07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 16, 2008

பயணத்தில் கவனித்த கவிதைத்தடங்கள்

அத்துமீறி உடைந்து வெளியேறி
என் அந்த‌ர‌ங்கம்
யாரோ ஒருவ‌ர் கையில் தன்
சாவியை திணிக்கின்ற‌து!


உள்ளுக்குள் அலைக்கழிக்கும் ரகசியங்களை பற்றி அழகாய் சொல்கிறது செல்வாவின் "ந‌ட்ச‌த்திர‌ ர‌க‌சிய‌ங்க‌ள் " கவிதை

***
வறுமை அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
ஏழைகளுக்கு...
வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு...

சின்ன சின்னதாய் சிலிர்க்கவைக்கும் சில கவிதைகள் இருக்கின்றன தினேஷின் வலைப்பூவில்

***

முழுமை கொண்ட ஓர் உண்மை
முழு உண்மை பேசும் ஓர் தருணம்
தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்

தேவைகளின் பட்டியல் எப்போதும் தீர்வதில்லை கவிஞர்களுக்கு. தினேஷின் வேண்டும் பட்டியல்.


***

பிரியும்போதும் கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை।
அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?

நிகழ்வுகளை அற்புதமாக கவிதையில் சொல்பவர் பிரபாகரன். அவரின் "அவனுக்கேனும் நினைவிருக்குமா" கவிதை எல்லோர் வாழ்க்கையோடும் தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடியதொன்று

***

உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க‌
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள் கிசுகிசுத்துக்கொண்டன‌।

போய் பார்க்கத்தான் நேரம் ஒழியவில்லை।

அனிதாவின் கவிதைகளில் உள்ள ப‌டிம‌ங்க‌ள் ப‌ல‌ க‌தைக‌ள் பேசும்.


***

கவிதைகளற்ற
இக்கணத்தில் எழுதத் துவங்கிவிட்ட
இந்த வார்த்தை குவியல்
நிச்சயம் கவிதையாயிருக்க முடியாது...

க‌விதையாயிருக்க‌ முடியாது என்று சொல்லும் ச‌ர‌வ‌ண‌குமாரின் இந்தக் க‌விதையும் அவரின் மற்ற கவிதைகளை போலவே ரசிக்கவே வைக்கிறது

மீண்டும் பயணிப்போம்...

5 comments:

  1. /வறுமை அதிகரிக்க
    ஆடை கிழிந்திருக்கிறது
    ஏழைகளுக்கு...
    வரு’மானம்’ அதிகரிக்க
    ஆடை கிழிந்திருக்கிறது
    நடிகைகளுக்கு.../

    நல்ல கவிதைகளை
    அறிமுகம்
    செய்தமைக்கு
    நன்றிகள்

    பிரேம்

    ReplyDelete
  2. மிக்க நன்றி திகழ்மிளிர். தொடர்ந்து வாசியுங்கள்

    ReplyDelete
  3. நன்றி நண்பரே.. என்னுடைய பதிவுகளை இங்கு அறிமுகம் செய்தமைக்கு..

    ReplyDelete
  4. வருக சரவணா! தொடர்ந்து வாசியுங்கள் :)

    ReplyDelete
  5. //பயணத்தில் கவனித்த கவிதைத்தடங்கள்//

    இனிப் பயணப்போருக்கு உதவும் வழித்தடங்கள்.

    வாழ்த்துக்கள் பிரேம்குமார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது