்பங்களில் நிகழும் சின்னச் சின்ன நிகழ்வை நகைச்சுவை கலந்து எழுதுவார். மற்றவர்கள் பதிவில் இடும் கமெண்டில் கூட இவரது நகைச்சுவை மிளிரும். சமீபத்தில் MASALA FM-ல் RJ வாக கலக்குகிறார்.

ஒரு சாம்பிள்:

"என்னடி சமைக்கும் போது அவ்ளோ வாசனை வந்துச்சு ..சாப்பிடும் போது ஒண்ணுமேயில்லை..?!!"

"கீழ் வீட்டு ஜன்னல் வழியா வாசனைதான் வரும்...சாப்பாடும் வருமா என்ன? சும்மா மூக்கப் பொத்திகிட்டு சாப்பிடுங்க"

"........."

ஃபாத்திமா பாபு, எஸ்.வி. சேகர், ராம்ஜி இசை மழலை, திருமதி கிரிஜா ராகவன் போன்ற மீடியா செலிப்ரிட்டிகளின் நட்பின் மூலமாக  தற்போது நாடகத்துறையில் நுழைந்துள்ளார். அடுத்து எஸ்.வி சேகருக்கு ஒரு நாடகம் எழுதுகிறாராம். இவை எல்லாமே பேஸ்புக் மூலமாக சாதித்தவை என்பது குறிப்பிடத்தக்கது .

---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------

திவ்ய தர்ஷினி

லண்டன்வாசி. தீவிர மோடி ஆதரவாளர். கலைஞரை முடிந்தவரையில் கழுவி ஊத்துவார். Facebook -ல் Software Developers வேலை. இதை வைத்தே நீண்ட காலமாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் மற்ற எந்த பேஸ்புக் பிரபலமும் இவருக்கு லைக் அல்லது கமெண்ட் இடுவதில்லை. என்னிடம் வம்பு பண்ணும் ஆறு பேரின்  பேஸ்புக் அக்கவுண்டை தூக்கப் போறேன் என்பார். சொன்ன மாதிரியே அடுத்த சிலநாட்களில் ஆறுபேரின் அக்கவுண்ட் தகவலை வெளியிடுவார். அதை கிளிக்கினால் ஆறு அக்கவுண்டும் டீஆக்டிவேட் ஆகியிருக்கும். ஆனால் அப்படி ஆறுபேர் பேஸ்புக்கிலேயே இருந்திருக்க மாட்டார்கள். நாமே ஆறு அக்கவுண்ட் கிரியேட் பண்ணி அதை டீஆக்டிவேட் பண்ண முடியாதா என்ன...?

ஆனால் அதைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால் இவர் இடும் அத்தனை நிலைத்தகவலும் நச். பெரியாரை இழிவு படுத்தும் ஒருசில நிலைத்தகவலைத் தவிர்த்து மற்றவை எல்லாம் கருத்துச் செறிவு மிக்கப்பதிவு. குறிப்பாக இலங்கைக்கு எதிரான அனைத்து நிலைத்தகவல்களும்.

"பொதுவாக கடலில் மீன் பிடித்தால் மீன்கள் தானே குறையும்.. நம் நாட்டில்தான் மீனவர்கள் குறைகிறார்கள்.."  இது போன்ற நச் ஸ்டேடஸ் அவ்வப்போது இவரிடமிருந்து வரும்.

பேஸ்புக்கில் அதிகம் பேரை பிளாக் பண்ணியது இவராகத்தான் இருக்கும்.

