07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 23, 2008

காதலும் சில கவிதைகளும்



இயற்கை அல்லது இறைவன் என்றதான ஒன்று இந்த உலகை எப்படி செதுக்கியிருக்கிறது என்ற ஆச்சரியத்தில் நான் அடிக்கடி மூழ்கிப்போவேன். உலகின் எந்த ஒரு முகமும் மற்றொன்று போலில்லை. எத்தனை பூக்கள், எத்தனை உயிரினக்கள், மரங்கள், மலைகள் என அனைத்தும் ஒவ்வொரு தனித்துவமாய்...ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. எத்தகைய அதிசயம்!

இந்த வன்படைப்புகள் மட்டுமின்றி மென் படைப்புகளான மனித மன உணர்வுகள் அதனினும் எத்தகைய வியப்பிற்குரியது!

அன்பென்ற ஒன்றும் அதன் பரிமாணங்களான காதல், தாய்மை, பாசம், விசுவாசம், பக்தி என அனைத்தும் என்னை அதிகமாக சிந்திக்க வைத்திருக்கின்றன.

காதலின் மகிழ்ச்சி மற்றும் வலி, தாய்மையின் நெகிழ்ச்சி, பாசத்தின் அரவணைப்பு மற்றும் பக்தியின் அன்பு நம்பிக்கை என இக்கூறுகள் இல்லாமல் போனால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடிவதில்லை.

இந்த பதிவில் நான் ரசித்த மிக காதல் கவிதைகள் பற்றிய பதிவுகள் சிலவற்றை சொல்ல முயல்கிறேன்.

உலகின் அதிகப்படியான மகிழ்ச்சியை மனதிற்கு தருவதும், அதிகப்படியான துக்கத்தை மனதிற்கு தருவதும் காதல் ஒன்றுதான். காதலின் அனுபவத்தை மிக அழகான வரிகளில் சொல்லும் ரிஷான்

நுனிவிரல் தீண்டி
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...
.................

ஆனால், இவரது கவிதைகளில் பெரும்பாலும் தனிமையின் வலியும், இனம்புரியாத சோகமும் மெல்லியதாக இழையோடும்.. இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையென ஆணித்தரமாக சொல்லுமிவரின் துயரங்களின் காரணமும் புரியாத புதிர்தான்.

எப்பொழுதும் இளமைக்கே உண்டான துடிப்புடனும் சிரிப்புடனும் இருக்கும் நம் பாசக்காரப்பய மீறான் மிகவும் சுவாரஸ்யமானவர். அவரது வலைப்பதிவில் அவர் இயற்கையை ரசிக்கும் அழகும், இயற்கையை காதலிக்கும் முறையும் என்னகு அடிக்கடி தாகூரின் கவிதைகளை ஞாபகப்படுத்தும்.

அவரது இளமைத்துள்ளல் மிகுந்த கவிதைகள் என்னை மிகவும் கவரும்..

I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் !
#
இதயத்தில் நீ குடிவந்த பிறகு
நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
துடிப்பை. !

என இவை அவ்வலைப்பூவின் பதம்..

வண்ணத்துப்பூச்சிகளாலும் நட்சத்திரங்களாலும் வலைப்பக்கத்தை அழகாக நிரப்பி, அங்கங்கே அழகான குட்டிக்கவிதைகளாலும் அலங்கரித்துள்ளார் தோழி திகழ்மிளிர்

காதல் என்னும் ஒரு
கனி மட்டுமே, எல்லா
காலங்களிலும்
காய்க்கும்.

அவர் பயன்படுத்தியுள்ள புகைப்படங்கள் மிகவும் அருமை.

மனது சிரிக்கும் போதெல்லாம் கொஞ்சமாய் கவிதை வாசிப்பேன். வலிக்கும் போதோ கொஞ்சம் அதிகமாய் வாசிப்பேன். ஆனால் எப்பொழுதும் தோழி பஹிமாஜஹானின் வலைப்பக்கத்தில் நான் குழம்பிய கண்களுடன் வாசித்துக்கொண்டிருப்பேன்.

அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன................

என இவ்விதமாகவே இவரின் கவிதைகளில் எல்லாம் மெல்லியதொரு சோகம் இழையோடியிருக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், இந்த வரிகளே அவரது கவிப்புலமைக்கு சான்றெனச் சொல்லலாம்.

காமம் இல்லாத காதல் சாத்தியமுண்டா என என்னை சிந்திக்கவைத்தது நண்பர் இலக்குவணின் இந்த கவிதை.

சில மதிப்பீடுகளோடு
உண்மைக்காதலைத்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்

அவர்களுக்கு
தெரியாமல் பார்த்துக்கொள்

எனக்கு
உன் முலை
பிடிக்கும் என்பதை

உனக்கு
என் உடல் வாசம்
பிடிக்கும் என்பதையும்

எந்த காதலிலும் காமம் கலந்திருப்பது உண்மைதான். அதன் அளவுவிகிதம் மாறலாமே ஒழிய, இல்லையென சொல்லுவதற்கில்லை.. காமம் காதலின் அங்கம்தான் என்பது உண்மையென்றாலும் அதை எத்தனை பேர் ஏற்றுகொள்வார்கள்? இதை எதிர்ப்பவர்கள் அதிகம் பேர் இருக்கலாம்.

மீண்டும் அடுத்தபதிவில் சந்திக்கிறேன்.

7 comments:

  1. அன்பின் கோகுலன் கண்ணன்,

    எனது வலைத்தளத்தையும்,கவிதையையும் இணைத்தமைக்கு நன்றி நண்பரே...!

    ReplyDelete
  2. நல்ல அழகான தொகு(டு)ப்பு கோகுலன் அண்ணா...

    கலக்குங்க

    ReplyDelete
  3. //இதயத்தில் நீ குடிவந்த பிறகு
    நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
    துடிப்பை. !//

    எலேய் மீறானு நல்லா தான் யோசிக்கிறீரு..

    மெரினாவில பாத்திட்டீரோ

    ReplyDelete
  4. திகழ்மிளிர் மற்றும் இலக்குவண் கவிதை படித்திருக்கிறேன். மற்றவைகளை இனிமேல் தான் படிக்கவேண்டும்.

    ReplyDelete
  5. மிக்க நன்றி நண்பர் ரிஷான் அவர்களே!

    ReplyDelete
  6. நன்றி நணபா தணிகை..

    நம்ம மக்கா மீறான் ன்னா சும்மாவா?

    ReplyDelete
  7. பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி நல்லவன் !!

    நீங்க நல்லவன் னு சொன்னாலே நான் ஒத்துக்கிறேங்க.. (நிஜமா தேவையில்லீங்க) :)))))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது