தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!
தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!
கவிதை என்றால் என்ன?
உரைநடையில் எழுதாத - நெஞசைத்தொடும்
ஆக்கங்கள் அனைத்துமே கவிதைதான்!
என் நண்பர் கவித்தென்றல் காசு மணியன்
கவிதைக்கு இப்படி விளக்கம் சொல்வார்:
“உள்ளத்து உள்ளது கவிதை - நெஞ்சில்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த மொழியால் - நன்கு
தெரிந்துரைப்பது கவிதை!”
என்னுடைய இன்னொரு நண்பர், மகாகவி,
கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறைத் தலைவராக
இருந்து ஓய்வு பெற்றவர். என்னைவிட பத்து வயது
பெரியவர். அற்புதமான மரபுக் கவிஞர்
அவர் எழுதிய கவிதை ஒன்றைக் கீழே கொடுத்
துள்ளேன்
"காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் - கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!"
இப்போது மரபுக் கவிஞர்கள் எல்லாம் அரிதாகி
விட்டார்கள்
எல்லோரும் புதுக் கவிதை வடிப்பவர்கள்தான்
திரு.மு.மேத்தா அவர்கள்தான் புதுக்கவிதை
யுகத்தைத் துவக்கிவைத்தவர்.
நாட்டிற்கு சுதந்திரம் சுதந்திரம் கிடைத்தது
பற்றி ஒரு கவிஞன் இரண்டே வரிகளில்
எழுதினான். அது மிகவும் பிர்சித்தமான
கவிதை.
தலைப்பு : சுதந்திரம்
"இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை"
கடலோர ஊர்களில் புயல் வந்துவிட்டுப்
போனபிற்கு அது ஏற்படுத்திவிட்டுப்போன
சேதங்களைத்தான் அனைவரும் பேசுவார்கள்
ஆனால் ஒரு கவிஞன் புயலுக்குப் பரிந்து
கொண்டு எழுதினான்:
"என் வீடு
இடிந்தாலென்ன
உன் வீடு
இடிந்தாலென்ன
புயலுக்கோ
பாதை தேவை!
எப்படி நச் சென்று இருக்கிறது பார்த்தீர்களா?
திருடன் ஒருவன் வீடொன்றுக்குள் நுழைந்து
அனைத்தையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டான்
ஒன்றே ஒன்றை ம்ட்டும் விட்டுச் சென்றுவிட்டான்
வந்த திருடன் விட்டுச் சென்றது என்ன?
ஒரு கவிஞன் எழுதினான்
"வந்த திருடன்
வீட்டிகுள்
வீட்டுச் சென்றான்
நிலவொளியை!"
பலரின் பற்குழிகளை நிரப்பிய பல்வைத்தியர்
இறந்து அடக்கம் செய்யப்பட்டவுடன், ஒரு
கவிஞன் எழுதினான்
"மெதுவாகவே நடந்து செல்லுங்கள்
பல் வைத்தியர்
தன் கடைசிக் குழியை
நிரப்பிக் கொண்டிருக்கிறார்"
வெளிநாட்டில் தனியாகக் காரில் சென்று
கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி, வழிப்பறிக்
காரர்களிடம் தன் உடமைகள் அனைத்தையும்
பறிகொடுத்துவிட்டாள் - தன் ஆடைகள் உட்பட
ஒரு கவிஞ்ன் அதை ஒற்றை வரியில் இப்படி
எழுதினான்.
She lost everything except her smile!
இதுபோல இன்னொரு நிகழ்வை ஒரு கவிஞன்
படு சூப்பராக இரண்டே வரிகளில் எழுதினான்
ஆனால் அது Adults Only கவிதை
இங்கே சொல்வதற்கில்லை.
