மதுரைக்காரர்களின் பசுமை நடையும், அரிதாகும் தின்பண்டமும்!!!
➦➠ by:
தமிழ்வாசி பிரகாஷ்
ஹாய் நண்பர்களே,
இந்த வார வலைச்சரத்தில் ஒவ்வொரு பதிவிலும் கூடுமானவரை புதிய பதிவர்களையும், குறைந்த பதிவுகள் எழுதிய வலைப்பதிவுகளையுமே அறிமுகம் செய்து வருகிறேன். அவ்வகையில் இன்றும் சில பதிவுகள் அறிமுகங்களைப் பார்ப்போமா?
அரும்புகள் மலரட்டும் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச் சில பதிவுகளே (39 பதிவுகள்) எழுதப்பட்டு வருகிறது. சமூக சிந்தனை பதிவுகளும், கட்டுரை பதிவுகளும் அதிகமாக எழுதப்பட்டு உள்ளது. அதில் படித்தவர்கள் தான் அதிக தவறு செய்கிறார்களா? என்ற பதிவில் படித்தவர்களால் தான் சமுதாயம் சீரழிகிறது என்றும், படிக்கும் காலத்திலே ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க, அதற்கேற்ப வழிமுறைகளை சொல்லித் தர வேண்டும் என விளக்குகிறது.
பெருநாழி என்னும் வலைப்பூவில் கதை, கவிதை, கட்டுரைகள் என எழுதப்பட்டு வருகிறது. இதுவரை 48 பதிவுகள் உள்ளது. மரணத்தின் துளி எனும் பதிவில் தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளியில் அனுமதி பெற்று வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்தில் மாட்டுகிறார். அதில் மருத்துவமனை செல்லும் அளவுக்கு காயங்கள் ஏற்படுகிறது. அத்தருணத்தில், அவரைக் காப்பாற்றியவர்கள், மருத்துவமனையில் உதவி செய்தவர்கள் பற்றி மிகுந்த உணர்ச்சிப் பெருக்கில் இந்தப் பதிவு எழுதியிருக்கிறார். வாசித்துப் பாருங்களேன்.
இலக்கியச் சாரல் என்னும் வலைப்பூவில் கதை, கட்டுரை, கவிதைகள் என எழுதப்பட்டு வந்தாலும், சமீபத்தில் பழைய விளையாட்டுகள் என்ற தலைப்பில் மறந்து போன விளையாட்டுகள் பற்றி சில பதிவுகள் எழுதப்பட்டு வருகிறது. அதில், பேந்தா எனும் விளையாட்டு பற்றி அறிய பதிவை வாசியுங்கள்.
நடை நமது என்னும் வலைப்பூ மிக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை பத்து பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இலக்கிய சம்பந்தமான பதிவுகள் எழுதப்பட்டு வருகிற இந்த வலைப்பூவில் காற்றுக் குடித்த மூச்சு என்ற பதிவில் ஒவ்வொரு நாளும் பலரை சந்திக்கிறோம், பழகுகிறோம் அவர்களில் நமது நினைவில் நிற்பவர்கள் எத்தனை பேர் என்ற கருத்தை தாங்கி கவிதை எழுதப்பட்டு உள்ளது. வாசித்துப் பாருங்களேன்.
மதுரக்காரன் என்னும் வலைப்பூவில் மிகச் சில பதிவுகளே எழுதப்படிருந்தாலும் வாசிக்க சுவாரஸ்யமாகவே இருக்கும். அதில் பசுமை நடை - கொங்கர் புளியங்குளம் என்ற பதிவில் சமணர் வாழ்விடங்கள், வாழ்வியல் முறை பற்றியும், கல்வெட்டுக்கள், இயற்கை உணவுகள் பற்றி எழுதியுள்ளார். நீங்களும் பதிவை வாசித்து பழங்கால வாழ்வியல் முறையை அறிந்து கொள்ளுங்கள்.
(பசுமை நடை பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும், இதுவரை ஒரு நடையிலும் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் நண்பர்கள் மூலம் நல்ல அனுபவமாக இருக்கும் என அறிந்துள்ளேன். விரைவில் பசுமை நடை மூலம் ஏதாவது ஒரு இடத்தை சென்று பார்வையிட வேண்டும் என நினைத்துள்ளேன். பார்ப்போம்...)
