07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 12, 2008

எழுத்தறிவித்தவன் இறைவன்!


ஆசிரியர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பும், மரியாதையும், பண்பும், வைத்து இருப்பதன் காரணந்தான் என்ன? அவர்களுக்கு தெரிந்த பாடங்களை மிக தெளிவாக நடத்துவது, அவர்களுடைய வெளி உலக பார்வை, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களிடம் உள்ள ஏதோ ஒர் தனித்துவம் மற்றும் மனித நேயமாககூட இருக்கலாம் அல்லவா? என்று ஆத்மார்த்தமாக தம் எண்ணங்களை வெளிப்படுத்தும், சிவா அண்ணன் எங்க ஊருக்காரர் என்பதையும் தாண்டி அவர் குறிப்பிடும் அனைத்து ஆசிரியர்களிடம் பாடம் கற்று பள்ளி பருவத்தை கடந்து வந்திக்கும் எனக்கு ஆசிரியர்கள் பற்றிய அருமை பெருமைகளை கண்டிப்பாக உணரமுடிகிறது!

۞۞۞۞۞

ரசிக்க முடியாமல் போயிருக்க வேண்டியவனை ரசிகவ் ஆக்கிய பெருமை இவருக்குச் சாரும் என்று தம் கவிதை உலகுக்கு தொடர்ந்து தம்மை தூண்டிக்கொண்டிருந்த ஆசிரியரைப்பற்றிய ரசிகவ் ஞானியரின் பதிவு

۞۞۞۞۞

படித்த நாட்களின் படிப்போடு சேர்த்து பிடித்துப்போன ஆசிரியர்கள் அவர்களை காலம் மாறினாலும் கூட மறக்காமல் நினைவில் நிறுத்திக்கொண்டு அவ்வப்போது விசாரிப்புக்களோடு வலம் வரும் சில பல மாணவர்களில் இவரின் பணி என்னை மகிழ்ச்சிப்படசெய்த ஒன்று இது பற்றி அவரின் பதிவிலிருந்து...

எவ்வளவோ ஆசான்களைப் பெற்றிருந்தும்.. இவரிடம் ஒவ்வொருவரும் தமிழ் படித்திருந்தால் தான் ஒரு ஆசிரியருக்குரிய இலக்கணம் காண முடியுமென்று இவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும் உளமாறப் போற்றிக் கூற முடியும்...

۞۞۞۞۞

ஆசிரியரை மிக்க ஆர்வத்துடன் வரவேற்ற கதையினை கூறும் இவரின் பதிவில்
மெல்லிய உருவம், பொது நிறத்தைக் கொண்டவர். சுமாரான உயரம். ஆனால், அவர் கண்களில் மட்டும் ஒரு ஒளி. அத்தனை மாணவர்களையும் கட்டிப் போடக் கூடிய ஏதோ ஒரு கவர்ச்சி. !

இந்த மாணவியின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில்,ஆசிரியர் அழகாய் வாழ்த்தி அனுப்பிய வரிகளை பாருங்களேன்!

இறை நம்பிக்கையும், உண்மையும் மனித வாழ்வினைச் சிறப்புடன் பார்க்க உதவும் இரு கண்கள். இவைகட்கு ஒளி கொடுப்பது அன்பு. எனவே அன்பெனும் ஒளிகொண்டு, இறை நம்பிக்கை, உண்மை எனும் இரு கண்களாலும் மனித வாழ்க்கைப் பாதையில் நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி வீறுநடை போடுங்கள். வாழ்வின் வெற்றி உங்களுக்கே!

۞۞۞۞۞

இருந்த இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோள் கேள்வியாக....!

நீங்களும் அவ்வப்பொழுது உங்கள் ஆசிரியரை நினைத்து பார்ப்பது உண்டா?

4 comments:

  1. அடடா சூப்பருங்க, இப்பத்தான் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற முந்தைய பதிவுகளை பார்த்தேன். அதுக்குள்ள ஆசிரியர்களை பத்தின நெகிழ்ச்சியானப் பதிவுகளை போட்டு எல்லாரையும் flashback போக வச்சிட்டீங்க. எல்லாத்தையும் படிச்சிட்டு மறுபடியும் வருகிறேன்.

    ReplyDelete
  2. /
    rapp said...

    அடடா சூப்பருங்க, இப்பத்தான் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற முந்தைய பதிவுகளை பார்த்தேன். அதுக்குள்ள ஆசிரியர்களை பத்தின நெகிழ்ச்சியானப் பதிவுகளை போட்டு எல்லாரையும் flashback போக வச்சிட்டீங்க. எல்லாத்தையும் படிச்சிட்டு மறுபடியும் வருகிறேன்.
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  3. ஆசிரியப் பணி அறப்பணி
    அதற்கே உனை அர்ப்பணி

    ஆசிரியர்களை மதிக்காத மனிதன் உருப்பட மாட்டான்.

    ஆசிரியர்களைஇ நினைக்க வேண்டும்

    ReplyDelete
  4. அர்பணிப்புள்ள ஒரு பணி தான் ஆசிரியர் பணி.. அதை அழகான இடுகைகளோடு தந்ததுக்கு நன்றி... :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது