ஒரு வாரம் போனது தெரியவில்லை. முத்துலட்சுமியின் அழைப்பு வந்த போது, முடியுமா என்றே யோசனை! முக்கியமாய் என்னோட கணினியின் இணைய இணைப்புத் தான் பெரும் பயம், கவலை! சனி, ஞாயிறு என்றால் இணைப்பே அநேகமாய் இருக்காது. எப்படியோ இம்முறை காப்பாற்றிவிட்டது என்றே சொல்லலாம். இதில் அநேகக் குறிப்புகள் எடுத்து வைத்து விட்டு, எழுத முடியவில்லை. தனியாக இதை மட்டுமே கவனித்திருந்தால் எழுதி இருக்கலாம். ஆனால் முடியவில்லை எனினும் சில முக்கியமானவர்கள் பெயர் விட்டு விட்டது. அதை மட்டும் குறிப்பிட்டு விட்டு விடை பெறுகின்றேன்.
முதன் முதலில் எனக்குக் "கீதாம்மா" என்ற பெயர் வைத்த குமரன், பல குரல்களில், பல பெயர்களில் கூப்பிட்டுப் பேசி என்னை ஏமாற்றலாம் என நினைத்துத் தோற்றுப் போகும், நாமக்கல் சிபி,என்ன வேணும் சொல்லுங்க, செய்யறேன் என உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருக்கும் புலி, நாகை சிவா, மெளனமாய் அனைத்து உதவிகளும் செய்யும், ராயல் ராம், என்னுடன் விவாதம் நடத்தாமல் இந்தியாவை விட்டுப் போக வேண்டி இருக்கே என்று வருந்திய கே ஆர் எஸ்., எனக்காக முதலில் போஸ்டர் ஒட்டிய கார்த்திக் முத்துராஜன், என் திருமண நாளுக்கு பாரதி பற்றிய பதிவு எழுதிப் பரிசளித்த மணிப்ரகாஷ், விக்கி பசங்களில் என்னையும் எழுத வைத்த இ.கொ. (இ.கொ.வின் பதிவுகள் பத்தி எழுத ஆரம்பிச்சா, வலைச்சரத்திலே வேறே எழுத முடியாது) ஆகியவர்களைப் பற்றி எழுத எடுத்த குறிப்புகளில் ஒரு பத்துப் பதிவுகளாவது வரும்! எழுத முடியவில்லை. குறிப்பிட்டிருப்பதோடு நிறுத்திக் கொள்கின்றேன். விட்டுப் போன அனைத்து நண்பர்களுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.
இப்போ கடைசியாக் கொஞ்சம் மொக்கை போட்டு விட்டு விடை பெறுகிறேன். தொலைக்காட்சி விளம்பரங்களில், இப்போ ரொம்பவே மனதைக் கவருவது, "அனுபவம் புதுமை" பாட்டோடு வரும் "தனிஷ்க்" வைரம் பற்றிய விளம்பரம் தான். இந்த விளம்பரம் வரும்போதெல்லாம் அம்பி நினைவும், கைப்புள்ள நினைவும் வந்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பூஜை வேளையில் கரடி போல் எட்டிப் பார்க்கும் மாமியாரை நினைத்தும் சிரித்துக் கொள்வேன். ம.பா. அது பற்றிக் கேட்கும்போது அவரிடம் விவரித்ததும், அவரும் அந்த விளம்பரம் வந்தால் உடனேயே என்னைக் கூப்பிட்டு விடுகின்றார், யானை வந்தால் கூப்பிடணும்னு கண்டிஷன்! அதே போல் இதுக்கும் கண்டிஷன் போட்டிருக்கேன், கூப்பிடும்படி!. அடுத்துப் பிடித்த விளம்பரம், கணவனின் உறவினர்கள் கிட்டு மாமாவும், மாமியும் வராங்கனு தெரிஞ்சதும், வீட்டு ஜன்னல் ஏறிக் குதிச்சு, நவ நாகரீக உடையில் இருந்து பாரம்பரிய உடைக்கு மாறிக் காபி கொடுத்து உபசரிக்கும் பெண்,. ஜன்னல் ஏறிக் குதித்துக் கணவனின் உறவுக்காக அவள் மாறுகின்றாள். அருமையான கவிதைத் தன்மை நிரம்பிய இம்மாதிரி விளம்பரங்களை இந்தியாவில் தான் பார்க்கலாம். மறக்காமல் பாருங்கள், அதுவும் "தனிஷ்க்" diamonds of for ever போது அம்பியையும்,கைப்புள்ளயையும் நினைவு கூருங்கள்.
வாழ்த்துகளுடன் விடை பெறுகின்றேன்.
கீதா சாம்பசிவம்.
//இப்போ கடைசியாக் கொஞ்சம் மொக்கை போட்டு விட்டு விடை பெறுகிறேன். //
ReplyDeleteசூப்பரேய்ய்ய்ய்......இப்போவாவது மொக்கை ஞாபகம் வந்ததற்க்கு தாங்க்ஸ்:)
//அடுத்துப் பிடித்த விளம்பரம், கணவனின் உறவினர்கள் கிட்டு மாமாவும், மாமியும் வராங்கனு தெரிஞ்சதும், வீட்டு ஜன்னல் ஏறிக் குதிச்சு, நவ நாகரீக உடையில் இருந்து பாரம்பரிய உடைக்கு மாறிக் காபி கொடுத்து உபசரிக்கும் பெண்,. ஜன்னல் ஏறிக் குதித்துக் கணவனின் உறவுக்காக அவள் மாறுகின்றாள். அருமையான கவிதைத் தன்மை நிரம்பிய இம்மாதிரி விளம்பரங்களை இந்தியாவில் தான் பார்க்கலாம்//
ReplyDeleteஅக்கா நானும் ரொம்ப ரசிச்ச விளம்பரம்.கணவன் மனச புரிஞ்சுக்கிற இப்டி பட்ட மனைவி கிடைக்கறதுக்கு கொடுத்து வைச்சிருக்கனும்ன்னு சொன்னதற்க்கு கல்யாணமான பசங்க விட்டாங்க பாருங்க ஒரு பெருமூச்சு..
எதிர வைச்சிருந்த பிளாஸ்டிக் பெஞ்சே உருகிருச்சு:P:)))))))))
வழக்கம் போல கலக்கிட்டிங்க தலைவி ;))
ReplyDeleteகலக்கல் வாரம்.
ReplyDeleteரசித்தேன் கீதா.
கீதா ரொம்ப அழகா வலைச்சரம் பின்னிட்டீங்க. எல்லா பதிவுகளுமே ரொம்ப நல்லா இருந்தது. ஒருத்தர் விடாம விசாரித்து விமரிசையாக் கல்யாணம்., மாதிரி நடத்திட்டீங்க.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்.
//என்னுடன் விவாதம் நடத்தாமல் இந்தியாவை விட்டுப் போக வேண்டி இருக்கே என்று வருந்திய கே ஆர் எஸ்//
ReplyDeleteஹிஹி!
விவா+தம் ஆ?
விவா குடிப்பேன்! ஆனா தம் பழக்கம் இல்லீயே! :-)
வலைச்சரத்தில் பின்னிட்டீங்க கீதாம்மா...
இப்ப தான் விட்டுப் போன எல்லாப் பதிவுகளையும் ஒவ்வொன்னாப் படிச்சிக்கிட்டு வாரேன்!