நாளைய பாரதத்தின் நற்றூண்கள்!
➦➠ by:
கீதமஞ்சரி
அன்பார்ந்த
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும்
என்
உளமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
இதந்திரு
மனையின் நீங்கி
இடர்மிகு
சிறைப்பட்டாலும்,
பதந்திரு
இரண்டும் மாறி
பழிமிகுந்து
இழிவுற்றாலும்,
விதந்தரு
கோடி இன்னல்
விளைந்தெனை
அழித்திட்டாலும்,
சுதந்திர
தேவி! நின்னைத்
தொழுதிடல்
மறக்கிலேனே
- பாரதியார்.
இன்று நாம் இந்தியாவின் அறுபத்தைந்தாவது குடியரசு தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நாடு இருக்கும் நிலையில் இந்தக் கொண்டாட்டமெல்லாம் தேவையா என்று நினைப்பவர்கள் உண்டு.
இன்றைய
தேதியில் இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு அசம்பாவிதம்
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது. கல்வி வியாபாரமாகிவிட்டது. எல்லா இடங்களிலும் கையூட்டு
வாடிக்கையாகிவிட்டது. சமூகப் பொறுப்புள்ள ஊடகங்கள் வன்முறை மற்றும் வக்கிரச்சாயத்தை
வகையில்லாமல் பூசிய தன் அகோரமுகத்தைக்காட்டி இளித்துக்கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை
இளைஞர் சமுதாயம் பகட்டுபோதையும் பாலியல் வேட்கையும் கொண்டு பொறுப்பற்றுத் திரிகிறது.
போதாதென்று தொலைக்காட்சி வழியே வீட்டுக்குள் தணிக்கையின்றி நுழையும் தகாத காட்சிகளும்
கருத்துகளும் பிஞ்சுத் தலைமுறையின் நெஞ்சங்களில் நஞ்சை விதைத்துக்
கொண்டிருக்கின்றன.
நம்மைச்
சுற்றி நடக்கும் சமூகச் சீர்கேடுகளையும் அவலங்களையும் சாடிக்கொண்டோ, புலம்பிக்கொண்டோ அதே
சகதியில்தான் நாமும் உழன்றுகொண்டிருக்கிறோம். அடுத்தவரைக் குற்றஞ்சொல்லுமுன் நம்
வரையிலும் நாம் சரியாக இருக்கிறோமா என்று நம்மையே சுயபரிசோதனை செய்துபார்ப்போமே
இன்று.
நாம்
புழங்கும் இடங்களான வீடு, சுற்றுப்புறம், தெரு, சாலை,
பேருந்து, பள்ளி, கல்லூரி,
அலுவலகம், பொது இடங்கள் – இவற்றில் நம்முடைய நடவடிக்கைகள் பிறர் குறை சொல்லாத அளவுக்கு இருக்கின்றனவா?
முதலில்
பொது இடங்களில் எப்படி நடந்துகொள்கிறோம் என்று பார்ப்போமா? பொது இடங்களில்
கண்ணியம் காக்கிறோமா? கைபேசியில் இரையாமல் பேசுகிறோமா?
கூச்சல் கும்மாளங்களால் பிறருக்கு சங்கடங்கள்
உண்டாக்காமலிருக்கிறோமா? ஆணோ பெண்ணோ, பொது
இடங்களில் பொது நிகழ்வுகளில் சிரத்தை எடுத்து கவனமாய் உடையணிகிறோமா?
பொது
இடங்களில் மற்றவருக்கு இடையூறாய் பக்கத்தில் நின்று புகைபிடித்தல், மதுத் தள்ளாட்டம்,
தகாத வார்த்தைகளை உச்சரித்தல், வெற்றிலை
பாக்கு, பான்பராக் போன்றவற்றைக் குதப்பித் துப்புதல்,
எச்சில் சளியைக் காரி உமிழ்தல், சிறுநீர் கழித்தல் போன்று அடுத்தவரை முகஞ்சுழிக்கவைக்கும் அநாகரிக்
செயல்களில் ஈடுபடாமலிருக்கிறோமா?
வரிசையில்
நிற்கும்போது நம்மில் எத்தனைப் பேர் முன்னாலிருப்பவர்களின் சிபாரிசை எதிர்பார்க்காமல், வரிசையை மாற்றாமல்
கலைக்காமல் தொடர முற்படுகிறோம்? யாரையாவது தவறிப்போய் இடித்துவிட்டாலோ
மிதித்துவிட்டாலோ மன்னிப்பு கேட்கிறோமா? நம்மை யாராவது
இடித்துவிட்டோ மிதித்துவிட்டோ மன்னிப்புக் கேட்டால் அந்த மன்னிப்புக்கு
மதிப்பளித்து அதை ஏற்கிறோமா?
