இன்னைக்கு காலைல பி.எஸ்.என்.எல். ஆப்பிஸ் போனேங்க ... செம கடுப்புல திரும்பி வந்திருக்கேன்.
****
போன் வேலை செய்யலை. அந்த கம்ப்ளைன்ட் எடுத்துக்க அவங்களுக்கு தேவைப்பட்ட நேரம் ஏறக்குறைய ஒரு மணி. அடுத்தது வயர்லெஸ் மோடம் வேலை செய்யல ..
****
" சார் மோடம் அடிக்கடி ஹங் ஆகுது "
" என் அப்படி ஆகுது ( அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்த பதில் )"
" மோடம் ரொம்ப சூடாகுது அப்புறம் வேலை செய்ய மாட்டேங்குது "
" ஓ " ( அப்புறம் பத்து நிமிஷம் கழிஞ்சது )
" ஏன் நின்னுட்டு இருக்கிங்க உக்காருங்க " ( அப்ப்பாடா -- இதுக்குள்ளார முப்பத்தி அஞ்சு நிமிஷம் முடிஞ்சு போச்சு ).
" என்ன மாதிரி மோடம் "
இப்படியாக எல்லா விவரங்களும் தந்து முடித்த போது ஒரு மணி நேரத்துக்கும் மேலாகி விட்டிருந்தது.
*****
"மேடம் என்னோட போன் வேற இடத்துக்கு மாத்தனும் அப்ப்ளிகேசன் தாங்க "
" ஓ தீந்து போச்சு .. எதிர்ல ஒரு ஜெராக்ஸ் கடை இருக்கும் அவங்க கிட்ட கேளுங்க கிடைக்கும்"
அப்ப்ளிகேசன் ( அஞ்சு ரூபாய் ) கொண்டு வந்து எல்லாம் நிரப்பியா பின்னாடி
" உங்க இடத்துக்கு பக்கத்துல யாருடைய வீட்டில இல்ல கடைல பி.எஸ்.ஏன்.எல் நம்பர் இருக்கும் இல்லையா அதை இங்க குறிப்பிடுங்க"
"அது ஆப்ஷனல் இல்லையா மேடம் "
" அது இல்லாம எதுவும் செய்ய முடியாது சாரிங்க "
மறுபடி வீட்டுக்கு போயி புது வீட்டு அட்ரஸ் எடுத்துக்கிட்டு அங்க போயி பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கேட்டு மறுபடி வந்த பின்னாடி
"என்ன சார் இப்படி அவசரப் பட்டா எப்படி பொறுங்க " ( காலைல பத்து மணிக்கு போனது.. இதை இவங்க சொன்னப்ப பதினொரு மணி நாற்பத்தெட்டு நிமிடங்கள் )
" இதை இங்க பண்ண முடியாது. இது வேற சர்க்கிள் ல வருது அங்கப் போயி குடுத்துட்டு வாங்க "
" $%$%^%$&%^&%^&"
*********************
நம் இந்திய அரசு அலுவலகங்கள் என்று மாறும் ?
சர்வேசன் பதிவு ஒன்னுல நம்ம காவல் துறை தங்கங்களின் "திறமை" யை வெளிச்சம் போட்டு காமிச்சிருக்கார் தருமி ஐயா.
குறைகளைக் கண்டு வெம்பி ஒதுங்காமல் நாமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் என்ன செய்தேன் ? துறையின் பல இடத்துக்கு தொலைபேசியில் அழைத்து புகார் அளித்த பின் இதோ இந்தப் பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் நேரத்தில் பழுதுகள் சரி செய்யப்பட்டுவிட்டன. இட மாற்றம் இன்னும் சற்று கால தாமதமாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். which is ஓகே & acceptable.
மேலும்
இவர்கள் அனைவரின் கூட்டணியில் http://fixmyindia.blogspot.com/ என்ற வலைத்தளம் இயங்கு கிறது. நம் குறைகளை உரிய இடத்தில் புகார் செய்ய இவர்களின் உதவியை நாடலாம்.
தருமி அவர்களின் முயற்சிகள் சில.
முதல் முயற்சி இங்க பாருங்க ..
இரண்டாம் முயற்சி இங்கே.
மூன்றாம் முயற்சி
சிலவற்றிற்கு பதில் கிடைத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
ஆரம்ப்பித்து வைத்த இது இந்தியாவுல தான் நம்புங்க! என்ற பதிவிற்கு நாம் ப்ளாக் யூனியனுக்கு நன்றி சொல்வோம்
****************
உங்களுக்கு இது போன்ற இடர்கள் ஏற்பட்டதா ? என்ன முயற்சித்தீர்கள் எப்படி எதிர்கொண்டிர்கள் என்ன பலன் விளைந்தது.. ?
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
அட இந்த சரம் கொஞ்சம் வித்யாசமா இருக்குப்பா!
ReplyDeleteபுதுசா தெரிஞ்சுக்கிட்ட தகவல்
பொருத்துங்கள் இந்தியாவை
பொருத்தமான இடத்தில்
பொறுப்பானவர்களே.....!!!!
// என்று தணியும் இந்த .......!"//
ReplyDeleteகொஞ்சம் டைம் எடுக்கும்.....!
ஹாய் ஜீவா,
ReplyDeleteநா காசு குடுத்து வெளியே வாங்கினேன், ஆனா இந்த BSNL காரங்ககிட்டா மோடம் வாங்கினா நாம ஆயுசுக்கும் அவங்க ஆபீசு வாசல்ல தான் நிக்கனும்னு எனக்கு அங்க வேல
செய்யற ஒரு ஆபீசரு சொன்னதால நான் வெளியே வாங்கினேன்.
இது வரைக்கும் கிட்ட தட்ட ஒரு வருஷமாகப் போகுது ஒரு வம்புதும்பும் இல்லைங்கோஓஓஓ. நான் வேனா என் ரங்கு கிட்ட பேசி ஏதாவது செய்ய முடியுமானு பாக்கறேன்.
nalla iruku padivu... ana makkaluku ivalavu porumai illaye uriya nabar kite poi uriya pugar kuduka.. pugar eduku oru mani neram .. ippadi iruntha eppadinga.. entha service providera irunthalum prachanai thaan.. airtel iduku vidi vilaku alla... naan prepadi card vechi iruken.. aduku one month validity card podaren.. antha one month mudiyarthukulla recharge senja naan pizhaichen.. illa last day anniki poi recharge senja adu recharge aga matenguthu.. customer care phone senja avangaluke intha problem edunalanu theriyalam.. enna kodumainga idu..
ReplyDeleteadu thaane parthen... sumathi akka varaliyenu.... avangalukum konja naal munnadi edo prachanai iruthuche...
ReplyDeleteakka unga anubavathayum sollunga...
ReplyDeleteமோடம் ஜூடாகுதா !?!!?
ReplyDeleteவீட்டுக்கு ஏசி போடுப்பா, ஜெயந்தி எழுதின கம்ப்யூட்டர் லேபுக்கு ஏசி பதிவு படிக்கலையா???
ஜீவ்ஸ் எனக்கு BSNL ல கிடைச்சது அப்படியே உல்ட்டா எக்ஸ்பீரியன்ஸ்.
ReplyDeleteஎன்னுடைய ப்ரைவேட் மோடம் ரிப்பேராயிடுச்சு. சர்வீசுக்கு கொடுத்தா சரி பண்ணியாச்சுன்னு சொல்லி அப்படியே ரெண்டு தடவ திருப்பி கொடுத்துட்டாங்க.
வெறுத்துப்போய் BSNL ல போய் மோடம் வேணும்ன்னு கேட்டேன். வழக்கம் போல அப்ளிகேசன் கொடுங்க ஒரு வாரம் ஆகும் வரன்னு சொல்லிட்டு அதுவரைக்கும் பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க? ஆல்ட்டர்னேட் மோடம் எடுத்துகிட்டு போங்க. உங்க மோடம் வந்ததும் இத திருப்பி கொடுங்கன்னு ஒரு மோடத்தையும் கொடுத்து விட்டாங்க.
நம்ப முடியுதா உங்களால? ஆனால் இதான் எனக்கு நடந்துச்சு.
பொதுவா இங்கே ஈரோட்ல ப்ராட்பேண்ட் கஸ்டமர்னா தனி இம்பார்டென்ஸ் கொடுத்து கவனிக்கராங்க
ஹாய் ,
ReplyDeleteசுதா என்னோடது மோடம் பிரச்சனை இல்லைபா, மொதலே பிரச்சனை,
அதாவது நெட்வொர்க்கே கிடைக்கலை.
அது என்னன்னு யாருக்குமே சரியா தெரியலை. ஆக இதுவேற மேட்டர்.
ஜீவா தவறி கூட BSNL மோடம் வாங்காதீங்க.
என்னோட சொந்த அனுபவத்துல சொல்றேன், இந்த ரயில்வேயில கூட
டிக்கட் ரிசர்வேஷன்ல இருக்குற பெரிய்ய ஆபீசருங்க வீட்டுலலாம் இதே பிரச்சனைதான் டெய்லி ஓடுது.
தினமும் எங்க வீட்டுல ஆளுங்க போடுற சண்டை இருக்கே பாக்கவெ ரொம்ப ரசமாயிருக்கும்.
முடிஞவரைக்கும் வெளியே போயி வாங்கிக்குங்க.அது தான் எதிர்காலத்துக்கு பெஸ்ட்.
/
ReplyDeleteநந்து f/o நிலா said...
ஜீவ்ஸ் எனக்கு BSNL ல கிடைச்சது அப்படியே உல்ட்டா எக்ஸ்பீரியன்ஸ்.
நம்ப முடியுதா உங்களால? ஆனால் இதான் எனக்கு நடந்துச்சு.
/
என்கிட்டயும் BSNL modem தான் ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு நல்லாதான் வேலை செய்யுது. நான் அப்ளை பண்ணி 3 நாள்ல கிடைச்சது இன்னைக்கு வரைக்கும் எந்த ப்ராப்ளமும் இல்லை.
//" சார் மோடம் அடிக்கடி ஹங் ஆகுது "
ReplyDelete" என் அப்படி ஆகுது ( அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்த பதில் )"
" மோடம் ரொம்ப சூடாகுது அப்புறம் வேலை செய்ய மாட்டேங்குது "
" ஓ " ( அப்புறம் பத்து நிமிஷம் கழிஞ்சது )
" ஏன் நின்னுட்டு இருக்கிங்க உக்காருங்க " ( அப்ப்பாடா -- இதுக்குள்ளார முப்பத்தி அஞ்சு நிமிஷம் முடிஞ்சு போச்சு ).
" என்ன மாதிரி மோடம் "//
இங்கத்தான் Airtel நிக்கிறது, என்ன அதிசயமோ எனக்கும் இரண்டு வாரமா மோடம் பிரச்சனையிருந்தது. காலையில் கால் செய்து சொல்லியிருந்தேன்.
மத்யானம் ஆட்கள் வந்து சாயங்காலம் பிரச்சனை தீர்ந்திடுச்சி.
:))))))))))))))))))))
ஹா..ஹா...
ReplyDeleteஉங்க புலம்பல கேட்டா, எனக்கு என்னவோ தம்பி படத்துல மாதவன் ”நான் இப்போ என்ன செய்ய?, என்ன செய்ய?ன்னு கேட்ட மாதிரி ஒரு ஃபீலிங்கு :)))))))
இந்த மோட(ச)ம் பிரச்சினை எல்லா இணைய வழங்குபவர்களிடமும் இருக்கு, எல்லாமே சீன தயாரிப்பு/கொரியத்தயாரிப்பு, அதிஷ்டம் இருந்தால் நமக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கும், இல்லைனா மண்டை இடிதான். ஆனால் மோடம் சூடாகி , இணைப்புத்துண்டிக்குதுனு சொன்னா அவர்கள் நம்பவே மாட்டாங்க அதான் கொடுமை.
ReplyDeleteநான் டாடா இண்டிகாம் வைத்துள்ளேன் அதிலும் இப்படி ஹேங்க் ஆகிவிடூம் மோடம்.
எனக்கு தெரிந்த கை வைத்தியம் 5 நிமிடம் மோடத்தை ஆஃப் செய்து வைத்துவிட்டு இயக்குவேன், அப்புறம் 1 மணி நேரம் நல்லா வேலை செய்யும்.
--------------------------------
//நம்ப முடியுதா உங்களால? ஆனால் இதான் எனக்கு நடந்துச்சு.
பொதுவா இங்கே ஈரோட்ல ப்ராட்பேண்ட் கஸ்டமர்னா தனி இம்பார்டென்ஸ் கொடுத்து கவனிக்கராங்க//
நந்து , வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவா இருக்க இடத்தில நல்லா கவனிப்பாங்க, எண்ணிக்கை அதிகமா இருந்து, மேலும் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் இருக்கும் இடத்தில் நீ கஸ்டமரா இருக்க இஷ்டம்னா இரு இல்லாட்டி போய்க்கோனு தான் பேசுவாங்க!
அவுட் சோர்ஸிங் முறை தான் இப்ப பிரபலம்......அதனால்
ReplyDeleteசிங்கையில் இருந்து நேரடியாக உங்களுக்கு இணைப்பு வழங்கமுடியுமா? என்று பார்க்கிறேன். :-)))
நல்ல பயனுள்ள விஷயங்கள் தான்.
ReplyDelete////ஆயில்யன். said...
ReplyDeleteஅட இந்த சரம் கொஞ்சம் வித்யாசமா இருக்குப்பா!
புதுசா தெரிஞ்சுக்கிட்ட தகவல்
பொருத்துங்கள் இந்தியாவை
பொருத்தமான இடத்தில்
பொறுப்பானவர்களே.....!!!!////
ஆயில் சொன்னா சரியா இருக்கும். வழிமொழிகிறேன்.
///மங்களூர் சிவா said...
ReplyDeleteமோடம் ஜூடாகுதா !?!!?
வீட்டுக்கு ஏசி போடுப்பா, ஜெயந்தி எழுதின கம்ப்யூட்டர் லேபுக்கு ஏசி பதிவு படிக்கலையா???///
படிச்சாச்சுபா.
///நந்து f/o நிலா said...
ReplyDeleteநம்ப முடியுதா உங்களால? ஆனால் இதான் எனக்கு நடந்துச்சு.///
சத்தியமா நம்பமுடியல:))
////ரசிகன் said...
ReplyDeleteஹா..ஹா...
உங்க புலம்பல கேட்டா, எனக்கு என்னவோ தம்பி படத்துல மாதவன் ”நான் இப்போ என்ன செய்ய?, என்ன செய்ய?ன்னு கேட்ட மாதிரி ஒரு ஃபீலிங்கு :)))))))////
தம்பி இங்கு ஒண்ணும் செய்ய முடியாது:)
//பொதுவா இங்கே ஈரோட்ல ப்ராட்பேண்ட் கஸ்டமர்னா தனி இம்பார்டென்ஸ் கொடுத்து கவனிக்கராங்க//
ReplyDeleteப்ரண்ட்பேண்ட் மட்டும் இல்லை.. பொதுவா எல்லாத்துக்குமே ஈரோட் ஆபிஸ் தேவலைனு சொல்லலாம். நம்ம ஈரோட் ஆபிஸ்க்கு ஒரு போன் கனெக்ஷன் வாங்க வெறும் 45 நிமிஷம் தான் எனக்கு ஆச்சி. கைய்யோட இன்ஸ்ட்ரூமெண்டையும் குடுத்துட்டாங்க. நான் கேக்காமலே ஃபேன்ஸி நம்பர் பத்தி சொல்லி தேர்ந்தெடுத்துக்க சொன்னாங்க... நான் அங்க இருந்து வந்த 2 மணி நேரத்துல ஆபிஸ் வந்து இணைப்பு குடுத்துட்டு போய்ட்டாங்க.
ஒரு முறை VPN பத்தி விசாரிக்க போனப்போ.. அவ்ளோ பொறுமையா தெளிவா விளக்கம் குடுத்தாங்க...
..ஆனாலும் எல்லா இடத்துலயும் இப்படி இருக்காங்கனு சொல்ல முடியாது....
குறிப்பா அரசாங்க வங்கிகள்ல.. அய்யய்யோ.. ரொம்ப மோசம்... ஒரு சேமிப்பு கணக்கு துவங்க எவ்ளோ அலைகழிக்கிறாங்க தெரியுமா? கொடுமை சாமி.. அதுவும் மாசக் கடைசில ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கறதுகுள்ள படாத பாடு பட வேண்டி இருக்கு.. இத்தனைக்கும் நல்ல ட்ரான்சாக்ஷன் இருக்கு....
ஜீவ்ஸ் எல்லாத் துறையும் மோசம்னாலும் பிஎஸ் என் எல் ரொம்ப ரொம்ப மோசம்.போன்ல பிரச்சனைனு கேட்ட அவங்கள கேளுங்க இவங்கள கேளுங்கன்னு சுத்த விடுவதில் மகா கில்லாடிங்க.நிறைய முறை கடுப்படிச்சியிருக்கேன்.
ReplyDeleteஆமா பிராட்பேண்ட் வயர்லஸ் டைப் டூ மோடம் அடிக்கடி ஹாங்க் ஆகுமா?நான் இப்பதான் மாத்த போறேன்:(
அடுத்த வலை பதியும் ஸ்ரீ என்ற ரசிகனுக்கு வாழ்த்துக்கள்..... சீனா சார் அறிமுகம் சூப்பர்... :)
ReplyDelete