என் வகுப்புக் கண்மணிகள் வந்து போகும்
இடம். எனக்கு டின் கட்டிவிடுவார்க்ள்
எப்போதாவது நடேசன் பூங்கா போன்ற இடங்களில்
அதுதான் வலைப் பதிவர்கள் கூட்டாகச் ச்ந்திக்கும்
இடங்களில் நினைவு படுத்துங்கள் சொல்கிறேன்
--------------------------------------------
வலைப் பதிவுகளில் கவிதை என்ற தலைப்பில்
என்ன தேறுகிறது என்று பார்த்தேன்
Randum ஆக ஒருவாரப் பதிவுகளைப் படித்துப்
பார்த்தேன் 16.3.2007 முதல் 22.3.2007
தேதி வரை மொத்தம் 84 பதிவுகள் இருந்தன.
அதிகமான கவிதைகளைச் சும்மா காள்மேகம்
கணக்காக எழுதித தள்ளி முன்னனியில்
இருப்பவர் தொட்டராய சாமி.
அவருக்கு வாழத்துக்கள்
பெரும்பாலான- ஏன் 80% கவிதைகள் காதலிக்காக
எழுதப்பெற்றவைதான். காதலைத்தாண்டி பலர் வெளியே
வரவில்லை. காரணம் தமிழ் மணத்தில் 81%
இளைஞ்ர்கள்தான்.
பிற்காலத்தில் இவர்களெல்லாம் சமூகத்தைப்
பார்க்க ஆரம்பித்துக் கவிதைகள் எழுதுவார்கள்
என்று நம்புகிறேன்
இப்போது அந்த 84ல் சில கவிதைகளைக் கீழே
கொடுத்துள்ளேன். எல்லாவற்றையும் கொடுக்க
எனக்கு ஆசைதான். பதிவின் நீளம் கருதி
அவ்வாறு செய்ய முடியவில்லை
-------------------------------
1. கோவை மணி
"அவன் ஒற்றைவிரலசைவை
உலகமே எதிர்பார்க்கும்
அம்பயர்!"
-------------------------------
2. தொட்டராயசாமி
"எந்த சாபம்
வேண்டுமானாலும்
வாங்கிட
தயாராக உள்ளேன்
நான்
உனக்கு குழந்தையாக
பிறக்க வேண்டும்
அவ்வளவுதான்."
-------------------------
3. யாழினி அத்தன்
"சொல் ஒரு சொல்
உன்னோடு வரச் சொல்
இல்லை தூரப் போகச் சொல்
போதும் உன் விழிச் சொல்
வேண்டும் உன் வாய்ச் சொல்
சொல்லாமல் தினமும் சொல்லும் சொல்லுக்கு
வாய்திறந்து அர்த்தம் சொல்
சொல்வதை நான் சொல்லிவிட்டு நிற்கிறேன்
உன் சொல்லுக்கு!"
------------------------------------------------
4. சென்ஷி
"காலம் காயத்தை ஆற்றும்;
காதலை..?
கைசேராத காதலிக்காக
காத்திருக்கும் ஒற்றைக்கை;
உடைந்த மனசுடன்..
உறக்கத்திற்கு காரணம் தெரியவில்லை..
நான் உறங்காததன்
காரணம் நீ!
உன்னிடம்
பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
மௌனத்தில் அழுகின்றன..
நீ இல்லாமல்..!"
-------------------------------------------
5. சி.வி.ஆர்
"பெண்ணே உந்தன் விரல் அழகு
என் வேதனை கூட்டும் விழி அழகு
எனை சோதனை செய்யும் சொல் அழகு
உன் புருவம் இரண்டில் கண்டேன் வில் அழகு!"
------------------------------------------------
6. சத்தியா
"என் வீட்டு வாசலில்
அழுத்தமாய் அழைக்கும்
அழைப்பு மணி
நீயாக இருக்காது
என்று தெரிந்தும் கூட
அந்தரித்து
உனை தேடி நிற்கிறது
என் ஆத்மா!
ஒரு தடவையேனும்
உன் குரல் கேட்காதா
என்ற ஏக்கம்
எனை வாட்ட...
ஒவ்வொரு தடவையும்
சிணுங்கும் தொலைபேசியில்...
நீயாக இருக்க வேண்டுமென்று
நீண்ட பிரார்த்தனையோடு
மூச்சிறைக்க ஓடிச் சென்று...
ஏமாற்றத் தீயில்வேகி
ஒடிந்துதான் போகின்றேன்!
சூரியனின் வட்டப் பாதையை
சுற்றிச் சுற்றியே பழக்கப்பட்ட
பூமிப் பந்தைப் போல..
உன்னையே சுற்றி சுற்றியே
எப்போதும்
வலம் வருகிறேன் நான்!"
------------------------------------------------------------
7.அமிழ்து
"தோட்டத்து ரோஜா செடியில் முள்ளில்லை...
வியப்பில்லை...
சரி தான், உன் வீட்டுச் செடியல்லவா!
பூச்செடியென்றால் இலை, தண்டு எல்லாமுண்டு தானே
நீ என்ன செய்கிறாய்...?
உன் வீட்டுச் செடியில் மட்டும் பூக்களாகவே உள்ளனவே!"
------------------------------------------------------
8.கென்
"பிறை நிலா புன்னகையில்,
ப்ரியங்கள் வழிந்திட,
உறைபனி மேகமாய் .
உள்ளம் மிதக்கும்.
கடக்கும் நொடியினில்,
தடதடக்கும் மின் தொடராய்,
இதயத்தின் துடிப்போ
இமயத்தை எட்டிடும்.
தெய்வம் பார்த்திட்ட பக்தனாய்,
சாபம் தொலைத்திட்ட அரக்கனாய்,
விழிகள் பெற்ற பயனை,
நொடியினில் தந்து மறைகிறாய்.
கடந்து போய்விட்ட காதல்பார்வைக்காய்
காத்திருக்கிறேன்,
காலத்தின் சூதில் பார்வை இழந்தப்பின்..."
----------------------------------------------
9.அருட்பெருங்கோ
"மழையில் குடை
குடைக்குள் நாம்
நமக்குள் மழை!"
-----------------------------------------------------
10. கோவி.கண்ணன்
"இந்த வழி ஆபத்தானதல்ல
இதோ பார் எனக்கு நன்றாகவே
இருக்கிறது என்றார்
செருப்பணிந்த ஒருவர் !
காலுக்குச் செருப்பின்றி நடக்கும் நான்
அதே வழியில் முட்கள் கிடந்து
தைப்பதை உணர்ந்தேன்.
இந்த செருப்பே வேண்டாம் !
என நினைத்து
ஒன்று பாதையை மாற்ற வேண்டும் அல்லது
பாதையை தூய்மைப் படுத்த போராட வேண்டும்
செருப்பணிந்தவர் சொல்கிறார்
என்னளவில் இந்த வழி நல்வழியே !
இதில் மாற்றம் தேவை இல்லை !
எப்போதும்,
நன்மை - தீமை என்ற பகுப்பில்,
பார்வையில் காணாமல் போகிறது
உண்மைகள் ! "
-------------------------------------------
அடுத்து, வேறு ஒரு தலைப்பில் தமிழ் மணப் பதிவுகள்
ஆயவு செய்யப்பட்டு, பதிவிடப்படும்
அன்புடன்
SP.VR.சுப்பையா
இந்த வார ஆசிரியர்
'வலைச்சரம்' இணையத் தமிழ் இதழ்
|
|
நேரம் செலவளித்து ஒரு வாரக் கவிதைகளைப் பார்த்து அழகாக வரிகளை எடுத்துக்காட்டியுள்ளீர்கள்...
ReplyDeleteஅருமை...
நல்ல தொகுப்பு. ஆரம்பமே கவிதையா :-)
ReplyDeleteவாத்தியார் ஐயா. கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டக் கவிஞர்களும் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளின் தலைப்பைப் பார்த்தால் அவர்கள் கவிஞர்கள் என்பது புரியும். :-)
ReplyDelete//வாத்தியார் ஐயா. கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டக் கவிஞர்களும் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளின் தலைப்பைப் பார்த்தால் அவர்கள் கவிஞர்கள் என்பது புரியும். :-)//
ReplyDeleteஇப்ப எழுதிட்டிருக்கவங்களையே மறந்துட்டாரு.. :))
This comment has been removed by the author.
