திருவரங்கமும் வைகுண்ட ஏகாதசியும்!
➦➠ by:
ஆதி வெங்கட்
வலைச்சரம் – 2 – மலர் - 6
108 திவ்யதேசங்களில் முதன்மையான திவ்ய தேசமாம், பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகிற திருவரங்கத்தில் ரங்கநாதர் பள்ளி கொண்டுள்ளார். திருவரங்கத்தில் பிறந்தவர்களுக்கு முக்தி கிடைக்குமாம். மூலவர் ரங்கநாதர் வானுலகிலிருந்து மண்ணிற்கு வந்தவர். தாயார் ரங்கநாயகி வில்வ மரத்தடியிலிருந்து எழுந்தருளியவள். படி தாண்டா பத்தினி. உற்சவங்கள் எல்லாம் சன்னிதி உள்ளேயே தான். இராமனுஜருக்கு மோட்சம் கிடைத்து "தானே உகுந்த திருமேனியாக" கோவில் உள்ளேயே உள்ளார்.
இங்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் தான். ரங்கனின் வரவை கேள்விப்பட்டவுடனேயே சின்னஞ்சிறு சிறுமிகள் முதல் வயதான மூதாட்டி வரை உற்சாகத்துடன் வாசல் தெளித்து தெருவையடைத்து போடும் இரட்டை இழைக் கோலங்களும், கொள்ளையான பூக்களும், நம் நாட்டு கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள கூட்டம் கூட்டமாக வரும் வெளிநாட்டவர்களும், காவிரியும், கொள்ளிடமும், கதை சொல்லும் கோபுரங்களும், நேரம் காலம் பாராது பெருமாளையும், தாயாரையும் தங்கள் உடல்நலத்தை கூட பொருட்படுத்தாது ஓடோடிச் சென்று தரிசனம் செய்யும் வயதானவர்களும் என நான் வியந்த விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அதோடு மட்டுமா! சுஜாதா, வாலி, ரா.கி.ரங்கராஜன் போன்ற பிரபலங்கள் பலரும் பிறந்த பூமி அல்லவா! சரி! வாங்க இன்று வைகுண்ட ஏகாதசி. திருவரங்கமே ரங்கனைக் காண களைகட்டியிருக்கிறது. நாமும் பதிவுகள் மூலம் ரங்கனை தரிசிக்கலாம். புண்ணியமும் உங்களை வந்து சேரட்டும்.
ஸ்ரீகிருஷ்ணரே ஒரே வழி சரணாகதி என்ற வலைப்பூவில் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த கலையரசன் கலியப்பெருமாள் என்பவர் திருவரங்க கோயிலின் வரலாறையும், அமைப்பையும், சங்க இலக்கியங்களில் திருவரங்கமும் என அருமையாக குறிப்பிட்டுள்ளார் பாருங்களேன்.
நான் தொடர்ந்து தொடரும் தளங்களில் ஆன்மீகம் என்றாலே நம்ம இராஜராஜேஸ்வரி மேடம் பதிவுகள் தான் நினைவுக்கு வரும்... திருவரங்கத்தை பற்றியும் நிறைய பதிவுகள் எழுதியிருக்காங்க... இன்றைய அவர்களின் பதிவை இங்கே பாருங்க..
கருட சேவை என்ற வலைப்பூவில் திருவரங்க கோயிலில் காணப்படும் மிகப்பெரிய கருடாழ்வார் பற்றியும், அமிர்த கலச கருடனைப் பற்றியும் பகிரப்பட்டுள்ளது. சில கருட சேவைகளையும் கண்ணார நீங்கள் காணலாம் இத்தளத்தில்!
தன்னுடைய பெயர் சொல்ல விருப்பமில்லை என்று சொல்லும் இந்த தளத்தில் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகளும், சொர்க்க வாசல் என்பதை விட பரமபத வாசல் என்று சொல்ல வேண்டும் என்று சொல்கிறார் பாருங்களேன்.
திருப்பாற்கடல் என்ற தளத்தில் நம்மாழ்வார் முக்தி அடைந்த நாளே வைகுண்ட ஏகாதசியாகும் என்றும், அரையர் சேவை என்று ஏன் சொல்கிறோம் என்றும் தகவல் தந்திருப்பதை பார்க்கலாமா?
வைகுந்த ஏகாதசி என்ற தளத்தில் திருவாய்மொழித் திருநாள் என்றால் என்ன? அதன் சிறப்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளது… கூடவே பல கோவில்களின் பெருமாள்களை தரிசித்து புண்ணியம் பெறுவோம்.
BHAKTHI PLANET என்ற தளத்தில் நிரஞ்சனா என்பவர் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகளையும், சொர்க்க வாசல் என்று பெயர் வந்ததன் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார் – பாருங்களேன்.
தில்லியை அடுத்த நொய்டாவின் செக்டர் 34-ல் உள்ள விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கத்தினர் தங்களது வலைப்பூவில் வைகுண்ட ஏகாதசி தோன்றியது ஏன்? என்று குறிப்பிட்டு பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
அரங்கனுக்கு உற்சவங்களின் போது அணிவிக்கப்படும் பாண்டியன் கொண்டை வந்த வரலாறைப் பற்றி கீதா மாமியின் ஆன்மீக பயணம் வலைப்பூவில் பார்க்கலாம்…
தமிழுக்கு ஏற்றம் தரும் விழா என்ற தலைப்பில் சோழ நாட்டு திவ்ய தேசங்களை பற்றி பகிரப்பட்டுள்ளது. நானும் அதில் ஒன்றை இன்னும் தரிசிக்கவில்லை.
