07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 11, 2008

தாத்தா!


ஏன்டா, உன்னை எத்தனை வாட்டி நான் தூக்கி இருக்கேன். என்னை ஒரு வாட்டி தூக்கினதுக்கே உனக்கு தோள்பட்டை வலிக்கிதா?" என்று தாத்தா கேட்பது நிச்சயம் நெடுநாட்களுக்கு ரணமாய் ஒலித்திருக்கும் குரல் அந்த குரலுக்கு சொந்தக்காரரை பற்றிய தன் நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளும் பதிவில்...

۞۞۞۞۞

ஏல.. நீங்க ஒருத்தனும் கலியாணம் பண்ணக் கூடாதுலே … பண்ணினாலும், பொண்டாட்டி செத்தப்புறம், சோத்துக்கு மருமக கையை நம்பக் கூடாதுலே..”, என்று வேண்டுகோள் வைக்கும் தாத்தாவுடனான பழக்கத்தை, பற்றி கூறும் நாஞ்சில் பாரதியின் பதிவு நிச்சயம் நிறைய புண்பட்டிருக்ககூடும் இந்த தாத்தாவின் மனம்!

۞۞۞۞۞

எங்க தாத்தா என்மேல ரொம்ப அன்பா இருப்பாரு. சின்ன வயசுல நான் எது கேட்டாலும் மறுக்காம வாங்கி கொடுத்துடுவாரு. அதே நேரத்துல ரொம்ப கோவக்காரரும் கூட.

நான் ஏதும் ஏடாகூடமா பண்ணிட்டா அடி பின்னிடுவாரு (பின்ன முளைச்சு 3 இலை விடாத போதே ஏகத்துக்கும் ஆட்டம் போட்டா என்ன செய்வார்களாம்!)

நி.நல்லவனின் தாத்தா கண்டிப்பாய் நிஜமாவே நல்லவர்தான்!

۞۞۞۞۞

உண்மையிலேயே எங்க தாத்தா எனக்கு ரொம்ப உசிரு! எனபதால் வருத்தமாக இருந்தது. அந்த வாரம் இருந்த மாதாந்திர பரீட்சைக்கு முதல் நாள் ஆரம்பித்த வருத்தம் பரீட்சை முடியும் வரை நீடித்து என்னால் ஸ்கூலுக்கே போக முடியவில்லை. அப்புறம் புண் பட்ட நெஞ்சை பூந்தி தின்று ஆற்றிக்கொண்டேன். இப்படியாக தொடரும் டுபுக்குவின் பதிவில் அழுவதா சிரிப்பதா என்று விளங்காத அளவுக்கு இருக்கும் இந்த பதிவு அதிகம் சிரிக்கலாம் ஏனென்றால் தாத்தாக்கு தொன்னூறு வயசு..கல்யாண சாவு !

۞۞۞۞۞

மிக உயர்ந்த கொள்கைகள். நேர்மை., இவைதான் தாத்தாவின் அடையாளங்கள் என தாத்தா பற்றிய தன் நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளும் வல்லிசிம்ஹன் அம்மாவின் பதிவு!

۞۞۞۞۞

தாத்தாக்கள் வரலாறாகவும், பேரன்கள் அந்த வரலாறைச் சுமப்பவர்களாகவும் இருப்பது யார் விட்ட சாபமோ? என்ற கேள்வியோட ஆரம்பிக்கும் கதை (உண்மைகதை!?)பேச்சு வழக்கில்...

கையில் பெரிய அரிவாளுடனும் நெருப்புத்தெறிக்கும் கண்களுடன் ஆக்ரோஷமாக வந்திருந்தது படம். அதையே பார்த்துக் கொண்டிருந்தவருக்குத் தமது இளமை காலம்

கண்முன் வந்து கனவு தந்து போனது. தமது தோற்றம் பற்றி அவருக்கே ஒரு கெத்து. பேரன் பூடத்தின் முன்பு நின்று 'தாத்தா தாத்தா என்று அழைத்தான்.
"ஏல சாமிடா அது... கும்புடு"
"இல்ல தாத்தா நீதான்"
'பூதத்தாருப்பா.... கும்புடலைனா சாமி அடிக்கும்"
'போ தாத்தா நீதான் அது"
"ஏய்..அப்படி சொல்லபடது. சாமிடா"
"நீதான் . உன்னய போயி கும்புடசொல்லுதியே தாத்தா....சேக்காளிய யாராவது கும்புடுவாங்களா?" .

