வலைச்சரத்திற்கு அழைத்தபோது நானா என்று கேட்ட கீதாம்மாவின் தன்னடக்கத்தை என்ன சொல்வது. அவர்களின் இணைய இணைப்பு பிரச்சனையும் மீறி 9 பதிவுகள் எழுதி வலைச்சரத்தை அழகாக தொடுத்தார். தன் தோழிகள் என்று ஆரம்பித்து துளசி கவிதா வேதா வல்லி என்று அனைவரையும்பற்றிய அவரின் எண்ணங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இசை ஆன்மிகம் போன்ற வற்றில் நல்ல பல பதிவுகளின் இணைப்புகளை தந்தார்.செய்யப்படும் செய்யவேண்டிய வேலைகள் பற்றிய பதிவு நல்லதொரு சரம்.பட்டங்கள் கொடுத்தும் பாராட்டுகள் செய்தும் அனைவரையும் ஊக்கப்படுத்தி நகைச்சுவையாக நம்மோடு பேசிக்கொண்டே அதை படித்தீர்களா இதை படித்தீர்களா என்று கூடவே அழைத்து போய் பதிவுகளை படிக்க வைப்பது போல் இருந்தது..
சிரமம் எடுத்துக்கொண்டு வாரம் முழுதும் சரம் தொடுத்து தந்ததற்கு நன்றி கூறிக்கொள்கிறோம்.
நன்றி கீதா சாம்பசிவம்.
-----------------------------------------------------------
இனி இந்த வாரம் வருபவர் ஷைலஜா. சிறுகதைகள் , தொடர்கதை, நாவல் என்று பத்திரிக்கை எழுத்துலகிலும் தன் இடத்தை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் ஷைலஜா அவர்கள் இங்கே இணையத்தில் எண்ணிய முடிதல் வேண்டும் என்கிற பதிவிற்கு சொந்தக்காரர். எண்ணியதும் நல்ல விசயமாக இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு நகைச்சுவையாக பல சிறுகதைகள் தந்திருக்கிறார். சுடோக்கோ சுமதி படித்தீர்களா ? மரத்தடி , மற்றும் தமிழுலகம் கவிதைப்போட்டிகள் தேன்கூடு போட்டிகள் என்று வெற்றி வாகைகள் பெற்றிருக்கிறார்.
எழுத்து அவருடைய மூச்சு . ஒலி FM ல் பகுதி நேர பணி. பொதிகையில் நிகழ்ச்சி தொகுப்பு. பிண்ணனி குரல் கொடுப்பது. பன்முகத்திறமை கொண்டவர். அவர் தான் ரசித்த இடுகைகளை நமக்கு வலைச்சரமாக தொடுக்க இருக்கிறார். ஷைலஜா வருக! வருக !
பாட்டிம்மா டாட்டா பை பை
ReplyDelete===============
ஷைலஜா அக்கா வாங்க வாங்க கலக்குங்க
கீதா அருமையா நிறைவாச் செஞ்சாங்க. அதுக்கான பாராட்டுகள்.
ReplyDeleteஇப்ப நம்ம ஷைலுவா? அடிச்சக்கை.
வாம்மா ..வந்து கலக்கும்மா:-))))
வாங்க ஷைலஜா வாங்க
ReplyDeleteவாங்க வாங்க வாங்க. அப்படியே ஒரு பாட்டுப் பதிவும் போடுங்க.
ReplyDeleteஉங்கள் குரல் வளம் பத்தி இங்க எல்லோருக்கும் தெரியும்.
பொதிகைல வருவீங்களா. ஏம்பா எனக்குத் தெரியாதே.
சரி ,இப்பவே களை கட்டியாச்ச்சு. வலைச்சரத்துக்கு நன்றி. தொடர்ந்து அருமையான எழுத்தாளர்களை வலைச்சரம் கட்டச் சொல்வதற்கு.
மங்களூர் சிவா said...
ReplyDeleteஷைலஜா அக்கா வாங்க வாங்க கலக்குங்க
வண்துட்டேன் சிவா..சரம் அமைக்க நீ உதவியதுக்கு நன்றி பல
துளசி கோபால் said...
ReplyDeleteஇப்ப நம்ம ஷைலுவா? அடிச்சக்கை.
வாம்மா ..வந்து கலக்கும்மா:-))))
>>துளசிமேடம்!! உங்கள விட நான் என்ன கலக்கப்போறேன் ? பதிவுலகத்திலகம் நீங்க! இயல்பான துளசிமணமாச்சே! கொஞ்சம் இப்படி அந்த மணத்தை அனுப்புங்களேன்
நன்றி வருகைக்கு!
சின்ன அம்மிணி said...
ReplyDeleteவாங்க ஷைலஜா வாங்க
>>>வந்தேனே வந்து நின்று சபைக்கு வந்தனம் சொன்னேனே!!வரவேற்புக்கு நன்றி சின்னம்மிணி.
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteவாங்க வாங்க வாங்க. அப்படியே ஒரு பாட்டுப் பதிவும் போடுங்க.>>>
ஏங்க வல்லிமா கூட்டத்தைக்குறைக்கணுமா இங்க நான் பாடி?:):)
உங்கள் குரல் வளம் பத்தி இங்க எல்லோருக்கும் தெரியும்
பொதிகைல வருவீங்களா. ஏம்பா எனக்குத் தெரியாதே.>>>
பொதிகைல ஒரு நிகழ்ச்சில சமீபமா வரேன் தனிமடல்ல அதை விவரமா சொல்றேன் எதுக்கு இங்க பாவம் எல்லாரும் பாத்து பயந்துடக்கூடாதில்லயா?:)
வருகைக்கு நன்றி வல்லிமா.
சரி ,இப்பவே களை கட்டியாச்ச்சு. வலைச்சரத்துக்கு நன்றி. தொடர்ந்து அருமையான எழுத்தாளர்களை வலைச்சரம் கட்டச் சொல்வதற்கு.>>>
வலைச்சரத்தை இதுவரைபலபேர் களைகட்டவச்சிட்டுப்போயிட்டாங்க.
அதை அப்படியே நானும் கொண்டுபோகணும் நன்றிமா.
April 28, 2008 3:22:00 PM