வலைச்சரத்தில் விடை பெறும் நாள் வந்துவிட்டது. படித்த பதிவுகளை மீண்டும் அசை போட ஒரு நல்ல வாய்ப்பு.சென்ற வருடமே பொன்ஸ் எழுத அழைத்திருந்தும் இதற்கான எந்த ஒரு முன்னேற்பாடும் செய்து கொள்ளாமல் கடைசி நிமிடத்திலேயே அட்ரினல் சுரப்பது நமது இயல்பாக போயிற்று (நன்றி:TBCD). மாற்று! தள பங்களிப்பிற்காக கூகிள் ரீடரில் வகைபிரித்து வைத்திருந்தபோதிலும் காலத்தை வென்ற சில பதிவுகளுக்காக சுட்டிதேடி அலைந்ததும் பிற இனிய பதிவுகளில் மூழ்கி சுகமாகத் தான் இருந்தது.மர்பி விதி சொல்வதுபோல் ஈயடித்துக் கொண்டிருக்கும் கடைக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கும்போதுதான் வேலைக்காரர்கள் விடுமுறையில் செல்வார்கள் என்பதாக அலுவலகத்திலும், பண்டிகை தினங்களில் வீட்டிலும் ‘ஆணி பிடுங்கும்' வேலை மற்றுமோரிரு இடுகைகள் இட தடங்கலாயிற்று. ஆனாலும் சிந்தாநதியின் எதிர்பார்ப்பான மூன்று இடுகைகளுக்கு குறைவில்லை.வாய்ப்பளித்த வலைச்சர ஆசிரியர்களுக்கு நன்றி.
கதை,கவிதை,இசை,ஆன்மிகம் மற்றும் நடப்புநிகழ்வுகளைப் பற்றிய சீரிய பதிவுகளை முந்தைய வலைச்சர ஆசிரிய்ர்கள் சுட்டியிருந்ததால் சற்றே மாறுபட்ட பதிவுகளை குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கலின் ஒரு முக்கிய புள்ளியில் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருக்கிறது.வெளிநாட்டு முதலீடு ஒருசாராருக்கு பலனளித்தப்போதிலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் தற்கொலைகள் மிகுந்த கவலையை தருகின்றன. பிரகாஷின் இந்தப்பதிவு ரமன் மக்சேசே விருது பெற்ற சாய்நாத்தின் சொற்பொழிவின் சாரத்தை கொடுத்து பிரச்சினையின் முழு வடிவத்தை விவரித்தது.மா.சிவகுமார் அவர்களின் விவசாயி - என்னதான் தீர்வு மற்றும் (தொடர்ச்சி), இரு பதிவுகளும் பின்னூட்டங்களும் வலைபதிவர்கள் கொண்ட கவலையை வெளிப்படுத்தின.அண்மைய நடுவண் அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா என கேள்விகேட்கிறார் சம்சாரி. அரசு வகிப்போர் தேர்தல் வெற்றிகளைத் தாண்டிய கண்ணோட்டம் கொள்வார்களா ?
தமிழ் வலையுலகில் புதிய பலபதிவர்கள் தங்கள் தாக்கங்களை பதிவுசெய்ய வந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பொருளற்ற விவாதச் சுழலில் சிக்கிக் கொள்ளாமல் எட்டுதிக்கிலும் உள்ள கலைச்செல்வங்களை தமிழிற்கு கொண்டு சேர்த்து தமிழனை சொல்லிலும் பொருளிலும் பெருமை கொள்ளச் செய்ய வேண்டும்.இந்த சுட்டிகள் அவர்களுக்கு வழிகாட்டியாக அமையுமானால் நான் மகிழ்வுறுவேன்.
நன்றிகளுடன் விடைபெறுகிறேன்.
No comments:
Post a Comment