பணம் பாதாளம் வரை பாயும், பசி வந்தால் பத்தும் பறந்துப் போகும்.... அதெல்லாம் சரி, ஆனால் பணம் இருந்தும் பசியும் இருந்தும் புசிக்க ஏதும் கிடைக்காவிட்டால்? அப்படி ஒரு சமயத்தில் நடந்து ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை கதிரவன் விவரிக்கையில் நமக்கும் அந்த சிலிர்ப்பு தொற்றிக் கொள்கிறது
********************************************************************
அந்த காலத்தில் எல்லாம் மாடு பிடிப்பவன் தான் வீரன் என்று கொள்வார்களாம்। நம்ம எம்.ஜி.ஆர் கூட படத்தில புலி கூட எல்லாம் சண்டை போட்டிருக்காரு. ஆனால் அதையெல்லாம் விட பெரிய சாதனை இரவு அல்லது அதிகாலையில் ஒரு நாய் நிறைந்த தெருவில் தனியாக நடந்து வருவது. அத்தகைய நிகழ்வொன்றினை இங்கே விளக்குகிறார் ஜி.
********************************************************************
வெளியூரில் தங்கி வேலைப் பார்ப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. அதில் தலையாய பிரச்சனை திடீர் என்று ஊருக்கு கிளம்பிப் போவது. தொடர்வண்டிகள் இருந்தால் சிக்கலில்லை. ஆனால் பேருந்தில் தான் பயணிக்க வேண்டும் என்றால் ? பேருந்து அமைவது கூட இறைவன் கொடுக்கும் வரம் போலும். நிறைய பேருக்கு நேர்ந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை நகைச்சுவை ததும்ப எழுதியிருக்கிறார் அருட்பெருங்கோ. சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் செஞ்சுருக்கீங்களா?
********************************************************************
ஒரு வாலிபனுக்கு என்னவெல்லாம் துன்பம் வரலாம்? துணி துவைப்பதிலும் கூட எப்படியெல்லாம் தனக்கு இன்னல்கள் வந்தன என்று விவரிக்கிறார் செல்வேந்திரன்
********************************************************************
நட்பு ~ அந்த வார்த்தையைச் சொல்லும் மனதுக்குள் ஒரு சந்தோசப்பூ பூத்துவிடுகிறது. சாதி, மதம், இனம், வயது, மொழி எதையும் பார்க்காதது நட்பு. பாலின பேதம் மட்டும் பார்க்குமா என்ன? அதிகமாய் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாத கல்லூரி பருவத்துப் பட்டாம்பூச்சிகள் செய்யும் கூட்டாஞ்சோற்றை பற்றி கோபிநாத் கூறுகையில் நாமும் கண் மூடி சில நேரம் நம் கல்லூரி காலத்திற்கு சென்று வரலாம்
********************************************************************
சென்னைக்கு வரும் எல்லோருக்குமே ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பட்டணம் நினைவுகளை தந்துவிடும். தான் சுற்றிப் பார்த்த சென்னையை பற்றி அழகாக நினைவுகூறுகிறார் தூயா
மீண்டும் பயணிப்போம்...
/ஒரு வாலிபனுக்கு என்னவெல்லாம் துன்பம் வரலாம்? துணி துவைப்பதிலும் கூட எப்படியெல்லாம் தனக்கு இன்னல்கள் வந்தன என்று விவரிக்கிறார் செல்வேந்திரன்/
ReplyDeleteநிசமாகவே
நல்ல அனுபவம்
துணி துவைக்கறது அவ்வளவு சுலபம்னு நினைக்கறீங்களா என்ன. நல்ல தொகுப்பு
ReplyDeleteதொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி திகழ்மிளிர்
ReplyDeleteவாங்க சின்ன அம்மிணி. ஒன்னு இரண்டு துணின்னா சுலபமா துவைச்சிடலாம். ஒரு வாளி நிறைய துணி இருந்தா, அன்றைக்கு முதுகு வலி நிச்சயம் :)
ReplyDeleteகிகிகி... ஆனா இப்போவெல்லாம் சலவையந்திரம் வந்ததும் பிரச்சனையே இல்லை
பிரேம்,
ReplyDeleteநினைவலைகள் நன்கு அமைந்திருக்கின்றன. அனைத்துப் பதிவுகளையும் படித்தேன் - அருமையான பதிவுகள்
நல்வாழ்த்துகள் பதிவர்கள் அனைவருக்கும்
மாப்பி...நன்றி மாப்பி...நன்றி ;))
ReplyDelete