Sunday, November 18, 2007

வலைச்சரவரலாற்றில் முதன்முறையாக...

என்னடா இவ.. நன்றி டாட்டா பை பைன்னு எல்லாம் சொன்னதும் கிளம்பிட்டான்னு நினைச்சேன்.. தொல்லை இன்னும் போகலையேன்னு நீங்க நினைப்பீங்க.. ஆமாம்.. நீங்க மனசுல நினக்கிறது மலேசியா வரை கேட்குது.. :-P

என்ன தலைப்பு இது? வலைச்சர வரலாற்றில் முதன் முறையாக.. இது வலைச்சர பொறுப்பாசிரியர் எனக்காக எழுதிய அறிமுகப்பதிவின் தலைப்பாச்சேன்னு யோசிப்பீங்க.. ஆமாம்.. இப்போதும் நீங்க மனசுல நினைச்சது இங்கே வரை கேட்குது.. :-P

ஆனால், இந்த பதிவுக்கு இந்த தலைப்பைத்தவிர வேற எதுவும் பொருத்தமாக இருக்காது என்று தோன்றியதால் முதல் பதிவுக்கும் கடைசி பதிவுக்கும் ஒரே தலைப்பு வைத்தாகிவிட்டது. ஏன் என்று கேட்பவர்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன். கீழே விடை இருக்கு. தொடர்ந்து படிங்க. :-P

நான் சொல்ல நினைத்ததை 7 நாட்களுக்கு 7 பதிவுகளாக பிரித்து சொல்லியாகிவிட்டது.. அதனால்த்தான் நன்றிகளும் சொல்லி விடைப்பெற்றுவிட்டேன்.. ஆனால், இந்த பதிவு அடுத்து வரப்போகும் வலைச்சர ஆசிரியரின் அறிமுகம்..

வலைச்சர வரலாற்றில் முதன் முறையாக தற்போதைய ஆசிரியர் அடுத்து வரப்போகும் ஆசிரியருக்கு அறிமுகம் செய்து வச்சா எப்படி இருக்கும்? வலைச்சர பொறுப்பாசிரியருக்கு வேலை இருக்காது.. அவ்வளவுதானேன்னு சொல்றீங்களா? இருந்துட்டு போகட்டும்.. நாளை தாரை தப்பட்டைகள் முழங்க வரப்போவது யார் தெரியுமா???


G3.. G3.. G3....


இவங்களை பத்தி என்ன சொல்றது..ம்ம்ம்.. மைக்கல் மதன காம ராஜன் பார்த்திருக்கீங்களா.. அதுல வில்லன் கோஷ்டி ஒரு டயலோக் ரிப்பீட்டே பண்ணிக்கிட்டே இருப்பாங்க.. அதாவது "இவன் பெரிய ஆளுடா.. எல்லா இடத்துலேயும் ஆள் வச்சிருக்கான்.. அங்கே நெட்டையா ஒரு போடிகார்ட். இங்கே குட்டையா ஒருத்தன். கையில ஏ.கே 47"ன்னு.. ஆனா, அது ஏ.கே 47 கிடையாது.. கரண்டிதான்..

இப்படித்தான் இவங்களும்.. எல்லா இடத்துலேயும் ஆள் வச்சிருக்காங்க.. ஏ.கே 47ன்னு இவங்க சீரியஸ் கைன்னு நெனச்சிடாதீங்க. அது கரண்டி மாதிரி காமெடி ஆகிடும்.. அந்த அளவுக்கு காமெடி பார்ட்டி இவங்க.. சுறுக்கமா சொல்லணும்ன்னா இவங்க ஒரு லேடி கைப்புள்ள..

ஆப்பு.. இல்ல இல்ல.. தோப்பே இறக்கி வச்சாலும் அசராம நின்னு அடுத்த தோப்பு எப்போன்னு கேட்ப்பாங்க.. தோப்புன்னா என்னன்னு கேட்குறீங்களா? ஒன்னு வாங்குனா அது ஆப்பு... பல்க் ஆர்டர்ல வாங்குனா அது தோப்பு! :-P

இவங்க பெயருக்கு ஒரு மீனிங் இருக்கு. G3 = சுடுறது... இதுவே இவங்க ஸ்பெஷலிட்டி... அழகா சுட்டு சுட்டு போடுவாங்க.. அந்த பெயர் எப்படி வந்துச்சுன்னு அவங்களே நாளைக்கு விளக்கம் சொல்லுவாங்கன்னு நாமும் எதிர்ப்பார்ப்போமே!