ReplyDelete/////ஜி - Z said... நேரம் செலவளித்து ஒரு வாரக் கவிதைகளைப் பார்த்து
ReplyDeleteஅழகாக வரிகளை எடுத்துக்காட்டியுள்ளீர்கள்...
அருமை...////
ஆமாம் நண்பரே, செழ்வழிக்காமல் எதையும் பெற முடியாது!
நம் தமிழ்மண்ம் ப்திவர்களுக்காகவும், வந்துபோகும்
நூற்றுக்கண்க்கான வாசகர்களுக்காகவும் இதைச் செய்தேன்
நன்றி!
///// சேதுக்கரசி said... நல்ல தொகுப்பு. ஆரம்பமே கவிதையா :-)////
ReplyDeleteஆமாம் அரசியாரே, எழுத்து என்றால் கவிதைக்குத்தான்
முதலிடம்!:-))))
///// குமரன் (Kumaran) said...
ReplyDeleteவாத்தியார் ஐயா. கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டக்
கவிஞர்களும் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள்.
அவர்களின் பதிவுகளின் தலைப்பைப் பார்த்தால்
அவர்கள் கவிஞர்கள் என்பது புரியும். :-)///
உண்மைதான் மிஸ்டர் குமரன்!
நானும் கவிதைகள் எழுதுவேன். அதைவிடச் சிறப்பாகச்
சிறுகதைகள் எழுதுவேன். ஆனால் அவ்விரண்டையும்
தமிழ்மணத்தில் எழுதுவதில்லை!
ஏனென்றால் அவற்றிற்கு வரவேற்பு இன்றைய
இளைஞர்களிடம் இல்லை என்பது
என்னுடைய தாழ்மையான கருத்து!
/// சிறில் அலெக்ஸ் said...
ReplyDelete//வாத்தியார் ஐயா. கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டக் கவிஞர்களும் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளின் தலைப்பைப் பார்த்தால் அவர்கள் கவிஞர்கள் என்பது புரியும். :-)//
இப்ப எழுதிட்டிருக்கவங்களையே மறந்துட்டாரு////
ஒருவார ஆசிரியர் பதவி , இரண்டு பக்கம் (A4 size) அள்வில் பதிவு என்னும்போது அததனை
பேர்களுடையதையும் படித்து, ஒருவர் விடாமல், அதோடு யாருடைய கசப்பையும்
பெறாமல் எழுதுவ்து என்பது எப்படி சாத்தியம் நண்பரே?
ஒரு எடுத்துக் காட்டாக எழுதினேன் அவ்வள்வுதான்!
Please take it in the right sense!
வாத்தியார் சார்...
ReplyDelete//ஏனென்றால் அவற்றிற்கு வரவேற்பு இன்றைய
இளைஞர்களிடம் இல்லை என்பது
என்னுடைய தாழ்மையான கருத்து!//
இது தவறான எண்ணம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், எனக்கு அதிகமாக பின்னூட்டம் வந்தது கவிதைகளுக்கும், சிறுகதைகளுக்கும்தான் :)))
மிக்க நன்றிகள் அய்யா
ReplyDelete///G-Z Said வாத்தியார் சார்...
ReplyDelete//ஏனென்றால் அவற்றிற்கு வரவேற்பு இன்றைய
இளைஞர்களிடம் இல்லை என்பது
என்னுடைய தாழ்மையான கருத்து!//
இது தவறான எண்ணம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால்,
எனக்கு அதிகமாக பின்னூட்டம் வந்தது கவிதைகளுக்கும்,
சிறுகதைகளுக்கும்தான் ))
நான் வேறு ஒரு ஊடகத்தில் இதுவரை 36 சிறுகதைகள்
எழுதியிருக்கிறேன். அவற்றில் சிலவற்றைத் தமிழ்மணத்தில்
பதிந்தபோது சரியான வரவேற்பில்லை!
இது என் சொந்த அனுபவம்
///கென் said...
ReplyDeleteமிக்க நன்றிகள் அய்யா///
பதிந்த 10 கவிதைகளின் சொந்தக்காரர்களில்
நீங்கள் ஒருவராவது உள்ளே வந்து படித்திருக்கிறீர்களே!
அதுவரை சந்தோஷம்தான், நண்பரே!
சுப்பையா சார்.. விளையாட்டாகத்தான் சொன்னேன்.
ReplyDeleteநிஜத்தில் வலைச்சரத்தில் உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. தொடர்ந்து கலக்குங்க.
:))
இப்பொழுதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். என்னையும் பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி அய்யா !
ReplyDelete80+ கவிதைகள் படித்தீர்களா?
திகட்டியிருக்ககுமே :-) ??
ஆசிரியர் ஐயா,
ReplyDeleteஉங்கள் வகுப்பு மாணவரும் பட்டியலில் இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
பதிவுவழி பல்கலைக் கழக
வகுப்பில் படித்துவருவதும்,
பழனியப்பன் அடியவரின்
பகுப்பில் மதிப்பெண் பெறுவதும்,
பதிவுலகால் கிடைத்த பாக்கியமே !
:)
மிகவும் மகிழ்ந்து போனேன்.
ReplyDeleteசிறந்த 80 கவிதைகளில் என் கவிதையும் இடம் பிடித்ததில்.
கவிதைகளுக்காகவே வலைப்பூவை ஆரம்பித்த எனக்கு பின்னூட்டங்கள்
குரைவு என்றாலும் இவை மகிழ்ச்சியடையவைக்கின்றன.
படைப்பாளிகளுக்கு இதைவிட என்ன வேண்டும்
நன்றி
மேலும் படிக்க
!//// சிறில் அலெக்ஸ் said...சுப்பையா சார்.. விளையாட்டாகத்தான்
ReplyDeleteசொன்னேன்.. நிஜத்தில் வலைச்சரத்தில் உங்கள் பதிவுகள்
மிகவும் அருமையாக இருக்கின்றன. தொடர்ந்து கலக்குங்க.////
நீங்கள் அழகுமிகும் கடற்கரை ஊரான முட்டத்தில் பிறந்து
வங்கக்கடலையே கலக்கியவர்.
நாங்கள் கோவைக்காரர்கள் எல்லாம் வாளித் தண்ணீரில்
கலக்கித்தான் பழக்கம்:-))))
ஆனாலும் பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் சிறில்!
// கோவை மணி அவர்கள் சொல்லியது: 80+ கவிதைகள் படித்தீர்களாயட்ஹு;
ReplyDeleteதிகட்டியிருக்ககுமே :-) ?? //
அதெல்லாம் கோவை கிருஷ்ணா ஸ்வீட்டில் சாப்பிட்டு
சாப்பிட்டு பழகிவிட்டது மணி
இப்போது எதுவுமே திகட்டாது:-)))
////கோவியயர் சொல்லியது; பழனியப்பன் அடியவரின்
ReplyDeleteபகுப்பில் மதிப்பெண் பெறுவதும்,
பதிவுலகால் கிடைத்த பாக்கியமே !
:) ///
இதற்கு நீங்கள் பழனியப்பனுக்குத்தான்
பாட்டு எழுதியிருக்க வேண்டும்!
சரி, எப்போதாவது பழநியப்பனுக்காகப்
பாட்டு எழுதியிருக்கிறீர்களா?
////// THOTTARAYASWAMY.A said...
ReplyDeleteமிகவும் மகிழ்ந்து போனேன்.
சிறந்த 80 கவிதைகளில் என் கவிதையும் இடம் பிடித்ததில்.
கவிதைகளுக்காகவே வலைப்பூவை ஆரம்பித்த எனக்கு பின்னூட்டங்கள்
குரைவு என்றாலும் இவை மகிழ்ச்சியடையவைக்கின்றன.
படைப்பாளிகளுக்கு இதைவிட என்ன வேண்டும்
நன்றி////
படைபாளிகளுக்கு மனத்திருப்தி - படைத்தவுடன்
ஏற்படும பாருங்கள் - ஒரு மன நிறைவு - அது போதும்
தொட்ட்ராய சாமி!
பின்னூட்ட எணிக்கையையெல்லாம் மறந்துவிட்டுத்
தொடர்ந்து எழழுதுங்கள். வாழ்த்துக்கள்!
//
ReplyDeleteஇப்போது மரபுக் கவிஞர்கள் எல்லாம் அரிதாகி
விட்டார்கள்
//
இல்லை அய்யா. எப்போதும் இல்லாத அளவு மரபுக்கவிகள் இருக்கிறார்கள். கொத்தனார் பதிவு ஒரு சான்று.
//
நானும் கவிதைகள் எழுதுவேன். அதைவிடச் சிறப்பாகச்
சிறுகதைகள் எழுதுவேன். ஆனால் அவ்விரண்டையும்
தமிழ்மணத்தில் எழுதுவதில்லை!
ஏனென்றால் அவற்றிற்கு வரவேற்பு இன்றைய
இளைஞர்களிடம் இல்லை என்பது
என்னுடைய தாழ்மையான கருத்து!
//
இதுவும் தவறான புரிதலாகவே படுகின்றது. பின்னூட்டம் இல்லையென்றால் யாரும் படிப்பதில்லை என்று கொள்ளாதீர்கள். எழுதுங்கள். படிக்க ஆவலுடன் நாங்கள் இருக்கின்றோம்.
Floraipuyal சொன்னது போல யாரும் நம் கவிதையைப் படிக்கவில்லை என எண்ண வேண்டாம். கவிதைகள் அனைத்தும் நன்றாக இருப்பின் அதற்கு மறுமொழி தேவையில்லாது போயிருக்கலாம். Positive thinking தான்.
ReplyDelete//சரி, எப்போதாவது பழநியப்பனுக்காகப்
ReplyDeleteபாட்டு எழுதியிருக்கிறீர்களா?//
ஆசிரியர் ஐயா,
என்ன ஐயா இப்படி கேட்டுவிட்டீகள், அது ஒரு 'காலம்' இங்கே எழுதி இருக்கேன், படித்துப் பாருங்கள் !
:)
////G.K.Said: என்ன ஐயா இப்படி கேட்டுவிட்டீகள், அது ஒரு 'காலம்' இங்கே எழுதி இருக்கேன், படித்துப் பாருங்கள் !
ReplyDelete:) ///
22 மே மாதம் 2006ல் எழுதியிருக்கிறீர்கள்!
அப்பொழுது ஒரு மூன்று மாதம் ஒரு புத்தகத் தொகுப்பின் காரணமாக நான் பதிவுகளின் பக்கமே வரவில்லை!
அதனால்தான் என் கண்ணில் படவில்லை
நன்றாக இருக்கிறது!
ஆனால் அதைவிட பின்னூட்டத்தில் திருவாளர் வி.எஸ்.கே அவர்கள் விளாசிய 24 வரிப் பதில் பாடல்
படு அமர்க்களமாக இருக்கிறது
இதை அவருக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டுகிறேன்
///வி.எஸ்.கே அவர்கள் சொல்லியது: நீ காணும் நூலெல்லாம் வெளியிலுள்ள விசித்திரங்கள்!
நீ கண்ட உன் வேலன் உன்னுடன் தான் இருக்கின்றேன் !
வீணான மனமயக்கம் தந்தவனும் நானன்றோ!
