அடுத்து அருமைச் சகோதரி வல்லி சிம்ஹன். அவரும் நான் பதிவுகள் எழுத ஆரம்பிச்ச கால கட்டத்திலேயே ஆரம்பித்தார். இவரும் ஆங்கிலத்தில் ஆரம்பிச்சு விட்டுப் பின்னரே தமிழில் எழுத ஆரம்பித்தார். இவர் ஆரம்பத்தில் இருந்தே ஒரே தீர்மானத்துடனேயே எழுதி வருகின்றார். நான் ஆரம்பத்தில் புலம்பல் ஆரம்பிச்சுட்டுப் பின்னர் சூப்பர் சுப்ராவின் பின்னூட்டத்தினால் கொஞ்சம், கொஞ்சமாய் மாறிப் பின்னர் எழுத ஆரம்பித்தேன். ஆனால் வல்லி சிம்ஹன் அப்படி இல்லை. ஆரம்பத்திலேயே இது தான் நம் வழி என ஒரு தீர்மானம் இவரிடம். எழுதுவதைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லுகின்றார். இது எனக்கு உள்ள ஒரு பெரிய குறை. நிறையப் பேர் சொல்கின்றார்கள், ரொம்பப் பெரிய பதிவாய் இருக்குனு. அது என்னமோ நான் எழுதுவதைக் குறைச்சுக்கணும்னுதான் பார்க்கிறேன், ஆனால் எழுத ஆரம்பிச்சால், வேறே ஏதாவது தடங்கல் வந்தால் தான் நிறுத்த முடியுது. இது ஒரு பலவீனமாய் இருக்கின்றது. இப்போ வல்லியின் பதிவுகள் பற்றி ஒரு அலசல்:
http://naachiyaar.blogspot.com/2006_04_01_archive.html
இதோ இங்கே காணலாம் இவரின் ஆங்கிலப் பதிவுகளை. அடுத்து இவர் தமிழில் எழுத ஆரம்பிச்சதும், அநேகமாய் இவரும் சென்ற ஊர்கள், இருந்த ஊர்கள் என அதைப் பற்றியும் எழுதினாலும், இவர் தம் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒரு கதையில் வரும் சம்பவங்கள் போன்றவையாகும், அதிலும் இவர் தம் திருமணம் ஆனது பற்றிய ஒரு தகவலை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கின்றார் பாருங்கள், எனக்கு மிகப் பிடித்த ஒரு பதிவு அது. இதோ அந்தப் பதிவு! அவரின் திருமணத்துக்கு முன்பு அவர் தம் பாட்டி வீட்டுக்குச் சென்றபோது நிஜமாகவே நடந்த ஒரு நிகழ்வின் உண்மையான மலர்ந்த நினைவுகளின் தொகுப்பு இது: அவங்க அத்தையிடமிருந்து பாட்டிக்குக் கடிதம் வந்திருக்கிறது, பையனுக்குப் பெண் ஏதானும் இருக்கானு! பாட்டியின் வாயைப் பிடுங்கி விஷயம் அறிந்து கொண்டதோடு நில்லாமல், அந்தப் பையனின் தாய்க்கு, பாட்டி எழுதுவது போல் ஒரு கடிதமும் பாட்டியின் கண் எதிரிலேயே தயார் செய்து அனுப்புகின்றார் வல்லி அக்கா. தின்னத் தின்னத் தெகட்டாத அடிக்கரும்பின் ருசியோடு ஒப்பிடுமாறு, இந்தப் பதிவு படிக்கப் படிக்க சுவை குன்றாத ஒன்றாகும். அவங்களோட வார்த்தைகளிலேயே பார்ப்போமா?
//அன்புள்ள கமலாவுக்கு,(அத்தைன்னா போட முடியும்..விஷயம் தெரிந்து போயிடுமே)
இப்பவும் உன் கடுதாசி பார்த்து சந்தோஷம்.உன் பையனுக்கு ஏத்தமாதிரி
இங்கே உன் பெரியப்பாவின் பேத்தி ஸோ அண்ட் ஸோ
இருக்கிறாள்.
