வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Sunday, June 15, 2008
மனசுக்குள்ளேயே வைச்சிருந்தேனாக்கும்! - ஆன்மீக பாடல்கள்!
சிறுவயதில் கேட்டிருந்த பக்தி பாடல்கள் இணையத்தில் கண்டு பின் கொண்ட சந்தோஷ வெளிப்பாட்டின் தொகுப்பே இது...!
சீர்காழியின் தமிழ் குழையும் குரலில் காலை வேளைகளில் பெரும்பாலும் தினமும் கேட்ட பாடலில் இதுவும் ஒன்று! இணையத்தில் பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன்!இப்போது இங்கு தருகிறேன்! கற்பூர நாயகியே கனகவல்லி குழுப்பதிவிலிருந்து
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது
۞۞۞۞۞
வெள்ளிகிழமைகளிலும் ஞாயிற்றுகிழமைகளின் மாலையிலும் இந்த பக்தி மாலையில் மனம் மகிழாமல் இருந்தது கிடையாது! கற்பூர நாயகியே கனகவல்லி குழுப்பதிவிலிருந்து
படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி,
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி,
ஜய ஜய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி,
சிவ சிவ சங்கரி சக்திமஹேஸ்வரி,
திருவருள் தருவாள் தேவி
திருவருள் தருவாள் தேவி
۞۞۞۞۞
இங்கு அயலகம் வந்த பிறகும் கூட, கூடவேகொண்டு வந்திருந்த சீர்காழியின் முருகன் பாடல்களில் வாரத்தில் பல நாட்கள் கேட்கும் இந்த பாடல்,ஏதோ ஒரு சமயத்தில் இந்த பதிவில் பார்த்தேன் மகிழ்ச்சியாக இருந்தது!
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனை தினம் தேடி - நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!
அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! - என்
தலைவன் முருகனை தினம் தேடி!
۞۞۞۞۞
கந்தர் சஷ்டி திருவிழா நாளில் வைத்தீஸ்வரன் கோவிலில் உறவினர் வீட்டில் முகாமிட்டு கொண்டாடியபோது இரவு காட்சி ஷண்முகம் தியேட்டரில் நான் பார்த்த அருணகிரிநாதர் திரைப்படம்! அப்பா ஆஹாஒஹோவென்று புகழ்ந்த படத்தின் இந்த பாடல் பல வருடங்கள் கழித்துத்தான் புரிந்துக்கொண்டேன்!
முருகனருள் பதிவிலிருந்து பாடல் ஒலியாகவும் ஒளியாகவும் தமிழ் வரிகளாகவும்....!
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கு ஒரு வித்துக் குருபர ...... என ஓதும்
۞۞۞۞۞
மார்கழி மாதத்தின் காலை மாலை இருவேளைகளிலும் கூம்பு ஸ்பீக்கரில் அலறும் இந்த பாடல்கள் அப்போது யாருமே இதை டிஸ்டர்பன்ஸாக நினனக்கா விஷயம், இப்பொழுது நினைத்தால் ஆச்சர்யமாயிருக்கிறது! (ஆமாங்க அந்த காலத்து ஸ்பீக்கர் ச்வுண்டுல இந்த பாட்டு கேக்கறது இரு ஆனந்த அனுபவம்!)
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா
கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்..ஆ.
(வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கோவை மருதமலை செல்கையில் ஏனோ தானாகவே மனதில் ஒலிக்கும் இந்த பாடல்!)
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்....
உங்களுக்கு பிடித்த பால்ய கால நினைவுகளில் நின்ற பக்தி பாடல்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்!
முருகா , கந்தா , கடம்பா, ஷண்முகா, கதிர்வேலா, கார்த்திகேயா, வேலவா என்னையும் ஆயில்யனையும் இந்த வலைச்சரத்தையும் காப்பாத்துப்பா
ReplyDeleteஅரகரோகரா
ஸ்வாமி பாட்டு எல்லாம் சூப்பர் ஆயில்யன். பல பாடல்கள் சபரிமலை போகும்போது நானே பாடியிருக்கிறேன்.
ReplyDeleteசபரிமலை போற எங்க டீம்லயே நாந்தான் பெரிய singer னா பாத்துக்கங்க
(எவ்ளோ மொக்க டீமா இருக்கும்னு)
கலக்கல் தொகுப்பு நன்றி
ReplyDeleteஅழகான ஒரு ஞாபகமூட்டும் பதிவு ஆயில்யன்.
ReplyDeleteஎனக்கு விருப்பமான வேறுஞ்சில பாடல்களை இந்தத்தளத்தில் கண்டேன்.
உங்கள் தகவலுக்காக
http://www.vakeesmp3.de/devotional-mp3.htm
நன்றி.
இப்போ மனசுல இருந்து வெளியே கொட்டிட்டீங்களா? ;-)
ReplyDelete