எந்த
சந்தர்ப்பத்திலும் எவரிடமும் ‘ஏதாவது பார்த்து செய்யுங்க சார்/மேடம்’ என்ற
வாக்கியம் நம் வாயிலிருந்து வராமல் இருக்கிறதா?
நம்மில்
எத்தனைப் பேர் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டிச்செல்கிறோம்? தலைக்கவசம் அணிகிறோம்?
முறையான உரிமத்துடன் வாகனங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்? முதலில் சாலை விதிகள் இன்னின்னவென்று அறிந்திருக்கிறோமா?
பேருந்துகளில்
செல்லும்போது தலையை வெளியில் நீட்டி வாந்தியெடுக்கும் அருவறுப்பான செயலைச்
செய்யாமலிருக்கிறோமா? நமக்குப் பின்னால் சன்னலோரம் அமர்ந்திருப்பவர்களைப் பற்றியும்
பேருந்துக்கு வெளியில் இருப்பவர்களைப் பற்றியும் எத்தனைப் பேர் நினைத்துப்
பார்க்கிறோம்?
நம்மில்
எத்தனைப் பேர் குப்பைகளை பொது இடத்தில் வீசாமல் அதற்குரிய இடத்தில் போடுகிறோம்? காணும் பொங்கலன்று
மட்டும் மெரீனா கடற்கரையில் 46 டன் குப்பைகளை வீசிவிட்டு
வந்திருக்கிறோம்.
நதிகளை
அவர்கள் நாசமாக்குவது இருக்கட்டும். நம் வீட்டு வாயிலில் மழைநீர் ஓடுவதற்காக
கட்டிவைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்களை நாம் சுத்தமாக வைத்திருக்கிறோமா? குப்பைத் தொட்டியாக
அல்லவா அவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்? மழைநாளில்
தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியான பின்னர் டெங்கு, மலேரியா,
யானைக்கால் வியாதி வந்து நாம்தானே கஷ்டப்படுகிறோம்!
மண்ணை
மாசுபடுத்தும் என்றறிந்த பின்னர் என்றுமே மக்காத பாலித்தீன் பைகளைத்
தவிர்த்துவிட்டவர்கள் நம்மில் எத்தனைப் பேர்?
இப்போது
வீட்டுக்குள் வருவோம். நடுவீட்டில் தினவெடுத்து வீற்றிருக்கும் தொலைக்காட்சிப்
பெட்டியொன்று போதுமே, நம் இளகிய மனங்களை இறுகச்செய்யவும், பிள்ளை
மனங்களைப் பிறழச்செய்யவும்!
தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை நம்மோடு நம் குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்ற உணர்வோடு, தேர்ந்தெடுத்த தரமான
நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் நம்மில் எத்தனைப் பேர்? அறிவை
மழுங்கச்செய்யும் அநேக நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் நேரம் விரயமாவதும்
தவிர்க்கப்படுகிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா நாம்?
படிப்பை
விடவும் மதிப்பெண்களை விடவும் பண்பும் ஒழுக்கமும் முக்கியம் என்று
குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் பெற்றோர்களா நாம்? சுய
ஒழுக்கமும் பகுத்தறியும் சிந்தனையும் கொண்ட ஒரு குடிமகனை உருவாக்குவதில்
பெற்றோராய் நம் பங்கு என்னவென்று அறிந்து அதை சரியாய் நிறைவேற்றி வருகிறோமா?
குழந்தைகளுக்கு முன்னுதாரணமாய் வழிகாட்டியாய் முதலில் நாம்
நடந்துகொள்கிறோமா?
ஆணும்
பெண்ணும் ஒருவருக்கொருவர் இளைப்பில்லை என்னும் எண்ணத்தைக் குழந்தை மனங்களில் அடுக்களையிலிருந்தே புகுத்தியவர்கள்
எத்தனைப் பேர்? பெண்களையும் பெரியவர்களையும் மதிக்கவும், தங்கள்
மீதான சுயமதிப்பை, சமூகத்தின் பால் தங்களுக்கிருக்கும்
கடமையுணர்வை உணரவும் நம் வீட்டு ஆண்/பெண் குழந்தைகளுக்குக் கற்றுத்தந்திருக்கிறோமா?
நம்மை
நாமே அலசிப்பார்ப்போம். நமக்குள் மாற்றம் வரட்டும். வீட்டில் துவங்கும் மாற்றம்
நாளை நாட்டையும் மாற்றும் என்று நம்புவோம். இந்தியாவின் இன்றைய நிலையை எண்ணி
வெதும்பாது, எதிர்கால இந்தியாவை நல்லமுறையில் உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம்.
கோணலாய்
வளர்ந்துவிட்ட மரங்களைக் குறைகூறுவதை விட்டு நாம் வளர்க்கும் செடிகளுக்கு நம்பிக்கையெனும்
நீரூற்றி நற்பண்பெனும் உரமிட்டு சீராய் நேராய் நெடியதாய் வளர்ப்போம்.
வலைச்சர
வாரத்தில் கடைசி நாளான இன்று நாளைய பாரதத்தைத் தாங்கவிருக்கும் நற்றூண்களான குழந்தைகள்
பற்றிய பதிவுகளைப் பார்ப்போமா?
1. கதை
கேட்டு வளராத குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா என்ன? குழந்தைகளுக்குச் சொல்லப்படும்கதைகள் குழந்தைகளிடத்தில் என்னென்ன விதமான மாற்றங்களையும் எண்ணங்களையும் உண்டாக்குகிறது
என்று நாம் எதிர்பார்க்காத பல கோணங்களை முன்னிறுத்துகிறார் திரு.விழியன் அவர்கள். இனி குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும்போது
இப்பதிவின் சாரம் நம் நினைவில் இருக்கும்.
2. சிறு
குழந்தைகள் இருக்கும் வீட்டில் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். சின்ன அலட்சியம் கூட பெரிய
அளவில் பாதிப்பை உண்டாக்கிவிடும் அல்லவா? குழந்தைகளுக்கு ஆபத்துஏற்படாமல் தடுக்கும் சில ஆலோசனைகளை இந்திராவின் கிறுக்கல்கள் என்னும் தனது தளத்தில்
பகிர்ந்துள்ளார் தோழி இந்திரா. அறிவோம் வாருங்கள்.
3. இருபத்திரண்டு
வயதில் எனக்கிருந்த அறிமுகத்தை விட இரண்டு வயதில் என் மகளுக்கு இருக்கும் வட்டம்பெரிதாக இருக்கிறது என்ற பெருமிதத்துடன் தன் மகள் இளவெயினியைப் பற்றி எழுதுகிறார் திரு. செல்வேந்திரன் அவர்கள்.
இளவெயினி பற்றி இன்னும் பல சுவாரசியங்கள் அறிய அவர் தளத்துக்கு வாருங்கள்.
4. புதிய
முறையில் குழந்தைகளுடன் விளையாட சுவாரசியமான பல கணித விளையாட்டுகளைக் கற்றுத் தருகிறார்
தோழி தியானா தனது பூந்தளிர் தளத்தில்.
குழந்தைகளுக்கென்றே இயங்கும் இவருடைய தளத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்றபடியான
பதிவுகளும் இடம்பெற்றிருப்பது சிறப்பு.
5. தன்
பாடசாலையில் பயிலும் மூளைச்செயல்பாடு குறையுள்ள குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் மலர்ந்தமுகத்தையும் பற்றி தோழி இமா குறிப்பிடும்போது அக்குழந்தைகளுக்கு முன் நம் துயரெல்லாம்
எம்மாத்திரம் என்ற எண்ணம் வந்துவிடும்.
சின்னப்பாதங்களின் தளர்நடை காண இமாவின் உலகம் வாருங்கள்.
6. பெற்றவரல்லாத
மற்றவர்களின் பராமரிப்பில் விடப்படும் குழந்தைகளின் பாதுகாப்பு எவ்வளவு கேள்விக்குறியாகஉள்ளது என்னும் ஆதங்கத்தை இப்பதிவில் எடுத்துரைத்துள்ளார் தோழி ராமலக்ஷ்மி தனது முத்துச்சரம்
வலைத்தளத்தில். பள்ளிகளும் குழந்தைக்காப்பகங்களும் பணம் பிடுங்குவதில் காட்டும் அக்கறையை குழந்தைகள்
பாதுகாப்பிலும் காட்டவேண்டும் என்னும் அவருடைய கருத்தை எவரும் மறுக்கவியலாது.
7. மழலைத்தூதுவர்கள் மட்டும் இல்லையென்றால் இல்லறப்போர் அவ்வளவு எளிதில் முடிவுக்கு வந்துவிடுமா? அழகிய கவிதையாய் அந்நிகழ்வை
காட்சிப்படுத்தி மனந்தொடுகிறார் தோழி சாந்தி மாரியப்பன் தனது
கவிதை நேரத்தில்.
8. ‘உங்களால் நம்ப முடியுமா? ஒரு
குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள்
வந்துபோகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வந்துசெல்கிறார். ஒரு
தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர் வந்துசெல்கிறார். விஜய் தொலைக்காட்சி 2013
புத்தாண்டில் தமிழகத்தில் தலைசிறந்த அரசுப் பள்ளி
என அறிவிக்கின்றது. ஆந்திராவில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS
அதிகாரி தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த
விரும்புவதாக தொலைபேசுகிறார். பக்கத்து மாநிலங்களிலிருந்து ஒரு சுற்றுலா போல
வந்துபோகின்றனர்.’
இப்படித்தான் தன் பதிவை ஆரம்பிக்கிறார் கசியும் மௌனம் தளத்தில் திரு. ஈரோடு கதிர் அவர்கள்.
அப்படி என்னதான் சாதித்துவிட்டது அப்பள்ளி? அறிந்துகொள்ள
அவசியம் வாருங்கள். நாளைய இந்தியா பற்றிய நம் நம்பிக்கையை வலுப்படுத்தும்
ஒரு மகிழ்வான நிகழ்வது.
9. சீசாவுக்குள் சுனாமியை அடைக்க முடியுமா? அடைக்கமுயன்றால் என்னவாகும்? அப்படித்தான் குழந்தைகளை அவர்களுக்குப் பொருத்தமில்லாத நிகழ்ச்சிகளில் இருக்கைகளில் கட்டிப்போட்டு வைப்பதும் என்று கூறி அவற்றைத் தவிர்க்கும் ஆலோசனைகளையும் முன்வைக்கிறார் தோழி ஹூஸைனம்மா. அறிந்துகொள்வோம் வாருங்கள்.
10. திரை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
தரச்சான்றிதழ் படிதான் குழந்தைகள் அவற்றைப் பார்க்கலாமா கூடாதா என்று அனுமதிக்கப்படவேண்டும். ஆனால் நம் நாட்டில்தான்
எதற்கும் தணிக்கையே கிடையாதே… எவரும் எதையும் எங்கும் எப்படியும் பார்க்கலாம் என்ற நிலை! இதே மனநிலை அமெரிக்காவிலும் தொடர்ந்தால்…? தோழி முகுந்த்
அம்மா பட்ட பாட்டை அறிந்துகொள்ள அவரது தளத்துக்கு வாருங்கள்.
11. க்வில்லிங் எனப்படும் அழகிய கைவேலையில்
தேர்ந்தவரான தோழி இளமதியின் தளத்தில் ஊஞ்சலாடும் குட்டிப்பெண்ணைப் பார்த்து ரசிக்கவாருங்கள். சிரிக்கும்
பூவை சிங்காரித்து கவிதையால் அலங்கரித்த கரங்களைப் பாராட்டுவோம்.
12. எண்பது தொண்ணூறுகளில் திரையிசையில்
வந்த, பார்க்கவும் கேட்கவும் தெவிட்டாத குழந்தைப் பாடல்கள் பலவற்றின் சுட்டிகளை ரேடியோஸ்பதியில் பகிர்ந்துள்ளார்
திரு. கானா பிரபா அவர்கள். நாமும் பார்த்து
ரசிப்போமா?
என்ன நண்பர்களே… இந்த வாரம் தங்கள் ரசனைக்கேற்ற
அறிமுகங்கள் கிடைத்தனவா?
இதுவரை என்னுடன் பயணித்து எனக்கு ஊக்கமும்
உற்சாகமும் அளித்து ஆதரவளித்தமைக்கு
அனைவருக்கும் என் அன்பான நன்றி.
வணக்கம்.
(படங்கள் நன்றி: இணையம்)
|
|
குடியரசு தின வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteமிக்க நன்றி தங்களுக்கு.
Deleteஅன்பின் கீதமஞ்சரி - குடியரசு தின நல்வாழ்த்துகள் - அருமையான பதிவு - அறிமுகங்கள் அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteசிந்திக்க வேண்டிய பல கேள்விகள்...
ReplyDelete/// நாம் வளர்க்கும் செடிகளுக்கு நம்பிக்கையெனும் நீரூற்றி நற்பண்பெனும் உரமிட்டு சீராய் நேராய் நெடியதாய் வளர்ப்போம்... ///
முதலில் நம்மை, நம்மிடம்... இது தான் சிறப்பு...
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
அனைத்தும் தொடரும் தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteஎன்னுடைய தளத்தை அறிமுகம் செய்ததிற்கு நன்றிகள் பல
ReplyDeleteநன்றி முகுந்த் அம்மா.
