வணக்கம்.
இந்த ப்ளாக் எழுத வந்து ஐந்தாவது மாதத்திலேயே என்னை வலைச்சரம் தொடுக்க அழைத்திருப்பதை மிக்க மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்குனு ஆடிச்சாம். அந்த நிலமைதான் வருகிற இந்த ஒரு வாரமும் உங்களுக்கு :-).
ப்ளாகர், வேர்ட் ப்ரஸ் இருப்பது தெரியும் ஆனால் இந்த தமிழ் ப்ளாக்ஸ் எல்லாம் எனக்கு தெரிய வந்ததே ஒரு சுவையான சம்பவம். என் நண்பன் ஒருவன் எப்பவும்போல ஃபார்வர்ட் மெயில் அனுப்பியிருந்தான் அதன் கீழ் கடைசி வரியில் ஒரு லிங்க் இருந்தது அது கவிதாயிணி காயத்ரியின் ப்ளாக் அட்ரஸ் என்னமா ப்ரொமோட் பண்றாங்கய்யா!!.
அங்க இருந்து நூல் பிடிச்சு அபி அப்பா, குசும்பன், மை ப்ரெண்ட், பாசக்கார குடும்ப எல்லார் ப்ளாகும் ஒரு ரவுண்ட் படிச்சேன் பழைய பதிவுகளையும் தேடி தேடி. என்கிட்ட பின்னூட்டம் வாங்காத பாசக்கார குடும்ப உறுப்பினரே இருக்க முடியாது. ஒடனே ப்ளாகர்ல போய் மங்களூர் சிவா அப்படின்னு ஒரு அக்கவுண்ட் க்ரியேட் பண்ணி வெச்சிகிட்டேன். எப்பவுமே இலவசம்னா இன்னொன்னு கேப்பம்ல அடுத்த நாளே போய் இன்னொரு ப்ளாக் ரிசர்வ் பண்ணி வெச்சிகிட்டேன் இப்ப அதுல ‘திங்க் பிக்’னு எழுதிகிட்டு வரேன்.
'மங்களூர் சிவா' ஏன்னா எனக்கு முன்னாடியே நாகைசிவா, நெல்லைசிவான்னு எல்லாம் ப்ளாகர்ஸ் இருந்தாங்க அதனாலதான். மங்களூர்ல நான் 6 வருசமா வேலை பாத்துகிட்டிருக்கேன் அவ்வளவே.
இந்த மை ப்ரெண்ட் ப்ளாக் தெரிஞ்சதுக்கப்புறம் ஒரு பெரிய வசதி என்னன்னா நம்ம கம்ப்யூட்டர்ல பிடிச்ச லிங்க் எல்லாம் எப்பிடி ‘பேவரைட்ஸ்’ல வெச்சிருப்பமோ அப்பிடி அங்க ஒரு லிஸ்ட் அதுல எல்லார் ப்ளாக் அட்ரசும் இருந்தது இப்பவும் இருக்கு. அதிலிருந்து ஒவ்வொரு லிங்கா போய் படிக்க ஆரம்பிச்சேன்.
அதுலயும் யாராவது கொஞ்சம் சீரியஸா அப்பிடி இப்பிடி எழுதியிருந்தா தலைதெறிக்க ஓடி வந்திடுவேன். எனக்கு பிடித்ததே நகைச்சுவை, காமெடி, கிண்டல் போன்றவைதான்.
பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சு கொஞ்ச நாளைக்கு நண்பர்களுக்கு நான் மெயில்தான் அனுப்பிகிட்டிருந்தேன். மாமே புது போஸ்ட் போட்டிருக்கேன் அப்படின்னு.
மொக்கையோ தக்கையோ ஒரு நூத்தி சொச்சம் பதிவு மங்களூர் சிவா ப்ளாக்லயும் முப்பத்தி இரண்டு பதிவுகள் ‘திங்க் பிக்’ லயும் போட்டிருக்கறது ஒரு சாதனையாதான் நெனைக்கிறேன்.
அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சுதான் தமிழ்மணம், தேன்கூடு ரெண்டும் தெரிய வந்தது. உங்களுக்கெல்லாம் கெட்ட நேரம் ஆரம்பிச்சது அப்பதான்!!
வலைச்சரத்துல மொத பதிவுல நம்ம பதிவோட வெளம்பரம் போட்டுக்கலாமாம். இதுதான் சிறந்ததுன்னு எதை சொல்ல எதை விட நீங்களே ஒரு எட்டு பாத்திடுங்களேன் என் வலைப்பூவை.
என்னுடைய வலைப்பூக்கள்
மங்களூர் சிவா
‘திங்க் பிக்’
வந்துட்டோம்ல
ReplyDeleteசரி பதிவு படிச்சிட்டி வரேன்...
ReplyDeleteஇந்த மை ப்ரெண்ட் ப்ளாக் தெரிஞ்சதுக்கப்புறம் ஒரு பெரிய வசதி என்னன்னா நம்ம கம்ப்யூட்டர்ல பிடிச்ச லிங்க் எல்லாம் எப்பிடி ‘பேவரைட்ஸ்’ல வெச்சிருப்பமோ அப்பிடி அங்க ஒரு லிஸ்ட் அதுல எல்லார் ப்ளாக் அட்ரசும் இருந்தது இப்பவும் இருக்கு. அதிலிருந்து ஒவ்வொரு லிங்கா போய் படிக்க ஆரம்பிச்சேன்.
ReplyDeleteரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
வாழ்த்துக்கள் அண்ணே ;)
ReplyDeleteஅங்க இருந்து நூல் பிடிச்சு அபி அப்பா, குசும்பன், மை ப்ரெண்ட், பாசக்கார குடும்ப எல்லார் ப்ளாகும் ஒரு ரவுண்ட் படிச்சேன்
ReplyDeleteஅட அட அட நம்ம எல்லாருக்கும் ஒரே மாதிரி வாத்தியாருங்க தான் அதான் இப்படி ஒன்லி கும்மிலயே காலத்த ஓட்டிட்டிருக்கோம்.
வந்த உடனே வெளம்பரமா? சரி சரி போனா போவுது, கண்ட்டினியூ கண்ட்டினியூ
ReplyDeleteசிவா இங்கயும் வீக்கெண்ட் பதிவு உண்டான்னு வழக்கம்போல கேக்க கூச்சப்பட்டுபவர்கள் சார்பா கேட்டுக்கறேன்
ReplyDelete//
ReplyDeleteநந்து f/o நிலா said...
சிவா இங்கயும் வீக்கெண்ட் பதிவு உண்டான்னு வழக்கம்போல கேக்க கூச்சப்பட்டுபவர்கள் சார்பா கேட்டுக்கறேன்
//
வெயிட் அண்ட் சி இப்பத்தைக்கு இதுமட்டும்தான் 'இங்க' சொல்ல முடியும்
பேபி பவன் நீதான் ப்பச்ட்டு
ReplyDeleteகோபிநாத் நன்றி. சந்தடி சாக்குல நான் அண்ணனா!!!
ReplyDeleteநாந்தான் பா உன் கடைசி தம்பி.....
வாழ்த்துக்கள் சிவா :)
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteநான் வரதுக்குள்ளே இத்தனை பேரா..
சரி...கும்மி தான் முக்கியம்.. ;)
யார் அடிச்சா என்ன.. :D
நேத்தே நான் வாழ்த்துக்கள் சொல்லிட்டதால இன்னைக்கு லேட்டா சொல்றதால கோச்சிக்க மாட்டிங்கனு நெனைக்கிறேன். மாம்ஸ்.. இன்னைக்கு ஊருக்கு போய்டு வீக் எண்ட் தான் கோவை வருவேன். வரும் போது "அது" இருக்கனும். இது விண்ணாப்பம் இல்லை.. கட்டளை..ட்டளை..டளை..ளை.. ஐ.. :P
ReplyDelete// நந்து f/o நிலா said...
சிவா இங்கயும் வீக்கெண்ட் பதிவு உண்டான்னு வழக்கம்போல கேக்க கூச்சப்பட்டுபவர்கள் சார்பா கேட்டுக்கறேன//
ஹிஹி.. யாருங்க அந்த கூச்சப் படற ரொம்ப நல்லவரு? :P
சிவா,
ReplyDeleteஏழறை சனின்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க.. ஆனால், இது ஏழறை வெள்ளி.. நல்லா மங்களகரமா வந்திருக்கீங்க..
நம்ம கும்மி கைங்க இங்க கலக்கும்போது நாங்க வந்து பின்னூட்டத்துல பின்னு பின்னுன்னு பின்னிடுறோம். :-)
ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. உங்க அறிமுக பதிவே ரொம்ப அருமையா இருக்கு. இதே மாதிரி வாரம் முழுதும் வீக்-எண்ட் ஜொல்லுடன் கலக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅப்புறம் இன்னொன்னு..
ReplyDelete2-3 இடத்துல என் பெயரை சொல்லி பெருமைப்படுத்திட்டீங்க.. உங்க பாசத்தை நெனச்சா.... அவ்வ்வ்....
//Comments - Show Original Post
ReplyDeleteCollapse comments
Baby Pavan said...
வந்துட்டோம்ல
//
தம்பி ஃபர்ஸ்ட்டூ அடிச்சதுக்கு உனக்கு ஸ்பெஷல் வாழ்த்துடா. :-)
//This blog does not allow anonymous comments.//
ReplyDeleteஎன்னக் கொடுமை சார் இது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;((
//G3 said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சிவா :)//
ஓ.. சபதமெல்லாம் பதிவுக்கு தானா? கும்மிக்கு இல்லையா? :P
வாழ்த்துக்கள்!!
ReplyDelete:))
SanJai said...
ReplyDelete//This blog does not allow anonymous comments.//
என்னக் கொடுமை சார் இது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;((
//
ஏன் கவலை என்னைய பாருங்க :)
நந்து f/o நிலா said...
ReplyDeleteசிவா இங்கயும் வீக்கெண்ட் பதிவு உண்டான்னு வழக்கம்போல கேக்க கூச்சப்பட்டுபவர்கள் சார்பா கேட்டுக்கறேன்
//
ச்சீ
எனக்கு வெட்கமா இருக்கு இதெல்லாம் போயி கேட்டுகிட்டு...:)
@SanJai
ReplyDelete//ஓ.. சபதமெல்லாம் பதிவுக்கு தானா? கும்மிக்கு இல்லையா? :P//
அதே அதே.. ஒரே சமயத்துல ஓட்டுமொத்தமா மத்தவங்கள நிம்மதியா வுட்ற முடியுமா என்ன?? சோ கும்மிக்கு நோ லீவ் நோ சபதம் :D
இங்க ஒரு 25 அடிக்க வாய்ப்பிருக்கு போல.. அடிச்சிருவோமா?
ReplyDeleteஅடிச்சாச்சு வெள்ளி விழா கமெண்டு :D
ReplyDeleteவாழ்த்துக்கள், நண்பரே
ReplyDeleteமொக்கையோ தக்கையோ ஒரு நூத்தி சொச்சம் பதிவு மங்களூர் சிவா ப்ளாக்லயும் முப்பத்தி இரண்டு பதிவுகள் ‘திங்க் பிக்’ லயும் போட்டிருக்கறது ஒரு சாதனையாதான் நெனைக்கிறேன்.
அன்புடன்
இரா
வாழ்த்துக்கள், அப்புறம் அந்த நந்து சார் கூட சேராதீங்க அப்புறம் கெட்டு போய்விடுவீங்க!!!:)
ReplyDeleteசஞ்சய் வீராசாமி நல்ல பையன் அவர் கூட சேருங்க:))
போன வாரம் கும்மி அடிச்சோம் அதில் ஒரு நியாயம் இருந்துச்சு, இவரு நல்ல திறமையான பதிவர் இவர் பதிவில் கும்மி அடிக்கலாம்:))) தப்பு தப்பு:))
ReplyDeleteசாரி சிவா....கொஞ்சம் லேட் ! கோவம் இல்லையே !
ReplyDeleteG3,
ReplyDeleteடிபிசிடி,
சஞ்சய்,
மை ப்ரெண்ட்,
ஜகதீசன்,
ச்சும்மா அதிருதுல்ல,
Emperor,
குசும்பன்,
கோவி அண்ணே
அனைவருக்கும் நன்றி நன்றி
பொங்கல் நல்வாழ்த்துகளுடன் வலைச்சர ஆசிரியரானதற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகமே கலக்கல்.
ஏற்கெனவே இருக்கிற ரெண்டுல வதைக்கிறது போதாதுன்னு இது வேறயா?
ReplyDeleteநேரமப்பா......நடத்துங்க ...நடத்துங்க
அருணா
வாழ்த்துக்கள்ப்பா சிவா! வாழ்த்துக்கள்! சும்மா சொல்ல கூடாது பொன்ஸ் நாடத்தும் போது இருந்த வலைச்சரத்தை விட முத்துலெஷ்மி வலைச்சரம் சூப்பரா இருக்கு!!(அப்பாடா சிண்டு முடிஞ்சாச்சு)
ReplyDeleteவாழ்த்துகள் - சிவா. அறிமுகம் தேவை இல்லை - இணையம் முழுவதற்கும் தெரிந்தவன் நீ. வலைப்பூவிற்கு வந்த விதம் நன்கு விவரிக்கப்பட்டிருக்கிறது.
ReplyDeleteஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
எனக்கு வலையுலகை அறிமுகம் செய்த குருவே ( மங்களூர் சிவா).. நின் ஏழரை தொடர என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteசிவா... அட.. நீங்கதான இந்த வாரம்..!
ReplyDeleteகலக்குங்க!
சிவா! வலைச்சர ஆசிரியரானதுக்கு
ReplyDeleteவளைக்கரம் ஒன்று ஆசிகூறி வாழ்த்துகிறது!
மஞ்சூர்ராசா
ReplyDeleteஅருணா
அபிஅப்பா
சீனா சார்
ரூபஸ்
ராம்
தென்றல்
ஷைலஜா
நன்றி