Monday, October 22, 2007

எனக்குப் பிடித்த எனது இடுகைகள்

சிலவற்றை எழுதும் போதே 'இதை யார் படிக்கப் போகிறார்கள், படித்தாலும் உதைக்காமல் விட்டால் சரிதான் என்று பயந்து கொண்டே வெளியிடுவோம்.' எதிர்பாராமல் பல பின்னூட்டங்களும் ஊக்கப்படுத்தல்களும் வந்து சேரும்.

சிலவற்றை எழுதி முடித்ததும் 'ஆகா ஏதோ சாதித்து விட்டோம்' என்று பெருமையாக இருக்கும். ஆனால் வெளியிட்ட பிறகு யாருமே சீண்டியிருக்க மாட்டார்கள். 'ஓரு வேளை நாம் வெளியிட்ட வேளை வார இறுதியாக இருந்திருக்கலாம், யாரும் படித்திருக்க மாட்டார்கள்.' என்று நினைத்துக் கொண்டு, சாகா வரம் படைத்த அத்தகைய படைப்புகளை இந்த உலகம் கண்டு கொள்ள இன்னொரு வாய்ப்பு என்று இங்கே விளம்புகிறேன்.

பேருந்தில் அருகில் உட்கார்ந்த, பார்வை இல்லாவிட்டாலும் வயதான காலத்திலும் வேலைக்குப் போய் வரும் பெரியவருடன் பேசிய அனுபவம்.

கலப்புத் திருமணம் கூடாதா?

சாதி அமைப்பின் ஆதாரங்களை உடைத்து விட்டால்

பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்

நாட்குறிப்பு எழுதி படுத்துதல

தமிழ் மணக்க

ஆட்ட விதிகளை அமைப்போம்

வறுமை கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதாம்

கம்யூனிசம் எப்படி வரும் ?

வாழ்க்கை

தொடர்ந்து, நான் படித்து என்னைப் பாதித்த இடுகைகளைக் குறித்து எழுதுகிறேன்.

3 comments:

  1. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? நாங்க உங்க பதிவு எதையும் விடாம வாசிச்சுக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனா பின்னூட்டம்தான் பலசமயம் போடாமப் போறது உண்டு. என்ன எழுதறதுன்னு தெரியாமத்தான்:-))))


    வலைச்சரத்துக்கு வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  2. உங்கள் பதிவுகள் அனேகமாக பலவும் பிடிக்கும்.
    நினைப்பும் & எழுத்தும் சரிவர தெரிய ஆரம்பிக்கும் போது அந்த எழுத்தில் எனக்கு ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.அதில் உங்களுடையதும் ஒன்று.
    வாழ்த்துக்கள்.
    பல நல்ல பதிவுகள்

    "No Comments"

    என்று போவதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். :-(

    ReplyDelete
  3. வாங்க துளசி அக்கா

    //என்ன எழுதறதுன்னு தெரியாமத்தான்:-))))//
    பின்னூட்ட நாயகிக்கே இந்த நிலைமையா :-)

    //வலைச்சரத்துக்கு வந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.//
    நன்றி.

    வணக்கம் குமார்,

    //நினைப்பும் & எழுத்தும் சரிவர தெரிய ஆரம்பிக்கும் போது அந்த எழுத்தில் எனக்கு ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.//
    அழகான வரையறை.

    //மிகவும் வருத்தமாக இருக்கும். :-(//
    எழுதுவதோடு முதன்மை பலன் கிடைத்து விடுகிறது. மற்றவர்கள் படிப்பது அடுத்த பலன். அதற்கு எதிர்வினை கூடுதல் ஊக்கத்தொகை. :-)

    அன்புடன்,
    மா சிவகுமார்

    ReplyDelete