இதுவும் கே.ஆர்.எஸ் அவர்களின் வலைப்பூ.
இங்கே அவர் திருவேங்கடமுடையானை துயிலெழுப்பும்
சுப்ரபாதத்தை பதிவாங தந்திருக்கிறார்.
என்ன அழகான விளக்கம்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய வலைப்பூ.
ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம்
My Lord! No morning alarm; Better wake up!:-)
இப்படி எல்லாம் சொல்வதனால் எழுந்திருப்பாரா
பகவான். சுப்ரபாதம் பாடித்தானே திருப்பள்ளியெழுச்சி.
விடிகாலை சுமார் 3:00 மணி. கூட்டம் அதிகம் இல்லை!
குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்; இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம்.
இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலுக்கு அருகே!
கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாமும் நிற்கிறோம்.
துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.
மேற்கொண்டு அனுபவித்து படிக்க, ரசிக்க இங்கே
********************************************************
ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்
இதற்கான விளக்கப் பதிவுக்கு இங்கே.
********************************************************
திருமலையில் சுப்ரபாத சேவைன்னே ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை சுமார் 02:30 மணிக்கு துவங்கும் சுப்ரபாதம்.
அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் நடை சாத்திக் கோவிலை மூடி இருப்பாங்க.
சடக்குன்னு அடுத்த நாளுக்காக, மீண்டும் திறந்திடுவாங்க! கோவிலில் முதல் தரிசனம் யாருக்குத் தெரியுமா?
அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனை தம்பூராவில் இசைக்கப்படுகிறது;
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தமிழ்த் திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாசுரமும் அப்படியே இசைக்கப்படுகிறது! - வேறு மொழிச் சத்தங்களோ, கோஷங்களோ ஏதும் இல்லை!
மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்து ஓசை எழுப்புகின்றன;
காற்றில் நெய் தீபத்தின் மணமும், பச்சைக் கர்ப்பூரத்தின் வாசனையும் மூக்கைத் துளைக்கிறது!
இதோ.....திருக்கதவம் திறக்கப்படுகிறது!
எல்லோர் கண்களும் எக்கி எக்கி, எம்பெருமானைச் சேவிக்கத் துடியாய்த் துடிக்க...
அடச்சே!....வெள்ளைத் திரை ஒன்று போடப்பட்டுள்ளதே! நாம் காண முடியாதா? - முடியாது...முதல் தரிசனம் வேறு யாரோ ஒருவருக்கு! - யாரப்பா அது?
சஸ்பென்ஸ் தாங்கலியா..... இங்க வந்து படிங்க.
நமக்கு மட்டும் தான் எல்லாத்துக்கும் பாட்டா?
இறைவனுக்கும் பாட்டுதான்.
இறைவனை ஆராதிப்பது பாட்டால் தான்.
இசையால் இணைவோம், இசையாய் இருப்போம்
இப்படி ஒரு வலைப்பதிவை கே எஸ் ரவிகுமார் சாரி கே ஆர் எஸ் நடத்துவது இன்றைக்குத் தான் தெரியும் ஆறுமாசமா பதிவே இல்லையே?
ReplyDeleteவாங்க பிரபா,
ReplyDeleteஎன்ன மீ த பர்ஸ்டூன்னு சொல்லிக்கலை.
:)
சுப்ரபாத்த்திற்காகத்தானே இந்த வலைப்பூ.
ReplyDeleteசுபரபாத விளக்கம் முடிந்த உடன் பதிவை நிறுத்தி விட்டாருன்னு நினைக்கிறேன்.
சுப்ரபாத்த்திற்காகத்தானே இந்த வலைப்பூ.
ReplyDeleteசுபரபாத விளக்கம் முடிந்த உடன் பதிவை நிறுத்தி விட்டாருன்னு நினைக்கிறேன்.
//
எப்பவும் சுவைப்பதுதானே சுப்ரபாதம்! ஒரு தரம் சாப்பிட்டதோடு நிறுத்துனா எப்படி?
///புதுகைத் தென்றல் said...
ReplyDeleteசுப்ரபாத்த்திற்காகத்தானே இந்த வலைப்பூ.
சுபரபாத விளக்கம் முடிந்த உடன் பதிவை நிறுத்தி விட்டாருன்னு நினைக்கிறேன்.///
மேல உள்ள கமெண்ட் ல ரிப்பீட்டேய்....விட்டுப்போச்சு:)
ReplyDelete