நான் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல், என்னை வலைச்சரம் ஆசிரியர் ஆக்கியே தீருவேன் என்று அடம்பிடித்த முத்துலெட்சுமி அவர்களுக்கு என் நன்றிகள்.
இது மாதிரி ஆரம்பிக்க ஆசை தான்..ஆனாப் பாருங்க..உங்க நல்ல (கெட்ட) நேரம்..அவங்க கேட்டதும், நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன். வேண்டாம் என்று ஒரு பிகு பண்ணி அவங்க நேரத்தை ஏன் கெடுக்கனும். ஆனாலும், பிகு பண்ணாம இல்லை. கொஞ்ச கால அவகாசம் வேண்டும், குறைந்தது 1~2 வாரம் என்று கேட்டு, அதுவும் கொடுத்தார்கள்.
கால அவகாசம் கேட்டு அப்படியே சுமார் 20 பதிவு எழுதி தயாரா இருக்கும் என்று நினைத்துக் கொண்டியிருந்தால், என்னை பொறுத்தருள வேண்டும். அது என்னவோ, கெடு முடியும் போது, அட்ரனலின் சுரக்க சுரக்க எழுதினா தான் பிடிக்குது.
2004ல் பிளாக் பற்றிப் பரவலான எழுத்து வலையில் தொடர்ந்து வர ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். நான் முதலில் தமிழகத்தைச் சேர்ந்தாவர்கள் பதிவைப் படிக்கலாம் என்று ஆங்கிலப்பதிவில் ஆரம்பித்தேன். லேசி கீக் என்ற சென்னைப் பதிவர். பின் அவரின் பிளாக் ரோலில் உள்ளவர்கள் என்று மெதுவாக நேரம் வாய்க்கும் போது மட்டும் பார்த்துக் கொண்டியிருந்தேன்.
அக்டேபர்'05ல் நான் பணியில் சேர்ந்தப் போது, மடிக்கணிணி தரப்பட்டது. அது வரை வீட்டிலே கணிணி இருந்தாலும், பெரும்பாலும், சினிமா சம்பந்தப் பட்ட, உரையாடி மற்றும் இன்ன பிற நல்ல வெட்டி வேலைகளுக்கு மட்டுமே உபயோகித்துக் கொண்டியிருந்தேன். இந்த மடிக்கணிணி என் வாழ்வில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்ப்படுத்தியது. ;)
அது வந்து சேர்ந்தப் பின் மணிக்கனக்கான உபயோகமற்ற அலுவக சந்திப்புகள் நடக்கும் போது, பொழுது போகாமல், வலையிலே உலாவும் போது, இந்த தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பில் வந்து சேர்ந்து, தமிழ் படிக்க கணிணியயை மேம்படுத்திக் கொண்டேன். அப்படியே, சுவாரசியமாக பெயர், விவரம் இருந்த வலைப்பதிவுகளை மட்டும் சொடுக்கி, பார்த்துக் கொண்டியிருந்தேன்.
நான் திரைப்படம் பார்த்தப் பின், விமர்சனம் படிப்பது வழக்கம். நான் கவனிக்காததை ஏதாவது ஒன்றை மற்ற விமர்சகர்கள் கவனித்திருப்பார்கள். சில சமயம் இப்படி ஓரு கோனம் இருப்பதே நமக்கு தெரிந்திருக்காது.
புதுப்பேட்டை படம் வெளியான புதிதில், இந்த விமர்சனத்தின் மீது எப்படியோ போய் சேர்ந்தேன். (அவர் எந்தப் பதிவர் என்று கூட நினைவு இல்லை. எப்படியோ நினைவு இருக்கும் வார்த்தைகளை வைத்து கூகிளாண்டவரைப் பிடித்து பிடித்து விட்டேன்). உருப்படாதது நாராயின் என்ற பதிவர் எழுதிய தான் அது. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி, அவரின் அனுபவத்தையும் அசைப் போட்டு அருமையாக எழுதியிருப்பார். அதை ஒற்றி காலச்சுவடில் இந்த விமர்சனமும் கண்ணில் பட்டது. இவை பொதுவான விமர்சனம் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மாறுப்பட்ட கோணத்தில் படத்தை அறிமுகம் செய்யும்.
பெரியார் பற்றி ஏதோ தேட ஆரம்பித்து, விடாது கருப்பு பதிவில் போய்ச் சேர்ந்தேன். அப்போதும், ஏதோ வித்தியாசமான பெயராக இருக்கே என்று போய்ப் பார்த்தால், பெரியார் முழக்கம் ரொம்ப ஜோராக போய்க் கொண்டியிருந்தது. பின் அவரின் பதிவில் சுட்டிகளாக வரும் பதிவர்களை போய் படித்துக் கொண்டியிருந்தேன்.
கருப்புவின் பிளாக ரோலில், அனைத்து வலையுலக வித்தகர்களும் இருந்தனர். ஆனால், அசுரன் என்ற வித்தியாசமான பெயரால் இழுக்கப்பட்டுப் போனால், முத்துராமலிங்கத் தேவர்ப் பற்றிய பதிவு. எந்த ஒரு விசயத்துக்கும் வேறு கோணம் இருக்கும் என்று திடமான எண்ணம் தோன்றக்கூடிய ஒரு பதிவு. மதுரையில் ஒரு கல் விழுந்தாலே பற்றிக் கொள்ளும், ஆனால், இதுலே தீப் பொறிப் பறக்க விவாதமும் பின்னுட்டத்தில். .
2007 மே மாதம் மலேசியாவிற்கு பணி மாற்றமாக வந்தேன். வீட்டில் கணிணி முன் மணிக்கனக்காக அமரும் வாய்ப்புக் கிட்டியது. தமிழ் கூறும் நல்லூகத்திற்கு கெட்ட காலம் ஆரம்பித்தது. தமிழ் வலைப்பதிவு திரட்டியில் வாசிக்க ஆரம்பித்தேன். பின்னுட்டங்களை கவணிக்க ஆரம்பித்தேன். இகலப்பை பல முறை தரவிறக்கம் செய்தும், அதில் எப்படி எழுதுவது என்று தெரியாததினால், அதைப் பயன்படுத்தவில்லை.
சுரதா வலைத்தளம் தான் முதலில் கணிணித் தமிழ் எழுதும் அனுபவத்தை தந்தது. அதனை வைத்து என் பின்னுட்ட கணக்கை ஆரம்பித்தேன். முதலில் TBCD (Tamilnadu Born Confused Dravidian) என்ற பெயரில், ஆரம்பித்துப் பின்னர், ரொம்பவும் பெரிது என்று கருதி, TBCDயாக மாறி, தமிழில் தப்புந்தவறுமாக எழுதி பதிவர்களை சோதிக்க ஆரம்பித்தேன்.
தமிழ் மணத்தில் சேர்ந்து பதிவு எழுதி அதை சேர்த்து, புதுப் பதிவுகள் முகப்பில் வரவைப்பது வரை எனக்குப் பெரிதும் உதவிய மை பிரண்டுக்கும், தமிழ் எழுதும் முயற்சிக்கு துனைப் புரிந்த துர்காவிற்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
பெரும்பாலும், என் பதிவுகள், ஏதாவது ஒன்றிற்கு எதிர் வினையாகவே வந்திருக்கிறது. தனியாகக் படித்தாலும், பொரூளுடன் நிற்கும் பதிவுகள் வெகு சில. ஜூலை'07 மாதம் எழுதத் துவங்கி இன்று வரை (ஜன'08) , 99 பதிவுகளை புரியல்ல.தயவு செய்து விளக்கவும். என்றப் பதிவில் எழுதியாச்சு. இதற்கிடையில் பொங்கி வந்த சிறு கதைகளை தனி பதிவு(குழு) கண்டு அங்கேயும் கொஞ்சம் கிறுக்கியாச்சு.
என் அளவில் அவை அனைத்தும்மே படித்துப் போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டியவை ;)
ஆனால் அத்தனையும் இங்கேச் சுட்டிக் கொடுத்து மாளாது. சில பதிவுகளை உங்கள் பார்வைக்கு (மீண்டும் ) வைக்கிறேன்.
- தமிழ் மொழி : நல்லா திட்டுறதுன்னா என்ன..? : வழக்கில் உள்ள சில வார்த்தைகளூக்கு நினைத்தேப் பார்க்க முடியாத விளக்கங்கள்
- சிறு கதை : யார் அவள்...? : அவள் யார் என்ற கேள்விக்கு உங்களால் விடை காண முடியுதா பாருங்க..
- சமூகம் : கருப்பு நிறத்ததொருப் பூனை - எங்கள் வீட்டில் வளருது கண்டீர். : தமிழர்களின் நிறம் சார்ந்த கட்டமைப்பைப் பற்றிய பதிவு.
- திரைப்படம் : எவனோ ஒருவன் : ஒரு பார்வை : வெகு மக்கள் ஊடகப் பார்வையில் இருந்து மாறுப்பட்ட பார்வையில் திரை விமர்சனம்.
- கவிதை : கவிதை/கவிஜ
- அனுபவம் : மாஸ்டர் ஒரு வியட்னாம் டீ பார்சல் : ஒரு வியட்னனம்வாசியுடன் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம்
அறிமுகம் எழுதிக் கொள்ளலாம் என்று சொன்ன இடத்தில், சுய புராணம் பாடி விட்டதாகவே நான் நினைக்கிறேன். Blowing your own trumphets என்று சொல்லுவார்கள், அதற்கு பிற்காலத்தில், வலைச்சர ஆசிரியர்கள் இதற்கு சுட்டிக் கொடுத்தால், எனக்கு ஆட்சேபனை இல்லை. ;)
நான் பதிவுவெழுத வந்த கதையயைச் சொல்லி, இந்த வாரம் முழுதும் நீடிக்கப் போகும் குழப்பமான வலைச்சரத்தை ஆரம்பிக்கிறேன். தவறு இருந்தால் வழக்கம் போல் சுட்டுங்கள். கொட்டியே பழகியவர்கள் கொட்டலாம் ;)
அன்புடன்,
டிபிசிடி
முதல் கமெண்ட் என்னுது
ReplyDelete//அறிமுகம் எழுதிக் கொள்ளலாம் என்று சொன்ன இடத்தில், சுய புராணம் பாடி விட்டதாகவே நான் நினைக்கிறேன். //
ReplyDeleteஇதெல்லாம் தன்னடக்கம் என்று நினைக்க மாட்டோம்.
சின்னதா முடிச்சிட்டீங்க இதுக்கா 2 வாரம் டைம் கேட்டீங்க!?!?!
ReplyDelete//
ReplyDeleteஎனக்குப் பெரிதும் உதவிய மை பிரண்டுக்கும், தமிழ் எழுதும் முயற்சிக்கு துனைப் புரிந்த துர்காவிற்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
//
they r the culprits???
avvvvvv
உங்க சுய புராணம் ரொம்ப சின்னதா இருக்கு!
ReplyDeleteவாழ்த்துகள்.வலைச்சர ஆசிரிய்ருக்கு...
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!!
ReplyDelete:)
//
ReplyDeleteகுசும்பன் said...
உங்க சுய புராணம் ரொம்ப சின்னதா இருக்கு!
//
ரிப்பீட்டேய்ய்
//
ReplyDeleteகோவி.கண்ணன் said...
//அறிமுகம் எழுதிக் கொள்ளலாம் என்று சொன்ன இடத்தில், சுய புராணம் பாடி விட்டதாகவே நான் நினைக்கிறேன். //
இதெல்லாம் தன்னடக்கம் என்று நினைக்க மாட்டோம்.
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்
//
ReplyDeleteவலைச்சரத்தில் நீங்கள் இடும் மறுமொழிகள் வலைச்சர ஆசிரியர்களை ஊக்கப் படுத்தும். எனினும் "என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி" அல்லது "இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும். இவை வலைச்சர ஆசிரியர்களுக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும். நன்றிகூறல் தனிமடலில் இருக்கலாமே ;)
//
நல்ல வேண்டுகோள்!! ஏற்றுக்கொள்கிறோம்!!! :)
//
ReplyDeleteபின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)
//
மங்களூர் சிவா, குசும்பன் சார்பில் நன்றி!!
//
ReplyDeleteஜெகதீசன் said...
//
பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)
//
மங்களூர் சிவா, குசும்பன் சார்பில் நன்றி!!
//
மூத்த பதிவர் கோவியார் சார்பிலும் நன்றி!!
//
ReplyDeleteஜெகதீசன் said...
//
பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)
//
மங்களூர் சிவா, குசும்பன் சார்பில் நன்றி!!
//
நன்றிக்கு பதில் நன்றி ஜெகதீசன்!!
//
ReplyDeleteஜெகதீசன் said...
//
பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)
//
மங்களூர் சிவா, குசும்பன் சார்பில் நன்றி!!
//
இருந்தாலும் ஒத்த கமெண்ட் போட்ட குசும்பனையும் என்னையும் ஒன்னா போட்டுட்டீங்களே தாங்கலை!!
//
ReplyDeleteஜெகதீசன் said...
//
பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)
//
மங்களூர் சிவா, குசும்பன் சார்பில் நன்றி!!
//
இருந்தாலும் ஒத்த கமெண்ட் போட்ட குசும்பனையும் என்னையும் ஒன்னா போட்டுட்டீங்களே தாங்கலை!!
//
ReplyDeleteமங்களூர் சிவா said...
//
ஜெகதீசன் said...
//
பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)
//
மங்களூர் சிவா, குசும்பன் சார்பில் நன்றி!!
//
இருந்தாலும் ஒத்த கமெண்ட் போட்ட குசும்பனையும் என்னையும் ஒன்னா போட்டுட்டீங்களே தாங்கலை!!
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்!!!
:P
//
ReplyDeleteகோவி.கண்ணன் said...
முதல் கமெண்ட் என்னுது
//
சாதனைக்கு வாழ்த்துக்கள்!!
//
ReplyDeleteஜெகதீசன் said...
//
கோவி.கண்ணன் said...
முதல் கமெண்ட் என்னுது
//
சாதனைக்கு வாழ்த்துக்கள்!!
//
ரிப்பீட்டேய்
இது என் ட்ரம்பெட். அப்படித்தான் ஊதுவேன்னு சொல்லணும்.ஆமா;-)))))
ReplyDeleteவாழ்த்துகள்.
//பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)//
ReplyDeleteஇப்படியெல்லாம் உசுப்பேற்றிவிட்டு அனானி கமெண்டுகளுக்கு தடை போட்டால் எப்படி கும்மி அடிக்கிறதாம் ?
ஜெகதீசன், மங்களூர் சிவா மற்றும் குசும்பன் சார்பில் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்
இந்த வாரம் முழுக்க நல்லா அடிச்சு ஆடுங்க tbcd.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteகுசும்பன் said...
ReplyDeleteபுரியல்ல ..? தயவு செய்து விளக்குங்கள்.." அது நீங்க சொல்வது!!
உங்க பதிவை படிக்கும் நண்பர்கள் சொல்வது
முடியல! தயவு செய்து விட்டுவிடுங்க!!!!
கோவி.கண்ணன் said...
ReplyDelete//பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)//
இப்படியெல்லாம் உசுப்பேற்றிவிட்டு அனானி கமெண்டுகளுக்கு தடை போட்டால் எப்படி கும்மி அடிக்கிறதாம் ?////
ஒரு பெருசு பேசுற பேச்சா இது! ஒரு பொருப்புள்ள மூத்த மூத்த மூத்த வலைபதிவர் நீங்க, நீங்களே இப்படி சொன்னா இளம் இரத்தம் எல்லாம் என்னா செய்யும்?
//
ReplyDeleteகுசும்பன் said...
குசும்பன் said...
புரியல்ல ..? தயவு செய்து விளக்குங்கள்.." அது நீங்க சொல்வது!!
உங்க பதிவை படிக்கும் நண்பர்கள் சொல்வது
முடியல! தயவு செய்து விட்டுவிடுங்க!!!!
//
ரிப்பீட்டேய்ய்ய்
//
ReplyDeleteகோவி.கண்ணன் said...
//பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)//
இப்படியெல்லாம் உசுப்பேற்றிவிட்டு அனானி கமெண்டுகளுக்கு தடை போட்டால் எப்படி கும்மி அடிக்கிறதாம் ?
ஜெகதீசன், மங்களூர் சிவா மற்றும் குசும்பன் சார்பில் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்
//
முதலில் நான் மற்ற பதிவுகளில் அனானி ஆட்டம் ஆடுவது போல் தெரிவித்துள்ளதற்கு கண்டனங்கள்!!...
அடுத்து உங்கள் பதிவில் மட்டும் அனானி கமெண்ட்டுகளுக்குத் தடை போடுவீங்களாம்.. அடுத்தவங்க போட்டா மட்டும் தப்பா?
:P
///"இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்"//என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும். இவை வலைச்சர ஆசிரியர்களுக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும்.///
ReplyDeleteஉங்களை தர்மசங்கடம் அடைய போட படுவது இல்லை, உங்களை போட்டு கொடுப்பதற்காக போடுவது:)))
போட்டு கொடுத்து வாழ்வாரே வாழ்வார் மற்றோர் எல்லாம் வாழாதார்:)
ஜெகதீசன் said...
ReplyDelete//
அடுத்து உங்கள் பதிவில் மட்டும் அனானி கமெண்ட்டுகளுக்குத் தடை போடுவீங்களாம்.. அடுத்தவங்க போட்டா மட்டும் தப்பா?
:P////
முதல்வனில் அர்ஜூன் கேள்வி கேட்டு ரகுவரன் மாட்டிக்கிட்டு முழிக்கும் பொழுது ஒரு கார்ட்டூன் வரும் கேட்டான் பாருய்யா ஒரு கேள்வி என்னு மணி வேற குரல் கொடுப்பார் அது ஏனோ நினைவுக்கு வருகிறது:))))))
முதலில் நான் மற்ற பதிவுகளில் அனானி ஆட்டம் ஆடுவது போல் தெரிவித்துள்ளதற்கு கண்டனங்கள்!!...///
ReplyDeleteநானும் இதுவரை அனானி ஆட்டம் எல்லாம் ஆடியது இல்லை. other optionனில் தான் கமெண்ட் போட்டு இருக்கேன். அப்ப அது தப்பா?
தப்புன்னு சொன்னாலும் நிறுத்தமாட்டோம் அது வேற விசயம்:))))
//
ReplyDeleteகுசும்பன் said...
ஜெகதீசன் said...
//
அடுத்து உங்கள் பதிவில் மட்டும் அனானி கமெண்ட்டுகளுக்குத் தடை போடுவீங்களாம்.. அடுத்தவங்க போட்டா மட்டும் தப்பா?
>:P////
முதல்வனில் அர்ஜூன் கேள்வி கேட்டு ரகுவரன் மாட்டிக்கிட்டு முழிக்கும் பொழுது ஒரு கார்ட்டூன் வரும் கேட்டான் பாருய்யா ஒரு கேள்வி என்னு மணி வேற குரல் கொடுப்பார் அது ஏனோ நினைவுக்கு வருகிறது))))
//
உங்களுக்கு ஏங்க அதெல்லாம் நினைவுக்கு வருது? அவர்கிட்ட அடிவாங்கித் தராம விடமாட்டீங்க போலயே... :P
//
ReplyDeleteநானும் இதுவரை அனானி ஆட்டம் எல்லாம் ஆடியது இல்லை. other optionனில் தான் கமெண்ட் போட்டு இருக்கேன். அப்ப அது தப்பா?
//
சீச்சீ...அதெல்லாம் தப்பே இல்லை...
:)
என்ன கொடுமை சரவணா இது!!
பதிவுக்கு வந்த கும்மியை விட இந்த "பின்னூட்டத்துக்கான குறிப்பு" க்கு வரும் கும்மி அதிகமா இருக்கு...
:)
ஜெகதீசன் said...
ReplyDeleteஎன்ன கொடுமை சரவணா இது!!
பதிவுக்கு வந்த கும்மியை விட இந்த "பின்னூட்டத்துக்கான குறிப்பு" க்கு வரும் கும்மி அதிகமா இருக்கு...///
எது நல்லா இருக்கோ அல்லது எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கனுமோ அதுக்கு அதிக கமெண்ட் வருவது இயல்புதானே!!!
(அப்ப பதிவு நல்லா இல்லையா? அது இதுன்னு கேள்வி கேட்டு கோலி மூட்டிவிடகூடாது ஆமா:)
எனக்கு கோவி சாருடைய கமெண்ட் பிடிச்சு இருக்கு:)))
எச்சூஸ் மி..
ReplyDeleteஎன்ன நடக்குது இங்கே..
அதானே எனக்கும் புரியல கொஞ்சம் விளக்குங்க.. எதற்கு இந்த கொலைவெறி விவாதம்.
ReplyDeleteவலைச்சரம் தொகுக்க வாழத்துக்கள். உங்கள் மூலம் பார்க்காத பதிவர்களை அறிய ஆஆவலாக் உள்ளேன்.
//
ReplyDeleteகோவி.கண்ணன் said...
//பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)//
ஜெகதீசன், மங்களூர் சிவா மற்றும் குசும்பன் சார்பில் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்
//
எங்கள் சார்பில் வருத்தத்தை பதிவு செய்த அண்ணன் சிங்கப்பூர் சிங்கம் கோவி. கண்ணன் அவர்களுக்கு இங்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து 'கொல்'லுகிறேன்.
//
ReplyDeleteஜ்யோவ்ராம் சுந்தர் said...
இந்த வாரம் முழுக்க நல்லா அடிச்சு ஆடுங்க tbcd.
//
அடிப்பதற்கு கட்டை கம்பு எதாவது வேண்டுமென்றால் மங்களூரிலிருந்து உடனடியாக பெனாங்கிற்கு ப்ளைட்டில் அனுப்பிவைக்கப்படும்.
என்ன? கொஞ்சம் கூட குழப்பாம இப்படி தெளிவா எழுதியிருக்கீங்க? :-))
ReplyDeleteதெளிவா எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள் :))
ReplyDelete//கோபிநாத் said...
ReplyDeleteதெளிவா எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள் :))
//
என்னமோ இப்போதுதான் தெளிவாக எழுதி இருப்பது போன்று எங்க தலையை கலாய்சதுக்கு கண்டனம்.
//
ReplyDeleteபுரியல்ல ..? தயவு செய்து விளக்குறேன்..
//
புரியுது.... தயவு செய்து விளக்கவேண்டாம்....
:)
//
ReplyDeleteகோவி.கண்ணன் said...
//கோபிநாத் said...
தெளிவா எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள்
//
என்னமோ இப்போதுதான் தெளிவாக எழுதி இருப்பது போன்று எங்க தலையை கலாய்சதுக்கு கண்டனம்.
//
ரிப்பீட்டேய்
//
ReplyDeleteஜெகதீசன் said...
//
புரியல்ல ..? தயவு செய்து விளக்குறேன்..
//
புரியுது.... தயவு செய்து விளக்கவேண்டாம்....
:)
//
ரிப்பீட்டேய்
போதும் என்ற மணமே பொன் செய்யும்...
ReplyDelete