Friday, May 30, 2008

சுத்தி சுத்தி வந்தீக

மறுபடி மறுபடி ஒரே வேலைய செஞ்சுகிட்டு செக்கு மாடு போல உழன்றுகிட்டு இருக்கறவங்க கூட, வருஷத்துக்கு ஒரு தடவையாவது எங்காவது புதிய ஊர்களுக்கு, சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.
இதுல நம்ம விட வெளி நாட்டு காரங்க ரொம்பவே ஈடுபாடு காட்டுவாங்க. ஒரே ஒரு பெரிய பையை தோளில் மாட்டிகிட்டு அந்த ஊர் வரைபடத்தை வெச்சுகிட்டு கிளம்பிடுவாங்க. நாம அப்படியா?

பால்காரன், பேப்பர்காரன், பூக்காரி, கரண்ட் பில், போன் பில், கேபிள்காரன் என எல்லாரையும் கேட்டுகிட்டு தான் வெளியவே கிளம்ப முடியும்.
அப்படியே கிளம்பினாலும், கேஸை ஒழுங்கா மூடினோமா? மாடில காய போட்ட துணிய மடிச்சு வெச்சோமா?னு திரிசங்கு நிலை தான்.

பணி நிமித்தமாக வெளியூர் சென்றாலும், அந்த ஊரின் சிறப்பு, முக்ய இடங்கள்னு வார இறுதி நாட்களிலாவது நாம் எல்லோரும் செல்வது வாடிக்கை.

நம்ம கைபுள்ளை ராஜஸ்தானை சுத்தி பாத்து என்னமா எழுதி இருக்கார் பாருங்க. கண்ணை கவரும் போட்டோக்களுடன், வரலாற்று தகவல்களுடன் ஒரு பெரிய தகவல் சுரங்கமா இவரது பதிவுகள் விளங்குது.

ஒட்டகத்தை கட்டிக்கோ!னு பாடிட்டே ஊரை சுத்தி பாத்தீங்களா தல? :)

கீதா சாம்பசிவம் மேடம் தனது ஆன்மீக பயணமான கைலை யாத்ரையை தனி பிளாக்காவே ஆரம்பிச்சு, ஒரு கல்வெட்டு மாதிரி பதிந்து வெச்சு பக்கத்துலேயே உக்காந்து இருக்காங்க பாருங்க. நாளைக்கு வர போற சந்ததியினர் இதை பாத்து நம் பாரத நாட்டின் பெருமையை தெரிந்து கொள்வார்கள். அடுத்து எந்த ஊருக்கு கிளம்பறீங்க மேடம்? :)

காசிக்கு போகும் சன்யாசி,
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி!

- இந்த பாட்டை வெங்கல குரலில் சீர்காழி அவர்கள் பாட கேட்டு இருக்கீங்களா?
வெரிகுட்!
காசி, கயா, புதுதில்லி போன தன் அனுபவங்களை தமது வலையில் பகிர்ந்து இருகிறார் பாருங்க டிடி அக்கா.


என்னடா எப்ப பாத்தாலும் உள் நாடு தானா? வெளி நாடெல்லாம் பத்தி தெரிய வேணாமா?னு கேக்கறவங்களுக்கு இருக்கவே இருக்கு ஜில்லுனு மலேசியா என்ற குழும பதிவு.

வடக்குபட்டி ராமசாமி சிங்கைக்கு பக்கத்துல இருக்கற ஒரு தீவுக்கு போய் வந்து என்னமா படம் காட்டி இருக்காரு பாருங்க.


பாரீஸுக்கு போனா நாம எல்லாம் முதல்ல என்னத்த பாப்போம்? ஈபில் டவர் தானே? அதான் இல்லைனு புலம்பி இருக்காங்க பாருங்க பிரான்ஸ் காரருக்கு வாக்கபட்ட நம்மூர்கார பொண்ணு ஒருத்தர். :)


அமீரகத்தின் அழகிய பக்கங்களை நமக்கு பானி பூரி சாப்பிட்டு கொண்டே காட்றாங்க பாருங்க நம்ம வல்லியம்மா. :)


மரகத வல்லி மீனாட்சி மதுரை நகரில் வாழுகிறாள்

கடைகண் காட்டும் காமாட்சி காஞ்சியிலே வாழுகிறாள்!

என்பது ஊரறிந்த செய்தி. மரகத புத்தர் எங்க இருக்கார்? தெரியுமா உங்களுக்கு? தெரியலைனா துளசி டீச்சர்கிட்ட கேளுங்க.
சனி, ஞாயிறு எல்லோரும் பதிவுகள படிப்பீங்களா?னு தெரியல. ஹிஹி, நான் பெரும்பாலும் படிக்க மாட்டேன். அதுனால அடுத்து என்ன எழுத?னு ஒரே யோசனையா இருக்கு. பாக்கலாம்.

Thursday, May 29, 2008

ஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே!


ஒரு சமூகம் முன்னேறி இருக்கிறது, நாகரீகம் வளர்ந்து இருக்கிறது என்பதற்க்கு பெருகி வரும் கலைகளே அத்தாட்சி. அது சிற்பமாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், ஒரு மொழியாக இருக்கலாம். வலையுலகிலும் பலப்பல வித்தகர்கள் பலதரப்பட்ட கலைகளை தம் வலைப்பூ வழியாக வளர்த்து வருகிறார்கள்.


எல்லோருக்குமே தம்மை புகைபடம் எடுத்து கொள்ள ஆர்வம் அதிகம் தான்.
இந்த கல்யாண வீடுகளில் பொண்ணு மாப்பிள்ளை நீங்கலாக சுமார் ஒரு முப்பது பேர் மொய் எழுதிய உரிமையில் போட்டோவுக்கு போஸ் குடுக்க முந்தி அடிப்பர். ஆனால் எத்தனை பேருக்கு அந்த புகைப்பட கலை பத்தி போதிய விஷய ஞானம் இருக்க முடியும்? அந்த குறையை நீக்க பிட் என்று செல்லமாக அழைக்கபடும் ஒரு குழுபதிவு தமிழில் இயங்கி வருகிறது.


எளிய தமிழில், என்னை மாதிரி டியூப்லைட்டுகளுக்கு கூட புரியும் வகையில் மிக நேர்த்தியாக சொல்லி குடுக்கிறார்கள். மாதா மாதம் சுவையான தலைப்புகளில் போட்டி வேறு வைத்து உங்கள் புகைபட திறனை மேம்படுத்துகிறார்கள்.

சூப்பர் பிகர்கள் புகைப்பட போட்டி எப்பண்ணே வைப்பீங்க? :)

நம் எல்லோருக்குமே நமது எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைய உண்டு. பிகர்களை மடக்க, எனக்கு கைரேகை தெரியுமாக்கும்! என கப்சா விட்ட அனுபவம் பலருக்கும் உண்டு (சும்மா வெக்கபடாம பின்னூட்டத்தில் சொல்லுங்க). குரு பார்வை வந்தா தான் எனக்கு ஏதேனும் செட் ஆகும் போல!(கல்யாணத்துக்கு தான்) என கவலைபடும் மக்கள் துயர் துடைக்க நமது சுப்பையா வாத்தியார் எளிய தமிழில், கதைகளுடன், சாம்பிள் ஜாதகங்களுடன் சோதிட வகுப்பு நடத்துகிறார்.


இன்று கோச்சாரபடி, சனி வக்ரமடைவதாலும், அனானி அருள் இல்லாததாலும் என் பதிவுக்கு பத்து பின்னூட்டம் கூட வராது!னு நீங்களே கணிக்க கூடிய வகையில் வகுப்பு அழகாக செல்கிறது. அட்மிஷனுக்கு முந்துங்கள், சிபாரிசுகள் ஏற்றுகொள்ளபட மாட்டாது. :)

தாய்மொழி தவிர இன்னுமொரு மொழி கற்று கொள்வது பெரிய பலமே. நீங்க மலாய் மொழியை கற்று கொள்ள உதவறாங்க நம்ம 'மலேசிய மாரியாத்தா' மை பிரண்டு மற்றும் தர்ஹா! மன்னிக்கவும், துர்கா. :)


இனிமே நீங்களும் என்னை ஜப்பான்ல சாக்கி சான் கூப்டாக! அமெரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்டாக!னு மலாய் மொழில சொல்லிக்கலாம். என்ன நான் சொல்றது?

ல்தகா சைஆ இருக்கா? என்பதை மலாய்ல எப்படி சொல்லனும் மலேசிய மை பிரண்ட்? :)


குழந்தை வளர்ப்பும் என்னை பொறுத்த வரை ஒரு அரிய கலை தான்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும் தங்கமணி வளர்பதிலே! என்ற வரிகள் வரும் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.


அத்தகைய கு.வ பத்தி ரொம்ப தெளிவா, எளிமையா இந்த தளத்தில் ஒரு குழு பதிவா எழுதிட்டு வராங்க. குழந்தைகள் சைக்காலஜி, குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளையும் சொல்லி இருக்காங்க.


ஜோதிகா மாசமா இருந்த போது, சூர்யாவும், அவங்களோட குழந்தை வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தாராம். அடடா, என்ன ஒரு பொறுப்பான ரங்கமணியா இருக்காரு பாருங்க.

நான் எப்பவோ இந்த தளத்தை என் பேவரிட் ஐட்டத்தில் சேர்த்தாச்சு. அப்போ நீங்க? (கிசுகிசு மாதிரி இருக்கோ?)

மருத்துவ தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கா? கவலையே படாதீங்க. வலையுலகில் டாக்டர் ப்ருனோ இருக்கார். அலைபேசி, ஈமெயில் முகவரி எல்லாம் குடுத்து இருக்காரு. ஒரு மெயில் தட்டி விடுங்க. கண்டிப்பா பதில் குடுப்பாரு. பீஸ் எல்லாம் குடுக்கனுமா டாக்டர்? :)

சரி, இந்த பதிவை இதோட முடிச்சுக்கலாம். நாளைக்கு வீக் எண்ட் ஸ்பெஷல்.

Wednesday, May 28, 2008

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?

இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இசைக்கு மொழியும் ஒரு தடை இல்லை.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?

இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?


வலையுலகில் இத்தகைய இசை இன்பத்தை வாரி வாரி வழங்கும் பதிவர்கள் பலர் உள்ளனர். குழுவாகவும் இணைந்து செயல்பட்டு இசைத்தொண்டாற்றி வருகிறார்கள். இதில் இசை இன்பம், கண்ணன் பாட்டு, முருகனருள் போன்ற குழுக்கள் மிக அழகாக, பாடல்களை தொகுத்து வருகின்றன. ராக மாலிகையை போல பல வித்தகர்கள் இந்த குழுவில் இடம்பெற்று இருப்பது பெரிய பலம்.

முருகன் என்றால் என்னவெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வரும்? அழகன், குமரன், தமிழ், ம்ம் அப்புறம்? அப்புறம்? ஆங்! காவடி, காவடி சிந்து பாடல்கள். எளிய நடையில், நடனத்துக்கு ஏத்த வகையில் சிந்து அல்லது செஞ்சுருட்டி ராகத்தில் சந்தம் சந்தமா வரும் காவடி சிந்தை கேட்க கேட்க என்ன ஒரு ஆனந்தம். முருகன் அருளில் அப்படியோரு காவடி சிந்து பாடலை கேட்டு மகிழுங்கள்.



எங்க ஊர்ல ஒருத்தர், சரியான தண்ணி பார்ட்டி. ஆனா சங்கீதத்துல நல்ல ஞானம். எவ்ளோ மில்லி அடிச்சாலும் ஆரபிக்கும் ஆபேரிக்கும் உள்ள வித்யாசத்தை சரியா சொல்லிடுவாரு. இப்படி தான் ஒரு நாள் கோவில்ல பஜனை நடந்துண்டு இருந்தது. ஒரு பாகவதர், ஊத்துக்காடு வெங்கடகவி பாடலான "புல்லாய் பிறவி தர வேணும்"னு செஞ்சுருட்டி ராகத்துல ஆரம்பிக்க, நம்மாளும் அங்கு வந்து சேர, சுத்தி இருக்கறவங்க நமட்டு சிரிப்பு சிரிச்சாங்க. ஏன்னு நீங்களே யூகிச்சுக்குங்க. கண்ணன் பாட்டில் இதோ அந்த பாடல்.


"வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னை பாக்காம போறாளே சந்திரிகா!" - என்ன அம்பி, இது வரைக்கும் ஒழுங்கா தானே எழுதிண்டு வந்தே? அதுக்குள்ள என்ன ஆச்சு?னு நீங்க யோசிக்கலாம்.

இந்த பாட்டு என்ன ராகம்னு சொல்லுங்க பார்ப்போம்? தெரியலைனா இசை இன்பத்துல போயி மூழ்கி முத்தெடுங்க. அந்த பாட்டுல வர நடிகை தான் ஜெமினி படத்துல, சரி வேணாம், விட்ருங்க. :))


நல்ல இசையை பாட தெரியாவிட்டாலும் ரசிக்கற குடுப்பினையாவது வேண்டும். வாணி மஹால், நாரத கான சபாக்களில் டிசம்பர் மாதம் வந்து விட்டால் பட்டுபுடவை சரசரக்க, வைரதோடு மினுங்க, ரங்கமணிகள் காரோட்டி வர, ஷண்முக ப்ரியாவுக்கும், கரகரப்ரியாவுக்கும் என்ன வித்யாசம்?னு சபா கேண்டினில் பக்கோடாவும் சூடா காப்பியும் அருந்திகொண்டே டிஸ்கஸ் செய்யும் இந்த காலத்தில் மணிபயல் (பெயரை பாத்து ஏமாற கூடாது) கடந்த டிசம்பர் மாதம் முழுக்க பலவித ராகங்களை அலசி ஆராய்ந்து இருக்கிறார். அதோடு அந்த ராகம் திரைபடங்களில் எப்படி கையாளபட்டு இருக்கிறதுனும் அருமையா சொல்லி இருக்கார்.


கல்யாணி ராகத்தை ஆரோகனத்துல பிடிச்சு, அட்டானா ராகத்தோட மிக்ஸ் பண்ணி தொடைல தட்டினா வரது கரகரப்ரியாவா? ஷன்முகப்ரியாவானு தில்லுமுல்லு படத்தில் ரஜினி கேட்பாரே, அத போல இத்தனை ராகங்கள் படங்களில் வந்து போயிருக்குனு எனக்கு இப்ப தான் தெரிஞ்சது.