அப்புறம் ஒரு மேட்டர் சொல்ல மறந்துட்டேனே! இவங்க பதிவுகளை ஆரய்ச்சி பண்றதை விட வந்திருக்கிற பின்னூட்டங்களை பாருங்க.. எல்லா பதிவிலும் ஒரு குட்டி கலாட்டாவே நடந்திருக்கும். அதுவே ரொம்ப விருவிருப்பா இருக்கும். ;-)

இவங்க சாதனை என்ன தெரியுமா? ஒரு பதிவுல 3000+ பின்னூட்டங்களும் வாங்கி கலக்கியிருக்காங்க..

அடுத்து நாம் எல்லாரும் சேர்ந்து வலைச்சர கரண்டியை இவங்க கையில கொடுப்போம். தினமும் ஒரு உணவு கலக்கி சுவையா நமக்கு ஊட்டுவாங்கன்னு எதிர்ப்பாப்போம்.

ம்ம்.. வாங்க.. அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா.. ம்ம். கிளம்புங்கள்.. :-))

21 comments:

  1. வழக்கமா..ஜி3 பண்ணுற மாதிரி, உங்க பதிவுகளையே ஜி3 பண்ணிப் போட்டுற போறாங்க..எதுக்கும் ஒரு தடவை விளக்கிச் சொல்லிடுங்க.. :))))

    ReplyDelete
  2. ;-)))))இதை பார்த்த வரவேற்ப்பு பதிவு மாதிரி இல்லையே...கலாய்க்குற பதிவு மாதிரியில்ல இருக்கு ;-)

    ReplyDelete
  3. வலைச்சர வரலாற்றில் முதல்முறையாக ஒருத்தர் பாக்கி இல்லாமல் எல்லாரையும் பா(ர்)ராட்டி
    சரஞ்சரமாய் மலர்மாலை வழங்குனதுக்கு நன்றியும் வாழ்த்து(க்)களுமுன்னு எல்லார் சார்பாவும் சொல்லிக்கறேன்.

    ஜி3க்கு நல்வரவு.

    ReplyDelete
  4. \இவங்க பெயருக்கு ஒரு மீனிங் இருக்கு. G3 = சுடுறது... இதுவே இவங்க ஸ்பெஷலிட்டி... அழகா சுட்டு சுட்டு போடுவாங்க.. அந்த பெயர் எப்படி வந்துச்சுன்னு அவங்களே நாளைக்கு விளக்கம் சொல்லுவாங்கன்னு நாமும் எதிர்ப்பார்ப்போமே!\\

    இது மட்டும் போதுமா? மீதி எல்லாம்

    கதை எழுதுவாங்க

    டைரி எழுதுவாங்க

    படம் காட்டுவாங்க

    எல்லோருடைய பிறந்தநாளுக்கும் கேக் வெட்டி கொண்டாடுவாங்க.

    இது எல்லாத்தையும் விட ஒரு ஓட்டல் விடமா எல்லா ஓட்டலிலும் அக்கவுண்ட் வச்சிருக்காங்க ;-))

    ReplyDelete
  5. வாங்க G3! ரொம்ப நாள் பழிவாங்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு. வசமா மாட்டிக்கிட்டீங்க. சும்மா அதிர வச்சிருவோம். மு.ல. அக்கா மட்டும் கொஞ்சம் கண்டுக்காம இருங்க. மத்ததை நாங்க பாத்திக்கிறோம்.
    revenge will Start Tomorrow!

    ReplyDelete
  6. //ஆப்பு.. இல்ல இல்ல.. தோப்பே இறக்கி வச்சாலும் அசராம நின்னு அடுத்த தோப்பு எப்போன்னு கேட்ப்பாங்க.. தோப்புன்னா என்னன்னு கேட்குறீங்களா? ஒன்னு வாங்குனா அது ஆப்பு... பல்க் ஆர்டர்ல வாங்குனா அது தோப்பு! :-P//

    ஹி ஹி...... அது தோப்பு இல்லம்மா? எங்க டீரிட்'ன்னு???

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. @எல்லாருக்கும்

    என்(எனக்கு) கச்சேரி நாளைல இருந்து தான்னு முத்துக்கா சொன்னாங்க. நீங்க எல்லாரும் இன்னிக்கே ஆரம்பிச்சிட்டீங்க போல?

    கச்சேரிய ஆரம்பிச்சு வச்ச தங்கச்சிக்காவுக்கும் அதை வழிப்பற்றி வந்த வாழ்த்திய, மிரட்டிய, ஓட்டிய எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :)

    ReplyDelete
  9. அட அவங்களா, அந்த 3000+ எப்படி மறக்க முடியும்....அன்னைக்கு தானெ நான் 1ஸ்ட்...இம்சை குடுக்க ஸ்டார்ட் பண்ணென்.

    அந்த கின்னஸ் ரெக்கார்ட்ல என் பேரும் இருக்கு இருக்கு இருக்கு...

    ReplyDelete
  10. வித்யா கலைவாணி said...
    வாங்க G3! ரொம்ப நாள் பழிவாங்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு. வசமா மாட்டிக்கிட்டீங்க. சும்மா அதிர வச்சிருவோம். மு.ல. அக்கா மட்டும் கொஞ்சம் கண்டுக்காம இருங்க. மத்ததை நாங்க பாத்திக்கிறோம்.
    revenge will Start Tomorrow!

    சொல்லிட்டீங்கல்ல செஞ்சி முடிச்சிடுவோ...

    ReplyDelete
  11. வணக்கம் !!!
    My dear Friend :)
    இன்று வரை இந்த ப்லாக் இருப்பது தெரியாது. அருமையான முயற்சி. உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். இது தான் நான் தமிழில் பதிவு செய்யும் முதல் மறுமொழி.
    தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது . G3 அம்மையாரைப் பற்றி இவ்வளவு தெளிவாக விளக்கியிருக்க வேறு யாராலும் முடியுமா என்று வியக்கின்றேன். (வாரவும் தான் ? :p )
    Your posts are lovely my friend... And as you have put in your post;
    G3 is indeed a lovely person :)

    என்றும் அன்புடன்,

    மருதம்.

    ReplyDelete
  12. G3 என்ற பெயருக்குள் ஒரு கவிதாயினியின் பெயர் ஒளிந்திருக்கிறது. அவங்களா இவங்க..:)

    ReplyDelete
  13. @TBCD:

    //வழக்கமா..ஜி3 பண்ணுற மாதிரி, உங்க பதிவுகளையே ஜி3 பண்ணிப் போட்டுற போறாங்க..எதுக்கும் ஒரு தடவை விளக்கிச் சொல்லிடுங்க.. :))))//

    ஹாஹாஹா.. உங்க பின்னூட்டத்தை படிச்சதுனாலேயோ என்னமோ.. அதிரடியா கலக்குறாங்க. :-)

    ReplyDelete
  14. @கோபிநாத்:


    //;-)))))இதை பார்த்த வரவேற்ப்பு பதிவு மாதிரி இல்லையே...கலாய்க்குற பதிவு மாதிரியில்ல இருக்கு ;-)//

    அட அண்ணே. எப்படி ட்தப்பா இல்லாமல் சரியா புரிஞ்சுக்கிட்டீங்க? :-)))

    ReplyDelete
  15. @துளசி கோபால்:

    ///வலைச்சர வரலாற்றில் முதல்முறையாக ஒருத்தர் பாக்கி இல்லாமல் எல்லாரையும் பா(ர்)ராட்டி
    சரஞ்சரமாய் மலர்மாலை வழங்குனதுக்கு நன்றியும் வாழ்த்து(க்)களுமுன்னு எல்லார் சார்பாவும் சொல்லிக்கறேன்.//

    ஆஹா டீச்சர்.. எனக்கும் எல்லார் பற்றியும் எழுதணும்ன்னு ஆசைதான்.. ஆனால் 300 பேரைப்பற்றி எழுத வேண்டிய இடத்துல வெறும் 50+ பெயரை மட்டுமே எழுதியதில் எனக்கும் வருத்தம்ட்தான்.. ம்ம்ம்...

