கைவினைப் பொருட்களும் பதிவர்களும்.....
➦➠ by:
ஆதி வெங்கட்
வலைச்சரம்
– 2 மலர் – 4
கைவினைப்
பொருட்கள் செய்வது அந்த காலந்தொட்டு பெண்களின் பொழுதுபோக்காக இருந்து
வருகிறது. இதில்
பல ஆண்களுக்கும் ஆர்வம் உண்டு. தையல், எம்பிராய்டரி, கூடை பின்னுவது, தேவையற்ற
பொருட்களை வைத்து அலங்காரப் பொருட்கள் செய்வது என்று அவர்களின் கற்பனைக்கு
வானமே எல்லை. எனக்கும்
என் மகளுக்கும் இந்த வேலைகளில் ஆர்வம் உண்டு. அது போல்
கைவினைப் பொருட்கள் செய்வது பற்றி பகிர்ந்து கொண்டிருக்கும் சில வலைப்பதிவர்களின்
பதிவுகளை இன்று பார்க்கலாம்!
விஜிஸ்
க்ரியேஷன்ஸ் விஜி அவர்கள் தன் மகள் செய்ததாக மெழுகினால் செய்த சில கேண்டிக்களும், முத்துக்
குதிரையும், பிளேட் பெயிண்ட்டிங்கும்
பகிர்ந்துள்ளார். நீங்களும்
போய் பாருங்களேன்.
கலைக்கழகம்
கைவேலை என்ற தளத்தில் பூக்கள், பழங்களை
வைத்து கார்விங்
செய்வது, பேன்சி
நகைகள் தயாரிப்பு, வாழ்த்து
அட்டைகள் தயாரிப்பு, போன்றவற்றை
எப்படிச் செய்வது என்று காணொளி வடிவில் தொகுத்து அளித்து வருகிறார்.
என்
இனிய இல்லம் தளத்தில் ஃபாயிஜா காதர் அவர்கள் பல
அழகான விஷயங்கள் செய்து காண்பித்து இருக்கிறார். ப்ரெட் தூள் மற்றும் பெவிகால்
வைத்து அழகான பழங்களை செய்து காண்பித்திருக்கிறார்
பாருங்களேன் இங்கே!
நான்கு
பெண்கள் தளத்தில் பகிர்ந்துள்ள 70 வயதை
கடந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திரா என்பவரின் எம்பிராய்டரி
கற்கலாம் வாங்க? என்ற
பதிவைப் பாருங்களேன். ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கிறது.
காகிதப்பூக்கள் தளம்
வைத்திருக்கும் ஏஞ்சலின் அவர்களின் க்வில்லிங் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு
முறையும் க்வில்லிங்கால் விதவிதமான வாழ்த்து அட்டைகள் செய்வார்.
குப்பவண்டி
என்ற தளம் வைத்திருக்கும் நபர் நிறைய கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி என பதிந்து
வைத்திருக்கிறார். பழைய
டி-சர்ட்களை வைத்து குஷன் கவர்கள் செய்திருக்கிறார். இன்னும் பலவும் இருக்கிறது. தேவையற்ற
பொருட்களை வைத்து செய்வதால் குப்பவண்டி என்று வைத்திருக்கிறாரோ
என்னவோ!
காகிதத்தில் கிறுக்கியவை எனும் தளத்தில் தனது பதிவுகளை பகிர்ந்து கொண்டு
வரும் தேவி என்பவர் OHP ஷீட்-ல் ஓவியங்கள் வரைவது பற்றி மிக அழகாய் இங்கே
செய்து காண்பித்து இருக்கிறார். அதை
வைத்து படம் காட்ட மட்டும் தானா முடியும் படமும் வரையலாம் என்பதை பார்க்க இங்கே செல்லலாமே!
அரும்புகள் எனும் தளத்தில் குழந்தைகளின்
பொழுதுபோக்கிற்காக பலவிதமான கைவினைப் பொருட்கள் எப்படி செய்வது என்று விளக்கமாக
கொடுத்திருக்கிறார் கண்மணி. சுருள் படங்கள் செய்வது எப்படி என்று கேட்டிருக்கும் இப்பகிர்வினை பாருங்களேன்!
பயணிக்கும் பாதை எனும் தளத்தில்
தொடர்ந்து எழுதி வரும் சகோதரி அஸ்மா, தனது தளத்தில் ”ஹேர்பின் பூ செய்வது எப்படி?” என்று
ஒரு பகிர்வு எழுதி இருக்கிறார் பாருங்கள். செய்து முடித்த அந்த ஹேர்பின்
தலையில் அணிந்துகொண்டு காட்சி தரும் அந்தக் குட்டிப் பெண்ணும் அழகு!
பூங்குடில் எனும் தளத்தில் எழுதி வரும் கவிமலர்
ஐஸ் ஸ்டிக் உபயோகப் படுத்தி ஃபோட்டோ ஃப்ரேம் செய்வது எப்படி என்று அழகாய் சொல்லித்
தந்திருக்கிறார் இங்கே!
ப்ரியா ராம் அவர்களின் ரசிக்க ருசிக்க
வலைப்பூவில் ஆர்கண்டி துணி
மூலம் அழகான பூக்கள் செய்ய படிப்படியான செய்முறை விளக்க படங்களுடன்
பகிந்திருக்காங்க பாருங்க.
அறுசுவை சமையல் களஞ்சியம் என்ற தளத்தில் தையற்கலை, கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் செய்தல், உணவு அலங்காரம், மெஹந்தி டிசைன்கள் என பலத் தகவல்கள் காணப்படுகின்றன.
