07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 11, 2008

பாட்டி!


பாட்டி செருப்பாய் தேய்ந்தாய் என்றோ,
மெழுகுவர்த்தியாய் உருகினாய் என்றோ,
தோணியாய் துணையாய் நின்றாய் என்றோ,
உன்னை ஜடப்பொருளாய்வர்ணிக்கமாட்டேன்.

நீ நிஜம்..
இரத்தமும், சதையுமான நிஜம்..நீ
பாட்டி செருப்பாய் தேய்ந்தாய் என்றோ
மெழுகுவர்த்தியாய் உருகினாய் என்றோ
தோணியாய் துணையாய் நின்றாய் என்றோ
உன்னை ஜடப்பொருளாய்வர்ணிக்கமாட்டேன்.
நீ நிஜம்..
இரத்தமும், சதையுமான நிஜம்..நீ என்று பாட்டியை நினைத்துவ்உருகும் இவரின் பதிவு

۞۞۞۞۞

பக்தி சுலோகங்களால் திட்டு வாங்கியவரின்,பாட்டி பற்றிய நினைவுகளை தரும் இந்த பதிவிலிருந்து...

அவளுக்கு எதெல்லாம் சந்தோஷம் தரக்கூடும், வாழ்வை ரசிக்கும்படி செய்யக்கூடும் என்று பல நாள் யோசித்திருக்கிறேன். விடை தெரியவில்லை. எப்போதும் சிடுசிடுப்புடன், எப்போதும் சுலோகங்கள் சொல்லிக்கொண்டு, எப்போதும் வலிகள் பற்றிய புராணம் பாடிக்கொண்டு, எப்போதும் எல்லாரையும் விமரிசித்துக்கொண்டு, எப்போதும் தன் பாஸ் புக்கைப் பார்த்துக்கொண்டு, எப்போதும் சாகமாட்டேன் என்று அறிக்கைவிட்டுக்கொண்டு…

۞۞۞۞۞

சின்ன வயதில் பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்தவரின் சிறுவயது அனுபவங்களாய் பக்கத்து வீட்டு பாட்டியாக இருந்தாலும் கூட நினைவுகளில் அன்பும் பாசமும் பொங்க பார்க்கும் டாக்டரம்மாவின் அபாயத்துப்பாட்டி
பாட்டிக்கு எதற்கு "அபாயத்து பாட்டி" ன்னு பெயர் வச்சாங்கன்னு எனக்கு தெரியாது. பெண் பிள்ளைகள் அதிகம் இருந்த எங்கள் வீட்டில் யாருக்கும் ஒரு அபாயமும் வராமா எங்களையெல்லாம் பார்த்துகிட்டதற்க்காகவான்னு இன்னும் எனக்கு பதில் தெரியல.......

۞۞۞۞۞

எண்பது வயதை தாண்டி விட்டால், வயதானவர்கள் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள். குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும் நாம், வயதானவர்களை அலட்சியப்படுத்துகிறோம்.

பெரும்பாலோருக்கு வயது ஆக, ஆக உடலே சுமையாக மாறிவிடுகிறது. வீட்டில் பேச யாரும் இருப்பதில்லை. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை ஏறக்குறைய ஜெயில்தான்.

தன்னுடைய அதிகாரங்களை இழந்து, பிறர் கையை எதிர்பார்த்து வாழும் வாழ்க்கை அனேகருக்கு கசந்துப் போய்விடுகிறது.

மரணத்தை எதிர் நோக்கி கசப்புடன் வாழ் நாளை தள்ளுபவர்களை காணும்பொழுது வருத்தமாய் இருக்கிறது.

ஆனால் சில வயதானவர்கள், வாழ்க்கையை அனுபவிப்பது பார்க்க பார்க்க சுவாரசியமாய் இருக்கும். குழந்தைதனமான சுயநலம் ஏற்பட்டு தன்னுடைய செளகரியத்தை மட்டுமே சிந்திக்கும் நிலைமைக்கு வந்துவிடுவார்கள். பார்க்கும்பொழுது, நாமும் அந்த வயதில் அப்படிதான் மாறி விடுவோமோ என்ற எண்ணம் எனக்கு தோன்றும்.

இந்த கதை நான் மிகவும் அனுபவித்து எழுதியது. காரணம் இத்தகைய கிழவிகளை வாழ்க்கையில் பார்த்ததுதான் :-)

۞۞۞۞۞

பாட்டிக்கு, வெளிநாட்டிலிருந்து எழுதும் அன்பு பேரனின் கடிதத்தில்...


சில நாட்கள் என் அம்மா எனக்கு பிடிக்காத உணவு செய்தப் பொழுது, எனக்கு மிகவும் பிடித்த உணவுகளையும், வார விடுமுறையில் நீ செய்த ரவா கேசரியும், பஜ்ஜியும் என் நாவில் இன்னுமும் இனிக்கிறதே...

۞۞۞۞۞

பாட்டியின் இழப்பில், நிறையவே இழ்ந்த நினைவுகளை திரும்ப நினைக்கும் இவரின் பதிவு
விடுமுறை முடிந்து வந்த பொழுது என் கையில் 100 ரூபாய் திணித்து, "குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடு" என்று சொன்ன பாட்டியின் முகம்

۞۞۞۞۞

என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் இந்த பதிவிலிருந்தும்

பாட்டி இதையெல்லாம் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டாள். அந்த கருப்பு ஞாயிற்றுக்கிழமையின் இருட்டு வேளையில் எந்த டாக்டரையும் தொந்தரவு செய்யாமலேயே காசி தண்ணீரை ஒரு மடக்கு குடித்துவிட்டு, சொந்த பந்தங்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும்போதே விழியோரம் ஒரு துளி கண்ணீரையும் மூக்கோரமாய் ஒரு துளி ரத்தத்தையும் சிந்திவிட்டு நிரந்தரமாக தூங்கிப்போனாள்.

۞۞۞۞۞

இந்த பதிவிலும் ஒரு பொதுவான வேண்டுகோள்தான் தாயின் தாயையோ அல்லது தந்தையின் தாயையோ சந்திக்காமல் இருந்திருக்கமாட்டார்கள் பெரும்பாலானவர்கள்!

சில சமயங்களில் வெறுப்பினை தரும் வகையில் இருந்திருந்தாலும் (தலைமுறை இடைவெளியால்) கூட ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாமும் நம் பாட்டிக்கு அவள் நினைத்தை செய்யாமல் விட்டுவிட்டோமே! என்று ஏங்கிய தருணங்களை பதிவுகளாய் தாருங்களேன்! பலரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளவர்கள் வாழ்ந்து பார்க்கவும் அது உதவக்கூடும்!

3 comments:

  1. ஆயில்யன், இதோ சற்று நீளமான என் புகுந்த வீட்டுப் பாட்டியைப் பற்றிய பதிவு.
    அவள் கொடுத்தவள். என்றும் யாரிடமும் வாங்கியவள் அல்லள்.
    இறக்கும் போது இரண்டே இரண்டு புடவைகள் தான் அவள் சொத்து.

    http://naachiyaar.blogspot.com/2006/09/blog-post_115777740550360910.html

    ReplyDelete
  2. வல்லியம்மா தங்களின் பதிவினை கண்டேன்

    /சாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்//

    கொஞ்சம் அழுதேன்!

    ஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்டஅறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து
    இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார். இத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.

    உண்மையிலேயே நீங்கள் கொடுத்துவைத்தவர்தான்! அதோடு மட்டுமல்லாமல் இத்தனை செய்திகளையும் உங்கள் மூலம் வெளியே தெரிந்து பல உள்ளங்களில் ஒரு பாதிப்பினை தந்தும் இருக்கும்!

    ReplyDelete
  3. இதே பின்னூட்டம் அந்த பதிவிலும் இட்டிருக்கிறேன்! தெரிந்திராத பலருக்கு தெரியட்டுமே அந்த பதிவு

    மற்றுமொருமுறை நன்றிகள்

    தலைப்பில் தொடர்புடைய ஆனாலும் விட்டுப்போன பதிவுகளின் தொடர்பினை தரும் வல்லி அம்மா போன்றோர்களால்தான் வலைச்சரத்தின் நோக்கம் அடிப்படையையே பூர்த்தி ஆகும்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது