Sunday, July 27, 2008

புதிய பரிமாணங்களுடன் புதிய பரிணாமங்கள்- புதிய முயற்சிகள்

தமிழ் வலையுலகில் சாதாரணமாக கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நகைச்சுவை பதிவுகள், மொக்கை பதிவுகள், ஆன்மீக பதிவுகள் என்று சரளமாக கிடைத்தாலும் சில அரிய முயற்சிகளும் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. இன்றைய பதிவில் அப்படிப்பட்ட சில முயற்சிகள் இன்று....

புதுவண்டின் புதிய முயற்சி

அற்புதமான முயற்சி. தொழில்நுட்பத்தை அழகிய முறையில் பயன்படுத்தும் முயற்சி. அழகான படங்களைக் கொண்டு கதை சொல்லும் முயற்சி இது. வண்டு, சிண்டு, மற்றும் நாதன் ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் இந்த கதையில். அற்புதமாக இருக்கிறது. அழகு குரலில் கதையைக் கேட்க வேண்டுமே..... நீங்களும் கண்டிப்பாக பார்த்து ஊக்கமளியுங்கள். இதை பார்த்த உடன் தொழிநுட்பங்களைத் தெரிந்து கொண்டு தெண்டமாக இருக்கிறோமோ என்ற ஃபீலிங் வந்து விட்டது. வாழ்த்துக்கள் புதுவண்டு.

புகைப்படக்கலை மற்றும் புகைப்படப் போட்டி

தமிழில் புகைப்படக் கலையைப் பற்றி நமக்கு அறியத் தரும் பதிவு. புகைப்படக் கலையை தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் உருவானது. பதிவர்களில் திறமை வாய்ந்த புகைப்படக்காரர்கள் இணைந்து நடத்துகின்றனர். புகைப்படம் எடுக்க வேண்டிய முறை, புகைப்படக் கருவிகள், உபகரணங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாகத் தருகின்றனர். மாதந்தோறும் நடைபெறும் புகைப்படப் போட்டி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெஞ்சின் அலைகள்
சிறந்த அறிவியல் அறிஞரும், தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட ஜெயபரதன்B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada அவர்களின் தளம் தான் நெஞ்சின் அலைகள். அறிவியல், வானவியல் சம்பந்தமான பல விடயங்களையும் தனது தளத்தில் அழகிய தமிழில் நமக்கு விளக்குகிறார். சமீபத்தில் நாசாவினால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட போனிக்ஸ் தளவுளவி அங்கு நடத்திய பணிகளை தனது தளத்தில் விளக்கினார். பல தமிழ் ஊடகங்கள், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்தும் விளங்கிக் கொள்ள இயலாத விடயங்களை விளக்கியது அருமையாக இருந்தது. பிரபஞ்ச பால் வெளியில் இருக்கும் மனிதனுக்கே புலப்படாத புதிர்களை தனது பதிவில் விளக்கிக் கொண்டு வருகின்றார். விஞ்ஞான மேதைகள் பற்றிய தொடர் பல அறிஞர்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. அணுசக்தி பற்றிய விடயங்களையும் தருகின்றார். அவ்வப்போது நிகழும் விண்வெளி ஆராய்ச்சி முன்னேற்றங்களை தமிழில் தொகுத்து வழங்கி வருகின்றார்.

விஞ்ஞானக்குருவி

விஞ்ஞானக் குருவி - இது தமிழில் அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம், இயற்கை தொடர்பான பல விடயங்களையும் தமிழில் தருகின்றது.

தமிழ் நெஞ்சம்
தமிழ் நெஞ்சம் கொஞ்சம் வித்தியாசமானவர். தான் படித்த, ரசித்த, பயன்படுத்திய, மற்றவர்களுக்கு உபயோகமாகும் என நினைக்கும் எந்த விடயத்தையும் நமக்கு அளித்தே தீருவார். தினசரி 5 முதல் 10 பத்து பதிவுகள் கூட இடுவார். இணையம் தொடர்பான ஏதாவது தேடல் இருந்தால் முதலில் இங்கு பார்த்து விட்டு தான் மற்ற இடங்களுக்கு போவேன். பல நல்ல பயனுள்ள இணைய தொடர்பான பதிவுகளைத் தந்துள்ளார்.

24 comments:

  1. ஆஹா புதுவண்டின் கதைகள் மிக அருமை. நல்ல முயற்சி.

    ReplyDelete
  2. நானும் PIT க்கு ஒரு போட்டோ அனுப்பனும் என்று ரொம்ப நாளா முயற்சி பண்ணுறேன். ஒரு போட்டோவும் தேறல:(

    ReplyDelete
  3. வாரம் முழுவதும் நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தும் தமிழ்பிரியனுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஆகா ஆகா - அருமை - புதிய முயற்சிகளைத் தேடிப் பிடித்து, பதிவிட்டமை பாராட்டத்தக்க செயல் - உண்மையிலேயே கதை நன்றாக இருக்கிறது

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வாரம் முழுவதும் நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்திய தமிழ்பிரியனுக்கு நன்றி.

    ReplyDelete
  6. ஜெயபரதன் அய்யாவின் பதிவுகள் அரிய தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. படிக்க வேண்டும் - புரிந்து கொள்ள முயல வேண்டும்

    ReplyDelete
  7. cheena (சீனா) said...
    ஜெயபரதன் அய்யாவின் பதிவுகள் அரிய தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. படிக்க வேண்டும் - புரிந்து கொள்ள முயல வேண்டும்

    //

    மறுக்கா கூவு

    ReplyDelete
  8. மிக அருமை. நல்ல முயற்சி.

