மார்கழிக் குளிரிலும்
மலர்ந்து நின்று
மகிழ்த்தும் டிசம்பர்ப்பூக்கள்..
மனச் சோர்விலும்
மலர்ச்சி தந்து
எழுச்சியூட்டும் கவிதைகள்..
வெண்ணிலாவின் வலைப்பூவில் துள்ளி விளையாடும் கவிதைகள் அழகு. இதோ மாதிரிக்கு ஒன்று கண்ணியமான காதல். இயற்கையை இரசிக்கையில் இளகிடும் மனது என்று கூறி இவர் வலையில் பூத்திருக்கும் இயற்கையின் காட்சிப்படங்கள் அருமை.
வேதாவின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த கருத்து நவிலும். சகிப்பு என்னும் இந்தக் கவிதை பேசும் உண்மை சுவாரசியம்.
நித்யகுமாரனின் குட்டிக் குட்டிக் கவிதைகளில் எட்டிப் பார்க்கும் எண்ணங்கள் அழகானவை. அழகு குத்தியவள்..நல்ல கற்பனை..
முகிலனின் என்னவளுக்கு ஒரு கடிதம் முற்றிலும் மாறுபட்ட, நெகிழ வைக்கும் ஒரு கவிதைக் கடிதம்.
ஸ்ரீயின் காதல் பால், குறளின் குரலை மாற்றிக் காதல் பேசுகிறது. காதல் படுத்தும் பாடு!
மலர் நிஜமா அழகா அருமையா தொகுக்கிறீங்க.நாலு சுட்டி கொடுத்தாலும் நறுக்குன்னு குடுக்குறீங்க.இவ்வளவும் படிக்க நேரமிருக்கா?நான் இதுல நிறைய படித்ததில்லை.
ReplyDeleteதலைப்புகள் மிகப் பொருத்தம்
டிசம்பர் மலர்கள் மார்ச்சில் வந்தாலும் நன்றாகவே உள்ளன.
ReplyDeleteகண்மணி,
ReplyDeleteஊர் விட்டு ஊர் வந்து தனிமையின் துணையும் படிப்பதில் கொஞ்சம் ஆர்வமும் இருந்தால்..இது கஷ்டமில்லை..இந்தியாவில் இருந்தால் பதிவு படிக்கவோ/எழுதவோ இவ்வளவு நேரம் இருக்குமா என்பது சந்தேகந்தான்..
கிரிக்கெட் ரசிகன்,
நன்றி..
எல்லாவற்றையும் படிக்க நேரமில்லைனாலும் படித்தவரையில் உங்க தொகுப்புகள் ரொம்ப நல்லா இருக்குங்க மலர். நன்றி.
ReplyDeleteகாதல் படுத்தும் பாடு
ReplyDeleteகுறளையும் விடவில்லை.
குறளையும் உளியால் செதுக்கி
உரலால் இடித்து
மடித்து கடித்து
பொரித்து வறுத்து
ஒரு வகை பரோட்டா செய்யினும்
ஒரு சுவை இருப்பதால் = அதுவும்
அதாக இருப்பதால், கொஞ்சம்
இதாக இருக்கிறது.
இதமாகவே இருக்கிறது. அதுவும்
மிதமாகவே இருக்கிறது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
அழகுக் கவிதைகளின் சுட்டிகள் - அருமை
ReplyDeleteகுறளின் மாற்று - காதற்குறள்கள் - ஸ்ரீக்கு வாழ்த்துகள்
டாக்டர், நி.ந, சூரி அவர்களே,
ReplyDeleteநன்ரி..நன்றி..
சீனா சார்,
ReplyDeleteஎவ்வளவு பொறுமையா இத்தனை சுட்டிகளையும் படித்துவிட்டு ஒவ்வொன்றுக்கும் உற்சாகமளிக்கும் பின்னூட்டம் தருகிறீர்கள்..மிக்க நன்றி..நன்றி..
என்னுடையவைகளையும் பதிவையும் மதித்து உங்கள் வலைப்பூவில் சேர்த்தமைக்கு பாசமலர் அக்காவுக்கு ரொம்ப நன்றி. மேலும் வாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்.
ReplyDelete