சிவப்பிலேயும் சிவப்பு .
உயரத்திலேயும் உயரம்.
கிளி போல அழகு.நீ ஜாதகத்தை அனுப்பு. நான்
நாராயணன் கிட்டப் பேசிக்கறேன்.
இப்படிக்கு,
ஆசீர்வாதங்களுடன்
சித்தி.
இப்படி ஒரு கடிதம் அழகான கையெழுத்தில் உருவாகிப் பாட்டிக்கு வாசிக்கப்பட்டது.
நான் இந்த ஆட்டைக்கு வரலப்பானு தங்கை விலகிக் கொண்டாள்.
இதில வந்த வர்ணனைகள் நான் படித்த கதைகளிலிருந்தும் //
அடுத்த பகுதியில் இது:
//திடீரென்று மன உறுத்தல்.என்னடா ஏதாவது தப்பு செய்துட்டோமோ.
சாமி கடவுளே அந்தத் தபால் போகமலேயே இருக்கணுமே.
என்னவோ பிரார்த்தனை.
அது எப்படி நடக்கும்,நாமதான் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு.//
அப்புறம் தான் வருது க்ளைமாக்ஸே! :))))))))))))))
//அப்பா முகம் படுசீரியசாக இருந்தது.
அன்னிக்கு சித்தி வீட்டில என்ன நடந்ததுனு மெதுவாகத்தான் கேட்டார்.
சட்டுனு கடிதம் ஞாபகம் வர இல்லைப்பா,என்று ஆரம்பித்த என்னை அம்மா முறைக்க,(அம்மாவுக்குக் கோபம் வந்தா ஒண்ணு முதுகுல ஒரு தட்டு,இல்லாட்ட ஒரு கடுமையான முறைப்பு.:) )
எனக்குப் பேச்சு வரவில்லை.
அத்தை கிட்டேயிருந்து அப்பாவுக்கு லெட்டர் வந்து இருக்கு. அப்பா பேரில எழுதினயா ஏதாவது.
நான் மென்று முழுங்குவதைப் பார்த்த அப்பாவுக்கு
மனசு வரவில்லை.
ஏம்மா அப்படி எழுதின.திஸ் இஸ் சம்திங் சீரியஸ்.
என்று பேச ஆரம்பிக்க.//
அதன் பின்னர் ஒருமாதிரியாகப் பெற்றோர் சம்மதத்துடன் பெண்பார்க்கும் படலம் இதோ: வல்லி அக்கா மனசு போலவே மாப்பிள்ளை வந்து விட்டாரே! :))))))))))மாப்பிள்ளை வந்துவிட்டார் பெண்ணைப் பார்க்க. அந்த மாப்பிள்ளை யார் எனத் தெரியும் வரை நம் வல்லி அக்கா பட்ட பாடு! :)))))))))
அவங்க சொல்றதையும் பார்ப்போமே!
//எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை அஸ்ஸீஸ்டண்ட் மானேஜர்.
ஏனெனில் காதலிக்க நேரமில்லை படத்தில் அந்த நாளைய கதாநாயகன்
ரவிச்சந்திரன் அந்த வேலையில் இருப்பார்.
உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.
கடிதங்கள் பறந்தன.ரகசிய விசாரணைகள் நடந்தன.
ஐப்பசியில் பெண்பார்க்கலாம் என்று முடிவாகியது.//
பெண் பார்க்கவும் வந்தாச்சு, ஆனால் நம் அக்காவின் கண்ணில் மாப்பிள்ளை தவிர மத்தவங்க தான் தெரியறாங்க, கலங்கிப் போனா அக்காவின் துணைக்கு வரார், மாமா! :))))))))))
//என்
மாமா, அப்போது பார்த்து ஒரு ஸ்கைப்ளூ சட்டை பின்னால் போய் நின்று இதுதான் என்பதுபோல் சைகை காட்டினார்.
திருப்பியும் நிமிர்ந்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டு
சரி ஓக்கேதான் என்று நினைத்தபடி
அம்மாவைப் பார்த்தேன்.அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.
அவர்களோடு கிளம்பி இரண்டு வண்டிகளில் மைலாப்பூரில் இருந்த பெரிய வீட்டுக்கு வந்து பாட்டியையும் தாத்தாவையும் வணங்கி
அம்மாவின் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டோம்
ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து போன் வந்துவிட்டது.
எங்களுக்கு சம்மதம்.
அப்பா வந்து என்னைக் கேட்டார்."அம்மா,உனக்குப் பிடித்திருந்தால் சரினு சொல்லு."
இல்லாட்டாப் பரவாயில்லை.
நான்தான் நிறையப் படித்த அறிவாளி ஆச்சே.
பரவாயில்லைப்பா சரினு சொல்லிடலாம்.//
எப்படி இருக்கு? அருமையா இல்லை? இது தவிர இன்னும் இம்மாதிரியான அனுபவக் கோவையான நிகழ்வுகளை அள்ளித் தருகின்றார் வல்லி அக்கா.
எவ்வளவு சுவையான அனுபவங்கள்? விளையாட்டுத் தனமாய்ச் செய்த ஒரு காரியத்தின் விளைவு கடைசியில் அனைவர் மனதிற்கும் பிடித்த மாதிரி ஆகி விட்டது அல்லவா? வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவும் மாறிவிட்டது. வல்லிக்கு இப்போது நினைக்கும்போது கூட ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு புதுமை அதில் தெரியலாம்!
http://naachiyaar.blogspot.com/2007/06/180.htm
http://naachiyaar.blogspot.com/2007/06/181.html
http://naachiyaar.blogspot.com/2007/06/182.html
ஒரு தேர்ந்த எழுத்தாளரின் உற்சாகத்தோடு எழுதும் இவரின் பழைய நினைவுகளும் சுவை சற்றும் குன்றாமல் இருக்கின்றது. இதோ இவரின் சமீபத்திய பதிவுகளின் ஒரு சுட்டி!
http://naachiyaar.blogspot.com/ அறுபதுக்கு அறுபது 1972.
அடுத்துச் சமீப காலத்தில் தமிழ் மண நட்சத்திரங்கள் ஆக இருந்த இருவரின் பதிவுகள் பற்றியது. முதலில் வருபவர் ப்ரியா வேங்கட கிருஷ்ணன். மிக மிக அருமையான தொகுப்பைக் கொடுத்திருந்தார் இவரின் தமிழ்க்கல்வி வலைப்பதிவில். சுட்டி இதோ:
http://tamilkkalvi.blogspot.com/ priya venkatakrishanan
ஆன்மீகத்துக்குத் தனிப்பதிவு வைத்திருக்கும் இவர் அதிலே புதிரா? புனிதமா? பாணியில் கேள்விகள் கேட்டுட்டு இருந்தார். இப்போக் கொஞ்ச நாளா எதையும் காணோம்.படிப்பில் மும்முரம்னு நினைக்கின்றேன். திருப்பாவை பற்றிய பதிவுகளும், இடம் பெற்றிருக்கும் இவரின் தமிழ்க்கல்வி பதிவுகளில் உண்மையிலேயே தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்தார், நட்சத்திர வாரத்தின் நிறைவுப் பகுதியான இதில் இவர் யாப்பிலக்கணமும், அணி இலக்கணமும் சற்றும் பிசிறடிக்காமல் சொல்லிக் கொடுக்கின்றார். மிகச் சிறந்த ஆசிரியையாக வரக்கூடிய பொறுமையைப் பெற்றிருக்கின்றார் இவர் இந்தச் சிறிய வயதிலேயே! வாழ்த்துகள் ப்ரியா வேங்கடகிருஷ்ணன்! இது தவிர, இரு ஆங்கிலப் பதிவுகளும், குட்டிப்ரியாவில் தொடர்ந்து தமிழும் சொல்லிக் கொடுக்கின்றார்.
http://tamilkkalvi.blogspot.com/2008/01/blog-post_5036.html
http://aanmeegham.blogspot.com/
அடுத்த ஆசிரியர் நிஜமாவே அனைவராலும் ஆசிரியராய்ச் சொல்லப் படும் சுப்பையா சார். இவரின் நட்சத்திர வாரப் பதிவுகளும் குறிப்பிடத் தக்க வரவேற்பைப் பெற்றது. எல்லாவற்றையும் குறைவின்றித் தொட்டுச் சென்ற இவரின் அனுபவங்கள் பிரமிப்பையே தருகின்றது. அநேகமாய் அனைத்துத் தரப்பு நண்பர்களுக்கும் சமர்ப்பணம் பண்ணி இருந்த இவர் பதிவுகளில் எனக்குப் பிடிச்ச இரு பதிவுகள் வாரியார் பற்றி இவர் எழுதி இருந்தவை தான்.
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_28.html
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_7034.html
வாரியார் சுவாமிகளின் வார்த்தைகளிலே இவர் சொல்வது:
//தம்பீ! இந்த ஊன உடம்பை முழுவதுங் காண்பதற்கு இரு நிலைக்
கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக்
காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''
ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள்,
இப்போதே வாங்கி வருகின்றேன், பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''
அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று, வேதகாமத்தில் விளைந்தவை.
ஞானமூர்த்தியைக் காண இரு நிலைக் கண்ணாடிகள் வேண்டும் என்றேன்
அல்லவா? ஒரு கண்ணாடி திருவருள். மற்றொன்று குருவருள். இந்தத்
திருவருள் குருவருள் என்ற இரு
கண்ணாடிகளின் துணையால் ஞானமே
வடிவாய் இறைவனைக் காண வேண்டும். அன்புள்ள தம்பீ! திருவருள்
எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும்.
கடும் வெயிலில் பஞ்சை வைத்தால் வெதும்புமேயன்றி வெந்து சாம்பலாகாது.
சூரியகாந்தக் கண்ணாடியை வெயிலில் வைத்து அதன் கீழே வரும் ஒளியில்
பஞ்சை வைத்தால் அந்தக் கணமே வெந்து சாம்பலாகும். சூரியகாந்தக்
கண்ணாடி பரந்து விரிந்துள்ள வெயிலின்
ஆற்றலை ஒன்றுபடுத்திப் பஞ்சை
எரிக்கின்றது. அதுபோல் யாண்டும் விரிந்து பரந்துள்ள திருவருளை ஒன்று
படுத்தி மாணவனுடைய வினைகளாகிய பஞ்சைக் குருவருள் சாம்பலாக்கு
கின்றது. கதிரவனது வெயிலும்
சூரியகாந்தக் கண்ணாடியும்
தேவைப்படுவது போல் திருவருளும் குருவருளும் இறைவனைக் காண
இன்றியமையாதவை.இறை என்ற சொல் இறு என்று பகுதியடியாகப் பிறந்தது.
எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் இறைவன் என்று பேர் பெற்றது.
எங்கும் நிறைந்த பொருளைக் காணும் வழி வகைகளையறிவது தான்
அறிவுடைமை. முரட்டுத்தனமாகப் பேசுவது அறிவுடைமையாகாது.
எதை எதனால் அறிவது?//
வாரியார் சுவாமிகள் சொன்னதாய் ஐயா அவர்கள் சொன்னதுக்கு மேலே நாம் என்ன சொல்ல முடியும் இல்லையா?
*************************************************************************************
"டாம்" ஆகிய அம்பி வந்து லிங்கைக் கொடுங்கனு கேட்டுட்டுப் போயிருக்கார். ஆனால் லிங்க் கொடுக்கும்போது சிலசமயம் ப்ளாகர் ஏத்துக்குது, அதுக்கு மனசு இருந்தால், பலசமயம் ஏத்துக்கறதில்லை, தவிர நேரமும் ஆகின்றது. குறிப்பிட்ட பதிவைத் தேடி, லிங்க் கொடுத்து, அது சரியா வருதானு பார்த்து! நீங்களே தேடிப் பிடிச்சுப் படிச்சுக்குங்க, இது தலைவியின் ஆனை! சீச்சீ ஆணை! அம்பி நோட் திஸ் பாயிண்ட்! சோம்பல் படாதீங்க! :P
//"டாம்" ஆகிய அம்பி வந்து லிங்கைக் கொடுங்கனு//
ReplyDeleteநைசா என்னை டாம்னு சொன்னா எப்படி? வயசுல, அனுபவத்துல மூத்தவங்க நீங்க, நீங்க தான் டாம்.
தன்னடக்கத்துடன்)நான் என்னிக்குமே ஜெர்ரி தான். :P
ஆமா! வல்லி மேடம் பதிவுகள் எல்லாமே சுட சுட திகட்டாத கேசரி. :))
ReplyDeleteஒரு கல்கியின் கதை படிக்கற எபக்ட்டை தன் எழுத்துக்களில் கொண்டு வந்துடுவாங்க. தேர்ந்தெடுக்கற வார்த்தைகள் எல்லாம் சும்மா ரத்ன சுருக்கமா இருக்கும்.
\\ ambi said...
ReplyDeleteஆமா! வல்லி மேடம் பதிவுகள் எல்லாமே சுட சுட திகட்டாத கேசரி. :))
ஒரு கல்கியின் கதை படிக்கற எபக்ட்டை தன் எழுத்துக்களில் கொண்டு வந்துடுவாங்க. தேர்ந்தெடுக்கற வார்த்தைகள் எல்லாம் சும்மா ரத்ன சுருக்கமா இருக்கும்.
\\
இதுக்கும் ஒரு ரீப்பிட்டே...
நல்ல வார்த்தைகள், அந்த வார்த்தைகள் உணர்த்தும் அவர்களின் பணிவை ;))
மிக எளிமையாக அவர்கள் சொல்வதை காட்சிப்படுத்தி பார்க்க முடிகிறது.
வல்லிம்மாவுக்கு என்னோட வணக்கங்களும், வாழ்த்துக்களும் ;)
அன்பு கீதா, இதற்குத்தான் லின்க்
ReplyDeleteகேட்டிங்களா:)
முதல் பதிவிலெயே எனக்கு
இவ்வளவு ஏற்றம் கொடுத்ததற்கு
என்ன சொல்வது...
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றித் தவிக்கிறேன்.
/
ReplyDeleteவல்லிசிம்ஹன் said...
அன்பு கீதா, இதற்குத்தான் லின்க்
கேட்டிங்களா:)
முதல் பதிவிலெயே எனக்கு
இவ்வளவு ஏற்றம் கொடுத்ததற்கு
என்ன சொல்வது...
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றித் தவிக்கிறேன்.
/
நான்வேணா ரெண்டு மூனு வார்த்தை கடன் குடுக்கட்டுமா???
லிங்க் எல்லாம் பொறுமையா படிச்சிட்டு வரேன்.
ReplyDeleteஎதை படிக்கிறது எதை விடறது?
ReplyDeleteயாராவது ஒரு நாளுக்கு 48 மணி ஆக்கறா மாதிரி யுக்தி தெரிஞ்சா சொல்லுங்களேன்!
//எழுதுவதைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லுகின்றார்//
ReplyDeleteஅதே அதே.
வல்லி ஒரு வள்ளுவர்ன்னா நாமெல்லாம் வால்மீகி:-)
தாராளமாக் கடன் கொடுங்க சிவா.
ReplyDeleteவார்த்தப் பஞ்சமில்லாமல் போகும்:)
வலை உலக சவுகார்ஜானகியம்மா பதிவுகள் நீங்க கொடுத்த லிங் எல்லாம் நான் முன்னமே படிச்சு இருந்தும், தங்கமணி படிக்க இப்ப வசதியா இருந்துச்சு. நான் 2ம் தடவை படிச்ச போது கொஞ்சமும் திகட்டவே இல்லை. அம்பி சொன்ன மாதிரி கேசரி மாதிரி இல்லாம கல்கத்தா ரசகுல்லா மாதிரி அப்படி ஒரு டேஸ்ட்!
ReplyDelete