அத்துமீறி உடைந்து வெளியேறி
என் அந்தரங்கம்
யாரோ ஒருவர் கையில் தன்
சாவியை திணிக்கின்றது!
உள்ளுக்குள் அலைக்கழிக்கும் ரகசியங்களை பற்றி அழகாய் சொல்கிறது செல்வாவின் "நட்சத்திர ரகசியங்கள் " கவிதை
***
வறுமை அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
ஏழைகளுக்கு...
வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு...
சின்ன சின்னதாய் சிலிர்க்கவைக்கும் சில கவிதைகள் இருக்கின்றன தினேஷின் வலைப்பூவில்
***
முழுமை கொண்ட ஓர் உண்மை
முழு உண்மை பேசும் ஓர் தருணம்
தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்
தேவைகளின் பட்டியல் எப்போதும் தீர்வதில்லை கவிஞர்களுக்கு. தினேஷின் வேண்டும் பட்டியல்.
***
பிரியும்போதும் கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை।
அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?
நிகழ்வுகளை அற்புதமாக கவிதையில் சொல்பவர் பிரபாகரன். அவரின் "அவனுக்கேனும் நினைவிருக்குமா" கவிதை எல்லோர் வாழ்க்கையோடும் தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடியதொன்று
***
உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள் கிசுகிசுத்துக்கொண்டன।
போய் பார்க்கத்தான் நேரம் ஒழியவில்லை।
அனிதாவின் கவிதைகளில் உள்ள படிமங்கள் பல கதைகள் பேசும்.
***
கவிதைகளற்ற
இக்கணத்தில் எழுதத் துவங்கிவிட்ட
இந்த வார்த்தை குவியல்
நிச்சயம் கவிதையாயிருக்க முடியாது...
கவிதையாயிருக்க முடியாது என்று சொல்லும் சரவணகுமாரின் இந்தக் கவிதையும் அவரின் மற்ற கவிதைகளை போலவே ரசிக்கவே வைக்கிறது
மீண்டும் பயணிப்போம்...
/வறுமை அதிகரிக்க
ReplyDeleteஆடை கிழிந்திருக்கிறது
ஏழைகளுக்கு...
வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு.../
நல்ல கவிதைகளை
அறிமுகம்
செய்தமைக்கு
நன்றிகள்
பிரேம்
மிக்க நன்றி திகழ்மிளிர். தொடர்ந்து வாசியுங்கள்
ReplyDeleteநன்றி நண்பரே.. என்னுடைய பதிவுகளை இங்கு அறிமுகம் செய்தமைக்கு..
ReplyDeleteவருக சரவணா! தொடர்ந்து வாசியுங்கள் :)
ReplyDelete//பயணத்தில் கவனித்த கவிதைத்தடங்கள்//
ReplyDeleteஇனிப் பயணப்போருக்கு உதவும் வழித்தடங்கள்.
வாழ்த்துக்கள் பிரேம்குமார்.