Sunday, November 18, 2007

நானும் பதிவுகளும் நன்றியும்..

வலைச்சரத்தில் முதல் பதிவை பதித்தப்பின் நண்பர்கள் கேட்ட கேள்வி: “முதல் பதிவு உன்னையும் உன்னுடைய பதிவுகளையும் பற்றி எழுதாமல் மற்றவர்கள் பற்றி எழுதியிருக்காயே?”

நான் எழுதிய பதிவுகளை நானே இங்கே வரிசைப்படுத்தினால் அது தற்பெருமையாகிவிடும் என்பதால் இதை தவிர்த்தேன். அதை விட மற்றவர்கள் ரசிக்கும்படி ஏதாவது உருப்படியா எழுதியிருக்கேனான்னு தெரியாது. ஆனால் இப்போது நண்பர்களின் வற்ப்புறுத்தலுக்கினங்க இந்த பதிவில் எழுதுகிறேன்.

வலைப்பதிக்க ஆரம்பித்த போது பெரிதாக ஏதும் சாதிக்க வேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கவில்லை. எல்லாரும் வச்சிருக்காங்களே, அப்படி என்னத்தான் இருக்கு இதில் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் @ curiosity மட்டுமே! என் கிறுக்கல்களை பொறித்து வைக்கும் ஒரு உலகமாக உருமாறியதுதான் THe WoRLD oF .:: MyFriend ::. இதையும் ரசித்திருக்கிறார்கள் என் நண்பர்கள்.. “இன்னும் எழுது இன்னும் எழுது” என்று நண்பர்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் சில வலைப்பூக்களும் உருவாக காரணமாகிவிட்டது.

சும்மா கிறுக்கிட்டு இருக்கும்போது நல்லா எழுதுறீயேன்னு ஒருத்தவங்க சொன்னால், ‘அட.. நம்மையும் ஒரு சிலர் கவனிச்சிட்டு இருக்காங்களே! அவங்க எழுதுற அளவுக்கு எழுதமுடியாவிட்டாலும் ஓரளவு படிக்க முடியிற அளவாவது எழுதணுமே’ என்று நமக்குள்ளே தோணுமல்லவா? அந்த மாதிரி சமயத்தில் ‘உனக்கென்ன தெரியும்? அதைப்பற்றி எழுது! தெரியாத விஷயத்தில் ஆழம் தெரியாமல் கால் வைக்காதே’ன்னு என் உள்மனசு சொல்ல, எனக்கென்ன தெரியும்ன்னு யோசிச்சதில் எனக்கு தெரிஞ்சது என்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் மட்டும்தானே என்று தோன்றியது..

உடனே மலேசியா சம்பத்தப்பட்ட பதிவுகளை எழுத ஆரம்பிச்சுட்டேன். ‘இது நல்லா இருக்கே!’ என்று சிலர் சொல்வதுக்கும் ‘மலேசியாவை பற்றி எங்களுக்கும் ஒன்னும் தெரியாது. இன்னும் நிறைய எழுதுங்க. தொடர்ந்து எழுதுங்க’ன்னு நண்பர்கள் கொடுத்த ஆர்வத்துக்கும் அளவே இல்லை. ஆனால், இப்படி அதிகமாக எதிர்ப்பார்ப்புகள் வரவர என்னால் செய்ய முடியுமா என்று எனக்குள்ளேயே ஒரு கேள்விக்குறி. பதில்? அப்போது மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரில் வாழும் துர்காவின் நட்பு கிடைக்கவே, நாங்கள் சேர்ந்து ஆரம்பித்த வலைத்தளம் ஜில்லென்று ஒரு மலேசியா.

மலேசியாவைப் பற்றி ஜில்லென்று ஒரு மலேசியாவில் எழுத ஆரம்பிச்சதும் திரும்ப என் வலைப்பூவில் ஈயோட்ட ஆரம்பிச்சுட்டேன். என்ன எழுதுறது என்று ஒன்னும் தெரியலையே என்று யோசிக்கும்போது வெட்டி அண்ணே சொன்னாரு.. “காமெடி எழுதும்மா”. என்னை வச்சி என்னமோ காமெடி பண்றார்ன்னு திரும்ப அவர்க்கிட்ட கேட்டேன். ‘இல்ல. சீரியஸாதான் சொல்றேன்’ன்னு சொல்லி ஆர்வத்தை மூட்டிவிட்டுட்டார். மூளையை கசக்கி ஒன்னு ரெண்டு காமெடி பதிவெழுதினேன். வ.வா. சங்கத்து பாசமுள்ள அண்ணன்கள் இதையெல்லாம் படிச்சு காமெடி குவீன்னு பட்டமெல்லாம் கொடுத்துட்டாங்க. யார் யாருக்கோ பெரிய எழுத்தாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பட்டத்தை தங்கச்சிங்கிற பாசத்துல எனக்கு கொடுத்துட்டாங்க.

இதுதான் எங்களுடைய பயமறியா பாவையர் சங்கத்துக்கு பிள்ளையார் சுழி. அனுசுயாக்கா தலைமையில கண்மணியக்கா, இம்சையக்கா, G3யக்கா, கவிதாயினி அக்கான்னு எல்லாரும் நகைச்சுவையில் கலக்கிட்டு இருக்காங்க. கூடவே நானும் ஒட்டிகிட்டு இருக்கேன். ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! இப்போது ‘நாங்க ரெடி.. நீங்க ரெடியா?’ன்னு ஒரு போட்டி கூட நடக்குது. நேரமிருந்தா வந்து கலந்துக்கொள்ளுங்களேன்.

பதிவுலகம் ஜஸ்ட் டைம் பாஸுக்கு மட்டுமே என்று நினைப்பவர்களுக்கு விதிவிலக்காய் திகழ்வது ப்ளாக் யூனியன். திடீரென்று அண்ணன் அம்பிக்கும் அக்கா டுபுக்கு டிசபள்க்கும் வந்த ஐடியாவில் உதயமாகியதுதான் இந்த க்ரூப். பதிவுலக நண்பர்கள் பலரும் பல ஊரில் சிதறி கிடகும்போது ஒருத்தர்க்கு ஒருத்தர் ஒத்தாசையாக இருக்கவும் நட்புடன் இருக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு 50 பேர் சேர்ந்த குழுவாக வளர்ந்து நிற்கின்றது இப்போது. ஒன்றாய் சேர்ந்து கும்மியடிக்கவும் நட்புடன் இருக்கவும் ஒரு அருமையான நட்பு வட்டாரம் இது.

இதெல்லாம் ஒரு பக்கம் ஓடிட்டிருக்க பின்னூட்டங்களை அள்ளி தெளிப்பதில் அதிக ஆர்வத்திலும் இருந்தேன். நிறைய படித்தால்தான் நிறைய கற்றுக்கொள்ள முடியும்ங்கிறதுனாலேயும் எனக்கு அப்போது (இப்போதும் கூட..) தமிழ் கற்றுக்கொள்ள வேண்டியது இருந்ததுனாலேயும் நிறைய பதிவுகளை படித்தேன். முடிந்த வரை படித்துவிட்டு பின்னூட்டம் போடுவேன்.

ஆனால் பின்னாட்களில் இப்படி சேர்ந்து பின்னூட்டம் @ கும்மி அடித்ததில் ஒரு கூட்டணியே அமைந்துவிட்டது. பாசக்கார அன்பர்கள் எல்லாரும் சேர்ந்து பாசக்கார குடும்பமாய் ஒன்றாய் சேர்ந்தது கும்மியில்தான். குட்டிப்பிசாசு சிவா, முத்துலெட்சுமிக்கா, கண்மணியக்கா, கோபிண்ணே, தருமி ஐயா, குசும்பன் அண்ணே, கவிதாயினியக்கா, அபி அப்பா, மின்னலண்ணே, அய்யனார் அண்ணேன்னு சகோதரர்கள் அனைவரும் சேர்ந்த்து அடிக்கும் லூட்டிக்கும் அளவில்லை. எங்கள் சந்தோஷத்தில் அப்பப்போ வந்து கலந்துக்கொள்ளும் மற்ற பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி. வாங்க.. சேர்ந்து கும்மியடிக்கலாம்.

