இன்றே இப்படம் கடைசி... !!!
இந்த ஒரு வாரக் காலம், உங்களுக்கு ஒருச் சிறப்பான வலைசரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் தொடங்கி, முடிப்பதற்குள் முழிp பிதுங்கி விட்டது.
நான் தொகுத்தப் பதிவுகள் எல்லாம், சிறப்பானவை என்றால், நான் தொகுக்காமல் விட்டப் பதிவுகள் மிகச் சிறப்பானவை என்றே நான் கருதுகிறேன். இடைவிடாதச் சமூகப் பணிக் (!!! ;) )காரணமாக நான் எழுத நினைத்த வலையுலக நன்பர்களின் சிறப்புப் பூங்கொத்து-2 எழுதாமலே கிளம்புகிறேன் :(
இந்த வேளையில், ஒரு கோரிக்கை வைக்க விழைகிறேன். நாம் பதிவு எழுதுவது என்பது மற்றவர்களும் படிக்கவே. அப்படியிருக்கும் போது, நாம் எழுதிய பதிவுகள் சிரமம் இல்லாமல், மற்றவர்கள் படிக்க ஏதுவாக இருந்ததல், சிறப்பாக இருக்கும். நான் இந்த வலைச்சரத்தில் தொடுக்க பழைய பதிவுகளை புரட்டும் போது, பல வலைத் தளங்களில், ஆர்கைவிங்க் என்பது, பதிவு எழுதப்பட்ட காலத்தின் அன்மைய பதிவுகளை மட்டும் காட்டுவதுப் போல் அல்லது, பதிவு எழுதிய மாதத்திலோ,அல்லது பதிவு எழுதிய தினத்திலோ, தொகுக்கப்பட்டுயிருந்தது. இப்படி கொடுக்கப்பட்டு இருக்கும், இடங்களில் பழைய பதிவுகள் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது வெகு சிரமமாக இருந்தது. அதனால், நான் பரிந்துரைப்பது, நீங்கள் எழுதிய அனைத்து பதிவுகளின் தலைப்பையும், ஒரே பக்கத்தில் பார்க்கும் வண்ணம், தொகுத்தால், சிறப்பாக இருக்கும் (உ.தா. கோவியாரின் பதிவில் இருப்பதைப் பாருங்கள் ). சரி...நன்றி நவிலும் நேரம் ஆச்சு..
ஒரு வார காலம், எனக்கு இங்கே வாய்ப்பளித்த வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், ஆகியோருக்கு நன்றி.
தொடர்ந்து நான் போட்ட பதிவுகளை (மொக்கை) படித்தோ, படிக்காமலோ, பின்னுட்டமிட்டோ, வாசித்தோ ஊக்குவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றி.
என் பதிவுகளைப் படித்து, ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு, தனிப்பதிவு எழுதி தன் கருத்தைத் தெரிவித்த வெட்டிப்பயலுக்கும் என் நன்றி. :D
என்னைத் தொடர்ந்து எழுதப் போகும் ஆசிரியர்களுக்கும் சிறப்பான வலைச்சரம் தொடுக்க என் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்.
உங்களை அடுத்த ஒரு வார காலம், சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதால், அனைவரும், பின்னுட்டப் பெட்டியருகே, பத்திரமாகப் போய்ச் சேருமாறு வேண்டிக் கொள்கிறேன். :P
அன்புடன்,
டிபிசிடி / TBCD
வாழ்த்துக்கள். :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteடிபிசிடி ஐயா,
ReplyDeleteபின்னூட்டத்தில் கும்மி அடித்தாலும், உங்கள் வலைச்சர இடுகைகள் அனைத்தையும் படித்தேன் என்பதைச் செல்லிக் கொள்கிறேன்.
வலைச்சரத்தை மேலும் பலரை திரும்பிப் பார்க்க வைத்த பெருமை உங்களைச் சாரும்.
பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்..
ReplyDeleteவலைச்சரத்தை மேலும் பலரை திரும்பிப் பார்க்க வைத்த பெருமை உங்களைச் சாரும்.
பாராட்டுக்கள்
நானும்... கூட
TBCD,
ReplyDeleteநன்கு தொடுத்திருந்தீர்கள்..பல புதிய வலைகள் அறிமுகம் ஆனது.
//
ReplyDeleteபதிவு எழுதப்பட்ட காலத்தின் அன்மைய பதிவுகளை மட்டும் காட்டுவதுப் போல் அல்லது, பதிவு எழுதிய மாதத்திலோ,அல்லது பதிவு எழுதிய தினத்திலோ, தொகுக்கப்பட்டுயிருந்தது. இப்படி கொடுக்கப்பட்டு இருக்கும், இடங்களில் பழைய பதிவுகள் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது வெகு சிரமமாக இருந்தது. அதனால், நான் பரிந்துரைப்பது, நீங்கள் எழுதிய அனைத்து பதிவுகளின் தலைப்பையும், ஒரே பக்கத்தில் பார்க்கும் வண்ணம், தொகுத்தால், சிறப்பாக இருக்கும் (உ.தா. கோவியாரின் பதிவில் இருப்பதைப் பாருங்கள்
///
இப்படி செய்வதன் மூலம் ஆப் லயனில் படிப்பதற்கும் இலகுவாக இருக்கும்..!!
குசும்பன் பதிவை நான் அப்படிதான் படிப்பேன் :)
இந்த கோரிக்கை மிக நியாயமானது ..நான்கூட சிலசமயம் இப்படி பழய போஸ்டை தேடி சிரமப்பட்டிருக்கிறேன்..
ReplyDeleteநன்றி ஆசிரியரே - வலைச்சர இடுகைகள் நன்றாக இருந்தன. சுட்டிகள் இன்னும் சுட்டப்பட வில்லை. சீக்கிரமே சுட்டுகிறேன்.
ReplyDelete