அதே போல தி.ரா.ச சாரும் தான் ரசித்த கச்சேரிகளை தவறாமல் வலையேற்றி, அந்த கச்சேரியை அக்கு வேறு ஆணி வேறாக விமர்சனம் செய்து விடுவார்.

நவராத்திரி சமயத்தில் அன்னையின் அருளை இசைவழியாய் வழிபாடு செய்யும் வகையில் அருமையான பாடல்களை அதன் அர்த்ததோடு நமக்கு தந்து இருக்கிறார். சுப்புடுவுக்கு உதவியாளரா வேற இருந்திருக்காராம். கும்பிடு போட்டுக்கறேன் எஜமான்.


நித்யஷ்ரி, பாம்பே ஜெயஷ்ரி எந்த ஷ்ரி பாட்டு வேணும் உங்களுக்கு? இங்க போய் தரையறக்கம் செஞ்சுகுங்க.

வலையுலகில் ஜாடிகேத்த மூடியாய், சும்மா ஜோடி போட்டு கொண்டு கிட்டு மாமா பல திரையிசை பாடல்களை தம் துணைவியோடு பாடி பதிந்து இருக்கிறார்.
உங்க கு(சு)ட்டிபெண்ணையும் சீக்ரமா பாட சொல்லுங்க கிட்டு மாமா.


உங்க ஓட்டு யாருக்கு? ஜானகி அம்மாவுக்கா? பி.சுசீலா அம்மாவுக்கா? கேக்கறது நானில்லைங்க, ஜி.ரா அண்ணன் தான்.

ரா ரா! தீர்ப்பு சொல்ல ரா ரா!


திரையிசை பாடல்களில் எஸ்பிபிக்குனு தனியா ஒரு பிளாக்கே இருக்குங்க. ரசிகர்கள் எல்லாம் ஒரு எட்டு போய் கேட்டு மகிழுங்க.


பிண்ணனி பாடகி சின்மயி (கன்னத்தில் முத்தமிட்டால் நியாபகம் இல்லையா?) கூட பதிவு நடத்தறாங்களே. போய் கேட்டு பாருங்க. இந்த உதித் நாராயண் ஒரு பிளாக் தொறக்க கூடாதா? பின்னூட்டத்தில் என் ஆத்திரத்தை எல்லாம் கொட்டி, கும்மி அடிக்க ஆவலா இருக்கேன்.


சமையலுக்கு அப்புறம் சங்கீதமும் முடிஞ்சது. அடுத்து என்ன..? யோசிங்க, நானும் கொஞ்சம் யோசிக்கிறேன்.

Tuesday, May 27, 2008

என்ன சமையலோ?

"உடம்பை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!
- திருமூலர்


உலகில் அனைத்து ஜீவராசிகளும் ஆடி ஓடுவது என்னவோ வயிறார உணவுண்ண தான். ஒருவருக்கு என்னத்த குடுத்தாலும் திருப்தியே வராமல் இன்னும் வேணும்! இன்னும் வேணும்! என்று தான் கேட்பர். ஆனால் வயிறு ரொம்பி விட்டால் போதும்! போதும் என் ஏப்பம் விடுவர்.


"பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்"னு சும்மாவா மின்சார பெண் கஜோல் அம்பாள் பாடியிருக்கா? :)



நல்ல சங்கீதமும் சமையலும் ஒன்னு. இரண்டுக்கும் உடனே ரிஸல்ட் தெரிந்து விடும்.
ஷன்முகப்ரியா ராகத்தை சட்னி பண்ணிட்டாரே அந்த பாகவதர்னு சபாவிலேயே சொல்லி விடுவர். ஓ! சாம்பார் வைக்க சொன்னா ரசம் வெச்சு இருக்கியே! ஏது புருஷனுக்கு மிச்சம் பிடிக்கறியா?னு எங்க ஊர்களில் முகத்துக்கு நேர்லயே கேட்டு விடுவர்.


வலையுலகில் கதை எழுத, கவிதை எழுத, காமடி எழுதனு ஒரு கூட்டமே உள்ளது. சமையல் குறிப்புகள் வரும் தளங்கள் கொஞ்சம் கம்மின்னாலும் என் கண்ணில் சிலது பட்டது. சமையல் குறிப்புனா ஏதோ கிள்ளு கீரை மாதிரி கேவலமா லுக் விடுபவர்கள் வேளா வேளைக்கு ஒரு பிடி மண்ணையோ இல்லை அரை குயர் காகிததையோவா தின்பார்கள்?


உண்டி குடுத்தோர் உயிர் குடுத்தோர்! இல்லையா?


காலையில் உண்ணும் சிற்றூண்டியாகட்டும், மதியம் சாப்பிடும் மோர்கொழம்பு என்ன, மாலை சாப்பிடும் டிபன் கேசரி என்ன, என்ன என்ன?னு அடுக்கிண்டே போகலாம். எல்லா குறிப்புகளும் கச்சிதமாய், எளிமையாய், முக்ய குறிப்புகளுடன், கண்ணை கவரும் படங்களுடன் ஜெயஷ்ரி அக்கா தரும் பாங்கு இருக்கே! அடடா கண்களுக்கு தேவாமிர்தம்.


என்ன தான் பிட்சாவும் பர்கரும் சாப்பிட்டாலும், கடைசில வீட்ல ஒரு வாய் சாப்பாட்டுக்கு ஈடு ஆகுமா? பாரம்பரியமிக்க செட்டி நாட்டு சமையல், சப்பாத்தி தேசத்துக்கு சொந்தமான கோப்தா, நான் வகைகள், நெல்லை அல்வா (எங்கூரை விட்டு குடுப்போமா?)னு நீங்க எதுக்கு வேணாலும் நம்ம அக்கா தளத்தில் குறிப்புகள் காணலாம்.


பொருவிளங்காய் உருண்டைக்கும் பின் நவீனத்துவத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? இருக்குனு அடிச்சு சொல்றாங்களே அக்கா.
நீங்க சட்டியை அடுப்பில் வைத்து விட்டு கூட ஏதேனும் சந்தேகம் வந்தால் அக்காவின் குறிப்புகளை ஒரு பார்வை பார்த்தால் கை மேல் பலன்.

அப்படியே ரங்கமணிகளுக்கு ஏத்த எளிமையான வகையில் ஏதேனும் சமையல் வகைகள் பத்தி பதிவு போடுங்க அக்கா. உங்களுக்கு புண்யமா போகும். :)

ஆன்மீக செம்மல், பாசுர புயல், அண்ணன் கேஆரேஸ் வேற அவரைக்காய் கூட்டு வைப்பது பத்தி விலாவரியா சொல்லி இருக்கார் பாருங்க.


சைவம், அசைவம் என கலந்து கட்டி அடித்து நம் பாரம்பரிய உணவின் மகிமையை நமக்கு உணர்த்தும் இன்னொரு குழுபதிவு சாப்பிட வாங்க. இதோ வந்துட்டே இருக்கோம் முத்துலட்சுமி அக்கா. (ஜனவரிக்கு அப்புறம் பதிவே காணோமே?)


பிஜி தீவு பிஞ்சு கத்ரிகாயில் எப்படி கார பொடி தூவி கார கத்ரிக்காய் பக்குவமா செய்யலாம்?னு துளசி டீச்சர் பாடம் எடுத்து இருக்காங்க பாருங்க. நான் உங்க ஊருக்கு வந்த செஞ்சு தருவீங்களா டீச்சர்? சும்மா டேஸ்ட் தான் பண்ணுவேன், கத்ரிகாய் பிடிக்காது.


வெங்காய சாம்பார் வைக்கறது இவ்ளோ ஈசியா? ஆமாம்பா ஆமா!னு அடுப்பங்கரையில கமலாக்கா சொல்லி இருக்காங்க பாருங்க. உங்க வீட்டு அட்ரஸ் குடுங்க அக்கா, சில டெக்னிகல் சந்தேகங்களை கிளியர் பண்ணிக்கறேன்.


தக்காளி ரசம், மிளகு ரசம், ஜீரக ரசம், எலுமிச்சை ரசம், பைனாப்பிள் ரசம், இதுல எல்லாத்துக்குமே அடிப்படை தேவை ரச பொடி. ஆனா ரசபொடியே இல்லாம எப்படி ரசம் வைக்கலாம்?னு சுந்தரா சொல்லி இருக்காங்க பாருங்க. அக்கா, இதை முன்னாடியே சொல்ல கூடாதா? எங்க மாமியாரை படுத்தி எடுத்து, போன தடவை ரச பொடி வாங்கி வந்தேன்.

சமையல் குறிப்புகளை ஆங்கிலத்தில் அள்ளி தராங்க ஹரியானாவிலிருந்து ராகா என்பவர். எல்லாம் சப்பாத்தி ஐட்டமா, ஒரே பீட்டரா இருக்கு. சரி விடுங்க, நமக்கு மேட்டர் தானே முக்யம்?


பேச்சிலர்களுக்கு ஸ்பெஷலா நம்ம பொண்வண்டு சமையல் குறிப்புகள் தராங்க பாருங்க.


தூயா அவர்கள் சைவம், அசைவம்னு தனிதனியா கோர்வையா எழுதி இருக்கறத பாருங்க. கூட்டணிக்கு ஆள் தேடறாங்க. சுயேட்சைனாலும் ஓகே தானா தூயா?


இந்த சம்மரை எப்படி சமாளிக்கலாம்னு புதுகை தென்றல் தவழ்ந்து வருகுது பாருங்க.

யப்பா! என்ன இப்பவே கண்ண கட்டுதா? எனக்கும் தான். ஒரு வழியா சமையல் முடிஞ்சது. அடுத்து என்ன? ஆங்! அதே தான்!


நாளைக்கு ரெடியா இருங்க.

Monday, May 26, 2008

ஒரு வெளம்பரம்தேன்!

விளம்பரத்தை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டோ? நாமே எத்தனை பேர் பின்னூட்டமே வேணாம்னு சொல்லி பதிவு போடறோம்?
நாம எழுதினத யாரேனும் படித்து சூப்பர்! பிச்சுடீங்க! அட ஒன்னுமில்லைனா ரீப்பீட்டேய்னு ஒரு பின்னூட்டம் வரலைனா நமக்கு சாதம் செமிக்கிறதா?

இதே மாதிரி தானே, ஒரு நுகர்வோர் பொருளை தயாரித்து விட்டு எந்த மாங்காயாவது தம் பொருளை வாங்க மாட்டானா?னு பன்னாட்டு நிறுவனங்கள் தவியா தவிச்சுட்டு இருக்கும்?

பெயிண்டை விக்க ஒரு முதலாளி தலைல கலர் பூச வேண்டி இருக்கு, ப்ரீபெய்டு கார்டு விக்க ஒரு குழந்தையின் அப்பா நடு ராத்திரியில் நட்சத்திரம் வெச்சு படம் வரைய வேண்டி இருக்கு.
அட, ஒரு குட்டி நாய் டைய தூக்கிண்டு பஸ் பின்னாடி ஓட வேண்டி இருக்கே.

இத்தகைய விளம்பரங்களை எடுக்க எவ்ளோ பிரயத்தனபடனும் தெரியுமா? எவ்ளோ பேர் இதுல ஈடுபடறாஙகனு தெரியுமா? மொக்கை படத்து (குருவினு வாசிக்கபடாது) ஹீரோ பெயர் எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கற நாம ஏதேனும் ஒரு விளம்பரத்தை பாத்து அட! அவரு தான் இதை இயக்கினாரா?னு என்னிக்காவது சொல்லி இருக்கோமா?

ஏன்னா நம்மை பொறுத்தவரை விளம்பரங்கள் என்பது ஐபிஎல், கோலங்கள் இடையே வரும் ஒரு சத்ரு. நிறைய ரங்கமணிகளுக்கு இந்த விளம்பர இடைவேளையில் தான் சாப்பாடே போட படுகிறது.

இத்தகைய விளம்பரங்களை பத்தி அந்த துறையில் இருக்கும் நம் பிளாகேஸ்வரி அக்கா தெளிவா, புரியும்படி எழுதி இருக்காங்க இங்க.

இபாங்க்! உபாங்க்! சப்பாங்க்! இதுக்கு பின்னாடி இவ்ளோ கதை இருக்கா? அடுத்த தடவை நீங்க ஹார்லிக்ஸ் குடிக்கும் போது இந்த பதிவையும் நினைவில் வையுங்க.


அதுமட்டுமல்ல, ஒரு விளம்பர விளையாட்டு கூட நடத்திட்டு வராங்க. கொஞ்சம் நியாபகம் இருந்தா நீங்களும் இந்த விளையாட்டில் ஒரு கலக்கு கலக்கலாம். நிறைய பதிவுகள் ஆங்கிலத்திலும் இருக்கு, அதனால் என்ன நம் ஆர்வம் தான் முக்யம் இல்லையா?

விளம்பரங்கள் மக்கள் மனதை எப்படியெல்லாம் பாதிக்குது?னு லக்கி சொல்லி இருக்காரு பாருங்க.


டாக்குமெண்ட்ரி என்றாலே நம்ம ஆட்கள் தலை தெறிக்க ஓடுவாங்க. ஏன்னா அது ஒரு வரண்ட சப்ஜக்ட்டா தான் இருக்கும்னு நமக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனா நம்ம k4கார்த்திக் தான் பார்த்த ஒரு டாக்குமெண்டரி பத்தி இங்க சொல்லி இருக்கார் பாருங்க.

கும்தலக்கடி கும்மாவா? பிபிசினா சும்மாவா?

கொஞ்சம் கற்பனை வளம், மக்கள் மனதை பல்ஸ் புடிச்சு பாக்கற திறன் இருந்தா இந்த துறைய ரொம்பவே எஞ்சாய் பண்ணாலாம். நாம வேலை செய்யறோம் என்ற உணர்வே ஏற்படாது.

இவ்ளோ பேசறீயே அம்பி? நீ என்னத்த கிழிக்கற?னு நீங்க கேக்கறது என் காதுல விழுது. என்ன செய்யறது,


"ஆசை இருக்கு தாசில் பண்ண!
அதிருஷ்டம் இருக்கு பதிவு எழுத!"

