Tuesday, November 6, 2007

கவிதைக் களங்கள்!

கவிதைகளின் மீதான என் காதல் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். வலைப்பதிவுகளிலும் கூட கவிதைகள் அளவிற்கு வேறெதற்கும் நான் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

1. வந்த புதிதில் நான் கண்டெடுத்த முதல் கவிதைத் தளம் திரு.கென் -னுடையது.

"எரியும் நெருப்பாய்
உன் நினைப்பு,
உதிரும் சாம்பலாய்
என் மனசு..."

என்ற கவிதை சட்டென்று பிடித்துப் போனதால் அடிக்கடி அவர் தளத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இது தவிர எப்போது வருவாய் நீ?, நாய்க்குட்டியாய் என் பிரியம், காதல் கேடயம், சிணுங்கலில் ஆகிய கவிதைகள் எனக்குப் பிடித்தவை.

2. அய்யனார் எனக்கிட்ட பின்னூட்டத்தின் தடம்பற்றிச் சென்றபோது எதிர்பாராமல் அவரின் தனிமையின் இசையைக் கேட்க நேர்ந்தது. நான் முன்பே சொன்னதுபோல எளிதில் தவிர்த்துவிட முடியாத எழுத்துக்குச் சொந்தக்காரர். இவரின் இடுகைகள் ஒவ்வொன்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி மனதைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் அபாயம் நிறைந்தவை!! இவர் பக்கத்தில் முதன்முதலாய் படித்த அரூபதர்ஷினிக்கு இருப்பை நிரூபித்தல் கவிதை அடுத்த இரு தினங்களுக்கு நான் சென்ற இடமெல்லாம் என்னுடனே பயணித்துக் கொண்டிருந்தது. மேலும் உயிர்த்திருத்தல், தொடர்பற்றுப் போவதன் ரகசியங்கள், மழையின் ஈரக்கைகள், வடிவங்களற்ற மேகம், முதல் முத்தம், மழைக்காலக் கிளர்வுகள்-1 ஆகியவை நிரம்பப் பிடித்தவை.

3. ஆரம்பகாலங்களில் கலகக்காரர் என நினைத்து ஒதுக்கி வைத்திருந்த சுகுணாதிவாகர் அற்புதமான கவிதைக்காரர் என்பது பின்னர் தான் தெரியவந்தது. இவரின் பதிவுகளில் கவிதைகள் தவிர மற்றதை கண்டும் காணாமல் ஒடிவந்துவிடுவது என் வழக்கம். என்றாலும் சில கவிதைகளும் கூட வெகுவாய் அதிர்ச்சியூட்டுபவையாய் இருக்கும். வாட்டர் பாக்கெட் பற்றிய இவர் கவிதை படித்த பின்பாய் நான் வாட்டர் பாக்கெட்டுகளில் தண்ணீர் குடிப்பதில்லை. தண்ணீர் குழாய் திறக்கையில் கடலும் இந்த கவிதையும் நினைவு வராமலிருப்பதில்லை. இவரின் அரூபவனம், வெளியில், சாத்தியங்களின் மரணம், சாத்தியங்கள் கவிதைகள் எனக்கு பிடிக்கும். எல்லாவற்றையும் விட படித்ததும் மனதிற்குள் பிடிவாதமாய் கைகட்டி உக்கார்ந்து கொண்ட கவிதை இது!

"நீ செய்த தவறு
என்னை நேசிக்காமல் இருப்பதல்ல
நான் நேசிக்கும்படி இருப்பது"

3. வலையில் சுட்டிக்காட்டத்தக்க பெண் கவிஞர்களில் நிராகரிக்க முடியாதவர் தமிழ்நதி. இவரின் கவிதைப்பயணத்தில் "நதியின் ஆழத்தில்.." ஒரு மைல் கல். இதுவரை பலராலும் பாராட்டி எடுத்துக்காட்டப்பட்ட கவிதை அது. இருப்பற்று அலையும் துயர் அய்யோவென பதற வைத்தது. அவர்கள் போன பின் ., மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு, சொல்லாத சொல் போன்றவை நினைவில் நிற்கின்றன.

4. சோகம் சுமந்த ஆழமான மற்றும் அடர்த்தியான சொற்களால் கவிதைகள் நெய்யும் மற்றுமொரு பெண் கவிஞர் நிவேதா. இவரின் மோகித்திருப்பதன் சாபங்களை கனவில் வரைதல், தேவதைகள் காத்திருப்பதில்லை மற்றும் இந்தக்கவிதை எனக்குப் பிடித்தமானவையாயிருந்தது.

5. இன்னொரு தபூ சங்கரோ என்று நினைக்குமளவிற்கு காதல் கவிதைகளால் தனது வலைப்பதிவை நிரப்பி வைத்திருக்கிறார் அருட்பெருங்கோ. கசிந்துருகும் காதல், அழகான வர்ணனைகள் என ரசனைகள் மிளிரும் இவர் கவிதைகள் படிப்பதற்கு இதமாயிருக்கின்றன. காதல் கூடம், நொடிக்கவிதைகள் மிகவும் நன்றாயிருக்கின்றன. திருக்குறளும் கவிதையும் சேர்ந்திருக்கும் காதல் பூக்கும் மாதம் ஆச்சரியப்படுத்துகிறது!
இது ஒருசோற்றுப்பதம்..