---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------

 Sumi Sumaa


டெல்லிவாசி. பேஸ்புக்கின் பெண் புரட்சியாளர். தீவிர திமுக அபிமானி. அத்தனையும் அதிரடியான அரசியல் ஸ்டேடஸ். கலைஞர் ஏதாவது வில்லங்க அறிக்கை விடுத்து அதன் மூலம் பேஸ்புக்கில் கழுவி ஊற்றப்படும்போது, உடன்பிறப்புகள் சார்பாக முட்டுக்கொடுப்பார். மற்றவர்கள் சுவரிலும் போய் தைரியமாக சண்டையிடுவார். தென் தமிழகத்திலும் வட தமிழகத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் இரு சமூகத்தினருக்கு எதிராக அவ்வப்போது பொங்குவார். அச்சமூக சாதிவெறியர்களுடன் சரிசமமாக வாக்குவாதம் செய்வார். சில நேரங்களில் இவரைக் குறிவைத்து சிலர் ஆபாச வார்த்தைகளில் தாக்கினாலும் தூசி போல தட்டிவிட்டு செல்வார்.

அது என்னவோ தெரியவில்லை. கலைஞருக்கு ஆதரவாகக் கூட இணையத்தில் பெண் பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஜெயாவைப் பாராட்டி எந்தப் பெண் பதிவரும் எழுதிப் பார்த்ததில்லை.

 ---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------
Aatika Ashreen

பேஸ்புக்கின் ஷேரிங் தேவதை. கிட்டத்தட்ட 70 ஆயிரம் பாலோயர்ஸ். தமிழ்ப் பதிவர்களில் இதுதான் அதிக பட்சம் என்று நினைக்கிறேன். தொடந்து ஒரே ஃப்ரொபைல் பிக்சர். எல்லாமே ஷேரிங்.. எப்போதாவது சொந்தமாக ஒரு ஸ்டேடஸ் . இவர் உண்மையிலேயே தேவதையா அல்லது பேக் ஐடியா என்பது பலபேருக்கு சந்தேகம்.  சாதாரண 'குட் மார்னிங்' ஸ்டேடஸ்-க்கே 500 லைக்குக்கு மேல் அசால்டாக விழும்.( நம்ம பயபுள்ளக எல்லாம் தீயா வேலை செய்யிரானுவ போல..).சில நேரங்களில் திமுகவுக்கு ஆதரவான நிலைத்தகவலும் போடுவார்.

 ---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------
Prathiba Prathi
எங்கள் மண்ணின் மைந்தரும், நக்கீரன் இதழின் இணையாசிரியருமான கோவி.லெனின் அவர்களின் மனைவி. இவரும் கலைஞர் அபிமானிதான். பேஸ்புக்கின் திமுக போர்வாள். கலைஞர் பற்றி தவறாக எங்கு ஸ்டேடஸ் போட்டிருந்தாலும் அங்கு சென்று வாக்குவாதம் செய்வார். கூடவே சில உடன்பிறப்புகளும் சேர்ந்து கொள்வார்கள். முன்பு தீவிரமாக பேஸ்புக்கில் இயங்கியவர், தற்போது உடல்நிலை சுகமில்லாத காரணத்தால் எழுதுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். கட்சி பாராமல் நிறைய பேர் இவரிடம் நட்புடன் பழகுவது அதிசயமான ஒன்று. கிஷோர் கே சாமி கமெண்ட் போடும் ஒரே திமுக ஆதரவாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது .

 ---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------
Priya Thambi


நாகர்கோயில் வாசி. அற்புதமான எழுத்து நடைக்கு சொந்தக்காரர். இவரது மகள் மின்னுவைப்பற்றி பேஸ்புக்கில் இவர் எழுதிய அத்தனை ஸ்டேடஸ்களும் உணர்வுப் பூர்வமானவை. நெஞ்சை நெருடுபவை.பலரால் பாராட்டப்பட்டவை. அம்மாவுக்கும் மகளுக்குமான உறவு ஒரு அழகான கவிதை. அதை நுட்பமாக , உணர்வுப்பூர்வமாக அனுகியிருப்பார். அதைத்தொகுத்து சமீபத்தில் நடந்த புத்தகத்திருவிழாவில் 'மின்னுவும் அம்மாவும்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். நான் படிக்கக் காத்திருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இணையத்தில் கிடைத்தால் படிக்கத் தவறாதீர்கள்.

இன்னும் இந்தப்பட்டியல் Vini Sharpana, Kavin Malar கவின் மலர் , Fathima Babu, சுபா வள்ளிKirthika Tharanஹன் ஸா, Tamil SelviSasi Kala..   ... என்று நீண்டுக்கொண்டே செல்லும். நேரம் கிடைத்தால் மற்றவர்களைப் பற்றியும் எழுதுகிறேன்.


நாளை முதல் மற்ற பதிவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்த இருப்பதால் இன்று மற்றொரு பதிவாக என் பதிவுகளைப் பற்றிய அறிமுகங்கள் திரும்பவும் இருக்கும் என்பதை மிகக் கஷ்டத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது முந்தையை இரண்டு பதிவுகளுக்கும் பின்னூட்டம் மற்றும் தமிழ்மண ஓட்டு அளித்த இணைய நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அதேப்போல் இந்தப்பதிவுக்கும் ஆதரவு அளிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

( வலைச்சர ஆசிரியப் பணி முடிந்த பிறகு அத்தனைப் பேருக்கும் கண்டிப்பாக திரும்ப மொய் வைக்கப்படும் என்பதை  இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்)


அன்புடன்....

மணிமாறன் ....

51 comments:

  1. வித்தியாசமான அறிமுகங்கள் முகநூலிலிருந்து! அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நன்றி கிரேஸ்...

      Delete
  2. இருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் புதுமுகங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... முகநூலுக்கு செல்கிறேன்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. // இன்று மற்றொரு பதிவாக என் பதிவுகளைப் பற்றிய அறிமுகங்கள் திரும்பவும் இருக்கும் என்பதை மிகக் கஷ்டத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

    சரிதான்!.. மறுபடியும் ஆரம்பமா!?..

    வித்தியாசமான அறிமுகங்கள்..

    நன்றி.. மணிமாறன்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்..

      Delete
  4. வலைசரத்தில் வலையில் இருப்பவர்களை அறிமுகப் படுத்தலாம்தான் ஆனால் என் பார்வையில் பதிவர்களை அறிமுகப் படுத்துதலையெ வரவேற்பேன்...

    இருந்தும் உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி சீனு .. அடுத்த ஐந்து நாட்களுக்கு முழுவதும் வலைப்பூவில் உள்ளவர்களைத்தான் அறிமுகப்படுத்தப் போறேன்.. ஒரு வித்தியாசத்துக்கு பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் பெண்களைப்பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று முயற்சி செய்தேன்... தவிர, இதில் சிலர் வலைப்பூவும் எழுதுகிறார்கள். அவர்களைப்பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் தெரிவிப்பேன்.

      Delete
    2. Prathiba Prathi அவர்களின் வலைத்தளம் : http://prathibatamilnila.blogspot.in/

      Delete
  5. வலைச்சரம் என்பது பதிவில்(பிலாக்) எழுதுபவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு சங்கிலித்தொடர்னு நினைசேன், இப்பத்தான் தெரியுது முகநூல்,துவித்தர்,கூகிள் பிளஸ் ,டம்ளர் எல்லாம் எல்லாத்துக்கும்னு அவ்வ்!

    அப்படியே மத்த எல்லா இணைய சமூக ஊடகங்களீல் எழுதுபவர்களையும் அறிமுகப்படுத்துங்க ,சும்மா முகநூலோடு மட்டும் நின்னா போரடிக்காது :-))

    ReplyDelete
    Replies
    1. வவ்வால்.. ஏற்கனவே பிரபு கிருஷ்ணா "பேஸ்புக் பெரியவர்கள் " என்று பேஸ்புக்கில் பிரபலமாக இருப்பவர்களைபற்றி வலைச்சரத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அது தமிழ்மணத்தில் ஹிட்டானது மட்டுமல்ல,பேஸ்புக்கில் நிறையப்பேர் ஷேர் செய்திருந்தனர். பேஸ்புக் பிரபலம் டிமிட்ரியே அப்பதிவை தன் சுவரில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நிறைய பார்வைகள் கிடைத்ததை சீனா அய்யா அறிவார்.

