Monday, March 31, 2008

3. வாங்க கலாய்க்கலாம் (பா.க.ச ஸ்பெசல்)

’தல’ என்றால் நீ தான் பெருந்’தல’
அப்பட்டம் வேறார்க்கும் பொருந்’தல’
பலர் ’தல’ கருந்’தல’சிலர் ’தல’ வெறுந்’தல’
உனக்கு மட்டுமேவட்டமாக ’தல’பட்டமாக ’தல’
கலாய்ப்பதை நாங்க நிறுத்’தல’
புத்தி சொல்லியும் திருந்’தல’
உமக்கும் அதொன்றும் உறுத்’தல’
அதனால் பெருசா வருந்’தல’
என்னைக்கு வருமோ உமக்கு விடு’தல’
அதுவரைக்கும் கண்டுக்காம விடு ’தல’

எந்த விதிமுறைகளும் இல்லாமல் கலாய்க்கலாம். ஒருவரே எத்த்த்த்த்த்த்த்த்தனை முறை வேண்டுமானாலும் கலாய்க்கலாம்.

அண்ணன் பால பாரதி

நலம் நலம் அரிய அ(ல்)வா! தாங்கள் நடத்திவரும் பா.க.ச பற்றி இதுவரை நான் அறிந்திராதது என் துரதிஷ்டமே! நான் நண்பர் சிபி அவர்களிடம் அது என்னா பா.க.ச என்று அடி வெலுத்து எடுத்துவிட்டார், இங்கு புதிதாக கலாய்க்கும் பதிவு போட யார் வந்தாலும் அவர் கையில் பாபா துணை (பால பாரதி துணை) என்று பச்சை குத்தி காதில் 1)பால பாரதி 2)பால பாரதி 3)பால பாரதி என்று மூன்று முறை பெயரை சொல்லி அவர் சங்கத்தில் உறுப்பினறாக ஆன பின்பே பதிவு போடுவது வழக்கம், இதுவரை எப்படி நீ அவரை தெரியாமல் இருந்தாய் என்று அடித்தார்.

பின் சங்கத்தில் உருப்பினார் ஆனால் மாத மாதம் 5000ரூபாய் (சிபி அண்ணா நீங்க 500 என்றுதான் சொன்னீங்க இரண்டு மாசமா சம்பளம் வரல பால் பில், கரண்ட் பில் எல்லாம் கட்டவேண்டும் கண்டுக்காதீங்க). நீங்களே அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொன்னார். நான் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மண வாசகராக இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்து முன் தேதி இட்டு உறுப்பினர் அட்டை வழங்கி (அத்தனை மாதங்களுக்கும் சந்தா தொகையும்) என்னையும் அதில் உருப்பினர் ஆக்கிகொள்ளும் படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

உறுப்பினர் அடையாள அட்டையில் தாங்கள் இரத்ததினால் உறுப்பினர் பெயரை எழுதி அடையாளஅட்டை தருவதை வழக்கமாக கொண்டு உள்ளீர்கள் என்று சிபி சொன்னார் என் பெயரை குசும்பன் என்று எழுதி விடாதீர்கள்.... திருவாடு துறை சிவ சிதம்பர கோவிந்த சாமி புஷ்பவனம் குப்புசாமி முனியசாமி கோவிந்தன் குசும்பன் என்று எழுதும் படி கேட்டுகொள்கிறேன்.

பா.க.ச புரடக்ஸன்ஸ் பெருமையுடன் வழங்கும் பாலபாரதி இன் அண்ட் அஸ் பா(ட்)சா
பாகச புதுவரவுகள்
பாலா "ஜக்கு" பாய் (பாகச சிறப்பு பதிவு)
பொன்ஸ் அவர்களுக்கு சில கேள்விகள்!!!
பாலபாரதிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா
லொல்லுசபா மனோகரும் தல பாலபாரதியும்
வேணாம்.. விட்டுடுங்க.. அளுதுடுவேன்
கனவில் வந்த பாலாபாய் (பா.க.ச பதிவு)

பாலா அண்ணா உங்களுக்கு என்னை தெரியாது ஆனா நானும் உங்க பாகச மன்ற அனானி உறுப்பினன் அதனால உங்க அனுமதி இல்லாம இந்த பதிவு எல்லாம் எடுத்து போட்டதுக்கு கோச்சிக்காதிங்க. என்ன இப்ப எல்லாம் பதிவு அதிகம் போடரது இல்ல.

இதுக்கு முன்ன போட்ட பதிவு கொஞ்சம் சீரியஸ் பதிவு போல யாருமே எட்டி பாக்கல

28 comments:

  1. பா. க. ச. போஸ்டுக்கு ஒரு 'ஓ'.

    ReplyDelete
  2. ///இதுக்கு முன்ன போட்ட பதிவு கொஞ்சம் சீரியஸ் பதிவு போல யாருமே எட்டி பாக்கல////


    ரெண்டு பேரு எட்டி எட்டி பாத்து இருக்கோம்

    ReplyDelete
  3. பா.க.ச தெரியாம ஒரு ப்ளாகரா இவர தமிழ்மணத்த விட்டு தூக்குங்கப்பா

    :)))))))

    ReplyDelete
  4. பதிவின் கடைசி ரெண்டு வரிகள் சூப்பர்

    ReplyDelete
  5. சரி இந்த பதிவுலயும் படிக்கிறதுக்கு புதுசா ஒன்னும் இல்ல நெக்ஸ்ட் பதிவு போடுங்க சீக்கிரம்

    ReplyDelete
  6. /
    நிஜமா நல்லவன் said...
    ///இதுக்கு முன்ன போட்ட பதிவு கொஞ்சம் சீரியஸ் பதிவு போல யாருமே எட்டி பாக்கல////


    ரெண்டு பேரு எட்டி எட்டி பாத்து இருக்கோம்
    /

    என்னோட சேத்து மூனு பேர்

    ReplyDelete
  7. வாங்க கலாய்க்கலாம் (பா.க.ச ஸ்பெசல்) - சிரிப்பு! :))

    ReplyDelete
  8. ///மங்களூர் சிவா said...
    சரி இந்த பதிவுலயும் படிக்கிறதுக்கு புதுசா ஒன்னும் இல்ல நெக்ஸ்ட் பதிவு போடுங்க சீக்கிரம்///



    ரிப்பேட்டேஏஏஏஏஎஇ

    ReplyDelete
  9. ////மங்களூர் சிவா said...
    பா.க.ச தெரியாம ஒரு ப்ளாகரா இவர தமிழ்மணத்த விட்டு தூக்குங்கப்பா

    :)))))))////


    யோவ் மாம்ஸ் என்னையும் சேர்த்து தூக்க வழி சொல்லுறியே?

    ReplyDelete
  10. ////ஜே கே | J K said...
    பா. க. ச. போஸ்டுக்கு ஒரு 'ஓ'////



    என்னால ஒரு ஒ எல்லாம் போட முடியாது.
    நெறையா ஓஓஓஓஓஓஓஓஒஓஓஓஓஓஓஓஓஒஓஓஓஓஓஓஓஓஒஓஓஓஓஓஓஓஓஒஓஓஓஓஓஓஓஓஒ போட்டுக்குறேன்

    ReplyDelete
  11. மங்களூர் சிவா said...
    சரி இந்த பதிவுலயும் படிக்கிறதுக்கு புதுசா ஒன்னும் இல்ல நெக்ஸ்ட் பதிவு போடுங்க சீக்கிரம்

    இந்த பதிவு பா.க.ச பத்தி தெரியாம இருக்கவங்களுக்கு... இப்பதான் தெரியுது வலைய்லகில பா.க.ச பத்தி தெரியாதவங்க யாருமே இல்லன்னு

    ReplyDelete
  12. அடுத்த பதிவு எப்போ?

    ReplyDelete
  13. நிஜமா நல்லவன் said...
    ///மங்களூர் சிவா said...
    சரி இந்த பதிவுலயும் படிக்கிறதுக்கு புதுசா ஒன்னும் இல்ல நெக்ஸ்ட் பதிவு போடுங்க சீக்கிரம்///



    ரிப்பேட்டேஏஏஏஏஎஇ

    உங்க பாசத்துக்கு அளவே இல்லயா... கொஞ்சம் பொறுங்கப்பா இந்த ஸ்பீடுல போனா அப்புறம் இந்த வாரம் செஞ்சுரி அடிக்க வேண்டி இருக்கும்...
    அடுத்த பதிவு என்ன பதிவு போடலாம்னு எதாவது யோசனை சொல்லுங்க...

    ReplyDelete
  14. ///இம்சை said...
    உங்க பாசத்துக்கு அளவே இல்லயா... கொஞ்சம் பொறுங்கப்பா இந்த ஸ்பீடுல போனா அப்புறம் இந்த வாரம் செஞ்சுரி அடிக்க வேண்டி இருக்கும்...
    அடுத்த பதிவு என்ன பதிவு போடலாம்னு எதாவது யோசனை சொல்லுங்க...////


    யோசிச்சுட்டு வாரேன்(அப்பீட்டு ஆயிடுன்னு உள்ளுக்குள்ள ஒரு கொரலு கேக்குதுங்க)

    ReplyDelete
  15. வெங்கி நீங்க ஒரு சமூக சேவகர்.
    உண்மையான தொண்டு நிறுவனங்கள் பற்றி ஒரு கட்டுரை போடுங்க. அப்படியே உதவி தேவைப்படுகிற தொண்டு நிறுவனங்கள் பற்றியும் சொல்லுங்க. முடிஞ்சவங்க உதவி செய்யட்டும். வலைப்பூ அறிமுகம் தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே. தோணுனத சொன்னேன். சரியா தவறா தெரியல.

    ReplyDelete
  16. உண்மையான தொண்டு நிறுவனங்கள் பற்றி ஒரு கட்டுரை போடுங்க. அப்படியே உதவி தேவைப்படுகிற தொண்டு நிறுவனங்கள் பற்றியும் சொல்லுங்க. முடிஞ்சவங்க உதவி செய்யட்டும்.

    நோட் பண்ணிக்கரேன் அவ்வாறே செய்யறேன்...

    "உதவி தேவைப்படுகிற தொண்டு நிறுவனங்கள் பற்றியும் சொல்லுங்க. "

    இது தாங்க ரொம்ப கஷ்டமான வேலை... இந்தியால இருக்கும் லட்சக்கணக்கான NGO ல உதவி தேவை படுகிற உண்மையா இருக்க நிறுவனங்கள் கம்மி... அப்படி உண்மையா இருக்கவங்களுக்கு கண்டிப்பா தேவையான நிதி எப்படியும் கிடைத்துவிடுகிறது (from foundations , trusts and foreign funds)

    ஆனால் நம்ம வீட்டிக்கு பக்கத்தில இருக்க நிறையா மாணவர்கள் SSLC or +2 க்கு மேல படிக்க நிதி வசதி இல்லாம கஷ்டப்படரவங்க இருப்பாங்க அவங்கள்ள ஒருவரை நாம கண்டுபிடித்து நம்ம சப்போர்ட்டால படிக்க உதவி பண்ணோம்னா அதில கிடைக்கும் நிம்மதி வேற எதிலயும் இல்ல Since I am interested in Education field I am suggesting this but there are lots and lots of ways to support the disadvantaged.

    I am saying disadvantaged because if they would have also got good parents and good environment and guidance they would also be like us today.

    Instead of money we could just spend time in teaching and guiding students or help someone.

    ReplyDelete
  17. உங்களோட எண்ணங்களையும் கருத்துக்களையும் மனதில் வைத்துக்கொள்கிறேன். உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் என்னால் இயன்றதை செய்ய முயல்கிறேன். நன்றி இம்சை.

    ReplyDelete
  18. யோவ் என்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க!

    அந்த நல்ல மனுஷன் ஊர்ல இல்லாத நேரத்தில எதுக்கயா ரவுசு பண்ணிக்கிட்டிருக்கீங்க?

    எங்க போயிருக்கிறார்னா கேக்கிறீங்க?

    அதான் சன் டி.வி, பொதிகை டி.வி யிலேலாம் பிளாஷ் நியூஸ் போட்டாங்களே - பாக்கலியா?

    நீங்கல்லாம் பாதி நேரம், பேக்கரிலேயும், டீக்கடையிலுமே உக்கார்ந்திருங்கன்னா அதெல்லாம் எப்படிய்யா
    தெரியும்?

    முதல்ல போயி எல்லாரும் நியூசைப் பாருங்கய்யா!

    தூங்க விட மாட்டீங்கறீங்களே?

    தூங்கி எழுந்திரிச்ச பிறகு வந்து உங்களைப் பேசிக்கிறேன்!

    அதுக்குள்ள அவரும் வந்திருவாரு!

    ரெண்டு பேருமா சேர்ந்து வச்சிக்கிறோம் கச்சேரியை!

    எத்தினி பெரு துண்டைக் கணோம், துணியைக் காணோம்னு ஓடப் போறீங்களோ தெரியலை!

    எங்கேய்யா உங்க சங்கத் தலைவரு வெற்றி சங்கரு?

    உங்களைக் கும்மி அடிக்க விட்டுட்டு - அவரு எதுக்குய்யா எஸ்கேப் ஆயிட்டாரு?

    அவரைப் போயி கூட்டிக்கிட்டு வாங்கைய்யா!

    வெற்றி சங்கரு இருந்தாத்தான் கொஞ்சமாவது அடக்கி வாசிப்பீங்க!

    தேவைப்பட்டால் இடையில் எழுந்து வருவேன்!

    இப்படிக்கு,
    வாத்தி (யார்)

    ReplyDelete
  19. நலம் நலம் அரிய அ(ல்)வா! தாங்கள் நடத்திவரும் பா.க.ச பற்றி
    இதுவரை நான் அறிந்திராதது என் துரதிஷ்டமே! நான் நண்பர் சிபி
    அவர்களிடம் அது என்னா பா.க.ச என்று அடி வெலுத்து
    எடுத்துவிட்டார்,
    ------------------------------------
    வெலுத்தா...?
    வெளுத்துன்னு மாத்துங்கய்யா!
    தமிழை வெளுக்காதீங்கய்யா!

    வாத்தி (யார்)

    ReplyDelete
  20. //////நலம் நலம் அரிய அ(ல்)வா! தாங்கள் நடத்திவரும் பா.க.ச பற்றி
    இதுவரை நான் அறிந்திராதது என் துரதிஷ்டமே! //////

    என்ன அவர் நடத்திவர்றதா?
    என்னய்யா தமாஷ் பண்ணிறிங்க!

    நீங்க சொல்றது ஒரு பத்து கிராம் அளவு கூட உண்மை கிடையாது!

    யாராவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிஞ்சிக்குவானா?

    அபாண்டமாச் சொல்றீங்களேய்யா?
    உங்களுக்கே நியாயமா இருக்கா?

    சங்கத்தை ஆரம்பிச்சது, அதுக்குக் காவடி தூக்கி உங்க மாதிரி பத்துப்பேரை
    உறுப்பினரா சேர்த்தது எல்லாம் யாருன்னு எனக்குத் தெரியும்!

    இருங்கய்யா, அந்த மடிப்பாக்கத்துக் காரரைக் கூட்டிக்கிட்டு வர்றேன்
    அவரு வந்தாத்தான் நீங்க சப்சாஜாடா அடங்குவீங்க!

    ReplyDelete
  21. ஒரு வாத்தியார் கும்மி அடிக்கிறார்... இந்த தலைப்பு எப்படி இருக்கு கும்மி மக்களே ...

    ReplyDelete
  22. நல்லவேளை இன்னும் வாத்தியார் என்னோட பதிவு எல்லாம் படிக்கரது இல்ல... படிச்சா நமக்கு இப்படி ஒரு தமிழ் கொலை பண்ணும் மாணவனான்னு ரொம்ப வேதனை படுவாறு.

    ReplyDelete
  23. ///////இம்சை said...
    ஒரு வாத்தியார் கும்மி அடிக்கிறார்...
    இந்த தலைப்பு எப்படி இருக்கு கும்மி மக்களே .../////

    'ராமேச்சுவரம் கொண்டான்' என்கிற சிறப்புப் பட்டம் வாங்கினவரைப் பத்திப்
    புரளியாப் பேசுறதுக்குன்ன்னே சங்கம் வச்சு
    நீங்க எல்லோருமா சேர்ந்து 'பொய்க் குதிரை, கரகாட்டம், கோலாட்டமெல்லாம் போடுவீங்க - அதை யாரவது வந்து தட்டிக் கேட்டா ‘தலைப்பு' போடட்டுமான்னு கேக்கிறீங்க - இதை எதில சேர்க்கிறது?

    நாணயமானவங்களைப் பற்றி (அ)நியாயமா தலைப்புப் போட்டாத் தலைவலிதான் வரும்!

    கோடாலித் தைலம் அதன்யா - Axe Oil - ஆளுக்கு ஒரு பாட்டில் வாங்கி வச்சிக்கிங்க!

    மறுபடியும் வர்றேன்!

    ReplyDelete
  24. நம்ம வாத்தியார்க்கு ஷ்பெசல் சங்கம் அமைச்சி அவரோட புகழ் பரப்ப வேண்டிய நேரம் வந்திடுச்சி... கும்மி மக்களே கெட் ரெடி ...

    ReplyDelete
  25. பாவம் பாலா மாமா. ஏப்ரல் 1ல இருந்து போன் வந்தாலே ஹலோ சொல்றதுக்கு பதிலா எனக்கு கல்யானம் ஆகல கல்யானம் ஆகலன்னு அலறுராராம்.

    ReplyDelete
  26. கலாய்ப்பு கலக்கலா இருக்கு இம்சை - தாங்கல

    ReplyDelete
  27. //ரெண்டு பேருமா சேர்ந்து வச்சிக்கிறோம் கச்சேரியை!//

    :))

    ReplyDelete
  28. அய்யா... இம்மை... நீரு யாருனே தெரியாதப்பா... அதுக்குள்ள சங்கத்தைப் பத்தி தெரிஞ்சுகிட்டியா...! அதைத்தனையையும் தொகுத்து தனிப்பதிவு வேறயா... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    நீமட்டும் கையில சிக்குன... நற..நற...

    ReplyDelete