உங்களோடு ஒரு பயணம்
அனைவருக்கும் வணக்கம்।
மொழியோடு எங்கோ ஒரு ஓரமாய் பயணித்துக் கொண்டிருந்த என்னை, இங்கே எழுத வைத்த வலைச்சரம் குழுவிற்கு என் முதல் நன்றி। ஆயில்யனின் ஆர்ப்பாட்டமான வலைச்சரப் பதிவுகளுக்கு பின், "நாம் என்ன எழுதப்போகிறோம்?", "இப்படி அழகாய் சுவாரசியமாய் எழுத முயற்சியாவது செய்ய வேண்டும்" என்ற இரு எண்ணங்களும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது மனதில்.
என்னைப் பற்றிய அறிமுகத்தை சீனா அய்யா ஏற்கனவே பதிந்துவிட்டார். 2006 முதல் பதிவெழுதிக்கொண்டிருக்கிறேன் என்றாலும் தொடர்ந்து செயல்படுவதில்லை. அனேகமாய் எல்லா பதிவுகளையும் படித்து வந்தாலும் பெரும்பாலும் பின்னூட்டம் இடுவதில்லை. அலுவலகத்தின் உள்ள இணையப் பிரச்சனைகளும் வேலை பளுவும் தான் முக்கிய காரணிகள்.
கவிதைகள் எழுதத்தான் முதலில் என் வலைப்பூ உருவாக்கப்பட்டது. கவிதைகளில் நல்ல தேர்ச்சி இல்லையென்றாலும் கவிதைகள் வாசிப்பது, கவிதைகள் எழுத முயற்சி செய்வது என்பன பிரியமான விசயங்கள்.
எப்போதோ பள்ளி நாட்களில் எழுதி நான் மட்டுமே படித்துப் பார்த்துக்கொண்ட நிலா கவிதையொன்றை பதிவில் இட்ட போது சின்னதாய் ஒரு மகிழ்ச்சி வரத்தான் செய்தது
முன்பெல்லாம் நீளமான கவிதைகள் எழுத மிக பிடிக்கும். அவ்வாறு எழுதியதில் மிகவும் விருப்பமானவை :
காதல் மான்கள் ~ புறநானூற்று மான் கவிதை புதுக்கவிதை நடையில்
இதயங்கள் ~ தாயின் அன்பை சொல்லும் கதையொன்று கவிதை வடிவில்
கடலைப் போட்டு பார் ~ வைரமுத்து பாணியில் விடலைகளின் கடலை பற்றி ஒரு கவிதை
ஆனால் பல சமயங்களில் நீள் கவிதைகள் எழுதுவது சிக்கல் தந்துவிடும். தொடக்கத்திலோ, முடிவிலோ எங்காவது சிக்கிவிடும். அதனாலேயே என் ஏடுகளில் இன்னும் உறங்குகின்றன பல முழுமையடையா கவிதைகள். அந்த பாதிப்பில் எழுதிய ஒரு கவிதை
சொல்லாமலே
தொடக்கமோ
முடிவோ
ஏதோ ஒன்று புலப்படாததால்
மனதிலேயே தங்கிவிட்டன
பல கவிதைகளும்
சில காதல்களும்
பிப்ரவரி 2007ல் ஆரம்பிக்கப்பட்ட காதல் கவிதைகளின் தொகுப்பு இது காதல் காலம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இந்த தொகுப்பை தொடர வேண்டும் என்பது என் விருப்பம் ;)
காதல் கார்த்திகை
சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன
விளக்குகள்
நீ இடப்போகும்
ஒளிப்பிச்சைக்காக
கார்த்திகைக்கு எழுதிய காதல் கவிதை இது। மொழியோடு நடந்த பயணத்தில் காதலின் சுவடுகளை காண "காதல்"
உரக்க சொன்னதில்லை நீ! என்ற என் கவிதையொன்று தான் முதன் முதலாக அச்சு வடிவில் ஒரு மாத இதழில் வந்தது। அதை சாத்தியமாக்கியது இணையம் தான் :)
சமுதாய கோபங்கள் பல இருந்தாலும் பெரும்பாலும் அதை வெளிப்படுத்த முடிவதில்லை। வலைப்பூவில் எழுதுவது அந்தக் கோபங்களுக்கு நல்ல ஒரு வடிகாலாக இருக்கிறது
கலைஞர் தொலைக்காட்சியில் நமீதா நடத்தும் தமிழ் கொலை பற்றிய பதிவிற்குத்தான் இதுவரை என் வலைப்பதிவில் அதிகம் வாசகர்கள் இருந்திருக்கிறார்கள்। நமீதா மட்டும் தான் தொலைக்காட்சிகளில் தமிழ் கொலை செய்கிறாரா என்றால் சத்தியமாய் இல்லை ;)
மேலும் என் எண்ணங்கள் சில...
உங்கள் அனைவரின் ஆதவரவோடும் இன்னும் ஒரு வாரத்திற்கு எனக்கும் உங்களுக்கும் பிடித்த நல்ல பதிவுகளை சுட்டிக்காட்ட முற்படுகிறேன்।
மீண்டும் பயணிப்போம்...
|
|
வாழ்த்துக்கள் பிரேம்
ReplyDeleteநிறைய படிப்பதற்கு படித்ததை பகிர்வதற்கும் வாய்ப்பளிக்கும் வலைச்சரம்!
நிறைய படிப்பதற்கு, பதிவுகள் எழுதி வாய்ப்பளித்திருக்கும் தமிழ் வலைப்பதிவுகள்!
நிறைய படிப்பதற்க்கு எப்பொழுதும் தயாராக இருக்கும் பதிவர்கள்
என எல்லாமே நிறைவாக இருக்கும் போது கண்டிப்பாக ஒரு நிறைவான வலைச்சர அனுபவமே உங்களுக்கும் கிடைக்கும் என்ற வாழ்த்துக்களுடன்...!
:)))
வாழ்த்துக்களுக்கு நன்றி ஆயில்யன் :)
ReplyDeleteஓ இங்க வந்துட்டீங்களா ப்ரேம்? வாழ்த்துக்கள். உங்களோட "உரக்க சொன்னதில்லை நீ" இந்த பதிவை கொடுக்கவில்லையே! எனக்கு பிடித்த ஒரு பதிவு.
ReplyDeleteவாப்பா ராசா,
ReplyDeleteஆமாம், இன்னும் ஒரு வார காலம் இங்கே தான் பயணம். அந்த கவிதை ஏற்கனவே புத்தகங்களிலும் வந்தாச்சு. தவிரவும் ஒரே அழுகாச்சியா இருக்குமே
இருந்தாலும் தம்பி சொல்றதுக்காக அதையும் சேர்த்திடுவோம்
வாழ்த்துக்கள் பிரேம்
ReplyDeleteதங்களின் காதல் மான்கள்,
இதயங்கள் கவிதை இப்பொழுது தான்
படித்தேன்
கதை
கவிதை வடிவில்
சொன்னது
அழகாக இருந்தது
வாழ்த்துக்கள் மாப்பி ;))
ReplyDeleteதிகழ்மிளிர், மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)
ReplyDeleteவாங்க மாப்பி வாங்க, எங்கே இன்னும் நம்மாளு வருகைப்பதிவு செய்யலியேன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன் ;)
ReplyDeleteவாங்க வாங்க!!!!
ReplyDeleteபிரேம் அண்ணா வாழ்த்துகள்!!!
தொடருங்கள் உங்கள் பயணத்தை!!!!
பிரேம் அண்ணே!வாங்க! நல்ல கவிதைகளை தேடித்தேடி எடுத்து தாங்க.ஆவலோடு காத்திருக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி எழில் :)
ReplyDeleteவாங்க அப்துல்லா.
ReplyDelete//நல்ல கவிதைகளை தேடித்தேடி எடுத்து தாங்க.ஆவலோடு காத்திருக்கிறேன்.//
கண்டிப்பா செய்திடலாம் :)
வாழ்த்துக்கள் பிரேம்குமார். :)
ReplyDeleteமகிழ்வாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் ப்ரேம்.. கலக்குங்க.. :)
ReplyDeleteமிக்க நன்றி ரிஷான் :)
ReplyDeleteமிக்க நன்றி சஞ்சய் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் ப்ரேம்குமார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteபிரேம்
ReplyDeleteநல்வாழ்த்துகள்
அனைத்துச் சுட்டிகளையும் படித்தேன், எண்ணங்கள் மற்றும் இது காதல் காலம் வேலை செய்ய வில்லை. சரி செய்க.
தொடர்க - சுட்டிகளைத் தருக
வாழ்த்துக்கள் பிரேம்
ReplyDeleteமிக்க நன்றி சதங்கா. தொடர்ந்து வாசியுங்கள்
ReplyDeleteமிக்க நன்றி. நீங்க நிஜாவே நல்லவரா? ;)
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரேம்
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி சீனா. சுட்டிகளை சரி செய்துவிட்டேன். மிக்க நன்றி :)
ReplyDeleteநரேஷ், வாங்க, வாங்க!! வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சிவா
ReplyDeleteவாழத்துக்கள் அண்ணன்...
ReplyDeleteமிக்க நன்றி தமிழன் :)
ReplyDelete