(நைசா சைடு கேப்பில் என் பதிவுகளை சுட்டி இருக்கேன், சீனா சார் கண்டுகாதீங்க, ஏன்னா இது விளம்பர பதிவு. ஹிஹி).

அடுத்த பதிவு நம்ம எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்னை பத்தியது தான். என்னனு யோசிச்சுட்டே இருங்க. சரியா?

வலைசரத்துக்கு வந்த சோதனை!


கீதா பாட்டி, ஷைலஜா அக்கானு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்து தொகுத்து விட்டு போயிருகாங்க. நாம் ஏதோ ஓரமா உக்காந்து ஒப்பேத்திட்டு இருந்தோம். திடீர்னு முத்து லட்சுமி அக்காவிடமிருந்து வலைசரத்துக்கு திருஷ்டி கழிக்கறோம். உங்க சவுகரியம் எப்படி?னு மடல். என்னத்த சொல்ல? விதி வலியது.

இந்த ஜிலேபி தேசத்துக்கு (கன்னட எழுத்துக்கள் எனக்கு அப்படி தான் தெரியுது) வந்தபுறம், ஆபிஸ்லயும், ரூம்லயும், தமிழ்ல பேசவே அதிகம் வாய்பில்லாம போச்சு. உடனே உலக தமிழ் மாநாடு நடத்தவோ(கணக்கு வேற காட்டனுமே), கடைசங்கம் வைத்து தமிழ் வளர்க்கவோ என்கிட்ட டப்பு இல்லாததால், கூகிள் ஓசில பிளாக் தறாங்கனு பிகருக்கு வடை அளித்த வள்ளல் டுபுக்கு பதிவை யதேச்சையாக பாத்து (ஆமா! மூணு வருஷமா கடை நடத்தறேனு அவரு சொல்லவேயில்லை என்கிட்ட) நானும் கி.பி 2006 பிப்ரவரி 18, சுக்ல பட்சத்துல ஒரு கடைய தொறந்தாச்சு.


நான் பதிந்ததெல்லாம் சொந்த அனுபவங்கள், நிகழ்வுகள், பயணங்கள்.

நேர் நேர் தேமா! நிரை நேர் புளிமா!னு கவிதை எல்லாம் எழுதனும்னு தான் ஆசை, ஹிஹி, இன்னும் வார்த்தை தான் அருவியா கொட்ட மாட்டேங்குது.
சாதனைனு சொல்லிக்கற மாதிரி ஒன்னும் எழுதிடலை. பதிவு எழுதினதுக்கு பதிவுலகில் இருந்து பின்னூட்டத்தோட ஒரே ஒரு தங்கமணியும் கிடச்சாங்க.

உன் பதிவுகளை படிச்சுமா அந்த பொண்ணு உன்னை நம்பிச்சு?னு எனக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான். அதோட பல நல்ல உள்ளங்களின் நட்பு கிடைச்சது. இதுல பலபேரை இன்னும் நான் பார்த்ததே இல்லை. ஒரு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் ரேஞ்சுக்கு(கொஞ்சம் ஓவரா தான் போறேனோ?) நட்பு வட்டங்கள் பெருகி உள்ளது. 


வரும் நாட்களில் ஏற்கனவே வலை சர ஆசிரியர்கள் தொகுத்தது போக ஏதாவது மிச்சம் சொச்சம் இருந்துச்சுனா (எங்க இருக்கு?) அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறேன். ரீப்பிட்டேய் ஆச்சுனா அது என் வாசிப்பு வட்டம் மிக சிறியது என நீங்களே முடிவு செஞ்சு மன்னிச்சு விட்ருங்க.

நாளைக்கு எல்லோருக்கும் மிகவும் பிடிச்ச, ருசிகரமான விஷயத்தோட வரேன். என்ன சரியா?

Sunday, May 25, 2008

செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருத்தல் !

கடந்த ஒரு வார காலமாக, வலைச்சரத்தின் ஆசிரியராகப் பணியாற்றிய அருமை நண்பர் சதங்கா, புதுமையாகவும் பயனுள்ளதாகவும், இதுவரை பலருக்கு அறிமுகம் ஆகாத பதிவுகளையும் தேடிப் பார்வைக்குத் தந்தமை பாராட்டுக்குரியது. . தினம் ஒரு பதிவெனத் திட்டமிட்டு காலையில் குறித்த நேரத்தில் பதிவிட்ட கால ஒழுங்கு மிகவும் பாராட்டத் தக்கது.

தலைப்புகளே கவிதையாய் இருப்பது புதுமை அல்லவா !
பின்னுவது கவிதை
அளப்பது கதை
மணப்பது சுவை
கட்டுவது கதம்பம்
சுற்றுவது பயணம்
விடுப்பது நன்றி : அருமையான அமைப்பல்லவா !

உழைப்பிற்கும் முழு மன ஈடுபாட்டிற்கும் மிக்க நன்றி - நல்வாழ்த்துகள்
--------------------------------------------------------------------------------------------

அடுத்து, மே 26 - திங்கட் கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு அருமை நண்பர் அம்பி வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். அவர் பெங்களூரில் வசிக்கிறார். தான் மகிழ்ந்தும், பிறரை மகிழ்விக்கவும் விரும்புகிறார். அம்மாஞ்சி என்னும் வலைப்பூவிலும் பிளாக் யூனியன் என்னும் குழும வலைப்பூவிலும் எழுதி வருகிறார். பொதுவாக, சுமையில்லாது சுவைக்கக் கூடிய பகுதிகளாக, களிப்புடன் தருகிறார்.
அவரை வலைச்சரத்தின் சார்பிலும், பொறுப்பாசிரியர் என்ற முறையிலும் வருக வருக என வரவேற்கிறேன். நல்வாழ்த்துகள்

Cheena ... (சீனா)




Saturday, May 24, 2008

விடுப்பது நன்றி !

வலைச்சரத்தில் எனது எண்ணங்களுக்கு மதிப்பளித்து பதிவு இட அழைப்பு விடுத்த சீனா ஐயாவிற்கும், வலைச்சரக் குழுவினருக்கும் முதற்கண் நன்றி.

ஒரு வார காலம் தொடர்ந்து வாசித்து இன்புற்ற உள்ளங்களுக்கும், தவறாது அனைத்து பதிவுகளுக்கும் வந்து உற்சாகப்படுத்திய சீனா ஐயா, மற்றும்அநேக பதிவுகளுக்கு வந்து ஊக்கமளித்த நல்உள்ளங்கள் நாகு, செல்வி மேடம், ஜீவா வெங்கட்ராமன், அம்பி, கவிநயா, நியூபீ, சின்ன அம்மிணி, சாம் தாத்தா, துளசி டீச்சர், பித்தன், திகழ்மிளிர், முரளி ராமச்சந்திரன் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

வலைச்சரம் வாயிலாக, இந்தப் பதிவுகள் மூலம் நிறைய வாசிக்க கற்று கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பதிவிற்கும் தேடுதல் வேட்டையில் இறங்கி, ஓரளவுக்கு ! வலைச்சரத்தின் விதிகளுக்கேற்ப பதிவர்களை / பதிவுகளை சுட்டு (படித்து), தலைப்புக்களுக்கேற்ப பொருத்தி தந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

'கற்றது கைமண்ணளவு' என்பது ஒரு தெய்வீக வாக்கு என்று தான் சொல்லணும். நிறைய வாழ்வில் கற்க இருந்தாலும், நான் சுட்டிக் காட்டிய பதிவுகள் ஒரு சிலவே !!! ஔவையின் அனைத்து படைப்புக்களும், எளிமையாய், இனிமையாய் இருப்பது நம் அனைவரையும் கவர்ந்த ஒன்று.

"நூற்றுபத் தாயிரம் பொன்பெரினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் -- மாற்றலரைப்

பொன்ற பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா

என்றும் கிழியாதென் பாட்டு !"


எனும் ஔவையின் வெண்பாவை நம் வலைப்பதிவர்களின் பதிவுகளுக்கு சமர்ப்பித்து, அடுத்து வ‌ரும் ஆசிரிய‌ருக்கு வ‌ழி விட்டு, அவ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ளை வாசிக்க‌ காத்திருக்கும் ...

என்றும் அன்புட‌ன்,
ச‌த‌ங்கா.

சுற்றுவது பயணம் !

ம‌னித‌ வாழ்வில் அனுதினம் தொடர்வது ப‌யண‌ம் தான் இல்லையா ? காலையில் வீட்டில் இருந்து ஒரு தேநீர் க‌டைக்குப் சென்று வ‌ந்தால் கூட‌ ப‌ய‌ண‌ம் மாதிரி தான். இதைச் சொல்வ‌த‌ற்கு கார‌ணம், தேநீர் க‌டையில் ஒரு இர‌ண்டு பேரைப் பார்த்து பேசுவோம், 'தின‌ச‌ரி பேப்ப‌ர்' அல‌சுவோம். இருப்ப‌து கொஞ்ச‌ நேர‌ம் தான் என்றாலும் அங்கு கிடைக்கும் அனுப‌வ‌ங்கள் அலாதியானது !

ஒரு தேநீர் க‌டையிலேயே உலகை அறிய முடிகிறதென்றால், ஊரெல்லாம் சுற்றி வ‌ந்தால் எவ்வ‌ளவு அனுப‌வ‌ம் கிடைக்கும். எப்பேர்ப்பட்ட 'அனுபவம்' அது என்பது இனி வ‌ரும் க‌ட்டுரைக‌ளில் க‌ண்கூடாக‌க் காணலாம். பயணம் பற்றிய கட்டுரைகளாதலால் சில அருமையான பழைய பதிவுகளும் சேர்த்திருக்கிறேன்.

ப‌ய‌ண‌த்திற்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா, புற‌ப்ப‌ட‌லாமா ....



நார்வே மற்றும் ஆர்டிக் பயணம் - பரணீ

பழைய பதிவு தான் என்றாலும், அற்புதமான படங்களுடன் பயணத்தை விளக்கியிருக்கிறார். பரணீ கைதேர்ந்த புகைப்படக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயணக் கட்டுரையிலிருந்து சில வரிகள் ...

இரண்டு புறமும் உள்ள செங்குத்தான மலைகளில் பனி மூடிய சிகரங்கள், பசும் புல் போர்த்திய அழகு கொஞ்சும் குன்றுகள், மலையில் இருக்கும் பனி உருகி சலசலவென ஓடும் பல நூறு எழில் கொஞ்சும் சிறு சிறு அருவிகள் அப்படுன்னு ஒரே அமர்க்களமா இருக்கும். அழகுன்னா அப்படி ஒரு அழகு. வார்த்தைகளில் விவரிக்கமுடியாத ஒரு ஒரு அழகு....



டெல்லி பயணம் - சில கோர்வையற்ற குறிப்புகள் + படங்கள் - விக்கி

தில்லியின் சாலைகளில் நாமே நடந்து போவது போல இருக்கிறது. நன்றாக ஆங்காங்கே நையாண்டியாக விவரித்திருப்பதும் அருமை. படங்களும் கொடுத்திருக்கிறார் விக்கி.

பதிவிலிருந்து ஒரு சில வரிகள் ...

* நாட்டின் தலைநகரமாயிருந்தாலும் டில்லி இன்னும் முழுமையான நகரத்து தன்மையை அடைந்து விடவில்லை. இன்னும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இருக்கிறது. ஆங்காங்கே நகர்ப்பகுதிகளில் இருக்கும் திறந்தவெளி புல் தரைகளில் மதியம் 12 மணிக்கு கூட மக்கள் கூட்டமாய் அமர்ந்திருக்கிறார்கள். நிறைய புறாக்கள் உயிறோடு பறக்க முடிகிறது...



மான்செஸ்டர் பயணம் - செல்வராஜ்

செல்வராஜ் அவர்களின் மான்செஸ்டர் பயணம். நிறைய குறிப்புக்கள் கொண்ட அருமையான ஒரு பயணக் கட்டுரை. நாமே சென்று வந்தது போன்ற ஒரு உணர்வு பதிவை படிக்கையில் ஏற்படுகிறது.

கட்டுரையிலிருந்து சில வரிகள் ...

ஊர் முக்கியப் பகுதிகளை இரண்டு தெருக்களில் அடக்கிவிடலாம் போலிருந்தது. ஞாயிறு என்பதால் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. செந்நிறத்தில் ஆளுயர அஞ்சல் பெட்டிகள் இன்னும் சாலையோரத்தில் நிற்கின்றன. மூடியிருந்த கதவில் எழுதியிருந்தது பார்த்ததில், எதிரிலேயே இருந்த அஞ்சல் அலுவலகத்தில் டாலரைப் பவுண்டாக்கிக் கொள்ள முடியும் போலிருக்கிறது....



எனது இந்திய பயணம் - சென்னை ஒரு பார்வை - கிரி

சென்னையை ஒரு சுற்று சுற்றி வந்த அனுபவத்தைத் தருகிறார் கிரி. சாலைகளாகட்டும், விளம்பர அட்டைகளாகட்டும், உணவகங்களாகட்டும், பத்து வருடம் முன்னால் இருந்த சென்னையை நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை இக்கட்டுரையை வாசிக்கையில். அனைத்துமே வியப்பாக இருக்கிறது.

கட்டுரையிலிருந்து ஒரு சில வரிகள் ...

சென்னையில் உள்ள நண்பர்களை சந்தித்து அவர்களுடன் ரெசிடன்சி உணவகம் சென்றால் இடம் இல்லை என்று கூறி விட்டார்கள், சரி இன்னொரு ரெசிடன்சி (Globus அருகே) சென்றால் ரூப் கார்டன் செல்லுங்கள் அங்கே தான் இடம் இருக்கும் இங்கே கீழே இடம் இல்லை என்றார்கள், அங்கே சென்று அமர்ந்த பிறகு அந்த இடமும் நிரம்பி விட்டது. பிறகு நண்பர்களிடம் கேட்ட போது வார நாட்களில் அனைவரும் இது மாதிரி உணவகம் வந்து தான் சாப்பிடுகிறார்கள் வீட்டில் செய்வதே இல்லை என்றார்கள். சென்னை ரொம்ப மாறி விட்டது, வந்து இருந்ததில் பாதி பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான்...



