Monday, March 24, 2008

பகுத்தறிந்த கிறுக்கல்கள் :-)

மணியன் அவர்கள் தொடுத்த வலைச்சரம் மிக வித்தியாசமான வலைச்சரமாக இருந்தது.. விஞ்ஞானத்தை நன்றாகவே வளர்த்தார் நம் வலைச்சரத்தில்.."ப்ரபஞ்சத்தின் புதிர்கள்" போன்ற அவர் அளித்த பதிவுகள் மிக அருமையான பதிவுகள் .... சுற்றுலாபதிவுகளும் நல்ல தொரு தொகுப்பே...சொல்லைச்செயலாக்கியவர்கள் தலைப்பே சிறப்பு. வார்த்தைகளால் இங்கே நிரப்புவதை விட செயலாற்றியவர்களை கண்டுகொண்டு அதனை இங்கே பதிவாக்கியது சிற்ப்புச்சரம்.
நேரமில்லை என்று ஓடிக்கொண்டிருந்துவிட்டு ஒத்துக்கொண்டவராகிலும் மிக தமிழ்வலைப்பதிவுகள் சொல்லிலும் பொருளிலும் மேம்பட்டதாக விளங்கவேண்டும் என்ற விருப்பத்தைச்சொல்லி
அருமையாக கவனமெடுத்து தொடுத்த சரத்திற்காக மணியன் அவர்களுக்கு நன்றி.
-----------------------------
வாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்க்கும் ஒரு சாதாரண பகுத்தறிவு வாதி...இப்படி சொல்லிக்கொள்ளும் நந்தா, கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுகிறார். பெண்ணியம் , சினிமா ,வாழ்க்கையின் அனுபவங்களை விமர்சிப்பதில் ஆர்வம் கொண்டவர் .. நந்தாவின் கிறுக்கல்கள்( என்ன ஒரு தன்னடக்கம்) என்ற பதிவில் அதிகம் கிறுக்கவில்லை என்றாலும் தான் வாசித்த நல்ல பதிவுகளை இந்த வாரம் நமக்கு வலைச்சரமாக்க வருகிறார்

2 comments:

  1. வாங்க நந்தா! உங்கள் படித்த அனுபவங்களை அள்ளித் தாருங்கள்...

    ReplyDelete
  2. வலைச்சரத்திற்கு நல்வரவு நந்தா.
    கலக்குங்க !

    ReplyDelete