"நீ என்னோடு கா(ய்) விட்டுப்
பேசாமல் இருக்கும் பொழுதுகளில்
மேலும் கனிந்து விடுகிறது
என் காதல்."

இன்னும்...

சத்திய கடதாசியின் - சிறுமி நோயா
வா. மணிகண்டனின் - ஆத்ம திருப்தி, நீ இல்லையென்ற வெறுமை
தூரன் குணா வின் - குட்டி இளவரசி, ,மற்றும் இந்த கவிதை
லட்சுமணராஜாவின் - சுயம், நட்பு
நவீன்பிரகாஷின் --ஆதலினால் காதல் செய்வீர், நீ, மலராத பொழுது
தம்பியின் - பேரன்பு கொண்டவள்
கணேஷின் - கால ஓட்டம்
முத்துலட்சுமியின் - பெயரிட்டு அழைக்காதே
வ.ஐ.ச.ஜெயபாலனின் - என் கதை
ப்ரியனின் - அருகில் நீயில்லாப் பொழுதுகள்
நிலா ரசிகனின் - திசைகள்


மிகப்பிடித்தமான கவிதைகள். இன்னும்ம்ம்....

ஓ.கே பயப்படாதீங்க! கவிதை போதும்.. நாளைக்கு என்னன்றத நாளைக்கு சொல்றேன்!

12 comments:

  1. //கவிதைகளின் மீதான என் காதல் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். வலைப்பதிவுகளிலும் கூட கவிதைகள் அளவிற்கு வேறெதற்கும் நான் முக்கியத்துவம் அளிப்பதில்லை.//

    அதான் தெரியுமே! நீங்க கொலவெறீயில எழுதி கொளுத்திப்போடுறது படிச்சு நாங்க எல்லாரும் பைத்தியமாகிட்டு இருக்கோமே! :-P

    ReplyDelete
  2. //மிகப்பிடித்தமான கவிதைகள். இன்னும்ம்ம்....//

    யக்கா, வலைச்சரம் தாங்காது... :-P

    ReplyDelete
  3. //ஓ.கே பயப்படாதீங்க! கவிதை போதும்.. நாளைக்கு என்னன்றத நாளைக்கு சொல்றேன்!
    //

    எனக்கு தெரியும்.. நகைச்சுவைதானே? ;-)

    ReplyDelete
  4. .:: மை ஃபிரண்ட் ::. said...
    //கவிதைகளின் மீதான என் காதல் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். வலைப்பதிவுகளிலும் கூட கவிதைகள் அளவிற்கு வேறெதற்கும் நான் முக்கியத்துவம் அளிப்பதில்லை.//

    அதான் தெரியுமே! நீங்க கொலவெறீயில எழுதி கொளுத்திப்போடுறது படிச்சு நாங்க எல்லாரும் பைத்தியமாகிட்டு இருக்கோமே! :-P

    படிச்சு நாங்க எல்லாரும் பைத்தியமாகிட்டு இருக்கோமே! ரிப்பிட்டெய்ய்ய்ய்....

    ReplyDelete
  5. .:: மை ஃபிரண்ட் ::. said...
    //மிகப்பிடித்தமான கவிதைகள். இன்னும்ம்ம்....//

    யக்கா, வலைச்சரம் தாங்காது... :-P

    ஆமா ஆமா ஆமா.... ரிப்பிட்டெய்ய்ய்ய்.....

    ReplyDelete
  6. .:: மை ஃபிரண்ட் ::. said...
    //ஓ.கே பயப்படாதீங்க! கவிதை போதும்.. நாளைக்கு என்னன்றத நாளைக்கு சொல்றேன்!
    //

    எனக்கு தெரியும்.. நகைச்சுவைதானே? ;-)

    அக்கா சொன்னா சரியாதான் இருக்கும்....

    ReplyDelete
  7. சரி சரி பதிவு படிச்சிட்டு வரென்....

    ReplyDelete
  8. கொலைவெறி மற்றும் எதிர்க்கவிதை என்னும் அற்புதமான கவிதையின் கூறுகளைப் பற்றிச் சொல்லாமல் இருட்டடிப்புச் செய்த விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

    இவண்,
    தலைவர்,
    கொலை வெறிக் கவுஜர்கள் சங்கம்,
    சென்னை- திருமங்கலம் கிளை

    ReplyDelete
  9. //கொலைவெறி மற்றும் எதிர்க்கவிதை என்னும் அற்புதமான கவிதையின் கூறுகளைப் பற்றிச் சொல்லாமல் இருட்டடிப்புச் செய்த விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!//

    கொலை வெறிக் கவுஜர்கள் சங்கம்,
    சென்னை - வடபழனி கிளை

    ReplyDelete
  10. என்னையும் பொருட்டென எடுத்துச் சொன்னமைக்கு நன்றி கவிதாயினி! வலைச்சரம் எப்பிடித் தொடுப்பதெனப் பார்க்க வந்தேன். இப்போது புரிகிறது. நன்றி.

    ReplyDelete
  11. //என்னையும் பொருட்டென எடுத்துச் சொன்னமைக்கு நன்றி கவிதாயினி! //

    அக்கா.. தன்னடக்கம் தன்னடக்கம்னு சொல்லுவாங்களே.. இதானா அது? :)

    ReplyDelete
  12. குறிப்பிடத் தகுந்த கவிதைத் தளங்களில் என்னுடையதுமா? :-)
    நன்றி கவிதாயினி.

    ReplyDelete