மங்களூருக்கு ஒரு ரயில் பயணம் - கீர்த்தி

அவ்யுக்தா என்ற தனது தளத்தில் கவிதை, கதை, கட்டுரை, படங்கள் எனத் தீட்டி அசத்தி வருகிறார் கீர்த்தி. இந்தப் பதிவில் காட்சிகள் மட்டுமே இருந்தாலும், அழகான ஓவியங்கள் போல் காவியங்கள் பாடுகின்றன அத்தனையும்.

இப்பதிவைப் பற்றி சில வரிகள்.

மாலைச் சூரியனும், பறக்கும் பருந்தும், ரயில் ஜன்னலும், உயர் கோபுரமும் எல்லாவற்றிற்க்கும் மேலாய் பச்சை பசுமைகளும் நம் கண்களை குளிர்விக்கும் என்பது நிச்சயம்.



பாரீஸ் பயணம்

பயணம் என்றால் பாரீஸ் இல்லாமலா ?!! ஆனால் தேடலில் ஒன்றும் சரியாக அகப்படவில்லை. புகைப்படங்கள் மட்டும் கொண்டொரு பழைய பதிவு இது. 'டவின்சி கோட்' புகழ் 'லுவுர்' (உச்சரிப்பு சரியா எனத் தெரியவில்லை) மியூசியம், ஈஃபிள் டவர், மற்றும் பல அருமையான புகைப்படங்கள் கொண்ட சுரேஷ் பாபு அவர்களின் பதிவு.



ப‌ய‌ண‌ங்கள் இனிதாய் இருந்திருக்கும் என‌ ந‌ம்புகிறேன். நல்லா ஊரு சுத்திட்டு வாங்க. விடை பெறும் நேரம் வந்தாச்சு, அடுத்து நன்றி நவில்தலில் சந்திப்போம்.

Friday, May 23, 2008

கட்டுவது கதம்பம் !

கதம்பம் பார்ப்பதற்கே அழகாக இருக்கும் பல பூக்கள், இலைகள் நிறைந்த ஒரு கட்டு. அப்படி ஒரு கதம்பம் கட்ட நினைத்து, மொழி, ஆன்மிகம், நகைச்சுவை, தொழில்நுட்பம் என்று எனக்குப் பிடித்த, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நோக்கில் கட்டிய கதம்பம் ...



தேவாரம் பற்றி ஃப்ளாஷ்பேக் பதிவு பதிந்திருக்கிறார் கோகுலன் அவர்கள். சில இடங்கள் பதிவிலும், பின்னூட்டங்களிலும் வாசிக்கும் போது ஒரு நொடியாவது மனம் நெகிழ்வது நிச்சயம். கொஞ்சம் டச்சிங்கான பதிவு.

பதிவிலிருந்து ஒரு சில வரிகள் ...

ஒரு இராணுவம் போரிட்டபடியே பின்வாங்குவதைப்போல நாமும் பண்பாடு கலாசாரம் என்று சொல்லிச் சொல்லியே அதிலிருந்து விலகிக்கொண்டு வருகிறோம்। அல்லது வரவைக்கப்படுகிறோம்। தற்போது நான் வேட்டி கட்டியே பலவருடங்கள் ஆகிவிட்டன। பழைய பாடமாக்கிய தேவாரங்கள் சிலதை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன்। ஒன்றிரண்டு வரிகளின் பின்னர் தடுமாறுகிறது। குனித்த புருவமும்.... ஆலந்தானுகந்தமுது செய்தானை..., நிலைபெறுமாறெண்ணுதியே... என்று சில ஞாபகம் இருந்தாலும் முழுமையாக நினைவில் இல்லை। என்னபுண்ணியம் செய்தனை நெஞ்சமே....



ஜி.ரா. என்ற ராகவன் நன்கு அறிமுகமானவர் தான். இவரது இத்தளம் பேருக்கேற்ற இனியதாக இருக்க, கதம்பத்தில் கோர்த்தாச்சு ! திருக்குற்றாலக் குறவஞ்சி நல்ல சந்தத்தோடு அமைந்தஅருமையான ஒரு பாடல் களஞ்சியம். அதில் வரும் ஒரு முருகன் பாடலை, எண்களோடு விவரித்து அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஜி.ரா.

பதிவிலிருந்து ஒரு சில வரிகள் ...

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்....



யோசிங்க என்று சொல்லும் யோசிப்பவர். இவருடைய இந்தப் பதிவு உண்மையிலேயே யோசிக்க வைக்கிறது தான். பென்சிலில் வரைந்தது போல இருக்கே என்று பார்த்தால் அத்தனையும் எழுத்துக்கள். அதுவும் அந்த அந்தப் பொருட்களின் பெயர்களில்.

பதிவிலிருந்து ஒரு படம் :




சாம் தாத்தா. அனைவரும் அறிந்த பெயர் தான். சமீப காலமா நிறைய மொக்கைகள் பதிந்து வருகிறார். நன்றாக ரசிக்கும்படியும் இருக்கிறது பதிவுகள். இந்த வயதிலும் நானும் அவர் போல சந்தோசமாக இருக்கணுமே என்று நம்மை ஏங்க வைப்பவர்.

சமீபத்திய அவருடைய மொக்கை பதிவிலிருந்து பாதி வரிகள் ...

பல் டாக்டருங்க சொல்றபடி பல்லை சுத்தமாத் தேய்ச்சு விளக்குங்க.
நானும் அப்பிடித்தான் செய்வேன்.
கூடவே படுக்கப் போறதுக்கு முன்னாடி.....



கீழ்வானம் எனும் தளத்தில் காணக்கிடைத்த பதிவு. வரலாறு சில நேரங்களில் பல உண்மைகளை நமக்கு விட்டுச் செல்லும். அப்படி நம் மண்ணை ஆண்ட சில மன்னர்களின் வரலாறு படித்திட இனிமையாக இருக்கும். இக்கட்டுரையில் திருமலை நாயக்கர் வரலாறு பற்றி சொல்கிறார் வினு.

கட்டுரையிலிருந்து ஒரு சில வரிகள் :

அதன் பின் நாயக்க வம்சம் மதுரையில் தொடர்ந்து அரசாண்டது. அதில் குறிப்பிடத்தக்க இருவர் திருமலை நாயக்கரும் , மங்கம்மாளும். கிட்டத்தட்ட தஞ்சை தவிர உள்ள தமிழகத்தை முழுக்க ஆண்ட மன்னர். மதுரையில் உள்ள நாயக்கர் மகால் அவரது பெயரை இன்றும் சொல்லும் ஒரு நினைவுச்சின்னம். நிலையான போரில்லாத ஒரு நீண்டகால அரசை மக்களுக்கு அளித்தார் திருமலை நாயக்கர். பொதுவாக அமைதி நிலவினாலே செல்வம் கொழிக்க ஆரம்பிக்கும் என்பதே பழைய இந்தியாவின் நிலைமையாகும்....



தமிழறிஞர் நெல்லைக் கண்ணன் அவர்கள், தமிழைப் பற்றி தன் தளத்தில் நிறைய பதிந்து வருகிறார். சமீபத்தில் கம்பரும் கண்ணதாசனும் எனும் தலைப்பில் அவர் பேசிய உரையை பதிந்திருக்கிறார். அருமையாக இருக்கிறது சொற்பொழிவு. கேட்டு மகிழுங்கள்.

பதிவிலிருந்து சில .... ஓஓஓஒ ... மன்னிக்கனும், அங்க ஒலி நாடா சுட்டி மட்டும் தான் இருக்கு :))



ஒரு தொழில்நுட்பப் பதிவு சத்யாவிடம் இருந்து. உண்மையிலேயே ஒரு உபயோகமான பதிவு. நாம் பார்க்கும் இணைய தளங்களை அப்படியே இறக்கிக் கொள்ளும் வசதி பற்றி எளிமையாக விவரித்திருக்கிறார்.

"மூன்றே படிகள் தான்".... என்று ஆரம்பித்து எளிதாக சொல்லியிருப்பது அருமை.



கதம்பத்தின் வண்ணங்களில், பதிவர்களின் எண்ணங்களை வாசித்து மூழ்கி திளைத்திருங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம் ...

Thursday, May 22, 2008

மணப்பது சுவை !

பதிவென்றால் கவிதையும், கதையும் தானா ? இந்த எண் சாண் வயிறு பத்தி அக்கறையில்லாதவர் எவரேனும் இருக்கத்தான் முடியுமா !!!

நம்மூர் பழங்கதைகள் மாதிரி இங்க சொல்லும் ஒரு கதை. "ஒரு ஊருல ஒரு பெரிய வெவசாயக் குடும்பம் இருந்துச்சாம். தினம் அவங்க வேலை எல்லாம் முடிச்சிட்டுஆண்கள் முதலில் சாப்பிடுவாங்களாம். தினம், தினம் கோழியும், கறியும், வித விதமா அந்த வீட்டுப் பெண்கள் சமைச்சுப் போட்டிருக்கிறார்களாம். இவங்க சத்தம் போடாம சாப்பிட்டு போய்டுவாங்களாம். ஒரு நாள் சாப்பாட்டுக்கு, வைக்கோல் எடுத்து வந்து வச்சிருக்காங்க. அப்ப தான் அந்த வீட்டு ஆண்களுக்கு தோனுச்சாம், ஆஹா எவ்வளவு நல்லா சமைக்கிறாங்க, ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லையே என்று !".

கவிதை படித்து, கதை படித்து களைத்துப் போயிருப்பீர்கள். நம் பதிவர்களின் சமையல் கட்டுகளுக்குள் நுழைந்து ஒரு கட்டு, கட்டலாம் வாங்க. மணக்கும் சில பதிவுகளையும், பதிவர்களையும் சந்திப்போமா, ஸ்வீட்டுல இருந்து ஆரம்பிப்போம் ...



தூயா சமீபத்தில் நிறைய சமையல் பதிவுகள் பதிந்து வருகிறார்கள். இவங்க பக்கத்து வீட்டுக்காரங்க ரெசிபி என்று தந்திருக்கும் இந்த "டயமன்ட் பர்பி" செய்முறை மிக எளிதாக இருக்கிறது .

டிப்ஆஃப் தி பர்பி : * கலவை கொதிக்கும் போது சற்றே தள்ளி நின்று கிளறுங்க.
* இனிப்பு அதிகம் என்பதல் அளவோடு உண்ணவும்.




சமையல் எனும் கலைக்கூடத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலே, வித்தியாசமான பதார்த்தங்களை செய்முறை விளக்கங்களோடு அருமையாக விவரித்திருக்கிறார் சித்ரா அவர்கள். நிலக்கடலை வேக வைத்து / வறுத்து சாப்பிடுவோம். அல்லது எண்ணையாக்கி பயன்படுத்துவோம். இதில முறுக்கு பண்ணலாம் என்கிறார்.

டிப், இல்ல இல்ல ரெசிப்பி ஆஃப் தி முறுக்கு : நிலகடலையை மிக்ஸியில் பவுடர் செய்து, அதனுடன் அரிசி மாவு, எள், மிளகாய்தூள், உளுந்து பொடி, பெருங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொண்டு, எண்ணெயை காய வைத்து சிறிய முறுக்குகளாக பிழிந்து வெந்தபின் எடுக்கவும். செய்வது எளிது.



கீதா அவர்களின் சமையல் அறைக்குப் போய் பார்த்தால் ஏகப்பட்ட ரெசிப்பிக்கள். நாமெல்லாம் கட்லட் கடையில தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். இவங்க கொடுத்திருக்கிற எளிய முறையில் வீட்டுலயும் செய்து பார்க்கலாமே !

டிப் ஆஃப் தி கட்லட் : *காய்கறிக் கலவையை சிறிய உருண்டைகளாக்கி தட்டி(வடைக்கு செய்வது போல் சற்று தடிமனாக) அதனை சோளமாவு கலவையில் புரட்டி பின்னர் பிரட் கிரம்ஸில் புரட்டி தனியாக வைக்கவும்.(மாவு இலகுவாக இருந்தால் புரட்டும்போது உடைந்துகொள்ளும் கவனமாக செய்யவும்)



கமலா அவர்களின் அடுப்பங்கரைப் பக்கம் எட்டிப் பார்த்தால், அருமையான படங்களுடன், தெளிவாக விளக்கியிருக்கிறார். லேட்டஸ்ட்டா பதிந்திருக்கும் "சுண்டைக்காய் பொரிச்ச குழம்பு", படத்தைப் பார்க்கும்போதே பசியைக் கிளறுகிறது !

டிப் ஆஃப் தி குழம்பு : சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.



ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்கள் நிறைய குறிப்புக்கள் தனது சமையல் களத்தில் கொடுத்து வருகிறார். அம்மா சொல்லித் தந்ததெல்லாம் நோட்டில் எழுதி, அதைப் பதிந்து வருவதாகவும் கூறுகிறார். மணக்கும் மோர்க்குழம்பு, எளிதாக அருமையாக விளைக்கியிருக்கிறார்.

டிப் ஆஃப் தி மோர்க்குழம்பு : தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து நிதானமான தீயில் அடுப்பில் சூடாக்கவும். ஒன்றிரண்டு முறை மட்டும் கிளறி விடவும்.



தமிழில் புகைப்படக் கலை பார்க்கிறோம். உம்ஸ்கொம்ஸ் (umskoms, பேரு சூப்பரா இருக்குல?!) தமிழில் சமையல் கலை பற்றி சொல்லுகிறார். இங்கு இந்த ரெசிப்பி ரொம்ப சிம்பிளா இருந்தது. பாயசம் என்றாலே நம்ம ஊருல ஜவ்வரிசி தான் ஞாபகம் வரும். ஒரு மாறுதலுக்காக பாசிப்பருப்பு பாயசம்.

டிப் ஆஃப் தி பாயசம் : பாயசத்தை இறக்கும் முன், நெய்யில் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை,ஏலக்காய்யை மற்றும் துறுவிய தேங்காய் சேர்த்து கலக்கிவிடவும் சூடாக பரிமாறவும்.



இவங்க வலைத்தளத்தில் இன்னும் ஏராளமான ரெசிப்பிக்கள் உள்ளன. அனைத்தையும் வாசிங்க, செஞ்சு பாருங்க.

அடுத்த பதிவில் சந்திப்போம் ...

Wednesday, May 21, 2008

அளப்பது கதை !

வாழ்வில் கவிதை எப்படி ஒரு அங்கமோ, அதே போல கதையும், என்று திடமாக நம்புவர்களில் அடியேனும் ஒருவன்.