      வலைச்சரத்தை, வலைப்பூவைத் தாண்டி பேஸ்புக்குக்கும் எடுத்துச்செல்லும் முயற்சியாக ஏன் பார்க்கக் கூடாது...?

      Delete
    2. மணிமாறன்,

      //வலைச்சரத்தை, வலைப்பூவைத் தாண்டி பேஸ்புக்குக்கும் எடுத்துச்செல்லும் முயற்சியாக ஏன் பார்க்கக் கூடாது...?//

      உங்களுக்கு தமிழ் தெரியும் தானே?

      நான் என்ன வேண்டாம்னா சொன்னேன், முகநூலோட நிறுத்தாம ,துவித்தர்,கூகிள்பிளஸ்,டம்ப்ளர் எல்லாம் போங்கனு தானே சொல்லி இருக்கேன்!

      வலைப்பூ,முகநூல்னு நெறைய தாண்டுங்க! தாண்டணும்,தாண்டுவீங்க!

      //ஏற்கனவே பிரபு கிருஷ்ணா "பேஸ்புக் பெரியவர்கள் " என்று பேஸ்புக்கில் பிரபலமாக இருப்பவர்களைபற்றி வலைச்சரத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அது தமிழ்மணத்தில் ஹிட்டானது மட்டுமல்ல,பேஸ்புக்கில் நிறையப்பேர் ஷேர் செய்திருந்தனர். பேஸ்புக் பிரபலம் டிமிட்ரியே அப்பதிவை தன் சுவரில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நிறைய பார்வைகள் கிடைத்ததை சீனா அய்யா அறிவார்.//

      இது எதுக்கு?

      எனக்கு பிரபு கிருஷ்ணா யார்னே தெரியாது, அவர் இப்படி எழுதினாரேனு சொல்லி என்னைக்கேட்பதால் என்ன பயன்?

      பிரபு கிருஷ்ணாவும் வலைச்சரத்தில் எழுதியிருக்கிறார் என தங்களால் அறியப்பெற்றேன் அவ்வ்!

      # //பேஸ்புக் பிரபலம் டிமிட்ரியே //

      பில்லா2 ல வர வில்லன் பேரு டீமிட்ரினு தெரியும்,அவ்ளோ தான்! அவரு முகநூலில் எல்லாம் எழுதுறாரா? அதுவும் தமிழில் !!! "வித்யுத் ஜாம்வால்"க்கு தமிழ் தெரியாதுனு நினைச்சேன் அவ்வ்!

      Delete
    3. //உங்களுக்கு தமிழ் தெரியும் தானே?//

      இது போல விதண்டாவதமான கேள்விக்குத்தான் நான் அப்படி பதிலளிக்க வேண்டியிருக்கு... ஒரு விஷயத்தை பாராட்டிப் பேசுறதுக்கும் நக்கல் அடிக்கிரதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு பிரதர். கடைசியில ஒரு ஸ்மைலிய போட்டுட்டா ஜாலியாக எடுத்துவிட்டு போய்விட முடியுமா.. நீங்கள் பொங்கல் வைக்க வேண்டுமென்றால் என் தளம் இருக்கிறது அங்க வாங்க. அங்க நான் பிரியாத்தான் இருக்கிறேன்... இது வலைச்சரம். இங்கு ஒரு லிமிட்டோட இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

      //இது எதுக்கு?

      எனக்கு பிரபு கிருஷ்ணா யார்னே தெரியாது, அவர் இப்படி எழுதினாரேனு சொல்லி என்னைக்கேட்பதால் என்ன பயன்?//

      சரி.. உங்களுக்கு தமிழ் தெரியுமா..? இதுக்கு முன்னால ஒரு கேள்வி கேட்டு இருக்கீங்க ஞாபகம் இருக்கா..?

      ///வலைச்சரம் என்பது பதிவில்(பிலாக்) எழுதுபவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு சங்கிலித்தொடர்னு நினைசேன்,///

      வலைச்சரம் என்பது வலைப்பூக்களை மட்டும் அறிமுகப்படுத்தும் தளம் என்பது எனக்கும் தெரியும்... ஆனால் ஏற்கனவே ஒருவர் பேஸ்புக் பிரபலங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் . அதற்கு வலைச்சர குழுவிலிருந்தோ மற்ற பதிவர்களிலிருந்தோ எந்த எதிர்வினையும் வந்ததில்லை. அதை சொல்வதற்குத்தான் அவரை சுட்டிக் காட்டினேன். மாறாக உங்களுக்கு பிரபு கிருஷ்ணாவை தெரியுமா என்ற ரீதியில் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை...

      Delete
    4. மணிமாறன்,

      //கடைசியில ஒரு ஸ்மைலிய போட்டுட்டா ஜாலியாக எடுத்துவிட்டு போய்விட முடியுமா//

      ஓ ...சிரிப்பான் போட்டாக்கூட ஜாலியாக எடுத்துக்க மாட்டாங்களாம்,பயங்கரக்கோவக்காரரா இருப்பாரோ அவ்வ்!!!

      சீரியசா தான் எடுத்துப்பேன்னா எடுத்துகுங்க...எடுத்துங்க...யார் வேண்டாம்னா...ஹி...ஹி ஆனால் நீங்க என்ன சீரியசாப்பேசினாலும் எனக்கு ஜாலியாத்தான் தெரியுமே என்ன செய்ய :-))

      # //என் தளம் இருக்கிறது அங்க வாங்க. அங்க நான் பிரியாத்தான் இருக்கிறேன்..//

      ஹி...ஹி என் ஏரியாவுக்கு வா பார்ப்போம்னு வடிவேல் காமெடி ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்குது!

      # // இங்கு ஒரு லிமிட்டோட இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.//

      அப்பாடா, என் தலை தப்பியது,அன்லிமிட்டட் ஆக ஆக்‌ஷனில் இறங்கியிருந்தால் "தலைய தனியா சீவி" இருப்பாராக்கும் :-))

      #//மாறாக உங்களுக்கு பிரபு கிருஷ்ணாவை தெரியுமா என்ற ரீதியில் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை...//

      தெரியாது என்பது அவர் வலைச்சரத்தில் எழுதியதே தெரியாது என்பதை "அழுத்தமாக" சொல்ல,எனவே நீங்க சொல்லித்தான் அப்படி எழுதியிருப்பதே தெரியும்னு சொன்னேன்.

      ஒருத்தர் கொலைப்பண்ணிட்டு தண்டனையளிக்கப்படவில்லை எனில் அதனை முன்னுதாரணமாகக்காட்டி தண்டனை விலக்கு கேட்பது சட்டத்திலேயே இருக்கு அப்படித்தானுங்க சொல்ல வரிங்க,புரிஞ்சுக்கிட்டேன் அவ்வ்!

      Delete
  6. // Facebook -ல் Software Developers வேலை. இதை வைத்தே நீண்ட காலமாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் மற்ற எந்த பேஸ்புக் பிரபலமும் இவருக்கு லைக் அல்லது கமெண்ட் இடுவதில்லை. என்னிடம் வம்பு பண்ணும் ஆறு பேரின் பேஸ்புக் அக்கவுண்டை தூக்கப் போறேன் என்பார்.//

    இந்த மாரி மூதேவிகள் பத்திலாம் அவசியம் தெரிஞ்சிக்க தான் இந்த அறிமுகமா அவ்வ்!

    நல்ல வேளை நாமலாம் முகநூல் பக்கம் போறதில்லை,போயிருந்தால் இன்னேரம் இதை ஃபேஸ்புக் விட்டு தூக்கின பாவத்துக்கு ஆளாகியிருப்பேன் அவ்வ்!

    இதையே வலைப்பதிவில ஒருத்தன் உன்பதிவை தூக்குறேன்னு சொன்னா அறச்சீற்றம் காட்டியிருப்பானுங்க , ஒருவேளை பொம்பளை படம் போட்டு சொல்லியிருப்பதால் எல்லாம் வழிஞ்சிட்டு நிக்குறானுங்க போல அவ்வ்!


    நல்ல அறிமுகம்! கவனிப்போம் :))

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வணக்கம்
    வித்தியாசமன முகநூல் அறிமுகங்கள்... இவர்கள் யாரையும் தெரியாது.. இருந்தலும் பாரக்கலாம்...
    தொடரந்து அசத்த எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்..

      Delete
  9. வலைச்சரத்தை, வலைப்பூவைத் தாண்டி பேஸ்புக்குக்கும் எடுத்துச்செல்லும் முயற்சியாக
    அமைந்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி மேடம் ..

      Delete
  10. நன்றி ஸார்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம்..

      Delete
  11. Aatika Ashreen ??? https://www.facebook.com/SIRINAVYA?fref=ts

    ReplyDelete
    Replies
    1. முகநூல் முனைவர் சொன்னால் சரி தான்... இருவரும் ஒருவரோ...?

      Siri Navya - https://www.facebook.com/SIRINAVYA?fref=ts - 11,939 Followers

      Aatika Ashreen - https://www.facebook.com/aatika.ashreen?hc_location=timeline - 69,187 Followers

      Delete
  12. இவர்கள் யாரையும் எனக்கு தெரியாதுங்க உங்களால் அறிந்துகொண்டேன்/முகபுத்தகத்தில் அசத்தும் பெண்கள்// உண்மையில் . புதிய முயற்சி ..வாழ்த்துக்கள் ..

    Angelin.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  13. Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி சார்

      Delete
  14. நல்ல அறிமுகங்கள். புதுவிதமாகவும் அதே சமயம் நல்ல புதிய முகநூல் நண்பர்களும் தெரிந்துகொள்ள முடிகிறது. பாராட்டுகள்.
    www.vijisvegkitchen.blogspot.com
    www.vijiscreations.blogpsot.com

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  15. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்

      Delete
  16. முகநூலில் நிறைய நேரம் செலவிடுவதில்லை! அவ்வப்போது தலைக்காட்டுவதோடு சரி! எனக்கென்னமோ பிளாக் பிடித்த அளவுக்கு முகநூலில் ஈர்ப்பில்லை! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ்...ஹா ஹா.. ஆனால் பேஸ்புக்கில் உள்ளவர்கள் பிளாக் மிக போர் என்கிறார்கள்...

      Delete
  17. வாழ்த்துக்கள் ...
    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    www.99likes.in
    S. முகம்மது நவ்சின் கான்.

    ReplyDelete
  18. புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனிமரம்..

      Delete
  19. அந்த ஆறு பேரை தூக்கிய பெண் தாதாவை நீங்க அறிமுகபடுத்தாம விட்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி... சரிதான் பாஸ்... ஆனால் ஈழம் தொடர்பாக அவர் எழுதிய சில ஸ்டேடஸ் நிறைய பேர் ஷேர் செய்திருந்தனர் . நல்ல மொழிநடை, அரசியல் ஞானம் அவருக்கு உண்டு. ஆனால் ஏனோ சில நேரங்களில் மோசமாக எழுதுகிறார் .

      Delete
  20. ஆஹா வித்தியாசமான சிந்தனை மூலம் புதிய முயற்சி, சில்லி'யின் காமெடி ஸ்டேட்டஸ்கள் மனசை ரிலாக்ஸ் செய்ய வைப்பவை...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மனோ...

      Delete
  21. வித்தியாசமான அறிமுகம். முக நூலில் தொடர்ந்து செல்வதில்லை. தினம் சில நிமிடங்கள் மட்டுமே...

    அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி சார்..

      Delete
  22. இதில் அறிமுகமான சிலர் என் நட்பு வட்டத்திலும் இருக்கிறார்கள்... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்

      Delete
  23. புதிய அனுகுமுறையில் வலைச்சர அறிமுகங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்

      Delete
  24. கருத்துக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  25. வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கள்---சரஸ்வதிராசேந்திரன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது