வலைச்சரத்திற்கு எழுதுவதற்காக முன்பே இடுகையை எழுதி வைக்காததால் எழுதி வெளியிடுவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. நிறங்கள் தனித்தனியே அழகு என்றாலும் வானவில் போல் சேர்ந்திருந்தால் அதுவும் தனித்துவமான அழகுதான். இவை எப்போதாவது (அபூர்வமாக ) இருந்தால் அவற்றை நுகர(ரசிக்க) முடியும். மலர்தோட்டம் என்றால் பல மலர்களும் இருந்தால் தான் அதற்கு சிறப்பு. இருந்தாலும் நமக்கு அவற்றில் ஒன்று அல்லது மேலும் சிலது பிடித்தமாக இருக்கும். நான் வாசித்த வலைப்பூக்களில் புதிய வரவாக வந்து மறைந்த வலைப்பூ சித்தூர் முருகேசனின் கவிதை07 என்ற வலைப்பூ வேறுபட்டி இருந்தது.
உள்ளே சென்று படித்தேன். இவர் இன்னொரு இராமர் பிள்ளையோ என்று வியப்படைய வைத்துவிட்டார். :) சித்தூர் முருகேசனா ? அல்லது பீட்டர் முருகேசனா ? என்று கூட நினைக்க வைத்துவிட்டார். இந்தியாவின் எல்ல பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினேன். என்று ஒரு கட்டுரையை எழுதி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார், சித்தூரை சேர்ந்த தமிழர் என்றே நினைக்கிறேன் அதனால் ஆந்திர அரசியலும், தமிழக அரசியலும் நன்கு தெரிந்திருக்கிறது. பெட்டிசன் போட்டு போட்டு பெயர் பெற்றவர்போல் அவர் இடுகைகளை படித்தும் தெரிந்தது. இவர் சொல்வதெல்லாம் உண்மையா ? என்று நம்புவதற்கு கடினாமாக இருந்தாலும் சிலரின் சித்தாந்தங்களை அலட்சியப்படுத்தாமல் பார்த்தால் அவை உண்மையாக கூட இருக்கலாம். சித்தூர் முருகேசனின் இடுகைகள் அப்படிதான் இருக்கிறது. சோதிடத்தில் வல்லவர் என்று சொல்கிறார் கூடவே பெரியாரையும் போற்றுகிறார். அரசியல் வாதிகளை வெளுத்து வாங்கி இருக்கிறார். நிறையதகவல் இருக்கிறது. நிலாச்சாரல் வாசகர்களால் அறியப் (பரிச்சிய) பட்டவராம். தமிழ்மணத்தில் இவர் பதிந்திருந்தாலும் கருவிபட்டையை இவர் பதிவு டெம்ளேட்டில் சேர்க்காததால் இவரது இடுகைகளை கண்ணுறும் நல்வாய்ப்பு (தரிசிக்கும் பாக்கியம்) உங்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன் :)
மொழியும் நிலமும் - ஜமாலன் மற்றொரு புதிய பதிவர் முற்போக்கு சிந்தனையின் தாக்கம் கொண்டவர். அவற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அவர் எழுதுவது அனைத்தும் தரமான இடுகைகளாக உறுதியாக (நிச்சயம்) தெரியும்.
தமிழ்மணம் சாராத மற்றொருபதிவர் பிரதாப் குமார் சி அவரது நாஞ்சில் மைந்தன் வலைப்பூ. தேன் கூடு வழியாக படித்த பதிவு அது. விலங்குகளை எப்படிப் படம் எடுக்கிறார்கள்? , 'கலைவாணர் என்னும் பகுத்தறிவாளன்' போன்ற பலவகை இடுகைகளை எழுதி இருக்கிறார்.
வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர் இவர் தனித்தனியாக பல வலைப்பூக்களை வைத்திருக்கிறார். அத்தனையும் திரை இசை பாடல்கள், பழம்பெரும் நடிகர்கள், அறிவிப்பாளர்கள் பற்றியங்களை கொண்டுள்ளது. MP3 பாடல்கள் தொகுப்புகளாக ஆக்கி அதில் தனது எண்ணங்களையும் சேர்த்து சுவைபட ஆக்கி வைத்திருக்கிறார்.
மற்றும் புதிய பதிவர்களான ஜெகதீசனின் ஒரு தமிழனின் குரல்(றள்) , பாரி.அரசின் சிந்தனை பூக்கள் மற்றும் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் ரத்னேஷ் போன்றவர்களின் இடுகைகள் மாறுபட்ட எழுத்துக்களாக உள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்லிக் கொண்டே செல்ல முடியும் அடுத்து வலைச்சரம் எழுதுபவர்களுக்கும் விட்டுவைக்கனுமே :-)
No comments:
Post a Comment