காதல் என்ற தலைப்பில் எழுதப்படும் எதுவுமே கவிதையாகிவிடும் என்றொரு கவிஞர் சொல்லியிருக்கிறார். மற்ற பாடுபொருள்களை காட்டிலும் காதலினால், காதலால், காதலுக்காக பாடப்பட்ட கவிதைகளே அதிகம்.
பயணத்தின் போது எதிர்ப்பட்ட சில அழகான காதல் கவிதைகள் உங்களின் பார்வைக்கு
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
காதல் கடல்
என் வழித்தடங்களில் நடந்துவராதே
உன் சுவடுகள் படாத கோவத்தில்
கொந்தளிக்கிறது பொறாமைக்காரக் கடல்
வாரம் ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதனை அழகாக தன் காதல் கவிதைகளோடு இணைப்பதில் வல்லவர் ஸ்ரீ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
மழைக்கால கவிதைகள்
எந்த நிறத்தில்
மழைத்துளிக் கேட்டாய் ... ?
அதோ வானம் வரைகிறது வானவில்
தேர்ந்தேடுத்துக்கொள் ஏழில் ஒன்றை
காதலும் மழையும் இணைபிரியாதவை. ஒருவகையில் பார்த்தால் ஒருகுணமுடையவை. எப்போதும் பெய்யும், எப்போது பொய்க்கும் என்று தெரியாது. தீர்ந்த பின்னும் நெடுநேரம் இருக்கும் ஈரமும், தூண்டிவிட்டு சென்ற வாசமும்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
பழனியின் மழைக்கால கவிதைகளில் நனையுங்கள்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ-நான்
என்ன தைரியம் உன்மோதிரத்திற்கு?
24 மணி நேரமும் உன் விரலையே
கட்டி பிடித்து கொண்டிருக்கிறது
நான் பிடிக்கும் உன் விரலை
வேறு யாரையும் தொட அனுமதிக்கமாட்டேன்
சொல்லி வை உன் மோதிரத்திற்கு
பெண்கள் எழுதும் காதல் கவிதைகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. திரைப்பாடல்களிலும் சரி, கவிதைகளிலும் சரி ஒரு பெண்ணின் நிலையிலிருந்து எழுதும் ஆண் கவிஞர்களால் எப்போதுமே அதை முழுதாய் எழுதிவிட முடிவதில்லை.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
காதல் மழை
தொடக்கமும் முடிவும்
அறியா
நெடுந்தூரப் பயணம்
காதல்
கண்ணாடியில் பெய்த மழை காதலாய் கிறுக்கியவை ...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நானும் ஒற்றை ரோஜாவும்
உன் நினைவுகளின் பிடியில்
நானும்
நீ கொடுத்த ஒற்றை ரோஜாவும்...
காதலின் நினைவாக ஒற்றை ரோசாவோடு வாடிக்கொண்டிருக்கும் பெண்ணை பற்றி கௌசல்யா அவர்களின் கவிதை
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
விதிவிலக்கா???
முத்தத்தின் வெம்மையில் தாளாமல்
முகம் நிமிர்கிறேன் நான்
தலையிலடித்துகொண்டு தாண்டிசெல்லும்
நம் பெற்றோரின் வயதொத்த பெரியவரும்
நம் தங்கையின் வயதொத்த சிறுபெண்ணும்
உணர்த்தினார்கள் வரம்புமீறிய இழிசெயலை...
எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது தான் காதல்। ஆனால் காதலுக்கு இடம் பொருள் ஏவல் தெரிய வேண்டாமா என்று கேட்கிறது தணிகை இந்த கவிதை
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன் பொண்டாட்டி
என்று முதல்முறை
கையொப்பமிட்ட உன் மின்னஞ்சலை
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்!
ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு
இதை எழுதும் போது
பொங்கிய வெட்கம் கலந்த சிரிப்பை
பார்க்கமுடியவில்லையே...
சார்லஸின் காதல் பொங்கும் கவிதைகளுக்குப் என்ன அறிமுகம் தந்துவிட முடியும்?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன் முத்துப்பதித்த
தொங்கு கம்மலின் நுனியில்
ஊசலாடும் ஒரு மழைத்துளிக்குள்
தெரிகிறது என் உயிரின் உருவம்
காதலும் நோய் தான் போலும். காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போலவே எங்கும் எதிலும் எப்போதும் காதலும் காதலியும் தான் தென்படுகிறது காதல் மனதுக்கு.
/என்ன தைரியம் உன்மோதிரத்திற்கு?
ReplyDelete24 மணி நேரமும் உன் விரலையே
கட்டி பிடித்து கொண்டிருக்கிறது
நான் பிடிக்கும் உன் விரலை
வேறு யாரையும் தொட அனுமதிக்கமாட்டேன்
சொல்லி வை உன் மோதிரத்திற்கு/
நல்ல ஒரு கவிதை
மிக்க நன்றி திகழ்மிளிர். தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி
ReplyDelete\\உன் பொண்டாட்டி
ReplyDeleteஎன்று முதல்முறை
கையொப்பமிட்ட உன் மின்னஞ்சலை
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்!
ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு
இதை எழுதும் போது
பொங்கிய வெட்கம் கலந்த சிரிப்பை
பார்க்கமுடியவில்லையே...\\
அழகு ;)
சில பதிவர்களை இப்பதான் பார்க்கிறேன்...அறிமுகம் தந்தமைக்கு நன்றி மாப்பி ;)
அட மாப்பிக்கே தெரியாத பதிவுகளை சுட்டி காட்டியிருக்கேனா? ;))))))))))))
ReplyDeleteதல கோபியின் மாப்பி
ReplyDeleteபின்னுறீக
//கானா பிரபா said...
ReplyDeleteதல கோபியின் மாப்பி
பின்னுறீக
//
வாங்க தல வாங்க...வந்தமைக்கு மிக்க நன்றி :)
அன்பின் பிரேம்,
ReplyDeleteகலக்கறீங்க காதலிலே
தேடிப்பிடித்து சுட்டி தந்தமை பாராட்டுக்குரியது.
எனதருமை நண்பர்கள் கோகுலன் கண்ணன், தணிகை, தமிழ் மாங்கனி, மற்றும் கௌசல்யா, எழில்பாரதி, காயத்ரி, சார்ல்ஸ், பழனி, ஸ்ரீ அனைத்துப் பூக்களுக்கும் சென்று மறு மொழி இட்டு வந்தேன்.
நன்று நன்று - நல்வாழ்த்துகள்
நீங்கள் சொன்ன காதல் கவிதைள் நிச்சயம் நன்றாகத்தானே இருக்கும்...
ReplyDeleteகாதல் காதல் காதல்...
ReplyDeleteவேறென்ன சொல்ல...
மிக்க நன்றி சீனா. சுட்டிக்காட்டிய கவிதைகள் அனைவருக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி :)
ReplyDeleteவாங்க தமிழன்.
ReplyDelete//நீங்கள் சொன்ன காதல் கவிதைள் நிச்சயம் நன்றாகத்தானே இருக்கும்...//
நம்பிக்கைக்கு மிக்க நன்றி. படித்துப் பார்த்து இன்புறுங்கள்
அருமையான பதிவுச்சரங்கள்.. :))
ReplyDeleteநன்றி பிரேம்குமார்.
//பிரேம்குமார் said...
அட மாப்பிக்கே தெரியாத பதிவுகளை சுட்டி காட்டியிருக்கேனா? ;))))))))))))
//
ஒரு சூப்பர் ரிப்பீட்டே :)))