எனக்குத் தெரிந்து,
1. மதியழகன் சுப்பையா கவிதைகள் - நிறைய தமிழாக்கப் படைப்புகள் இடம்பெற்றுள்ள ஒரே பதிவு.
2. சாத்தான் எழுதும் பிறழ்வு - ஓவியம் குறித்து பேசும் ஒரே பதிவு.
3. இயற்கை விவசாயம் - வேளாண்மை சார் பதிவு.
4. கூமுட்டை என்னா சொல்றாருன்னா - பின்னூட்டங்களுக்காக குழாயடிச்சண்டைகளும் உலகப்போர்களும் நடக்கும் உலகில், பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்து விட்டு எல்லா இடுகைகளையும் இடும் ஒரே தமிழ்ப் பதிவு இதுவாகத் தான் இருக்கும்!!
5. தமிழீழம் - தமிழீழத்தின் எதிர்காலம் குறித்த ஆக்கப்பூர்வமான, தொலைநோக்கு உடைய ஒரே ஒரு பதிவு.
6. இந்தியாவில் எய்ட்ஸ் - முழுக்க முழுக்க ஒரு நோய் குறித்து மட்டும் எழுதப்படும் வலைப்பதிவு
இது போல ஒரே ஒரு பதிவு என்று சொல்லத் தக்க வகையில் துறை சார்ந்தோ வேறு சிறப்பு அம்சங்களோ உள்ள பதிவுகள் உங்களுக்குத் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.
அன்புடன்,
ரவி
உங்கள் அஜெண்டாவில் பார்த்துவிட்டு, 'ஒக்கே ஒக்க வலைப்பதிவு' என்றால் என்ன என்று புரியாமல் இருந்தேன். இப்போ புரிந்து விட்டது. :)
ReplyDeleteமுன்பு அன்றாடம் பதிந்து கொண்டிருந்த இவருடையதையும் 'பதில்பொட்டிகள் மூடியிருந்தப் பட்டியலில்' சேர்த்துக் கொள்ளலாம்: kirukkal.com
ReplyDelete\\உங்கள் அஜெண்டாவில் பார்த்துவிட்டு, 'ஒக்கே ஒக்க வலைப்பதிவு' என்றால் என்ன என்று புரியாமல் இருந்தேன். இப்போ புரிந்து விட்டது. :)\\
ReplyDeleteஎனக்கு இன்னுமே விளங்கேல்ல அப்பிடியெண்டால் என்ன?
திரைப்படப்பதிவு. 2003ல இருந்து எழுதிட்டிருக்கார். தமிழ்ப்படமே பாக்க மாட்டாரோ?
ReplyDeletehttp://mathy.kandasamy.net/movietalk
ReplyDeletesoory
சினேகிதி! 'ஒக்கே ஒக்க வலைப்பதிவு'= 'ஒரே ஒரு வலைப்பதிவு'. :)
ReplyDeleteஅது தெலுங்காம்.
சினேகிதி, இடுகை தான் குட்டியூண்டா இருக்கு,,சரி, தலைப்பையாவது இப்போது இருக்க சூடான fashionக்கு ஏற்ப வித்தியாசமா வைப்பம்னு தெலுங்குக்குத் தாவினேன்..தவிர, தமிழ்ப் படம் எல்லாம் அலுத்துப் போய் தெலுங்குப் படம் தொடங்கி பாதி தெலுங்கு கத்துக்கிட்டாச்சு..நெதர்லாந்து மகேஷ் பாபு ரசிகர் மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்னு இருக்கேன் :)
ReplyDeleteகண்டுகொண்டமைக்கு மிக்க நன்றி. ஓவியங்கள் பக்கம் போயே ரொம்ப நாளாச்சு...
ReplyDelete