பல்சுவைக் கதம்பம் என்ற தளத்தில் கரடி பொம்மை
செய்தல், மெழுகுவர்த்தி செய்தல், கிறிஸ்துமஸ் மரம் செய்தல் என பல
தகவல்கள் உள்ளன.
என்ன நண்பர்களே இன்று அறிமுகம் செய்த பதிவுகளைப்
படித்தீர்களா? மீண்டும் நாளை வேறு சில
வலைப்பூக்களின் அறிமுகம்..... நாளை
சந்திப்போம்.....
அதுவரை....
நட்புடன்
ஆதி வெங்கட்.
திருவரங்கம்.
|
|
வணக்கம்
ReplyDeleteஇன்று ஒரு வித்தியாசமான வலைப்பூக்கள் அறிமுகம் வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..
Deleteஒருசில வலைப்பூக்களைத் தவிர ஏனையவை புதியவை. அழகாக அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள், பாராட்டுக்கள்.
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...
Deleteவணக்கம்
ReplyDelete(((நிலா முற்றம் ))) என்ற வலைப்பூவின் இணைப்பு மட்டும் சரிசெய்யுங்கள்... மற்ற வலைப்பூக்களின் இணைப்பு சரியாக உள்ளது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிலா முற்றத்தில் இன்று வைரஸ் உள்ளதால் ப்ளாக் ஆகியுள்ளது.. அதனால் அதை எடுத்து விட்டேன்...
Deleteஎல்லோர் தளங்களுக்கும் சென்று தகவல் தந்ததற்கு மிக்க நன்றி...
வணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகம் செய்த வலைப்பூக்களில் 4 அறிந்தவை. ஏனையவை புதிய வலைப்பூக்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்...த.ம3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுக்கு புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி..
Deleteமிக்க நன்றி ரூபன் சார்..
தலைப்பின் கீழ் பதிவர்களை தொகுத்தல் என்பது
ReplyDeleteகடினமான பணி,மிகச் சிறப்பாக
தொகுத்து அறிமுகம் செய்த விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
முடிந்த வரை பயனுள்ள பகிர்வுகளாக வழங்க வேண்டும் என்று நினைத்தேன்...
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...
மனதை மலர்விக்கும் அழகான தளங்களின் தொகுப்பு ..பாராட்டுக்கள்..!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...
Deleteஅருமையான தளங்கள் இன்று இடம் பெற்றவை..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சிறப்பாக வலைச்சரத்தை தொகுக்கும் உங்களுக்கு ம்வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
DeleteVenthan, kuppa vandi, kanmani, கவி மலர், Naga Raja - இவர்களின் தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களுக்கு புதிய தளங்களை அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி...
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...
கிராஃப்ட் பைத்தியமான எனக்கு குப்பை வண்டி, பல்சுவை கதம்பம்ன்ற ரெண்டு புதிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க நன்றி ஆதி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராஜி...
Deleteநான்காம் நாலும் நல்லவிதமாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDelete//காகிதப்பூக்கள் தளம் வைத்திருக்கும் ஏஞ்சலின் அவர்களின் க்வில்லிங் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் க்வில்லிங்கால் விதவிதமான வாழ்த்து அட்டைகள் செய்வார். //
என் அன்புத்தங்கச்சி நிர்மலா அவர்களை இங்கு அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...
Deleteஅறிமுங்கள் யாவருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தோழி !
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்..
Deleteஅழகான தளங்கள். கைவேலை செய்பவர்களுக்கு மிக்க உபயோகமானது. யாவருக்கும் பாராட்டுகள் ஏஞ்சலின் மிக்க அறிமுகமான பெண் எனக்கு. ப்ரியா ராமும் அப்படியே. எல்லோருக்கும் ,உனக்கும் வாழ்த்துகள். அன்புபுடன்
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..
Deleteஎத்தனை எத்தனை விதமான கைவேலைகள்! ஒவ்வொரு பெண்மணியும் தங்கள் தங்கள் துறைகளில் மிகச் சிறப்பாக தங்கள் முத்திரையைப் பதித்து உள்ளார்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு அருமையான தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..
ReplyDeleteஎன் தள அறிமுகத்திற்கும், மற்ற தளங்களின் அறிமுகங்களுக்கும் மிக்க நன்றி @ADHI VENKAT
ReplyDelete//செய்து முடித்த அந்த ஹேர்பின் தலையில் அணிந்துகொண்டு காட்சி தரும் அந்தக் குட்டிப் பெண்ணும் அழகு!//
மீண்டும் நன்றிகள் :)
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அஸ்மா..
Deleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDeleteமிக்க நன்றி..
Deleteமுதலில் ஆதி வெங்கட்க்கு என் மனமார்ந்த நன்றி. என் வலைதளத்தை இங்கு அறிமுகம் செய்ததிற்க்கும் என் சக வலைதள அறிமுகங்களுக்கும் என் நன்றி. நான் இங்கு வந்து பார்ப்பேன். ஆனல் இடையில் கொஞ்சம் நேரமின்மையால் தொடர்ந்து வர இயலவில்லை எனக்கும் என் தள அறிமுகம் இங்கு இருப்பதை நான் இங்கு வந்து பார்த்தபோது தெரிய வந்தது. என் மக்ளுக்கு கைவினை வரைவது இதில் மிகுந்த ஆர்வம். என் மகளிடம் இதை சொன்னபோது ஒரே மகிழ்ச்சி. நன்றி ஆதி. நானும் எனக்கு உங்கள் இனைய அறிமுகம் வழி மேலும் புதிய வலைதளத்தை போய் பார்க்க ஒரு நல்ல சந்தர்பம் செய்தமைக்கு மிக்க நன்றீ.
ReplyDelete