வீம்பை விட்டுவிட்டு வந்துவிடு என்னுடனே///
///floraipuyal said: இதுவும் தவறான புரிதலாகவே படுகின்றது. பின்னூட்டம் இல்லையென்றால் யாரும் படிப்பதில்லை என்று கொள்ளாதீர்கள். எழுதுங்கள். படிக்க ஆவலுடன் நாங்கள் இருக்கின்றோம்.///
ReplyDeleteசெய்தால் போயிற்று!
நன்றி நண்பரே!
////காட்டாறு அவர்ர்கள் சொலியது: Floraipuyal சொன்னது போல யாரும் நம் கவிதையைப் படிக்கவில்லை என எண்ண வேண்டாம். கவிதைகள் அனைத்தும் நன்றாக இருப்பின் அதற்கு மறுமொழி தேவையில்லாது போயிருக்கலாம். Positive thinking தான். //
ReplyDeleteஉங்கள் விளக்கத்திற்கு
நன்றி நண்பரே!
அண்ணா!
ReplyDeleteபொறுக்கியெடுத்தது; யார்? சுப்பையா வாத்தியார்!!
சுப்பரா இருக்கு!
நன்றி
sorry sir,
ReplyDeleteippaththaan pathivu paathaen.
romba nanri. en peyaraiyum kavinjarkalil saeththathukku
:))
kutti nagesh / delhiwala
senshe
///// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... அண்ணா!
ReplyDeleteபொறுக்கியெடுத்தது; யார்? சுப்பையா வாத்தியார்!!
சுப்பரா இருக்கு! நன்றி!///
வாருங்கள் மிஸ்டர் யோகன்!
பிரெஞ்சுக்காரர்கள் காதலுக்காகவே பிறந்தவர்கள் என்பார்கள்
க்விதைகளில் மனதை அள்ளுவது காதல் கவிதைகள்தான்
நீங்கள் அந்த நாட்டில் படித்த / கேள்விபட்ட காதல் கவிதைகளை
மொழிபெயர்த்து இரண்டு அல்லது மூன்று பதிவு போடுங்களேன்!
///// சென்ஷி said.. sorry sir,
ReplyDeleteippaththaan pathivu paathaen.
romba nanri. en peyaraiyum kavinjarkalil saeththathukku
kutti nagesh / delhiwala
senshe ////
வாங்க சென்ஷி, கவிஞ்ர் நீங்க, நன்றியை
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துள்ளீர்கள்:-)))
அவசரம் தெரிகிறது! இன்று ஞாயிற்றுக்கிழமை
வெளியில் இருந்து பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்!
பரவாயில்லை! It is okay Mr.Senshi!:-))))
//தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!//
ReplyDeleteநன்றி அய்யா! என்னையும் கவிஞர்களில் ஒருவனாக வெளியிட்டமைக்கு! US-லிருக்கும் நண்பரொருவர் சொல்லித்தான் கவனித்தேன்! :))
படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் உங்கள் பணித் தொடரட்டும்!!!
///// அமிழ்து said..
ReplyDelete//தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!//
நன்றி அய்யா! என்னையும் கவிஞர்களில் ஒருவனாக
வெளியிட்டமைக்கு!
படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் உங்கள் பணி தொடரட்டும////
நன்றி நண்பரே!
ஊக்குவிற்பவன்கூட ஊக்குவித்தால் தேக்குவிற்ப்பான்
என்று கவிஞர் வாலி அவர்கள் சொல்வார்
உங்களையெல்லாம் ஊக்குவிக்கும் நோக்கத்துடன்தான்
இதைப் பதிவிட்டேன்
எனது கவிதைத் தொகுப்பு ஊரெல்லாம் தூரல்
ReplyDeleteகவிதை நேசிக்கும் தமிழ் உள்ளங்களுக்காக இணையத்தில்.
படித்து உங்கள் கருத்துக்களை, பதித்துச் செல்லவும்.
நன்றி
தொட்டராயசுவாமி.அ
கோவை.
இப்பொழுதுதான் உங்கள் பதிவை நானும் பார்த்தேன். என்னையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளீர்கள்.
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றிகள்!