    ReplyDelete
  9. வாரம் முழுவதும் நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தும் தமிழ்பிரியனுக்கு நன்றி.

    ReplyDelete
  10. எனக்கொரு பதில் சொல்லியாகணும்.வல்லின மெல்லின சட்டங்களையெல்லாம் எடுத்து வச்சு அம்பேல் ஆகிறேங்கலே தவிர ப் க்கு இன்னும் பதிலே சொல்லமாட்டீங்கிறீங்க:)

    ReplyDelete
  11. ///ராஜ நடராஜன் said...

    எனக்கொரு பதில் சொல்லியாகணும்.வல்லின மெல்லின சட்டங்களையெல்லாம் எடுத்து வச்சு அம்பேல் ஆகிறேங்கலே தவிர ப் க்கு இன்னும் பதிலே சொல்லமாட்டீங்கிறீங்க:)///
    அண்ணே! இது பொது இடம்! என்னோட இடத்துக்கு வாங்க உங்களுக்கு ‘பதில்' கொடுக்கிறேன்.... :(

    ReplyDelete
  12. தமிழ் பிரியன்,

    நலமா? :)

    மிக்க மகிழ்ச்சி. அதிக உற்சாகத்தையும் ஊக்கத்தையும் பொறுப்பையும் தருகின்றது. :))

    நெஞ்சின் அலைகள், விஞ்ஞானக் குருவி - எனக்கு எளிதாய்ப் புரியாத ஆழ்ந்த விஞ்ஞானத்தை இனி புரிந்து அறிய வாய்ப்பளிக்கும். நன்றி.

    தமிழ் நெஞ்சத்திற்கும் மிக்க நன்றி.

    நம்ம PIT-காரவுகளை நான் மாதா மாதம் கொடுமைப் படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன். :D :D

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. ///நிஜமா நல்லவன் said...

    மீ த பர்ஸ்ட்டு?///
    ஆமாண்ணே நீங்களே தான்... :)

    ReplyDelete
  14. ///நிஜமா நல்லவன் said...

    ஆஹா புதுவண்டின் கதைகள் மிக அருமை. நல்ல முயற்சி.///
    ஆமா நாமும் ஆர்வமூட்டுவோம்

    ReplyDelete
  15. ///நிஜமா நல்லவன் said...

    நானும் PIT க்கு ஒரு போட்டோ அனுப்பனும் என்று ரொம்ப நாளா முயற்சி பண்ணுறேன். ஒரு போட்டோவும் தேறல:(///
    நீங்க போட்ட நாற்காலியே அழகா இருந்தது

    ReplyDelete
  16. ///நிஜமா நல்லவன் said...

    வாரம் முழுவதும் நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தும் தமிழ்பிரியனுக்கு நன்றி.///
    நன்றி பாரதி!

    ReplyDelete
  17. ///cheena (சீனா) said...

    ஆகா ஆகா - அருமை - புதிய முயற்சிகளைத் தேடிப் பிடித்து, பதிவிட்டமை பாராட்டத்தக்க செயல் - உண்மையிலேயே கதை நன்றாக இருக்கிறது

    நல்வாழ்த்துகள்///
    நன்றி சீனா சார்!

    ReplyDelete
  18. ///ஆயில்யன் said...

    வாரம் முழுவதும் நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்திய தமிழ்பிரியனுக்கு நன்றி.///
    நன்றி ஆயில்யன்!

    ReplyDelete
  19. ///cheena (சீனா) said...

    ஜெயபரதன் அய்யாவின் பதிவுகள் அரிய தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. படிக்க வேண்டும் - புரிந்து கொள்ள முயல வேண்டும்///
    சுலபமாக இருக்கும்... ஓரிரு முறை படித்தால் பழகி விடும்... :)

    ReplyDelete
  20. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    cheena (சீனா) said...
    ஜெயபரதன் அய்யாவின் பதிவுகள் அரிய தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. படிக்க வேண்டும் - புரிந்து கொள்ள முயல வேண்டும்

    //

    மறுக்கா கூவு///
    நானும் மறுக்கா கூவிக்கிறேன்... :)

    ReplyDelete
  21. ///மங்களூர் சிவா said...

    மிக அருமை. நல்ல முயற்சி.///
    நன்றி சிவா அண்ணே!

    ReplyDelete
  22. ///மங்களூர் சிவா said...

    வாரம் முழுவதும் நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தும் தமிழ்பிரியனுக்கு நன்றி.///
    நன்றி அண்ணே!

    ReplyDelete
  23. /// NewBee said...

    தமிழ் பிரியன்,

    நலமா? :)

    மிக்க மகிழ்ச்சி. அதிக உற்சாகத்தையும் ஊக்கத்தையும் பொறுப்பையும் தருகின்றது. :))

    நெஞ்சின் அலைகள், விஞ்ஞானக் குருவி - எனக்கு எளிதாய்ப் புரியாத ஆழ்ந்த விஞ்ஞானத்தை இனி புரிந்து அறிய வாய்ப்பளிக்கும். நன்றி.

    தமிழ் நெஞ்சத்திற்கும் மிக்க நன்றி.

    நம்ம PIT-காரவுகளை நான் மாதா மாதம் கொடுமைப் படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன். :D :D

    வாழ்த்துகள்!///
    வாழ்த்துக்கள் நாங்க சொல்லனும்... அழகா ஆரம்பிச்சு இருக்கீங்க,... நிறைய செய்ங்க நாங்க இருக்கோம்...:)

    ReplyDelete