தீபா என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது பதிவுகள் வரை எழுதப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இந்த பதிவரின் அனுபவங்களும், கடந்த கால நினைவுகளும் வலைப்பூவை நிறைத்துள்ளது. அதில் எங்க ஊரு ஆறு எனும் பதிவில் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊரில் வைகை ஆற்று நிலையை மிகுந்த எதிர்பார்ப்பு கனவுகள் மூலம் எழுதியுள்ளார். இப்பதிவும் பசுமைநடை சம்பந்தப்பட்டதே. இந்த பதிவரின் பலமே, சொல்ல வேண்டிய கருத்துக்களை நேர்த்தியான, கோர்வையான வார்த்தைகள் மூலம் ஆர்வத்துடன் வாசிக்குமாறு எழுதுவார்.
ராமேஸ்வரம் ரபி என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆயினும் மிகச் சில பதிவுகள் எழுதப்பட்டுள்ளது. இந்த வலைப்பூவில் பெரும்பாலும் ராமேஸ்வரம் , கடல் பகுதிகள் பற்றிய பதிவுகளே எழுதப்பட்டுள்ளது. மேலும் அறியப்படாத தின்பண்டம் பனாட்டு என்ற தலைப்பில் பனாட்டு எனும் இனிப்பு பண்டம் பற்றிய செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த பண்டம் கால மாற்றத்தால் அரிதான பண்டமாக மாறிவிட்டது என பதிவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களே, இன்றும் மிக குறைந்த பதிவுகள் எழுதிய பதிவர்களை அறிமுகம் செய்துள்ளேன். உங்களுக்கும் இவர்கள் அறிமுகமாவார்கள் என்ற நம்பிக்கையில், நாளைய பதிவில் இன்னும் பல பதிவர்களை அறிந்து கொள்ள தயாராகுங்கள்.
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteதெரியோதாரை கண்டுக்கிட்டு வரேன்
ReplyDeleteம்ம்ம் கண்டுகிட்டு வாங்க... நன்றி
Deleteராமேஸ்வரம் ரபி தளம் மூன்று ஆண்டுகளாக எங்கே ஒளிந்து கொண்டு இருந்தது என்று தெரியாது... ஹிஹி...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார்
Deleteநான் அறியாத பதிவர்களையும்,புதிய பதிவர்களையும் சிறப்பாக அறிமுகப் படுத்தி வருகிறீர்கள்.பாராட்டுக்கள். பனாட்டு திண்பண்டம் அறிமுகம் அருமை.
ReplyDeleteகுறைந்த பதிவு எழுதியவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...
Deleteநீங்கள் மிக குறைந்த பதிவுகளை கொடுத்தபதிவர்கள் வலைப்பூவை குறிப்பிட்டு அவர்கள் மேலும் பதிவு எழுதும் ஆவலை தூண்டி விட்டு இருக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅரும்புகல் மலரட்டும் மட்டும் எனக்கு தெரியும். மற்றவஎகள் பதிவு சென்று வாசிக்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
குறைந்த பதிவு எழுதியவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...
Deleteநல்ல முயற்சி
Deleteபுதியவர்களையும், சில பதிவுகள் மட்டும் எழுதியவர்களையும் இங்கு அறிமுகப் படுத்தும் தங்கள் நன்னோக்குக்கு நன்றிகள் பல.
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteஎனது அரும்புகள் மலரட்டும் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு அன்பார்ந்த நன்றிகள். வலைச்சர அறிமுகம் மிகுந்த மகிழ்வைத் தருவதோடு உற்சாகத்தையும் தந்து இன்னும் இன்னும் எழுத வேண்டும் ஆவலை மிகுவிக்கிறது. புதிய நண்பர்களோடு இணையும் ஒரு வாய்ப்பையும் தந்துள்ளீர்கள். அறிமுகம் செய்த தங்களுக்கே நன்றிகள்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteத.ம. +1
இலக்கியச்சாரல் - அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகம், மதுரைக்காரன் பதிவு அருமை,
ReplyDelete..குறைந்த பதிவு எழுதியவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்., நல்ல எண்ணம் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் எண்ணம் மகிழ்வுற வைக்கிறது.
ReplyDeleteஆரம்பக் கட்டங்களில் இருப்பவரை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகம் செய்தமை சிறப்பே. பதவியை ஏற்று சிறப்பாக செய்யும் தருணம் இது என அறிந்து செவ்வனே செய்வது போற்றற்குரியது.
நன்றி ... தொடர வாழ்த்துக்கள்....!
சிறப்பான அறிமுகங்களுக்கும் ஆசிரியருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
ReplyDeleteவாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .