Friday, March 7, 2008

மனோரஞ்சிதப்பூ - அனுபவங்கள்

மனம் பேசும்
அனுபவம்
மனோரஞ்சிதம்.

டாக்டர் டெல்ஃபினின் இந்த‌ விந்தையான மனிதர்கள் அனுபவப் பகிர்வு படித்தீர்களா? மனம் கனத்துதான் போகிறது. அன்றாடம் இது போன்ற நிகழ்வுகள் சந்திக்கும் மருத்துவர் தொழில் உண்மையிலேயே கடினம்தானே..

ம‌தும‌தி முருகேஷ் இல்ல‌த்த‌ர‌சியின் இன்னல்கள் குறித்து என்ன‌ சொல்கிறார் பாருங்க‌ள்..பிரிவோம் சந்திப்போம் கதை மாதிரிதான்..

கார்த்திக் பிரபு அவர் சந்தித்த டாக்டர்கள் பற்றிய அனுபவங்களை நகைச்சுவையுணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பாபு மனோஹர் பார்த்த திரைப்படப் படப்பிடிப்பு அனுபவம்..பல்வேறு செய்திகளின் தொகுப்பாக விளங்குகிறது.

அருணாவின் பள்ளிக்காலக் குறும்பு .. போலிஸ் துரத்துவதாகக் கனவு காண வைக்கிறது.

9 comments:

  1. நன்றி பாசமலர் மேடம்.

    வித்தியாசமான அனுபவங்களின் தொகுப்பு தான். ஒன்று மட்டும் புரியவில்லை. இல்லத்தரசியின் இன்னல்கள் (இ-க்கு இ வரவேண்டும் என்று மோனை கருதி எழுதப்பட்டதோ) பதிவில் இல்லத்தரசி தெரிந்தார்; இன்னல்கள் எங்கே இருந்தன?

    ReplyDelete
  2. பிரிவெல்லாம் கலக்கலாக உள்ளது பனிமலர், அப்படியே சோகம்/வேதனைக்கும் ஒரு பிரிவைப் போட்டுவிடுங்கள் :) புலம்பெயர்ந்தவர்களின் பதிவுகள் போட்டுள்ளீர்கள் சரி தான்., அவையன்றி...

    ReplyDelete
  3. வலைப்பூக்களின் இண்டு இடுக்குகளில் கூடத் தேடித் தர்ரீங்க பாருங்க.

    இங்கதான் நீங்க நிக்கறீங்க.

    நீங்க வலைச்சர ஆசிரியரா இருக்கற நேரத்துல இவ்வார நேயரா ரேடியோஸ்பதிலையும் நீங்கதான்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ரத்னேஷ் சார்,

    தனிமை இன்னல்தானே..மதுமதி சுவாரசியம் பட நொந்து கொண்டிருக்கிறார்..

    வள்ளி,

    சோகம் தேடும் வள்ளிதான் எப்போதும்..அங்கங்கே ச்சொகம் வந்துள்ளது..எல்லாப் பிரிவுகளிலும்..

    நாளை கொஞ்சம் கனமான சமூகச் சோகம் வரும்..தொடர்ந்து நகைச்சுவையும்..வருகின்றன..

    புதுகைத்தென்றல்,

    நாம் ரசித்ததோடு பிரிவுகளுக்காகவும் தேடிக் கொடுப்பதுதானே வலைச்சர ஆசிரியரின் வேலை..வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  5. சுட்டிகள் அருமை ஆனா நாலே நாலுதான் குடுத்திருக்கீங்க :(

    ReplyDelete
  6. //மங்களூர் சிவா said...

    சுட்டிகள் அருமை ஆனா நாலே நாலுதான் குடுத்திருக்கீங்க :( //
    ரிப்பீட்ட்ட்ட்டேய்

    ReplyDelete
  7. சிவா, கிரிக்கெட் ரசிகன்,

    ஐந்து சுட்டிகள் இருக்கின்றனவே..ஒரு நாளைக்கு 2 பதிவு..மொத்தம் 10 சுட்டி..அதுக்கு மேல கொடுத்தால் எதையுமே படிக்காமல் போய்விட்டால்..என்கிற எண்ணம்தான்..

    ReplyDelete
  8. சுட்டிகளைத் தனியாக எடுத்து வைத்து விட்டேன் - பொறுமையாகப் படிக்கிறேன் மலர்.

    ReplyDelete
  9. இவ்வ்ளோ நாள் கழித்து இப்போதான் இதைப் படித்தேன் ...நன்றி பாசமலர்.
    அன்புடன் அருணா

    ReplyDelete