۞۞۞۞۞

ரொம்ப நாட்களாக தன் தாத்தாவை பற்றி தான் வருந்தியதை,பதிவாக

பகிர்ந்துக்கொள்ளும் இவர் இறுதியில் தொடுக்கும் வினாக்கள்...

ஒரு மனிதன் என்னதான் நல்ல விதமாக மக்கள் மற்றும் பொருள் சம்பாதித்தாலும், கடைசி காலத்தில் மதிக்க படுவதில்லை என்பது பரவலாக நடப்பது ஏன்?

அறுபது, எழுபது வயதுக்கு மேல், ஒரு மனிதனுக்கு நிஜமான அரவணைப்பு தேவைப்படும் காலத்தில், அவனது சுற்றம் அவனை உதாசீனப் படுத்தினால், அவனுக்கு அவன் வாழ்ந்த வாழ்க்கையே கேள்விக்குறியாக, அர்த்தமற்றதாக ஆகி விடாதா?

உங்களையும் யோசிக்கவைக்கும்!

۞۞۞۞۞

பாட்டியும் தாத்தாவும் எப்போதுமே, இணைபிரியா இருவராய் இருந்து அவர்களோடு இணைந்திருந்து வாழவேண்டும் என்பதே பலருக்கும் ஆசையாக இருக்கும் அதேபோன்று நானும் பாட்டிக்கு வைத்த அதே வேண்டுகோளை தாத்தாவுக்கும் உங்கள் முன் வைக்கிறேன்!

7 comments:

  1. கலக்குறீங்க..... :)

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா வந்திருக்கு பதிவு. எப்படித்தான் இவ்வளவு பொறுமையா எல்லாப் பதிவுகளையும் படிச்சீங்களோ.

    அதில் எங்க தாத்தாவும் வந்துட்டாரே.ரொம்ப நன்றி ஆயில்யன்.

    ReplyDelete
  3. பாட்டி
    அக்கா
    தங்கச்சி
    அண்ணன்
    அண்ணி
    மச்சினிச்சி
    தம்பி
    அத்தை
    மாமா
    மாமி
    சித்தப்பு
    சித்தி

    ஆயில் உனக்கு வலைச்சரத்துல ஒரு வாரம் பத்தாது போல இருக்கே!?!?!?

    ReplyDelete
  4. ஆஹா இங்கயுமா?
    நன்றி ஆயில்ஸ் அண்ணே.

    ReplyDelete
  5. தாத்தா பதிவு சூப்பர்...

    தலைப்பை பார்த்ததும் நம்ம 'சூப்பர் ஸ்டார்' தாத்தா பற்றின்னு நினைச்சேன்....:-)))

    ReplyDelete
  6. அன்பு தம்பி ஆயில்யன்,
    தொடுக்கும் ஒவ்வொரு வலைச்சரமும் சூப்பர். நல்லா எழுதறே ராஜா..

    நம்ம ஊரு பேரைக் காப்பாத்தறீங்க..

    நம்ம ஊரு தாத்தா தான் தமிழ்லேயே முதல் நாவல் எழுதியது தெரியுமா? (பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகம் பிள்ளை).

    அன்புடன்,
    சீமாச்சு..

    ReplyDelete
  7. //Seemachu said...
    அன்பு தம்பி ஆயில்யன்,
    தொடுக்கும் ஒவ்வொரு வலைச்சரமும் சூப்பர். நல்லா எழுதறே ராஜா..

    நம்ம ஊரு பேரைக் காப்பாத்தறீங்க..

    நம்ம ஊரு தாத்தா தான் தமிழ்லேயே முதல் நாவல் எழுதியது தெரியுமா? (பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகம் பிள்ளை).

    அன்புடன்,
    சீமாச்சு..
    ///

    மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் அண்ணா!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது