Sunday, June 15, 2008

பண்டிகைகள் அல்லது விசேஷங்கள்!


சந்தோஷம் மிகும் விஷயங்கள் பெரும்பாலும் குடும்பத்தினர் அனைவரும் சேர்த்திருக்கும் விழாக்கள் பண்டிகைகள் சமய்த்திலேயே நிகழ்கின்றன அப்படிப்பட்ட விசேஷங்களின் அனுபவங்கள் இங்கு தொகுப்பாக...!

۞۞۞۞۞

தீபாவளி என்றாலே கொஞ்சம் அதிக குஷிதான் விதவிதமான இனிப்புகள் விதவிதமான உடுப்புகள் என்று அந்த அனுபவங்ளை பகிர்ந்துக்கொண்ட பல பதிவுகளில் சில மட்டும் இங்கு உங்களுக்கு தீபாவளி என்றாலே கண்டிப்பாக காலையில் இட்லி இருக்கும். என்னடா இவன் இட்லியை போய் இவ்வளவு பெருசா சொல்றானேன்னு நினைக்கலாம். எங்க ஊரில் காலையில் சிற்றுண்டி என்பதெல்லாம் பொதுவாக கிடையாது. ஒம்பது மணிக்கு சாப்பாடு தான். மதியம் ஏதேனும் சிற்றுண்டி, காப்பி கிடைக்கும்.

۞۞۞۞۞

இது சீனா அய்யாவோட தீபாவளி நினைவுகள்

தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.

۞۞۞۞۞

இது ஈழத்து நண்பரின் இனிய தீபாவளி.!

மடத்துவாசல் பிள்ளையாருக்கும் தீபாவளி நாள் தான் நிறையப் பட்டுத் துணிகள் கிடைக்கும். பூசை முடிந்து, கடைசியில சண்டேஸ்வரர் சுவாமியைக் கும்பிடேக்கை, புதுச் சட்டையில் இருந்து ஒரு நூலைப் பவ்யமாக இழுத்தெடுத்து, அந்த நூலைச் சண்டேஸ்வரருக்குச் சார்த்தி விட்டுக் கிளம்புவோம்!

۞۞۞۞۞

இது டுபுக்குவின் பண்டிகை நாள்

கார்த்திகை மாதம் வந்ததும் தினமும் வாசலில் இரு விளக்கு வைப்போம். திருநாள் அன்று பழைய விளக்கு எல்லாம் தேய்த்து வைத்து பின் ஈரம் போக துடைத்து வைப்போம்.

50 விளக்கு என்றால் 100 திரி திரிக்கச் சொல்வார்கள் அம்மா.இரண்டு இரண்டாக இடவேண்டுமாம் .அப்போதெல்லாம்..இன்று கிடைப்பது போல் திரி கடைகளில் வாங்கும் பழக்கம் இல்லை.பஞ்சை திரியாக்கி எண்ணி வைப்போம்..


۞۞۞۞۞

இவருக்கு சரஸ்வதி பூஜை சமயத்தில் வந்த விநாயகர் பற்றிய ஞாபகங்கள்

பரீட்சைக்கு கொண்டுபோய் எழுதும் பைலிலும் பிள்ளையாருக்கு மூலையில் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். மேலும் பரீட்சைத் தாளிலும் ‘பிள்ளையார் துணை’ என்று எழுதித்தான் ஆரம்பிப்பேன். பிள்ளையாரும் என்னைக் கைவிட்டதில்லை; அதன்பிறகு யாழில் இருந்தவரை வகுப்புப் பெண்கள் மனசு எரிய எரிய என்னை முதலாம் பிள்ளையாக வகுப்பில் வைத்திருந்தார்

(தட்ல இருக்கிறத அப்படியே கையால எடுத்து திங்க தோணுதுங்க!)

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

குறையாகச் சொல்லவில்லை...மாற்றுங்களைய்யா...டீ.வி. பொட்டியிலிருந்து வெளி வந்து சந்தோஷமாக இந்த பண்டிகைகளை கொண்டாடுவோம்...குடும்பத்தோடு தெருவிற்கு வாங்கள்..(நன்றி டுபுக்கு!)

2 comments:

  1. /
    குறையாகச் சொல்லவில்லை...மாற்றுங்களைய்யா...டீ.வி. பொட்டியிலிருந்து வெளி வந்து சந்தோஷமாக இந்த பண்டிகைகளை கொண்டாடுவோம்...
    /

    சூப்பர் ஆயிலு

    /
    குடும்பத்தோடு தெருவிற்கு வாங்கள்..
    /

    யோவ் என்னய்யா இது!?!?!?!?

    ஓ பண்டிகை கொண்டாடவா??? அப்ப ஓகே!!

    :)))

    ReplyDelete
  2. நெறைய படிப்பீங்க போல.. எனக்கு இதை படிக்கவே மூச்சு வாங்குது. :-))

    ReplyDelete