எல்லோருக்கும் பதிவுகள் மூலம் தரிசனம் கிடைத்ததா? இவ்வளவு சிறப்புகள் மிக்க திருவரங்கத்தில் என் மகள் பிறந்ததற்கும், நாங்கள் தற்சமயம் வசிக்குமிடமாகவும் இருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
நாளையோடு இந்த வலைச்சர பணி நிறைவடையப் போகிறது. நாளை என்ன தலைப்பில் பார்க்கப் போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
|
|
இன்று அறிமுகமான அனைவருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த
ReplyDeleteபாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி !
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க அம்பாளடியாள்....
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-----------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
http://tamilkkavitaikalcom.blogspot.com/
இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
--------------------------------------------------------------------------------------------------------------------------------
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்...
Deleteஆதி,
ReplyDeleteதங்கள் அறிமுகங்கள் வாயிலாக பெருமாள் தரிசனம் நேரில் கிடைக்கப்பெற்றது போன்ற மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...
Deleteஅறிமுகத்துக்கு நன்றி. தகவல் தெரிவித்தமைக்கும் நன்றி. :)))
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..
Deleteநான் தொடர்ந்து தொடரும் தளங்களில் ஆன்மீகம் என்றாலே நம்ம இராஜராஜேஸ்வரி மேடம் பதிவுகள் தான் நினைவுக்கு வரும்... திருவரங்கத்தை பற்றியும் நிறைய பதிவுகள் எழுதியிருக்காங்க... இன்றைய அவர்களின் பதிவை இங்கே பாருங்க./
ReplyDeleteஎமது தளத்தை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு இனிய நன்றிகள்..
இன்றைய அறிமுகப் பதிவுகள்
அனைத்தும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவரங்கத்தை ,மையப்படுத்தி மகிழ்ச்சிப்படுத்தியது ..
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்,,!
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..
Deleteஅருமை!.. மிகவும் மகிழ்ச்சி..
ReplyDeleteஅரங்கனைப் பற்றி சிந்திக்கும் போதும் வந்திக்கும் போதும்!..
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்..
Deleteஅறியாத பல தளங்கள்...
ReplyDeleteKalaiarasan Kaliyaperumal, S BALAJI, kalyana sundar, vishnu sahasranamam, அமிர்தகௌரி, Muruganandam Subramanian, Muruganandam Subramanian, venkatesh - இவர்களின் தளம் புதிது...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
புதிய தளங்களை தங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததில் மகிழ்கிறேன்..
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...
அன்பு அதி அரங்கனைத் தொலைக்காட்சிலாவது பார்ப்போமே ,இந்த வருஷம் அதுவும் இல்லையே என்று உறுத்தியது யூஊ டியூ பில் கிடைத்த சேவைகள் நன்றாக இருந்தது.
ReplyDeleteஉடமே உங்கள வலைச்சரம் நினைவு வந்தது. மிக நன்றாகத் தொடுத்துக் கொடுத்தீர்கள் இன்றைய சரத்தை .மிக நன்றி அம்மா.
உங்கள் கடும் உழைப்பு வீணாகாது.அத்தனை புண்ணியமும் உங்களுக்கே.
--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
Deleteஆன்மீகப் பதிவர்களை நல்லதொரு நாளில் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க குமார்..
Delete//நான் தொடர்ந்து தொடரும் தளங்களில் ஆன்மீகம் என்றாலே நம்ம இராஜராஜேஸ்வரி மேடம் பதிவுகள் தான் நினைவுக்கு வரும்... திருவரங்கத்தை பற்றியும் நிறைய பதிவுகள் எழுதியிருக்காங்க... இன்றைய அவர்களின் பதிவை இங்கே பாருங்க..//
ReplyDelete;))))) மிகவும் சந்தோஷம் + நன்றிகள்.
ஆறாம் நாள் திருவிழாவினையும் அமர்க்களமாக அரங்கனைப்பற்றியே அரங்கேற்றியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...
Deleteஇன்று வைகுண்ட ஏகாதசிக்காக சில பெருமாள் கோவில்கள் போய் விட்டேன் அதனால் தாமதம்.
ReplyDeleteமேலும் தரிசனம் செய்ய உங்கள் பகிர்வு வலைதளங்கள். மிக அருமை. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
பூலோக வைகுண்டம் திருவரங்கத்தில் வசிக்க புண்ணியம் செய்து இருக்கிறீர்கள் ஆதி.
குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
நானும் இன்று காலையிலேயே சொர்க்க வாசல் படி மிதிக்கவும், ரத்னாங்கி சேவை காணவும் சென்றுவிட்டேன்...மதியம் தான் வந்தேன்..மாலையில் வீதி பிரதட்சணம்...:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
தங்களின் அறிமுகத்திற்கு எனது நன்றிகள்! மிக்க மகிழ்ச்சி ..நண்பரே!
ReplyDeleteநன்றி, நம் தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteஅடியேனது "தமிழுக்கு ஏற்றம் தரும் விழா", "கருட சேவை" மற்றும் "வைகுண்ட ஏகாதசி" வலைப்பூக்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு அதுவும் வைகுண்ட ஏகாதசியன்று அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.
ReplyDelete