Deleteமற்றைய நண்பர்களின் தொகுப்புகளோடு என்னுடைய இணைப்பையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி கீத மஞ்சரி
ReplyDeleteநன்றி கானா பிரபா.
Deleteஅழகாகத் தெளிவாகக் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் கீதமஞ்சரி!
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்!
மிக்க நன்றி கிரேஸ்.
Deleteகுடியரசுதின வாழ்த்துக்களோடு, நாளைய இந்தியாவின் நற்றூண்களான குழந்தைகள் பற்றிய பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteகுடியரசு தின நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.
சிந்திக்க வேண்டிய பல செய்திகளுடன் நிறைவான பதிவு!..
தொடர்ந்து வந்து ஊக்கமளித்த தங்களுக்கு மிக்க நன்றி.
Deleteகோணலாய் வளர்ந்துவிட்ட மரங்களைக் குறைகூறுவதை விட்டு நாம் வளர்க்கும் செடிகளுக்கு நம்பிக்கையெனும் நீரூற்றி நற்பண்பெனும் உரமிட்டு சீராய் நேராய் நெடியதாய் வளர்ப்போம்.//
ReplyDeleteஅருமை, அருமை.
இன்று இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான வலைத்தள தொகுப்புக்கு நன்றி
குடியரசுதின வாழ்த்துக்கள்..
மனமார்ந்த நன்றி மேடம்.
Deleteஅறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி கீதமஞ்சரி.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
மிக்க நன்றி சாந்தி.
Delete/எதிர்கால இந்தியாவை நல்லமுறையில் உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம்../ குடியரசு தினத்தில் மிகச் சிறப்பாக உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். பகிர்ந்த கொண்ட பதிவுகள் யாவும் சிந்திக்க வைப்பவை. அனைவருக்கும் நல்வாழ்த்துகள். எனது பதிவையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteமனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.
Deleteநீங்க வலைச்சர ஆசிரியராக ஆன முதல் தினத்திலிருந்தே, உங்களால் அறிமுகப்படுத்தப்பட விரும்பி ஆர்வமாகவும் ஆசையாகவும் காத்திருந்தேன்.. ஆசை நிறைவேறியது. மிகவும் நன்றி கீதா.
ReplyDeleteஎன்னைக் கவர்ந்த பல படைப்பாளிகள் இங்கு உள்ளனர். எந்தப் பதிவை எடுப்பது எதை விடுப்பது என்றே புரியவில்லை. இன்னும் சில தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தும் நேரமின்மை காரணமாக தொகுத்தளிக்க இயலவில்லை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஹூஸைனம்மா.
Deleteஅன்பின் கீதமஞ்சரி - குடியரசு தின நல்வாழ்த்துகள் - அருமையான பதிவு - அறிமுகங்கள் அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள்
ReplyDeleteVetha.Elangathilakam.
மிகவும் நன்றி தோழி வேதா.
Deleteகுடியரசு தின நல்வாழ்த்துக்கள் அருமையான தளங்களின் சிறப்புப் பதிவுக்கு மனமார்ந்த நன்றி.
ReplyDeleteமிகவும் நன்றி மேடம்.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
Deleteசகோதரிக்கு நன்றி! வலைச்சரம் – ஆசிரியை பணியை சிறப்பாகவே செய்தீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteபிறரைக் குற்றம் சொல்ல நீட்டும் விரல்களில் சில நம்மையும் நோக்கிக் குத்துகின்றன. நம்குறைகளை தெளிவாக பட்டியலிட்டுள்ளீர்கள் அன்பை வளர்ப்போம். நாம் முதலில் திருந்துவோம். . இது இப்படித்தான் இருக்கும் என்னும் மன நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம். குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான பதிவுகள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்.
Deleteகீதமஞ்சரி அவர்கள் வரிசையாய் கேள்விக் கணைகளைத் தொடுத்து நம்மை சிந்திக்க வைத்துவிட்டார்.
ReplyDeleteஅடுத்து, நாளைய இளைஞர்களுக்கான பதிவுகளைத் தொடுத்து... குழந்தைகளை நல்லோர்களாய் வளர்க்கப் பயன்படும் பயனுள்ள தளங்களைத் தந்தவிதம்... மிக்க நன்று!
தங்கள் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி.
Deleteகுடியரசு தின நல்வாழ்த்து
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteஅனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள்.....
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteஅருமையான பகிர்வுகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றியும்
ReplyDeleteபிறருக்கு எனது வாழ்த்துக்களும்.
என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் கீதமஞ்சரி!
ReplyDelete