    ReplyDelete
  16. @வித்யா கலைவாணி:

    //வாங்க G3! ரொம்ப நாள் பழிவாங்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு. வசமா மாட்டிக்கிட்டீங்க. சும்மா அதிர வச்சிருவோம். மு.ல. அக்கா மட்டும் கொஞ்சம் கண்டுக்காம இருங்க. மத்ததை நாங்க பாத்திக்கிறோம்.
    revenge will Start Tomorrow!//

    பழி வாங்கும் வேலை எந்த அளவு கலைக்கட்டியிருக்குக்கா? நானும் கலந்துக்குறேன். :-))))

    ReplyDelete
  17. @@வேதா:

    //அட அட இப்டியெல்லாம் அறிவிப்பு கொடுத்து எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கற :) பார்க்கலாம் நம்ம சொர்ணாக்கா என்ன பண்றாங்கன்னு ;)//

    சொர்ணாக்காவா கொக்கா? :-))))

    ReplyDelete
  18. @G3:

    //கச்சேரிய ஆரம்பிச்சு வச்ச தங்கச்சிக்காவுக்கும் அதை வழிப்பற்றி வந்த வாழ்த்திய, மிரட்டிய, ஓட்டிய எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :)
    //

    ஹீஹீ.. உங்க கிட்ட இருந்து பெருசா எதிர்ப்பார்க்கிறோம்க்கா. :-)))

    ReplyDelete
  19. @இம்சை:

    //அட அவங்களா, அந்த 3000+ எப்படி மறக்க முடியும்....அன்னைக்கு தானெ நான் 1ஸ்ட்...இம்சை குடுக்க ஸ்டார்ட் பண்ணென்.

    அந்த கின்னஸ் ரெக்கார்ட்ல என் பேரும் இருக்கு இருக்கு இருக்கு...//

    ஆமா ஆமா.. ஞாபகம் இருக்கு. எல்லா மொழியுலும் G3 பண்ண அந்த இம்சை நீங்கதானே? :-P

    ReplyDelete
  20. @Marutham:

    //வணக்கம் !!!//

    வணக்கம்.. :-))

    //My dear Friend :) //

    அன்புள்ள தோழியே. :-)

    //இன்று வரை இந்த ப்லாக் இருப்பது தெரியாது.//

    இன்னைக்கு தெரிஞ்சிடுச்சே.. :-)

    // அருமையான முயற்சி. உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். //

    சேர வேண்டியவங்களுக்கு சேர்ந்திருக்கும் என நம்புகிறேன். ;-)

    //இது தான் நான் தமிழில் பதிவு செய்யும் முதல் மறுமொழி. //

    வாழ்த்துகக்ள் மருதம். அப்படியே தமிழில் பதிவெழுதவும் ஆரம்பிச்சிடுங்க. நாங்கெல்லாம் இருக்கிறோம். ;-)

    //தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது .//

    நன்றி நன்றி.. :-)

    // G3 அம்மையாரைப் பற்றி இவ்வளவு தெளிவாக விளக்கியிருக்க வேறு யாராலும் முடியுமா என்று வியக்கின்றேன். (வாரவும் தான் ? :p ) //

    ஹாஹாஹா,, இன்னும் நிறைய எழுதலாம்ன்னு நெனச்சேன். சொர்ணக்காவுக்கு புகழ்ச்சி புடிக்கதுன்றதுனால குறைச்சுக்கிட்டேன். ;-)

    //Your posts are lovely my friend... And as you have put in your post;
    G3 is indeed a lovely person :) //

    நன்றீ நன்றி. :-))

    //என்றும் அன்புடன்,

    மருதம்.//

    நாங்களும் போடுவோம்ல..

    என்றும் நட்புடன்,
    .:: மை ஃபிரண்ட் ::.

    ReplyDelete
  21. //தமிழ்நதி said...
    G3 என்ற பெயருக்குள் ஒரு கவிதாயினியின் பெயர் ஒளிந்திருக்கிறது. அவங்களா இவங்க..:)
    //

    அவங்களேதான். :-))

    ReplyDelete