வலை மொத்தம் பூத்திருக்கும்
வண்ணச் செவ்வந்திக்
கவிஞர் கூட்டம்!
காயத்ரியின் இந்த மரண தரிசனம் கவிதை..தோழியின் தந்தை மரணமடைந்த போது தேற்ற முடியாமல் நிற்கும் இயலாமை...இந்த நிலை எல்லோரும் அனுபவித்ததுதான் எப்போதோ ஒரு முறை.
ஜமாலனின் அகதிகளின் காடு என்ற கவிதை காடுகளைப் பற்றிய இருவேறு பார்வைகள் - காடு ஒரு குறியீடாக, காடு ஒரு காடாக..பகிர்கின்றது.
கென் என்னும் கவிஞரின் எல்லோரின் மடியிலும் அடுத்தவர்க்கான கற்கள், மனிதனின் இயல்பான வன்மம் பேசுகிறது. இவர் பதிவில் பல நயமான கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன.
யாழ் அகத்தியன் காதல் கவிஞர்தான். என்றாலும் அவர் அன்னையர் தினம் என்ற கவிதை எடுத்துரைக்கும் அன்னையின் அன்பு அவர் கவிநயத்தின் மற்றொரு கோணம் காட்டுகிறது.
ரியாத் பதிவர் முபாரக் எழுதிவரும் கவிதைகள் தனிமையின் தன்மையைப் பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன. குழந்தைகள் கடக்கும் காலை என்ற கவிதை குடும்பத்தைப் பிரிந்து வாழும் தகப்பனின் சோகம் தொட்டுப் போகிறது.
அட! உங்கள் வாசிப்பில் நானும் இருக்கேனா? நன்றி பாசமலர்!
ReplyDeleteநல்ல தொகுப்பு..காயத்ரி பதிவை தவிர மற்றதெல்லாம் கண்டிப்பாக படிக்கிறேன் :))
ReplyDeleteகாயத்ரி கவிதைகள் படிக்காமலா?
ReplyDeleteகோபி..நன்றி..காயத்ரி கவிதையும் படியுங்கள்..நெகிழ வைக்கும்..
நல்ல கவிதைகளின் தொகுப்பு :)
ReplyDelete//பாச மலர் said...காயத்ரி கவிதைகள் படிக்காமலா?
ReplyDeleteகோபி..நன்றி..காயத்ரி கவிதையும் படியுங்கள்..நெகிழ வைக்கும்..//
பாலைத்திணையின் அனைத்து பதிவையும் படித்து விட்டோம் என்பதால் அவ்வாறு கூறுகிறார்;;;;; :)
நன்றி தமிழ்ப்ரியன்..
ReplyDeleteஇப்போதெல்லாம கோபி ரிப்பீட்டே சரிவர போடுவதில்லை என்று புகார் குரல் வருவதால் கோபிக்கு நான் ரிப்பீட்டே போடுகின்றேன் :))
ReplyDelete\\தமிழ் பிரியன் said...
ReplyDelete//பாச மலர் said...காயத்ரி கவிதைகள் படிக்காமலா?
கோபி..நன்றி..காயத்ரி கவிதையும் படியுங்கள்..நெகிழ வைக்கும்..//
பாலைத்திணையின் அனைத்து பதிவையும் படித்து விட்டோம் என்பதால் அவ்வாறு கூறுகிறார்;;;;; :)
\\
நன்றி தலைவா ;))
@ பாச மலர்
நான் தமிழ் பிரியன் சொல்யிருக்காரு பாருங்க அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன். எங்கையே தப்பு பண்ணியிருக்கேன் போல!! ;)
//அட! உங்கள் வாசிப்பில் நானும் இருக்கேனா? நன்றி பாசமலர்!
ReplyDeleteகாயத்ரி கவிதைகள் படிக்காமலா?//
இப்படி தனியாக காயத்ரிக்கு சொல்லியிருந்தால் குழப்பம் இல்லாமல் போயிருக்கும்..சோம்பேறித்தனத்தால் ஒன்றாக இருவருக்கும் பதில் சொல்லப்போக இந்தக் குழப்பம்..வேறு ஒன்றும் இல்லை..
நீங்கள் சொன்னது தெளிவாகப் புரிகிறது கோபி..
சென்ஷி..நன்றி..
ReplyDeleteகவிதைகளின் அற்புதத் தொகுப்பு மலரின் ரசனையைக் காட்டுகிறது. பாராட்டுகள்
ReplyDelete