சங்கம் க்ரூப்ஸின் மற்றொரு படைப்பாக உருவாகியது சங்கம் விஷ்ஷஸ். அதுவே இப்போது சுவரொட்டி என்ற பெயர் மாற்றத்தில் புது பொலிவுடன் வந்திருக்கிறது. எனக்கு அங்கேயும் ஒரு துண்டு போட்டு இடம் கொடுத்திருக்காங்க. யாருக்காவது பிறந்தநாள், திருமணம், குழந்தை பிறப்பு, நோட்டிஸ், வாழ்த்து என என்ன இருந்தாலும் போஸ்டர் அடிச்சு ஒட்டுறதுதான் எங்க வேலை. யாருக்காவது வாழ்த்து சொல்ல வேண்டுமா? உடனே நீங்கள் நாடவேண்டியது சுவரொட்டியை...
சமீபத்தில் இந்த குழந்தை துண்டு விரித்து அமர்ந்திருப்பது குட்டீஸ் கார்னரில். என்னைப்போல் சிறு பிள்ளைகள் விளையாடும் மைதானம். மழலை செல்லங்களை பார்க்க வேண்டுமா? வாங்கோ ஆண்டிஸ்.. வாங்கோ அங்கிள்ஸ்... குட்டீஸ்கள் நாங்கள் எல்லாரும் சேர்ந்து TEACH என்ற ஒரு பயனுள்ள ஐடியாவுடன் வந்திருக்கோம். அதுக்கு உங்க எல்லாருடைய ஆதரவுகளும் தேவை. இவை பற்றி மேலும் அறிய இதை படிங்க. மேலும் விவரங்களுக்கு இங்கே ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க.

இந்த 7 நாட்களாய் நான் படித்தவை ரசித்தவை என்று என்னால் முடிந்த வரை கொஞ்சம் சொல்லிட்டேன். 7 நாட்கள் என்பதும், வெறும் ஏழே இடுகைகள் என்பதும் என்னை பொருத்த வரை மிக மிக குறைவு. வாய்ப்பு கிடைத்தால் இன்னும் நிறைய பேரை பற்றியும் அவர்களின் பதிவுகளை பற்றியும் தனித்தனியாக பதிக்கலாம்.

நான் படித்ததில் ரசித்த பதிவுகளை பி.டி.எஃப்-அக மாற்றி சேர்த்து வைத்துள்ளேன். அதில் பாதியை கூட இங்கே சொல்லி முடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் என்னால் முடிந்த வரை ராமனுக்கு ஒரு அனுமானாக இல்லாவிட்டாலும் ஒரு அணிலாய் இருந்து எனக்கு கொடுத்த பொறுப்பை சரியாக செய்து முடித்து இருக்கிறேன் என நம்புகிறேன். முத்துலட்சுமிக்கா, பொன்ஸக்கா, நீங்கதான் ஆமாவா இல்லையா என்று சொல்லணும்..

வலைச்சரத்தில் கால் மேல் கால் போட்டு வலைச்சரம் தொடுத்த என்னை ஆதரிச்சு ஏழு நாட்களும் என்னுடன் என் பயணத்தில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கு முதலில் நன்றி.

என்னையும் நம்பி வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த வலைச்சர பொறுப்பாளர்களுக்கும் ஒரு மாதத்துக்கு முன்பிலிருந்தே என்னுடைய பொறுப்பு நவம்பர் 12 என்று அவ்வப்போது ஞாபகப்படுத்திக்கொண்டிருந்த முத்துக்காவுக்கும் எனது அடுத்த நன்றிகள்.
என்னை தொடர்ந்து அடுத்து வரப்போகும் வலைச்சரம் ஆசிரியர் யாருன்னு தெரியும்ல? ச்சும்மா அதிர போகுது வலைச்சரம்.. அவங்களுக்கும் இவ்வேளையில் பாராட்டுக்களும் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறேன். இனி வரும் வலைச்சர ஆசிரியர்களும் பல நல்ல இடுகைகளை சுட்டிக்காட்டி வாழ்த்த வேண்டும் என என் விருப்பம் நிறைவேறும் என நினைக்கிறேன்..

என்னுடைய வலையுலக ஓராண்டு பயணத்தில் கிடைத்த நட்புதான் நான் சம்பாரித்த விலைமதிப்பில்லா சொத்து. நண்பர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதிதாய் வரும் வலை நண்பர்களுக்கு பழைய வலைபதிவர்கள் வழிக்காட்டியாக இருந்து அவர்களுக்கும் பாதையை காட்டினால் அனைவரும் சேர்ந்தே வளருவோம். கூடவே தமிழும் வளரும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் நல்லாசியுடன் விடைப்பெறுகிறேன்.

என்றும் நட்புடன்,
.:: மை ஃபிரண்ட் ::.

10 comments:

  1. மீ த பர்ஸ்டாடாடாடா

    ReplyDelete
  2. அக்கா நன்றி...சீக்கிரம் வந்து நம்ம சங்கத்து வேலை எல்லாம் ஸ்டார்ட் பண்ணுங்க.

    ReplyDelete
  3. மொத்தத்தில் இந்த வாரம் அதிரடி வாரமாக இருந்திச்சி ;))

    \\ஒரு அணிலாய் இருந்து எனக்கு கொடுத்த பொறுப்பை சரியாக செய்து முடித்து இருக்கிறேன் என நம்புகிறேன்\\

    இனிமேல் அணிகுட்டி அனுன்னு அழைக்கப்படுவாய் :)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!!மைஃரண்ட்!

    ReplyDelete
  5. " ஒரு அணிலாய் இருந்து எனக்கு கொடுத்த பொறுப்பை சரியாக செய்து முடித்து இருக்கிறேன் என நம்புகிறேன். முத்துலட்சுமிக்கா, பொன்ஸக்கா, நீங்கதான் ஆமாவா இல்லையா என்று சொல்லணும்"

    எனக்கு தெரிந்த வரை நீங்க கொடுத்த லிங்கும் , பதிவும் ஏராளம் மிகவும் அருமையாக இருந்தது.

    அவுங்க மட்டும் தான் ஆமா சொல்லனுமா?

    நானும் சொல்லுவேன்
    ஆமா
    ஆமா
    ஆமா
    ஆமா
    ஆமா

    ReplyDelete
  6. @cheena (சீனா):

    //மீ த பர்ஸ்டாடாடாடா//

    இந்த வரிக்கு ஒரு காப்பிரைட் எடுத்து வைக்கணும்போல சீனா.. ஹீஹீ.

    ReplyDelete
  7. @Baby Pavan:

    //அக்கா நன்றி...சீக்கிரம் வந்து நம்ம சங்கத்து வேலை எல்லாம் ஸ்டார்ட் பண்ணுங்க.//

    இதோ வந்துட்டே இருக்கேன் ராசா.. :-))

    ReplyDelete
  8. @கோபிநாத்:

    //மொத்தத்தில் இந்த வாரம் அதிரடி வாரமாக இருந்திச்சி ;))//

    ஆமாவா? நன்றீண்ணே. :-)

    ReplyDelete
  9. @நானானி:

    //வாழ்த்துக்கள்!!மைஃரண்ட்!//

    நன்றிங்க நானானி. :-)

    ReplyDelete
  10. @குசும்பன்:

    //எனக்கு தெரிந்த வரை நீங்க கொடுத்த லிங்கும் , பதிவும் ஏராளம் மிகவும் அருமையாக இருந்தது. //

    நன்றி நன்றி. :-)

    //அவுங்க மட்டும் தான் ஆமா சொல்லனுமா?

    நானும் சொல்லுவேன்
    ஆமா
    ஆமா
    ஆமா
    ஆமா
    ஆமா//

    ஆமா சொல்றது இருக்கட்டும். அது ஏன் ஐந்து முறை ஆமா? ஏத்ஹாவது உள்குத்தா?? :-P

    ReplyDelete