பிரியமுடன் பாட்டி சொல்லி நிறைய கதைகள் சிறுவயதில் கேட்டிருப்போம். அம்மாவை, அப்பாவை கதை சொல்லச் சொல்லி நச்சரித்திருப்போம்.

"ஒரு ஊருல, ஒரு ராஜா இருந்தாராம் ..." என்று ஆரம்பிக்கும்போதே, சுத்தி கூட்டமா உட்கார்ந்திருக்கும் பசங்க எல்லாம், இன்னும் கொஞ்சம் கைய, கால இழுத்து கதை சொல்லுபவரின் அருகில் நெருக்கமாகச் சென்று அமர்வோம். ஆரம்பத்திலேயே ஒரு விறுவிறுப்பு இருக்கும் ... அது ஒரு பொற்காலம். இப்ப இந்த மாதிரி யாராவது வீட்டில் கதை சொல்லுகிறார்களா குழந்தைகளுக்கு என்றால், நிறைய புத்தகம் படித்துக் காண்பிக்கிறார்கள். கால மாற்றத்தில் கதை சொல்லலும் கறைகிறது !!!!

குழந்தைகள் கதை என்றில்லை, நம்மைக் கவரும் சில கதைகள் கீழே உங்களுக்காக.



புதிதாய் வலைக்கு வந்து அதற்குள் பல கதைகள் எழுதியிருக்கிறார் வசந்தன். இவரின் கதை எழுதும் ஆர்வம் பின்னூட்டப் பெட்டிகளைப் பார்க்கையில் தெரிகிறது. நீங்களும் வாசித்து மெருகேற்றுங்கள் கதை ஆசிரியரை.

இவரது 'காத்திருக்க நேரமில்லை' என்ற கதையிலிருந்து ...

லதாவின் நச்சரிப்பு பொறுக்கமாட்டாமல்தான் மாணிக்கம் அம்மாவிடம் பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தான். ஆனால் அம்மா எடுத்த எடுப்பிலேயே நிராகரித்தாள். அம்மா எப்பவுமே அப்படித்தான். சுர்ரென்று கோபம் வரும். பிறகு வந்த சுவடே தெரியாமல் போய்விடும். ஏன் நாமளும் அப்படித்தானெ? அன்னைக்கி அம்மா கோபப்பட்டதுலயும் நியாயம் இருந்துதே? அப்பா செத்து முழுசா ரெண்டு மாசம் ஆவறதுக்குள்ளதான நிலத்த தாங்கன்னு கேட்டேன்? ...



சின்னக்குட்டி வீடியோவிற்கு வலையுலகில் பேர் பெற்றவர் ஆச்சே எனப் பார்த்தால். ஒரு அருமையான கதையாசிரியரும் கூட. நல்ல எழுத்து நடை, வட்டார வழக்கில் இவர் கதாபாத்திரங்கள் உலவுவது, அந்தக் காட்சியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. நிறைய அரிய தமிழ் சொற்கள் நிறைந்த கதையிது. மற்ற கதைகளையும் வாசியுங்கள்.

'அவள் ஒரு மாதிரி' எனும் கதையிலிருந்து ...

எந்த வித களங்கமில்லாமில் இயல்பாக சிரிப்பதை கதைப்பதை இவர்கள் இவளை ஒரு மாதிரி என்று கூறுவதை கேட்டு சிரித்து அலட்சிய படுத்தியே இருந்தாள் இது நாள் வரையும் ...



பல தகவல்களை தன் தளத்தில் சொல்லிவரும் சின்ன அம்மிணி அவர்களின் இந்த கதை ஒரு நெருடலை, வாழ்வின் எதார்த்தத்தை நம்முள் ஏற்படுத்துவது நிச்சயம்.

நல்ல தாயார் எனும் கதையிலிருந்து ...

'நான் கல்லூரியில் படிச்சப்போ, என் அம்மாவுக்கு நான் நல்லாப்படிக்கறதில்லைன்னு கோவம். ஒருநாள் ஏதோ சண்டையில் அம்மாவைக் கெட்ட வார்த்தைல ரொம்ப திட்டிட்டு ஓடிப்போயிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு திரும்ப வந்தேன். வேற எங்க போறது. ஊர்ல எல்லாரும் சொல்லித்திட்டின "அந்த" வார்த்தைகள் ...



பன்முகக் கலைஞர் கவிநயா. விரல்கள் அபிநயிக்க, கால்கள் கோலமிடும். மனம் அபிநயிக்க, விரல்கள் தட்டச்சிடும். சமீபத்தில் கதைகள் நிறைய எழுதி வருகிறார். இந்தக் கதை, தன் குழந்தையின் பாசம் பற்றி ஒரு தாயின் மனசு குறித்தது ...

அம்மாவின் மனசு எனும் கதையிலிருந்து ...

“என் பிள்ளையை என்னிடமே வர விடாம என்னடி சொக்குப் பொடி போட்டு வச்சிருக்கே?” என்று பாதி விளையாட்டும் பாதி உண்மையுமாகக் கேட்பாள் ...



வலைச்சரத்துக்காக (உங்களுக்காக) சமீபத்திய தேடுதல் வேட்டையில் சிக்கிய மான், மன்னிக்கவும் சிங்கம் என்று சொல்லலாம் பதிவர் சரவ் அவர்களை. அதுவும் 'சிறுகதை முயற்சிகள்' என இவர் சொல்லிவருவது, நிஜம் கலந்த இயல்பு வாழ்வை. அற்புதம்.

அணில்கள் கேள்விப்பட்டிருப்போம், அதென்ன செந்தில்கள் ? அந்தக் கதையிலிருந்து சில வரிகள் ...

இப்டி வழி நெடூக பல செந்தில்களோட சேர்ந்து பயணம் செஞ்சிருந்தாலும் இவங்களுக்குள்ள பொதுவான விஷயம் அதிகம் இருந்ததில்லை. ஒருத்தன் சாந்து பொட்டு நிறம், இன்னொருத்தன் சந்தனப் பொட்டு நிறம், மற்றொருத்தன் மை பொட்டு நிறம். எடுப்பான பல்லு, இந்திராகாந்தி மூக்கு, சப்பை மூக்கு மேலையும் எப்பவும் கோபம், கப்பைக் காலு, நெட்டைக் கொக்கு இப்டி ஒவ்வொரு செந்திலும் ஒவ்வொரு மாதிரி.

ஆனா, நான் இப்போ சொல்லப்போற சில செந்தில்களுக்குள்ள ஒரு பொதுவான விஷயம் இருக்கு ...



'தங்கவேல் மாணிக்கத் தேவர்', அன்பு மகனுக்கு என்று நாட்டு நடப்புகளைப் பதிந்து வருகிறார். அவரது வலைப்பூவை மேய்ந்த போது, இந்த ஒரு கதை கண்ணில் பட்டது, ரொம்ப சின்னக் கதை. ஆனா ஒரு நெருடல் இதப் படிக்கும் போது ஏற்படத் தான் செய்கிறது.

வளர்ப்பு எனும் கதையிலிருந்து ...

” அப்புறம் ஏம்மா குளிக்காம அழுக்கா சட்டை போட்டுட்டு இருக்காரு ?
அவரு அம்மா மோசம் இல்லைம்மா ? “
” அப்படி இல்லைப்பா ? ”
” பாவம்மா அந்த தாத்தா, ரோட்டை கடக்க முடியாமல் கஷ்டப்படுறாரு. நான் வேனா கையை பிடித்து இந்தப் பக்கம் அழைச்சுட்டு வரட்டுமாம்மா ? “ ...



ப்ரதீப், நல்ல நடைக்குச் சொந்தக்காரர். நையாண்டி கலந்து, காட்சிகள் விவரிக்கும் விதம், நம்மை அந்த இடத்தில் கொண்டு நிறுத்துவது நிச்சயம்.

தாம்பத்யம் எனும் இவரது கதையிலிருந்து ...

சாந்திக்கு இரண்டு வேலை தெரியும். ஒன்று தைப்பது; இன்னொன்று அழுவது! ஓவியத்தை வரைந்து அதற்குக் கீழ் பெயரை வரைவது போல் சாந்தியும் ஜாக்கட்டை தைத்து தன் பெயரை அதில் வரைந்திருந்தால், மதுரையில் அந்த ஏரியாவில் சந்துக்குச் சந்து இருக்கும் பெண்களின் மேல் அவள் பெயரை பார்க்கலாம்! அவ்வளவு தைத்திருக்கிறாள்! சாதாரண ஜாக்கெட் 30 ரூபாய். பஃப் கை 35! தொட்டி கழுத்து வைத்து பாசி வைக்க 40. ஜன்னல், பால்கனி என்று விதவிதமான டிசைன்கள் ...



டிஸ்கி: கதை சொல்லிகளின் கதை என்று குமுதத்திலோ, ஆ.வி.யிலோ வெகு நாட்கள் முன்னர் வாசித்த நினைவு. கதை சொல்லல் ஒரு தொழிலாகவும் இருந்திருக்கிறது / இருக்கிறது.

நேரம் இருப்பின் இவர்கள் அனைவரின் மற்ற கதைகளையும் வாசித்து மகிழுங்கள்.

இயன்றவரை வாசித்து உங்கள் கருத்துக்களை கதையாசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நான்அடுத்த பதிவ பத்தி யோசிக்கறேன் .....

Tuesday, May 20, 2008

பின்னுவது கவிதை !

இதுவரை வந்த அநேக வலைச்சர ஆசிரியர்களும், கவிதை பற்றி குறிப்பிடாமல் சென்றதில்லை. கவிதைகள் இல்லாமல் ஒரு உலகை சிந்தித்தும் பார்க்க இயலவில்லை. அதனால் முதலில் கவிதை பின்னுவோம்.

அசத்தும் சில வரிகளில் நம்மைக் திளைக்க வைக்க வருகிறார்கள் (இளம்) கவிஞர்கள் சிலர்.



சில மாதங்கள் முன்பு, மகேஷ் எனும் இவ்விளம் கவிஞரின் வலைப்பூ சுட்டி அனுப்பி, வாசிக்குமாறு கூறியிருந்தார் நண்பர் நாகு. "சுருக்கல்" எனும் தலைப்பில் 'மகேஷ்' எழுதியிருக்கும் முப்பதைத் தொடும் கவிதைகள் அனைத்தும் அருமை. உதாரணத்திற்கு :


அடுத்து, அம்மாவின் கரிசனம் என்று


என ஆரம்பித்து, அடுத்த சில வரிகளிலேயே அற்புதமாய் முடித்திருக்கிறார், இப்படி


இவரது சுருக்கல்களைப் படித்து சில சுட்டிகள் இங்கு தரலாம் என்று பார்த்தால், எல்லாமே சுருக், சுருக் ரகம் தான்.




எனக் கலக்குகிறார் கவிஞர் "ப்ரியன்". கவிதைகள் பல இயற்றிய இவரின் வலைப்பூவில், 'காதல்' லேபிள் எண்ணிக்கைகள் 133 !!!! பல கவிதைகளில், அசாத்திய வீச்சு பொதிந்திருக்கிறது இவரின் வரிகளில். உதாரணத்திற்கு :


ஒரு கதாநாயகனாய் நம்மை உணரச் செய்யும் இவ்வரிகள் என்பது உண்மை. இவரின் மற்ற கவிதைகளையும் பொருமையாக வாசித்து அனுபவியுங்கள்.




என வியக்க வைக்கும் கவிஞர் / எழுத்தாளர் பாஷா அவர்கள்.


நிறைய பெண்கள் இம்மனவோட்டத்தில் தான் இருக்கிறார்கள் என எண்ணுகிறேன் (தமிழ் சினிமா பார்க்கும் எஃபெக்டா எனத் தெரியவில்லை !). ஒரு எதார்த்தத்தை இவ்வரிகளில் கொண்டுவந்தது வியக்க வைக்கிறது.




எனக் கழுதையையும் மதித்துக் கவி பாடி, மேலும் பல கவிதைகள் இயற்றி வ(ள)ரும் கவிஞர் அத்திவெட்டி ஜோதிபாரதி அவர்கள்.




என அசத்தல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் 'திகழ்மிளிர்'




என்று காதலை வித்தியாசமாகச் சொல்லும் கவிஞர் 'இனியவள் புனிதா'




என்று படிக்கும்போது சற்று ஒரு நொடி சிந்திக்க வைத்தது கவிஞர் இலக்குவணின் வரிகள். அனுபவச் சிந்தனை. இவரது பல கவிதைகள் அர்த்தம் புரிய உட்கார்ந்து யோசிக்கணும். மாடன் ஆர்ட் போல என்று சொல்லலாம்.



அழகே ஆயினும் ஒரு தூரத்தில் இருக்கும் வரை தான் அழகு என்று எழுதியிருக்கிறார் மின்னல், இவரது 'எல்லை' எனும் இரு வரிக் கவிதையில்.




இப்பதிவைப் படிக்கும் தாங்கள் கவிஞராய் இருந்து, "நம்ம பதிவு வரலையே என்று நினைத்தால்", ஒன்று நீங்கள் நன்கு அறியப்பட்டவராக‌ இருக்கலாம். இரண்டாவது, தவறு எனதாக இருக்கலாம். உங்களின் பதிவை கவனிக்கத் தவறியிருக்கலாம். அதற்காக உங்களின் படைப்புத் திறன் ஒரு விதத்திலும் குறைச்சலில்லை.

நேரம் இருப்பின் இவர்கள் அனைவரின் மற்ற கவிதைகளையும் வாசித்து மகிழுங்கள்.

இயன்றவரை வாசித்து உங்கள் கருத்துக்களை கவிஞர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நான்அடுத்த பதிவ பத்தி யோசிக்கறேன் .....

Monday, May 19, 2008

வலையும், வலைச்சரமும், நானும் !

சும்மா பதிவு போட்டுகிட்டு இருந்த என்னையும் மதித்து, ஆசிரியராக ஒருவார காலம் இருக்கிறீர்களா எனக் கேட்ட சீனா ஐயாவின் தைரியத்தை என்னனு சொல்ல, நன்றி பாராட்டுவதைத் தவிர !!! மனம் ஒரு விநாடி மெய்சிலிர்த்தது உண்மையோ உண்மை. முதற்கண் அவர்களுக்கு என் நன்றிகள்.

செல்வி ஷங்கர் மேடம், நல்ல பதிவர்களை அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார்கள். சரியா பதிவுகள் இடமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சீனா அவர்களையும், மேடம் அவர்களையும், அவர்களது உழைப்பிற்காக மனம் திறந்து வாழ்த்துகிறேன்.

'வலைச்சரம்' மூலம் பல ஆசிரியர்கள் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட‌ அந்தப் பணியை இந்த வாரம் நல்ல விதமா செய்யணும் என்று அந்த ஆண்டவனை வேண்டி, நான் படித்த, அதில் பிடித்த, பல பதிவுகளை சரங்களாய் தொகுத்து வழங்குகிறேன். இயன்றவரை புதுமுகங்களை அறிமுகம் செய்கிறேன், வெகு சில இடங்களில் வலைச்சர விதிகளுக்கு உட்படாமல் போய்விடுகிறது. பொறுத்தருள்வீர் !

சுயதம்பட்டம் அடிச்சுக்கலாமாமே !!! முதலிலேயே மைக் கிடைத்த கடைநிலை பேச்சாளரின் மனநிலையில் இருக்கிறேன். அதனால் அனைவரையும் பொறுமையுடன் தொடர்ந்து வாசிக்குமாறு ஆரம்பத்திலேயே கேட்டுக் கொள்கிறேன் :))

வலையுலகில் நுழையும் வரை, தவறாது பண்டிகைகளுக்கு கவிதை எழுதி நண்பர்களுக்கு அனுப்பும் பழக்கம் இருந்தது. முதலில் வாழ்த்து அட்டைகள், பின் மின்-அஞ்சல் எனச் சென்ற ஆண்டு வரை விருப்பத்துடன் செய்த செயல். வலைப் பதிய ஆரம்பித்து, அது நின்று விட்டது. வருடக்கணக்கில் வாழ்த்து அனுப்பும்போது அமைதி காத்த நண்பர் கூட்டம், எங்கேப்பா கவிதைய காணோம் என மௌனம் கலைக்கின்றனர் இப்போது !!!

பதிவுலகில் நம்மில் பலர் இன்னும் ஓரிரு எழுத்துப் பிழைகள் செய்யத் தான் செய்கிறோம். ஆனால் இவ்வியசயத்தில் ஆச்சரியப்பட வைப்பவர் நாகு. சில ஆண்டுகள் வாழ்ந்த சிங்கை வாழ்வு துறந்து ரிச்மண்ட் வாழ்வு ஏற்றபோது, கிடைத்த அற்புத நண்பர் நாகு மற்றும் அவர் குடும்பத்தினர். தாய்மொழி தெலுங்காயினும், தமிழில் இவரை அடித்துக் கொள்ள முடியாது. வலையுலகைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப் படுத்திய நண்பரும் அவரே. எனது ஆக்கங்களுக்கு உடனே (தனி மடல்களில் எழுத்துப் பிழை(கள்)) மறுமொழியிட்டு இன்றும் தவறாது ஊக்கப் படுத்துபவர்களில் நாகு முதல்வர்.

முதலில் பதிய ஆரம்பித்தது ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில். சென்ற ஆண்டு ஒரு நாள், ஒரு நண்பரின் வீட்டில் நாகுவின் அறிமுகம் கிடைத்தது. தமிழில் எழுதுவேன் என்று தான் சொன்னேன், மறுநாளே அழைப்பு அனுப்பி விட்டார் மனுஷன். ஆரம்பத்தில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ஒரு கதை, பின் சில கவிதைகள் என ஆரம்பித்தாலும், இளையராஜா அவர்களின் திருவாசகம் குறித்த பதிவு மறக்க முடியாத ஒன்று. முன்பு வேலை செய்த அலுவலகத்தில் கிடைத்த அனுபவம் அது.

நல்லா பேசறவங்களைப் பார்த்தாலே பொறாமையாக இருக்கும். என் எழுத்துக்கள் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் 'பேச்சு' ... சுத்தம். நானும் என்னவெல்லாமோ பயிற்சி எடுக்கறேன், ஹூம்ம்ம் .... இதை மையப்படுத்தி, 'மொழி' திரைப்படம் பார்க்கும்போது, சிந்தனை றெக்கை கட்டிப் பறக்க எழுதிய கவிதை 'யாரிடம் கற்றோம் ?'

அயல்நாட்டிலிருந்து, விடுமுறைக்கு இந்தியா போகும்போதெல்லாம் சென்னையில் டெண்ட் அடித்து ஷாப்பிங் திருவிழா தான். அதிலும் ஒவ்வொரு முறை செல்லும் போதும், இனி இந்தத் தெருப் பக்கமே வரக்கூடாது என மனம் உறுதி எடுக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் உறுதி குலைக்கப்பட்டு, இத் தெருவில் நிற்போம்.

எதையுமே முறையாகக் கற்றுக் கொண்டதில்லை என்பதற்கு இவ்விரு வெண்பா (என்ற நினைப்பு தான் !!!) பாடல்கள் சாட்சி :) இலக்கண வல்லுநர்கள் தயவு செய்து அடிக்க வராதீர்கள். ஏதோ ஒரு ஆர்வத்துல எழுதிட்டேன், விட்டுருங்க.


போன பனி காலத்தில் வெண்பா (என்ற பெயரில்) பதிவு போட்டதால், இந்த வருடம் ஏதாவது வித்தியாசம் பண்ணலாம் என நினைத்து, அசையாப் பொருள்கள், பெய்யும் பனியை அரிதாரம் பூசுவதாக கற்பனையில் உதிக்கவே, கவிதையாய் பதிவிட்டேன்.

குட்டீஸ் எப்பவுமே குதூகலம் தான். இந்தக் கால மாற்றத்தால் பேரன், பேத்திகள் அயல்நாடுகளில் வாழ, அவர்கள் பக்கத்தில் இல்லையே எனும் பெரியவர்களின் வருத்தம் குறித்த மழலை கவிதை.

கிராமத்தில் பிறந்து, அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் ஆனது நகரத்து ஹாஸ்டல் வாழ்க்கை. விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் உற்சாகம் தழும்பும். நண்பனின் வீடு / வயல் / கிணறு வாழ்வில் மறக்க முடியாத இடங்கள். அதையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் மையப் படுத்தி எழுதிய கதை 'வரப்பு உயர்ந்த வீடு'.

பள்ளி விடுமுறைகளில், மதுரையில பஸ்ஸு புடிச்சு, சிவகங்கை தாண்டி .... (சரி பேரு சஸ்பென்ஸ் போல, ஊரும் சஸ்பென்ஸா இருந்துட்டுப் போகட்டும்.) ஊரு சேருகிற வரை, பஸ் பயணம் முழுதும் ஒரே சிந்தனை மழை தான். பின் சிவகங்கையில் +1, +2 படிக்கையில், கிராமத்தில் இருந்து தினம் பஸ் பயணம். அந்த இரு ஆண்டுகள் என் மனதில் பதிந்த பேருந்து பற்றின காட்சிகளை மையப்படுத்தி எழுதிய கவிதை 'கிராமத்துப் பேருந்துப் பயணம்'.

ஊருல மண்ணின் மைந்தர்களைப் பார்த்தால், அநேகம் பேர் முரட்டு மீசையுடன் இருப்பார்கள். சிறுவயதில் அவர்களைப் பார்த்து பயந்ததுண்டு. இப்போது வியந்து, மீசை கவிதை வடிவில்.

காதல் இல்லாமல் கவிதையா ? காதல் ... பருவத்திற்கே உரிய செயல் அல்லவா. நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லை என்றாலும், ஒவ்வொருவருக்குள்ளும் இந்த உணர்வு இல்லாமல் இருக்க முடியாது.

தோப்பு, கணிதம், சமீபத்தில் எழுதிய கோவில் திருவிழா என எதை விடுப்பது, எதைச் சேர்ப்பது என்று மனம் குழம்பிய நிலையில் தான் புரிகிறது, உங்களை ரொம்ப இம்சிக்கிறோமோ என்று ! "அவ்வளவு தான், கொஞ்சம் பொறுத்துக்கங்க. அடுத்த பதிவுல எல்லாம் மற்றவர்களைப் பற்றி தான்" :))

கிராமங்களில் பார்த்த, கேட்ட, ரசித்த காட்சிகள். பின் மற்ற வசிக்கும் ஊர்களில், நாடுகளில் ரசிக்கும் காட்சிகள் என்று எதிலும் இயல்பான நடைமுறை வாழ்வுகளைப் பதிந்து வருகின்றேன்.

தொடர்ந்து ஒரு ஆண்டு காலமா எழுதுவதற்கு மூல காரணம் யாருனு இவ்வளவு நேரம் சொல்லவில்லை பாருங்கள். சாட்சாத் நீங்கள் தான். உங்கள் ஒவ்வொருவரின் வாசித்தலும், பின்னூட்டங்களும் தான் அடுத்த பதிவை நோக்கி என்னை நகர்த்துகிறது என்றால் அது மிகையல்ல. வருகைக்கும், வாசித்தலுக்கும் மிக்க நன்றி நண்பர்களே. தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Sunday, May 18, 2008

விடை கொடுத்தலும் ...... வரவேற்பும் !!

செல்வி ஷங்கர் ஒரு அவசர அழைப்பின் பெயரில் ஆசிரியராக ஆனவர். தன் கடமையைச் சரிவர செய்ய நேரமில்லையே-இயலவில்லையே என்ற வருத்தத்தின் இடையேயும் அழகாக சிலபதிவுகளைச் செம்மையாகக் கொடுத்திருக்கின்றார். அடுத்து ஒரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பாகச் செய்யலாம் எனக் கூறுகிறார். நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள் செல்வி ஷங்கர்.
--------------------------
அடுத்து இந்த வாரம் 19 - ஆம் நாள் முதல் ஒரு வார காலத்திற்கு ஆசிரியராக அருமை நண்பர் சதங்கா வலைச்சரம் புதுமையாகப் படைக்க வருகிறார். ஆறு வலைப்பூக்களை ஆரம்பிக்க ஆசைப்பட்டு, மூன்று வலைப்பூக்களை ஆரம்பித்து அழகாக கையாள்கிறார். விரைவிலேயே மற்ற மூன்று பூக்களும் மலர நல்வாழ்த்துகள். ஓராண்டு காலமாக இணையத்தில் எழுதி வருகிறார். அமெரிக்க நாட்டில் வாழ்கிறார். கதை கவிதை என கலக்கும் இவர் சமையலிலும் வல்லவர். அருமையான செய்முறைகளை அள்ளித் தருகிறார். சமையல் மட்டுமா - சித்திரம் பேசுதடி - ஓவியக் கலையிலும் வல்லவர். ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம் என்ற குழுவிலும் எழுதி வருகிறார்.

வருக வருக சதங்கா - தருக தருக புதுமைப் படைப்புகளை

நன்றி - நல்வாழ்த்துகள்
cheena (சீனா)

நன்றி ... நன்றி .... நன்றி !!!

வாய்ப்பிற்கு நன்றி கூறும் நேரமிது. கருத்துகளில் மனத்தினை வாழ வைப்பது கவிஞர்களின் இயல்பு. கனவுகளில், கற்பனையில் மனிதனை மகிழ வைப்பது படைப்பாளியின் இயல்பு. நிகழ்வுகளை, செய்திகளை நெருக்கமாய்த் தந்து மகிழ்வூட்டுவது பதிவர்களின் பாங்கு. பன்முகச் சிந்தனையோடும், பல்வேறுபட்ட அறிவுத் திறனோடும், பதிவுகளைத் திறந்த உடன் கொட்டித் தீர்க்கின்ற கருத்துகள் ஏராளம் ஏராளம். என்னால் சிலவற்றைத்தான் சுவைக்க முடிந்தது. குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள் மிக நாடி, மிக்க கொளல் என்ற வள்ளுவன் தான் இப்பொழுதும் என் சிந்தனையில் நிற்கின்றான்.

நன்றி ! வணக்கம் !
வாழ்க தமிழ் !

பெண் பதிவர்கள்

வலைப்பூக்களில் வலம் வந்த போது, மனத்தில் வரிசையாய் பதிந்து சென்ற பதிவர்கள் பலர். கண்ணில் படுவதற்கும்-பார்ப்பதற்கும் வேறுபாடு இருப்பது போல் எண்ணத்திலும் சில பதிவுகள் எட்டிப் பார்த்தன. "பெண்" பதிவர்கள் என்று பொதுவாக இல்லாமல் சிறப்புடன் அமைப்பதற்கு சிந்தனை தூண்டியது. எத்தனை காலங்கள் மாறினும் ஏற்ற இறக்கங்கள் ஏணிப்படியாய் இருப்பினும் பொதுமை என்று கொள்வதற்கு இன்னும் புதுமை பிறக்க வில்லை. அந்தப் புதுமையின் எட்டிப்பார்ப்புத் தான் இந்தப் பெண் பதிவர்கள். பாரதி, பாரதி தாசன் என்பவர்கள் அவ்வையாரையும் கவிஞராய் புலவராய்த் தான் காவியத்தில் கண்டனர். ஆனால் இன்னும் பெண் என்ற அடைமொழி கொடுத்தே பெண்மையைப் போற்றுகின்ற சூழலில் இருக்கின்றோம். வலைச்சரத்தின் பதிவர்கள் அனைவருமே பார்வையில் பதிந்து சிறந்தவர்களே ! அந்தச் சிந்தனையின் பூக்கள் சில இங்கே :



பாசமலர் : இவர் மதுரையில் பூத்த மணக்கும் மல்லி. ஆங்கில இலக்கியத்தை ஆழமாய்க் கற்று தமிழிலக்கியத்தின் இனிமையில் மயங்கியவர். ஏறத்தாழ 42 பதிவுகள் ஆறு மாத காலத்தில் தந்துள்ளார். அவற்றில் 13 பதிவுகள் கவிதைகள். எஞ்சியவை கதை கட்டுரை. இவர் வலைச்சர ஆசிரியராக இருந்த போது தந்திருக்கின்ற தலைப்புகளே பூக்களின் புது மாலையாய் உள்ளன. இலக்கியம், தகவல்கள், வளைகுடா, புகைப்படம், ஓவியம், நிகழ்வுகள் என்று முல்லை தொடங்கி ரோஜா வரைக்கும் மலர்களையே மகுடங்களாய் சூட்டி இருக்கிறார். அப்பதிவுகள் படித்துப் பயனுற வேண்டியவை. அவற்றுக்கு ஒவ்வொரு நாளும் இவர் கொடுத்திருக்கக்கூடிய எண்ணத் தலைப்பும் புதுமையாய் உள்ளது.



சுவைப்பதற்கு ஒரு கவிதை.



நிறைமதி காலம் : இக்கவிதை உணர்த்தும் கருத்து இன்றும் உணரப் பட வேண்டிய ஒன்று. ஆண் பெண் என்று வேறு பாடு காட்டுவது இரு முறை வடிகட்டிய தவறென்று சொல்லும் விதம் சுவையானது.



கவிதைகள் தவிர, கல்வி, அரசியல், சிந்தனை, சமுதாயம் என்ற தலைப்புகளில் கட்டுரையும் தந்துள்ளார். இவரது கதைத் தொகுப்பினில் யார்பித்தன் நடைமுறை இயல்பினில் உள்ளது. இரட்டைச் சிறுகதை ஒரே தலைப்பினில் இரு மலராய் மலர்ந்துள்ளது.

-----------------------------------------------------------

கண்மணி : பதினெட்டுத் திங்கள்களாக பதிவுகள் இட்டு வருகின்றார். இவருடைய பதிவுகள் கவிதை, கதை, கட்டுரை, நிகழ்வுகள், செய்திக் குறிப்புகள், படக் காட்சிகள், படக் கதைகள், நகைச்சுவை, நையாண்டி என இவரைப் பன்முகப் படைப்பாளராய் பறை சான்றுகின்றன. பார்த்து மகிழ வேண்டிய பதிவுகள். குறிப்புகள் கொடுத்து விளக்கங்கள் காண்பதை விட அனைத்தும் முழுமையாய் பார்த்தறிய வேண்டிய பகுதி என்பதால் அவருடைய பதிவுகளை அப்படியே படிக்க பரிந்துரைக்கிறேன்.

----------------------------

டெல்பின் விக்டோரியா : இவர் ஒரு பெண் மருத்துவர். இவருடைய பதிவுகளில் பெரும்பான்மை மருத்துவம் பற்றியதாயும், பிற நகைச்சுவை, சிரிப்புகள் கருத்துணர்த்தும் நிகழ்வுகளாயும் உள்ளன. கிட்டத்தட்ட 55 பதிவுகள் இட்டிருக்கிறார். மகளிர்க்கான மருத்துவக் குறிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றைப் படித்து நாம் தெளிவு பெறலாம்.

இம்சை அரசி ( ஜெயந்தி): நவம்பர் 2006ல் இருந்து வலைப்பதிவுகளில் கலக்கி வருகிறார். ஏறத்தாழ 108 பதிவுகள் இட்டிருக்கிறார். கதை, கவிதை, கட்டுரைகளாக அவை மிளிர்கின்றன. இவருடைய அறிமுகம் ஆழமாய் உள்ளது. இவர் தன்னைப் பற்றிப் பேசவில்லை. இவரது பதிவுகள் இவரைப் பற்றி பேசுகின்றன. தனக்குள் கவிதை எழுந்த சூழலை கவிஞர் சுவையாக, சரியாக விளக்கி இருக்கின்றார். சூழ்நிலை, தொடக்க கால நிகழ்வுகள், அதில் தத்துவம், அவற்றால் பெற்ற அனுபவம் - அவற்றினை கதையாகவும் வடித்துள்ளார். கதைகள் சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டுவது சிறப்பாக உள்ளது. ஆறு வலைப்பூக்கள் வைத்திருக்கிறார். அப்துல் கலாமின் பொன்மொழி பிடித்த மொழி என்கிறார்.

இன்று ஒரே நாளில், ஒரு கயிற்றால், நம் பந்தம் அறுந்து விடுமோ ? அவர்கள் வீட்டுப் பெண் என்று சொல்கிறார்களே !! எப்படி அப்பா கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என்னே ஒரு இயல்பான சிந்தனை ?

தன்னைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனையை அழகாகத் தருகிறார். அப்பதிவு இதோ !

செல்வி ஷங்கர்
--------------------









Wednesday, May 14, 2008

வலைப்பூக்களில் வலம் வரும் கவிஞர்கள்

அண்ணாகண்ணன் பன்முகச் சிந்தனையும், ஆய்வுத் தமிழின் புலமையும் பெற்றவர். ஆளுகைத் தமிழால் இதழாசிரியராய் தன்னை ஆழமாய் நிலை நிறுத்திக் கொண்டவர். இவரின் கவிதைகள் இனிமைத் தமிழாய் சுவைக்கின்றன. வரவேண்டும் அவள் என்ற கவிதை அருமை. ஆங்கிலக் கவிதைகளும் எழுதுகிறார்.

நிலாரசிகன் தனிமைக்குத் துணையாய் கவிதையை அழைப்பவர். ஏறத்தாழ 150 பதிவுகள் இட்டிருக்கிறார். சிறு கதையும் அப்பதிவுகளில் உண்டு. மூன்று நூல்கள் வெளியிட்டிருக்கிறார். ஆழமான அருமையான கருத்துகள் அவரது கவிதையில் வெளிப்படுகின்றன. தனது படைப்புகள் பேசட்டும் என்று அவர் தன்னைப் பற்றி பேசவில்லை அறிமுகத்தில். குறுங்கவிதைகள் இனிமையாய் உள்ளன.

அன்புடன் புகாரி : தஞ்சைத் தரணி தந்த கவிஞர். நெஞ்சை அள்ளும் கருத்துகளை நிகழ்வுகளாய் கவிதையாக வடிப்பதில் வல்லவர். நா.பா வின் தீபம், மாலனின் திசைகள், வலம்புரி ஜானின் "தாய்", இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரவையின் ஆண்டு மலர், திண்ணை, திசைகள், நிலாச்சாரல், எழில்நிலா போன்ற இணைய இதழ்கள், கவியரங்கங்கள் ஆகியவற்றில் தன்னுடைய கவிதைகளை மழையாய்ப் பொழிந்துள்ளார்.
தினம் ஒரு திருக்குறள் என்று வள்ளுவனுக்கு இவர் புதுக்கவிதைப் பூமாலையைக் கோத்து வருகிறார்.

சேவியர் கவிதையை நேசித்து சுவாசித்து கவிதையாய் திகழ்பவர். ஆறு கவிதைத் தொகுதிகளையும் ஒரு சிறு கதைத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் , கவிப்பேரரசு வைரமுத்து, யுகபாரதி , அறிவுமதி, முத்துக் குமார் மற்றும் பலரால் பாராட்டப் பெற்றவர்.

கல்கி, குமுதம், தமிழ் ஓசை, தை, புதிய பார்வை, திண்ணை, அம்பலம், தமிழோவியம், காதல், சிங்கை இணையம், அந்தி மழை, அம்பலம், தினம் ஒரு கவிதை, நிலாச்சாரல், சங்கமம், இணைய குழுக்கள்… போன்றவற்றில் படைப்புச் சுவடுகள் படைக்க வாய்ப்பு பெற்றவர்.…

படிப்பவரை மயக்கும் பாக்களைத் தந்து கொண்டிருக்கிறார்.

நவீன்பிரகாஷ் பெயருக்கு ஏற்றார்ப்போல் புதுமைக் கவிதைகளை பூவானமாய் தூவி உள்ளார். குறுங்கவிதைகள் படத்துடன் பாங்காய் மிளிர்கின்றன. படங்களும் படங்களின் சுவைகளும் பார்த்த உடன் மனத்தைத் தொடுகின்றன. மந்திரமாய் நம்மை மயக்குகின்றன. கவிதைக்கு ஈடுபாடு தானே முதல் இலக்கணம். அதை இவர் கவிதையில் முழுமையாய்க் காணலாம்.

நளாயினி தாமரைச் செல்வன் கவிதை உள்ளிட்ட கலைகளின் அரசியாய்த் திகழ்கின்றார். கவிதைகளில் காவியம் வடிக்கின்றார். முகம் தொலைத்தவர் என்ற அவரது கவிதை இயல்பினை இயல்பாய்க் காட்டுகிறது. எத்தனை காலங்கள் மாறினால் என்ன ? இந்நிலைமை இப்படியேதான் என்பதை ஏற்றமாய் உரைக்கின்றார்.

செல்வி ஷங்கர்
-------------------

நிழற்படங்களில் நிலா ! பவன் !

நிலா :

நிலாவிற்கு வயது இரண்டு. பார்வையப் பாருங்க ! அந்த மழலை மலர்ச்சி கண்களில் தெரிகிறதா ? அது தான் நம்ம மனதுக்கு டானிக் !

அடுத்துப் பாருங்களேன் - அந்த முகத்துலே மறுப்பு, எதிர்ப்பு, தடுப்பு, மகிழ்வு. அந்த செல் பேசுதா இல்ல நிலா கண் பேசுதா ? பாவம் அழக்கூடாதடா கண்ணா !! ஆ ஆ நிமிர்ந்த நன்னடை சூப்பர்-சீரிய சிந்தனைத் தோற்றம் - கை விரலில்.

பாப்பா கதை நமக்கும் பிடிக்கும். யானை வந்துச்சாம். குருவி வந்துச்சாம். இல்லல்ல எறும்பு வந்துச்சாம் என்று கதை கேட்டா மனம் மகிழ்வாகும்.

பாட்டெழுதாமையா பாப்பா !! பாருங்க பேனா விரலிடையில் ! முடிச்சிட்டா சைக்ளிங் தான் !! என்ன ஓர் நேரிய பார்வை ! சிந்தன பாருங்க ! பேனா நுனியிலா இல்ல மூக்கின் நுனியிலா ?

நிலாப் பாப்பா பேரு இலா ! இப்படித்தான் அவங்க சொல்லுவாங்க. காதப் பொத்திக்கிட்டு பாப்பா! பாவம் நம்ம இலா ! நம்ம இலாவோட பேரெல்லாம் பாருங்க இங்கே - ஒன்னா இரண்டா ?

நிலா மொழி நிச்சயம் சுவைக்கும். அதாங்க மழலைக்கு மயக்கும் சொற்கள் சுவைதான்.

பாப்பா தூங்கும் அழகு ! நமக்கே ஆசையா இல்ல ! பாவம் தூங்கட்டும் எழுப்பாதீங்க !

ஒரு காவியக் கருவாச்சி இயற்கைதாங்க! அம்மாவும் பொண்ணும் ஆச அரும ! பிஞ்சு விரல்கள் பெரிய காலணியில். பாப்பா பாடம் படிக்கற அழகே அழகு. அப்புறம் வெளயாடணும் ! இப்பல்லாம் படிக்கறாங்க !
காய் பழம் விலங்கு பறவை எல்லாம் - பாவம் பாடம். படிக்கறதாலே டிரஸ் போட்டுக்கவே நேரமில்ல ! படிச்சிட்டா ஒரே சிரிப்பு தானே !
மகிழ்வூட்டும் மலர்ப் படத்தைப் பாருங்கள்.

அடுத்த பாப்பா - பேபி பவன் - பவன் நிலாவுக்கு இரண்டு மாசம் மூத்தவன். அவனோட இரண்டாவது பொறந்த நாளிலே பல படங்கள். பிறந்த நாள் பொலிவு. தண்ணீலே வெளயாட்டு. ஓடி வெளயாடுறது ஓய்வு. அந்தப் பார்வயப் பாருங்க - அது பாசம், சாந்தம், பவனின் வளர்ச்சி இதுங்க. வண்டி வெளயாடாமலா வளரும் பவன். வெளயாட்டுப் பொருட்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ?

குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தால் குறைவற்ற இன்பம்தானே ! குழந்தைகளைக் கொஞ்சித்தான் பார்ப்போமே !
நம் எண்ணச்சுமைகள் பஞ்சு பஞ்சாய் ஆகாதா ?

செல்வி ஷங்கர்
-----------------------

Tuesday, May 13, 2008

தெரிந்து கொள்ளுங்களேன் - நட்சத்திரப்பதிவர்

வலைப்பூக்களில் எல்லாரும் அறிந்த பதிவர் வாத்தியார் சுப்பையா அவர்கள். அவரை அறியாதவர்களே இல்லை. அவரது வலைப்பூக்களைப் படிக்காதவர்களே இருக்க முடியாது. இருந்தும், வலைச்சர விதிமுறைகளுக்கு உட்படாமல், அவரைப் பற்றி எழுத வேண்டும் என்ற அவாவினால் விளைந்ததே இப்பதிவு.



தமிழ் மணத்திற்கு வாழ்த்து என்ற அவருடைய பாடலில் பதிவரின் தமிழ் மணக்கிறது. அதில் கவிதை வாழ்கிறது. பதிவர்கள் அனைவரும் வாழ்த்தப் படுகின்றனர். பாடலால் வாழ்த்திய பாமுறை அருமை அருமை. ஏறத்தாழ அதில் 60 சக பதிவர்களை அறிமுகப் படுத்தி வாழ்த்தி உள்ளார்.



தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக ஒளி வீசிய ஒரு வாரத்தில் ஏறத்தாழ 30 பதிவுகளில் தமிழ்த் தலைவர்களையும், நாட்டின் தலைவர்களின் பண்புகளையும் கவிதை யாக்கி உள்ளார். கவிஞர் வாலி பற்றி ஒரு பதிவு . கற்கண்டுச் சோற்றிற்கு காட்டுத் தேன் சுவையூட்டுவது போல் வால் இல்லாத வாலி என்று ஒரு குறிப்பும் கூறி உள்ளார்.



மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?

மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று

ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!



இந்த வாலியின் சமுதாய சிந்தனை இசையில் எனக்கு மிகவும் பிடித்தது. அதைப் பதிவரும் சுட்டி இருக்கிறார்.



கர்ம வீரர் காமராஜரைப் பற்றி கவியரசு கண்ண தாசன் பாவமைத்துக் காட்டி இருப்பதையும், பகுத்தறிவுப் பகலவன் பெரியார், அலகாபாத் அரண்மனைத் தோட்டத்து ராஜா நேரு உள்ளிட்ட தலைவர்கள், கல்விக்கண் திறந்த காமராஜரைப் போற்றி இருப்பதையும் கவிதை யாக்கி உள்ளார்.


அடுக்கு மொழி ஆற்றலர் அறிஞர் அண்ணா, தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட தமிழன் - தன் கருத்துகளால் தமிழை வாழ வைத்த குமுத மலர் தந்த புதுமைச் சிந்தனையாளன் எஸ்.ஏ.பி, பொன்னியின் செல்வன் தந்த பேராசிரியர் கல்கி, வரலாறு வாழ்கின்ற செட்டிநாட்டு வீடுகள், கவிதையில் வாழ்ந்த காவியத் தலைவன் கவியரசு கண்ணதாசன், அறிவியலும் வரலாறும் காலத்தின் நாகரிகமும் கதைகளில் பளிச்சிட்ட மொழி நடை மாற்றத்தால் தமிழுலகைக் கவர்ந்த சுஜாதா, கணீர் என்ற குரல் வளத்தால், புன்னகைக்கும் பூமலர் பேசுவது போல் தெய்வத்தின் குரலை மக்களுக்கு உணர்த்திய வாரியார், பட்ட பின் ஞானி என்ற நடைமுறைத் தத்துவத்தால் சுட்டபின்னும் வாழுகின்ற சுடர்மொழியை பாடலில் படைத்திட்ட பட்டினத்தார், கன்னல் தமிழே நீ ஒரு பூக்காடு - அதில் நானொரு தும்பி என்ற கலைஞர் மு.க , தமிழால் தமிழைத் தமிழாக்கி தனித்து நடை பயிலும் வடுகப்பட்டி கவிஞன், வார்த்தை நெருப்பால் சுடர் வீசும் செஞ்சொல் வைரமுத்து போன்ற கவிஞர்களை, தலைவர்களைத் தன் தமிழ் மண நட்சத்திரப் பதிவுகளில் சுடர் வீசச் செய்த இவரின் பதிவுகள் இன்னும் ஒரு முறை அனைவரும் படிக்க வேண்டியது. தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுங்கள் - முடிந்தால் முத்து மாலை சூட்டுங்கள். புன்னகைக்கும் தமிழ் !!

செல்வி ஷங்கர்
--------------------

Monday, May 12, 2008

நானும் என் பதிவுகளும் ............

அன்புள்ள சகபதிவர்களே,

அனைவருக்கும் வணக்கம்.

முதற்கண் என்னையும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்த வலைச்சர நிர்வாகத்தின் பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும் மற்றும் சிந்தாநதி, சகோதரிகள் முத்துலட்சுமி, பொன்ஸ் ஆகிய அனைவருக்கும், என மனங்கனிந்த வாழ்த்துகளுடன் கூடிய நன்றி.

என்னுடைய அச்சமே என் இறை நம்பிக்கையை வலுவாக்கியது. இடைவிடாத முயற்சியும் செயல்திறனுமே தவம் என்பதை வள்ளுவத்தால் அறிந்தேன். ஒவ்வொரு செயலிலும் எனக்கு நினைவிற்கு வருவது வள்ளுவமே. அதை வழிபாடாகவே கொண்டேனென்றால் அது மிகை யாகாது. நம்மை வழிப்படுத்துவதும், நமக்கு வழி காட்டுவதும் தானே வழிபாடு. அதனால் தான் வள்ளுவத்திற்கு என் உரை நடையில் கருத்துகளை எழுதத் தொடங்கினேன். பாயிரவியல் முடித்திருக்கிறேன். அதில் இறைப்பண்புகளை பெயரைச் சுட்டாமலே சொன்ன வள்ளுவரின் தன்மையில் நான் மயங்கி இருக்கின்றேன். இதோ அதன் சுட்டிகள்.

பாயிரவியல்:
1.
2.
3.
4.
இல்லறவியல் :
5.
6.
7.
8.
9.

வலைப்பூ நண்பர்களே

வள்ளுவத்தைப் படியுங்கள். கருத்துக் கூறுங்கள். தொடர்வது உங்கள் கருத்துகளைப் பொறுத்தே!

இத்தகைய எண்ணங்களினால் என் மனத்தில் பறந்தது தான் "எண்ணச்சிறகுகள்" . அதன் விளைவே "பட்டறிவும் பாடமும்" என்ற என் முதல் பதிவு. இவற்றில் எண்ணச்சிறகு பதிவில் உள்ளவற்றை பலரும் படித்திருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு முறை படித்துத் தான் பாருங்களேன்.

பார்வையில் படுவதைக் கூறுங்கள். நான் பார்த்துப் பறக்கின்றேன் பதிவில்.
நன்றி

செல்வி ஷங்கர்
--------------------

புதிய ஆசிரியர் - செல்வி ஷங்கர்

அன்பு நண்பர் ஜமாலன் அழகான பதிவுகளை அள்ளித் தந்திருக்கிறார். எல்லையற்று விரிந்த சுட்டிகள், அதனுள் நீந்தி அத்தனையையும் படிக்க பொறுமை வேண்டும். அதில் புதிய சொற்கள் பலப்பல. யாரும் இதுவரை அதிகம் அறியாமல் / படிக்காமல் இருந்தவற்றை அருமையாகக் கையாண்டுள்ளார். ஆழ்ந்து படித்துச் சுவைக்கலாம். புதுமையான புதிர்களை இவர் பதிவில் பார்த்தோம். மாறுபட்ட சிந்தனையிலும் பதிவுகளைப் பரவலாய்த் தந்த தங்கள் முயற்சி பாராட்டத் தக்கது.

நன்றி நண்பர் ஜமாலன் அவர்களே !!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செல்வி ஷங்கர் - சில திங்களாக பதிந்து வருகிறார். புதுமையான சுய அறிமுகம் பதிவினில் இட்டிருக்கிறார். பட்டறிவினையும் அதன் பாடங்களையும் பதிவுகளில் தந்திருக்கிறார். எண்ணச்சிறகுகளாக வள்ளுவத்தையும், சில கருத்துகளையும் - எண்ணத்தில் தோன்றியபடியே படைத்திருக்கிறார் .

செல்வி ஷங்கரை வருக வருக வலைச்சரத்திற்கு வரவேற்கிறேன்.

அன்புடன் ..... சீனா
-----------------------------------

Sunday, May 11, 2008

நன்றி

rajput-paintingஇந்த ஒருவாரம்  வலைச்சரம் ஆசிரியப் பொறுப்பை தந்த நண்பர் கயல்விழி முத்துலெட்சுமிக்கும் பொறுப்பாக இருந்து உதவிகள் புரிந்த நண்பர் சீனாவிற்கும் நன்றிகள். அவர்களது நம்பிக்கை பாழாகாமல் இந்த ஒரு வார பொறுப்பை நல்லவிதமாக முடித்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். எண்ணற்ற பதிவர்களை எல்லாம் அறிமுகப்படுத்த வாய்க்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட வேறு சில பணிகளால் இதனைக்கூட முழுமையாக செய்ய இயலவில்லை. முதல் பதிவுமுதல் எழுத நேரமின்றி தினமும் அலுவலகம் முடிந்து 3 மணிநேரங்கள் இதற்கென செலவழித்து தேடி பதிவுகளைத் தொகுக்க வேண்டியதாகி விட்டதால் இந்த அறிமுகம் முழுமையானது அல்ல. ஓரளவு சரியானவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவே கருதுகிறேன். இதில் நண்பர் வளர்மதியுடன் ஆன பிரதி குறித்த விவாதம் காத்திரமானது. இன்னும் அவருடன் ஆன வேட்கை குறித்த விவாதம் தொடரும் என்று கூறி.. அனைத்து நண்பர்களுக்கும் வாசித்தவர்கள், பின்னொட்டம் இட்டவர்கள், திட்டியவர்கள், சொல்ல இயலாமல் விடுபட்ட பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றி. 

நன்றி! வணக்கம்!!

அன்புடன்

ஜமாலன்.

image : Rajastan Painting

சமூக உணர்வுகளின் சங்கமம்

death of socretsதமிழக தத்துவங்களின் பன்முகம் என்கிற இக்கட்டுரை உலகப் புகழ்பெற்ற பொருளியல் நிபணரும் நோபல் பரிசு பெற்ற இந்தியருமான அமர்தியா சென்னின் மிகமுக்கியமான நூலான The Argumentative Indian ("வாதிடும் இந்தியன்”) என்ற நூல் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை தருகிறது. பொதுவாக இந்திய தத்துவத்தில் மறைக்கப்பட்ட லோகாயுதவாதம் பற்றிய குறிப்புகளை பற்றியும் பேசுகிறது. இந்திய தத்துவஞானம் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கண்ட மார்க்சியரான தேபிபிரசாத் சட்டோபாத்யாயா பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது. சட்டோபாத்யாவின் "What is living and What is dead in Indian Philosophy" என்கிற நூலை 80-களில் எங்களது தத்தவ ஆசானான எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது பலவிரிவான தகவல்களை இளைஞர்களான எங்களுடன் விவாதித்த காலங்கள் நினைவிற்கு வருகிறது. அந்நூல் தமிழில் ”இந்திய தத்தவஞானத்தில் நிலைத்திருப்பவையும் மறைந்துபோனவையும்” என்ற தலைப்பில் ”சென்னை புக்ஸ்” வெளியிட்டுள்ளது. இந்திய தத்துவம் குறித்த ஒரு சிறந்தநூல். ஆர்வமுள்ள நண்பர்கள் அதனை படிக்கலாம்.  கரிச்சான் குஞ்சுவை பற்றிய வெ.சா.வின் இக்கட்டுரையில் வரும் இடதுசாரி ரசிகர் பட்டாளத்தில் ஒருவன் நான் என்பது பெருமையாக உள்ளது. கரிச்சான் குஞ்சுவுடன் ஆன எனது அனுபவங்கள் தனியாகப் பேசப்பட வேண்டியவை.

அத்துவான வெளியில் பேசும் அந்தாரா என்கிற இப்பதிவர் குறைவாக எழுதியிருந்தாலும் இவரின் காமத்தைப் பேசுதல்... மற்றும் போனோகிராபி/Pornography பற்றிய இவ்விரு பதிவுகளும் பெண்ணிய நோக்கில் எழுதப்பட்டுள்ள பாலியல் பற்றிய பதிவுகள்.

“ம்“ என்று தனது பதிவின் தலைப்பைக் கொண்டுள்ள மயூரன் சமூக விமர்சனங்களுடன் பதிவெழுதுபவர் மற்றும் வலையுலக முன்னொடிகளுல் ஒருவர். விக்கிப்பீடியா போன்றவற்றில் பங்களிக்கும் இவரது காலத்தை வென்று நிற்கும் கீதை - காலைச்செய்தியாய் ஒரு கவிதை. கீதையின் தற்கால பரினாமத்தை விளக்குகிறது. ஹோகனேக்கல், நன்னீர் அரசியல், சில கேள்விகள். முக்கியமான சிலகேள்விகளையும் தொடர்புடைய சுட்டிகளையும் தருகிறார்.   ரிலையன்ஸ் சில்லறை வியாபாரம் - எதிர்ப்பதற்கான வடிவம் எதுவாக இருக்கும்? போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கட்டுரைகள் நிறைந்த ஒரு பதிவு இவருடையது.  இதில் இவர் மக்கள் நிறுவனங்கள் என்ற  மாற்றுத் திட்டம் பற்றி பேசுகிறார்.  படிக்கும் உரிமை - புனைகதை (மூலப்பிரதிக்கு நேர்மையாக அமையாத மொழியாக்கம்) என்ற மொழிபெயர்க்கப்பட்ட ”கணிப்பொறியின் கண்காணிப்பு வலைகள் இறுகும்” எதிர்காலம் பற்றிய ஒரு அறி-புனைக்கதை.

தோழர் அசுரன் பதிவுலகில் குறிப்பிடத்தக்க கட்டுரைகளை எழதும் ஒரு மார்க்சியர். உணர்ச்சிகரமான நடையில் இவை வெளிப்பட்டாலும் அதற்குள் உள்ள ஒரு தார்மீக கோபம் அக்கட்டுரைகளின் உணர்வுகளைச் சொல்லக் கூடியவை. தரவுகளின் அடிப்படையில் எழுதப்படும் இக்கட்டுரைகள் மைய நீரொட்ட அரசியலின் போலித்தனங்களை தோலுரிக்கக் கூடியவை.  

தோழர் கார்க்கி தனது சரளமான எழுத்து நடையின் மூலம் நகைச்சுவை உணர்வுடன் அரசியல் முகத்திரைகளை கிழிக்கும் பதிவுகளை எழதுபவர். இவரது உணர்ச்சிகரமான மோடி பற்றிய பதிவை எனது தமிழ்மண நட்சத்திர வாரத்தில் மீள்பதிவு செய்துள்ளேன். சிறப்பாகவும் விவாதத் தன்மையுடனும் எழதக் கூடியவர்.

டி. அருள் எழிலன் பாலியல் என்கிற நளினி ஜமிலாவிற்கும் சாரு நிவேதாவிற்கும் நடந்த விவாதங்களை தொகுத்து நூலூக தந்துள்ளார். இவரது நக்சல்பாரிகளை ஒழிக்கமுடியுமா? என்கிற இக்கட்டுரையில் அரசின் வன்முறை குறித்த பல கேள்விகளை எழுப்புகிறார். அத்துடன் இத்தகைய இயக்கங்களின் இருத்தல் என்பது சமூக அவலத்தின் விளைவே. இந்த அவலங்களைப் போக்காமல் இயக்கங்களை என்ன செய்ய முடியும்? காரணங்களை ஒழிக்காமல் காரியங்களைப்பற்றி புலம்பியும் அடக்கியும் பயனில்லை என்பதை சொல்லும் கட்டுரை.

இங்கு தொகுக்கப்பட்ட பதிவுகள் மற்றும் கட்டுரைகள் வழக்கம்போல் பலவற்றையும் தொகுத்த ஒரு கதம்ப சரமாக உள்ளது. இது தவிர்க்க முடியாதது. இங்கு உள்ள அறிமுகங்கள் பலரும் பின்பற்றத்தக்க சுதந்திரத்தைக் கொண்டது. ஒற்றை கருத்திற்குள் அடக்கமுடியாத பதிவுகளின் தொகுப்பு இது. 

நன்றி.

அன்புடன்

ஜமாலன்.

image curtsey: Jacques-Louis David's "The Death of Socrates" (1787)