Monday, June 11, 2007

காணாமல் போன பதிவர்கள்

1. சந்தோஷ்குரு - கசாகூளம் வலைப்பதிவில் அருமையான நூல் விமர்சனங்கள், எழுத்தாளர் அறிமுகங்கள் தந்து வந்தார்.ஓராண்டாய் காணாமல் போயிருந்தவர் weird குணம் சொல்ல மட்டும் இரண்டு மாதம் முன்னர் தலையைக் காட்டி விட்டு மறைந்து விட்டார்.

2. காசி - இவரின் தமிழ்மண நிர்வாக அனுபவத் தொடர் நான் விரும்பிப் படித்தது. கடைசியாக ஜூலை 2006ல் பதிந்து இருக்கிறார். அதற்கப்புறம் ஆளைக் காணோம் !

3. ராம்கி - பத்திரிகையாளர் என்ற வகையில் இவரது பதிவு பெரும்பாலான பதிவுகளைக் காட்டிலும் உள்ளடக்கத்தில் ஒரு படி மேலே இருந்தது.

4. நற்கீரன் - புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வியல், கட்டற்ற மென்பொருள், தத்துவம் குறித்து சிந்தனையைத் தூண்டும் விதமாக எழுதி வந்தார். ஓராண்டாய் ஆளைக் காணவில்லை.

நீங்கள் தொடர்ந்து விரும்பிப்படித்து வந்து, காணாமல் போன பதிவர்கள் பற்றிய தகவல் ஏதும் இருந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி - காவல்துறைக் கண்காணிப்பு ஆணையர், சென்னை - 600028 ;)

அன்புடன்,
ரவி

17 comments:

  1. ரவிசங்கர்
    ஜட்டி காயப்போடுதல் முதல் உபுண்டு வரை நிறைய எழுதி வந்தார். அமெரிக்காவில் இருந்து நண்பர்கள் வருவதினால் எழுத முடியாதென விடைபெற்று சென்றார். தினத்துக்கு 8 பதிவுகள் எழுதியவர்.

    ReplyDelete
  2. காசி: இவரது பதிவுகளுக்காக நானும் காத்திருக்கிறேன். புதிய தொழில் முயற்சியில் பிசியாக இருக்கிறார். அவரது தொழில் நிறுவனத்தை சரியாக நிலை நிறுத்தியபின் கண்டிப்பாக வருவார்.

    http://valai.blogspirit.com/archive/2007/05/28/sevai.html

    ReplyDelete
  3. : காடும் காடு சார்ந்த இடமும் குறித்து அழகான கட்டுரைகள் எழுதி வந்தார்.. புது வருடத்துக்குப் பின் காணவில்லை..

    ReplyDelete
  4. சார் எந்த ராம்கி...?

    சில்லுண்டி ரஜினி ராம்கியா?
    இல்லை
    ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கியா?

    ரஜினிராம்கின்னு குறிப்பிட்டு அது ஸ்டேஷனுக்குள்ள போகுது..!


    ரஜினி ராம்கி இப்ப சிவாஜியில பிஸியா இருப்பாரு..!?:0

    ReplyDelete
  5. anonymous2 - நான் சொன்னது stationbench ராம்கி தான்.

    ReplyDelete
  6. அட ரவிசங்கரா இந்த வாரம்...
    குடத்த லிங்கெல்லாம் படிச்சிட்டு வாரேன்..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ரவிசங்கர்

    ReplyDelete
  8. i miss காஞ்சி ப்லிம்ஸ்- அவரோட adobe work-க்குக்காகவே

    ReplyDelete
  9. நான் போலி டோண்டை ரொம்ப மிஸ் பன்னுகிறேன்.

    அவருடைய தொழில் நுட்ப யுத்தி அபாரம்!

    சைதாப்பேட்டை சரவணன்.

    ReplyDelete
  10. Where is tala Kaipulla ? why no one is missing him ...

    ReplyDelete
  11. எனக்கும் சிலரின் எழுத்துக்கள் 'டச்' விட்டுப் போன வருத்தமும் (!?) பதிவுகளே நிறுத்திய பரிதாபமும் எட்டிப் பார்த்தாலும் ;)

    ஒண்ணே ஒண்ணு...

    Tamil marketing | எழுத்தென்னும் தவம்

    மீனாக்ஸ் சினிமா விமர்சனமும் செய்து கொண்டிருந்தார் :)

    ReplyDelete
  12. நினைவில் வைத்து எழுதிய ரவிசங்கருக்கு நன்றி. சிந்தாநதி சொன்னது சரி. அவருக்கும் நன்றி.

    ReplyDelete
  13. என்னை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாராட்டியிருக்கிறீர்கள். அன்புக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. தற்செயலாக உங்கள் பதிவை இன்று பார்த்தேன். அதனால் அறிய முடிந்தது. நன்றி ரவி..

    ReplyDelete
  14. Some more missing bloggers

    'Urupadathu' Narayanan
    Thangamani
    Rozavasanth
    p.k.sivakumar
    sannasi
    sundaramoorthy
    ravi srinivasan
    arun vaidyanathan

    ReplyDelete
  15. எனக்கும் மீனாக்ஸின் எளிய ஹமிழில் மார்கெட்டிங் பதிவுகளும் திரை விமரிசங்களும் பிடித்தமானவை. ராம்கியின் பதிவுகள் சிந்தனையை தூண்டவல்லன.

    ReplyDelete