என்னுடைய அறிமுகப் பதிவினிற்கு அடுத்து இறை வணக்கப் பதிவு.
எனக்கு சிறு வயது முதலே இறை நம்பிக்கையையும், இறைப் பாடல்களையும் அறிமுகப் படுத்திய எனது தாய்க்கு முதல் வணக்கம். அவர் கற்பித்த, இன்று வரை பயன்படுத்தும், எனக்குப் பிடித்த பிள்ளையார் பாடல்கள்.
ஸ்ரீதர மூல
செழுஞ் சுடர் விளக்கே
காணர மேனி
கற்பகக் களிறே
அல்லல் வினையை
அறுத்திடும் ஞானம்
வல்லவர் தானே
வருவீர் மகனே
பொன் கரம் அணிந்த
புண்ணிய மூர்த்தி
சங்கரன் அருளிய
சற்குரு நாயகா
பெண்ணாள் உமையாள்
பெற்றிட்ட தேவே
குருவே சரணம்
குமணனே சரணம்
ஓரானைக் கண்ணனை
உமையாள் திருமகனை
பேணினால், வராத புத்தி வரும்
சம்பத்து வரும் சித்தி வரும்
தான் கணபதி.
குள்ளக் குள்ளனே
குண்ட வயிறனே
வெள்ளைப் பிள்ளையாரே
விநாயக மூர்த்தியே
கருத்தப் பிள்ளையாரே
கற்பக மூர்த்தியே
செவத்தப் பிள்ளையாரே
செண்பக மூர்த்தியே
ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை, ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராய் நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் கருணையுடன் தொடங்குகிறேன்.
இறைவணக்கம் தமிழில்
ReplyDeleteநல்லா இருக்கு.
வித்தியாசமான ஆரம்பம். :-)
ReplyDeleteநன்றி புதுகைத் தென்றல். இறை வணக்கம் எனக்குப் பிடித்த ஒன்று.
ReplyDeleteநன்றி .:: மை ஃபிரண்ட்::. - ஆரம்பம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான் புள்ளையாரெத் தொழுது ஆரம்பிச்சேன்
ReplyDeleteஅட நம்ம கூட்டனி மட்டும் தான் வந்து இருகாங்க... சரி நானும் பிரசண்ட் போட்டுக்கரேன்
ReplyDeleteபவன் பையா , அதென்ன கூட்டணி - எமக்குத் தெரியாம - ப்ரசெண்ட் மார்க்டு
ReplyDelete//.:: மை ஃபிரண்ட் ::. said...
ReplyDeleteவித்தியாசமான ஆரம்பம். :-)
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)
நன்றி சஞ்ஜெய்
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteவந்துட்டேன்.