Saturday, July 26, 2008

வலைச்சரம் - புதிய வரவுகள் ஒரு பார்வை

தமிழ் பதிவுலகில் பல புதிய பதிவர்கள் வருவதும், சிறப்பான படைப்புகளைத் தருவதும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. இன்று நம்மிடையே உலவும் புத்தம் புதிய பதிவர்களின் சில அறிமுகங்கள்....

ராமலட்சுமி
நெல்லையைச் சேர்ந்த ராமலட்சுமி பெங்களூரில் முத்துச்சரம் தொடுக்கிறார். சமீபத்தில் பதிவுலகிற்கு வந்தாலும் இணைய குழுமங்களில் இருந்ததால் எழுத்துக்களில் நல்ல தேர்ச்சி இருக்கின்றது. சமூக நோக்கில் கவிதைகளும் எழுதுகின்றார். திண்ணை நினைவுகளை அழகாக பகிர்ந்து கொண்டவர்களில் ஒருவர். நிச்சயமாக நல்ல படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

பரிசல்காரன்
வித்தியாசமான ஆளுமை உள்ள பதிவர் பரிசல்காரன். தனது செம்மையான எழுத்துக்களால் அனைவரையும் கவர்ந்து விட்டார். நல்ல அவியல்களைத் தருகின்றார். சென்ஷியைத் தேடிய பதிவு கியூவில் நின்னு சாகுங்க, சாமியார் உருவாகிறார் போன்றவை சிறந்த நகைச்சுவை பதிவுகள். நட்பு பற்றிய கதை நெஞ்சைத் தொட்டது.

புதுகை அப்துல்லா
புதுகைத் தென்றல் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு. கவிதையெல்லாம் எழுதி கலக்கி விட்டார். இரயில் நினைவுகள் சுகமானது. காதல் பற்றிய அவரது உணர்வு நெஞ்சைத் தொட்டது. இவரிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.


கயல் - வருண்
தமிழ் மணத்தில் தற்போதைய ஹாட் டாக். கற்பு பற்றிய இவர் எழுதிய பதிவுகள் புதிய பல உரையாடல்களுக்கு வழி வகுத்தன. காதல் கல்வெட்டு தொடர் வித்தியாசமானது. சில நேரங்களில் மொக்கையும் கிடைக்கின்றது. தான் சார்ந்து இருக்கும் தளத்தை அறிந்து பதிவிடும் போது சிறந்த படைப்புகளைத் தருவார் என நம்பலாம்.


வெண்பூ
ஜூனில் இருந்து வலை பதிகின்றார். வந்த வேகத்தில் தமிழ் பதிவுகளை புரிந்து கொண்டு விட்டார். பின நவீனத்துவவாதியாக ஆகி விடுவதற்கான அறிகுறியும் தெரிகின்றது. காமெடியும் இயல்பாக வருகின்றது

Sri
கரையோரக் கனவுகளுக்கு சொந்தக்காரர். இயல்பான கவிதைகளில் மிரட்டுகிறார். கவிதை போன்று கதை எழுதுகிறார். புனைவும் வருகின்றது.

பொடிப்பொண்ணு
பொடிப் பொண்ணு நித்யா வித்தியாசமான ரசனை உள்ளது. குறும்படம் எடுத்தவராம். படிக்கட்டு பயணத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பாடல்களில் நாம் கவனிக்க தவறிய விடயங்களைக் கவனித்துள்ளார். விஜய டி,ஆரை கடிக்க வேற செய்றாங்க....


விஜய்
கோவை விஜய் ஏபரல் முதல் பதிந்தாலும் நிறைய பதிவர்களின் பதிவுகளின் பின்னூட்டங்களாலேயே பிரபலமாகி விட்டார். சுற்றுப்புறச் சூழல் போராளி பற்றிய பதிவு நிறைய பேரை கவர்ந்தது. கோவையில் தேசப்பிதாவின் மறுபிறப்பு என்னை கவர்ந்தது.

தாமிரா
தாமிரா கவிதைத் தொகுப்புகளுக்கு தனியாக பதிவு வைத்துள்ளார். இது தவிர அலிபாபாவும் 108 அறிவுரைகளும் என்ற இடத்தில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார். கல்யாணமாகாதவர்களுக்கு எச்சரிகை 1, 2 வேறு வழங்குகின்றார். ரயில் நிலையத்தில் நன்றாக இருந்தது.

கார்த்திக்
ஜூலையில் பதிய வந்தாலும் அதற்குள் நிறைய நல்ல படைப்புகளைத் தந்துள்ளார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்தியாசமான சிந்தனை. விடை தருவது நல்ல கவிதை. தோல்வியை வெற்றியாக்க உந்தும் இந்த பதிவு அழகு.


rapp
வெட்டி ஆபிசராம் இவர். கும்பகோண குழந்தைகளுக்கான அஞ்சலி பதிவு. டீவி சீரியல்களைப் பற்றிய விவாதம் நன்றாக இருந்தது. குத்து பாட்டு மெலடி பாட்டு ஒப்பீடு பாருங்கள். திருமண முறை பற்றிய அஞ்ஞாநி பதிவும் கவர்ந்தது.

இன்னும் சிறப்பாக எழுதக் கூடிய நிறைய பதிவர்கள் இருந்தாலும் நேரமில்லாததால் இத்தோடு நிறைவு செய்கின்றேன். தமிழ் கூறும் நல்லுலகிற்கு இவர்கள் சிறந்த படைப்புகளை அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

52 comments:

  1. //ஜூனில் இருந்து வலை பதிகின்றார். வந்த வேகத்தில் தமிழ் பதிவுகளை புரிந்து கொண்டு விட்டார். பின நவீனத்துவவாதியாக ஆகி விடுவதற்கான அறிகுறியும் தெரிகின்றது. காமெடியும் இயல்பாக வருகின்றது//

    ஹி..ஹி.. ரொம்ப புகழ்ந்துட்டீங்க.. எனக்கு வெக்க வெக்கமா வருதுண்ணே..

    வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  2. nalla irukuu

    pudhu pudhu aalungathan ippa thamizmanathula kalakuranga

    vazhthukaludan .....!

    ReplyDelete
  3. நீங்க சொன்னா மாதிரி எல்லோருமே கலக்கறாங்க...

    ReplyDelete
  4. நல்ல சர தொடுப்பு. இன்னும் பல புதியவர்கள் சிறப்பாக மிளிர்கிறார்கள்.

    அனைத்து புதிய வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அழகான அறிமுகத்துக்கு நன்றி தமிழ் பிரியன்!, நன்றி வலைச்சரம்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பர்களே...!

    புதுசா வந்த எல்லோருக்கும்...:)

    ReplyDelete
  7. அண்ணே நானும் புதுசுதான்ணே...! அது மட்டுமில்லை தமிழ் பதிவுலகிலயே நான்தான் ரொம்ப சின்னவன்..;))

    ReplyDelete
  8. உங்கள் அன்புக்கு நன்றி!

    உங்கள் ஆதரவுக்கு நன்றி!

    உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமென்ற சுமை இப்போது என் கைகளில்! (கைலதானே பதிவு போடறோம்!)

    ReplyDelete
  9. (இந்தப் பின்னூட்டத்தை வெளியிடாதீங்க..)

    தமிழ்பிரியன்.. பேசின பணத்தை எங்க வந்து தர்றது?

    ReplyDelete
  10. //தனது செம்மையான எழுத்துக்களால் அனைவரையும் கவர்ந்து விட்டார்//

    ஐயோ பாவம், இதுக்கு அர்த்தம் கேட்டு எல்லாரும் தமிழ்பிரியனை மொக்கப் போறாங்க!

    ReplyDelete
  11. //செஞ்சைத் தொட்டது.//

    நெஞ்சு கேள்விப்பட்டிருக்கோம், வேறொண்ணும் தெரியும்... இதென்னாங்க புது ஐட்டமா இருக்கு?

    ReplyDelete
  12. நானும் வலைப்பதிவுலகிற்கு புதியவன்தான் தமிழ்ப்ரியன். கடந்த மூன்று மாதங்களாகத்தான் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதி வருகிறேன். என்னை மறந்து விட்டீர்களே தமிழ்ப்ரியன்?

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்...!

    புதுசா வந்த எல்லோருக்கும்...:)

    ReplyDelete
  14. நீங்கள் சினிமா பதிவு செய்கிறவர்களையும் கவனித்திருக்கலாம். இப்போ நிறைய சினிமா பதிவுகள் வருகிறதே..

    ReplyDelete
  15. ரொம்ப ரொம்ப நன்றிங்க. என் வலைபக்கத்திற்கு வந்து இவ்வளவையும் பொறுமையா படிச்சீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டதே ரொம்ப ரொம்ப சந்தோஷம். இப்போ பலருக்கும் இதன் மூலமா என் வலைப்பக்கம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். மீண்டும் உங்களோட ஆதரவை கேட்டுக்கறேன், நன்றி, வணக்கம்

    ReplyDelete
  16. அழகுத் தமிழில் தாங்கள் செய்திருக்கும் அறிமுகம் இன்னும் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியைத் தருகிறது. தங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி தமிழ் பிரியன்.

    ReplyDelete
  17. /
    தமிழன்... said...

    அண்ணே நானும் புதுசுதான்ணே...! அது மட்டுமில்லை தமிழ் பதிவுலகிலயே நான்தான் ரொம்ப சின்னவன்..;))
    /

    சைக்கிள் கேரியர்ல பெல் அடிக்கிறவங்க எல்லாம் மூத்த பதிவர்களாம்!!

    நீ புது பதிவர் கிடையாது! கிடையாது!! கிடையாது!!!

    ReplyDelete
  18. மங்களூர் சிவா said...
    \\\/
    தமிழன்... said...

    அண்ணே நானும் புதுசுதான்ணே...! அது மட்டுமில்லை தமிழ் பதிவுலகிலயே நான்தான் ரொம்ப சின்னவன்..;))
    /

    சைக்கிள் கேரியர்ல பெல் அடிக்கிறவங்க எல்லாம் மூத்த பதிவர்களாம்!!

    நீ புது பதிவர் கிடையாது! கிடையாது!! கிடையாது!!!
    ///

    அவ்வ்வ்வ்வ்வ்...:)

    அப்ப நான் சின்னப்பையன்கிறத ஒப்புக்கறிங்க அப்படித்தானே சிவா அங்கிள்...;)

    ReplyDelete
  19. அண்ணே என்னாண்ணே ஆச்சு உங்களுக்கு? நல்லாத்தானே இருந்தீக? அப்புறம் ஏன்ணே எம் பேரையும் இதுல சேத்திக? நாம் பாட்டுக்கு ஏதோ வழிப்போக்கன் அண்ணே,சின்னப்பையன் அண்ணே,பரிசல்காரன் அன்ணே,தாமிரா அண்ணே,கிரி அண்ணே,மோகன் கந்தசாமி அண்ணே, சகோதரி ராப் இவங்களோட ஜாயிண்டப் போட்டு கும்மி போட்டுக்கிட்டு இருந்தேன். என்னையப் போயி பெரிய மனுசன் ஆக்கிட்டீங்களே? எனக்கு இப்போ உண்மையிலேயே பயமா இருக்குண்ணே...உங்க நம்பிக்கைய எப்படி காப்பாத்துறதுன்னு?

    ReplyDelete
  20. ராமலக்ஷ்மி said...
    அழகுத் தமிழில் தாங்கள் செய்திருக்கும் அறிமுகம் இன்னும் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியைத் தருகிறது. தங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி தமிழ் பிரியன்.

    //

    அக்கா சொன்னதுக்கு ரிப்பீட்டுடுடுடு

    ReplyDelete
  21. rapp said...
    இப்போ பலருக்கும் இதன் மூலமா என் வலைப்பக்கம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். மீண்டும் உங்களோட ஆதரவை கேட்டுக்கறேன், நன்றி, வணக்கம்//

    தங்கச்சி சொன்னதுக்கும் ரிப்பீட்டுடுடுடு

    ReplyDelete
  22. பரிசல்காரன் said...
    உங்கள் அன்புக்கு நன்றி!

    உங்கள் ஆதரவுக்கு நன்றி!

    உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமென்ற சுமை இப்போது என் கைகளில்! (கைலதானே பதிவு போடறோம்!)
    //

    அண்ணன் சொன்னதுக்கும் ரிப்பீட்டுடுடு

    ReplyDelete
  23. rapp,பரிசல்காரர் வாருங்கள் நம் சகோதரர் அப்துல்லாவுக்கு வாழ்த்துக்களைச் சொல்லுவோம்:))!

    ReplyDelete
  24. மிக்க நன்றி தமிழ் பிரியன். தான் சார்ந்த துறையை அறிந்து பதிவிடுதல் என்றால் என்ன?

    ReplyDelete
  25. கயல்விழி said...
    தான் சார்ந்த துறையை அறிந்து பதிவிடுதல் என்றால் என்ன?
    //

    அத்து ஒன்னியும் இல்ல...நம்பளுக்கு இன்னா இஷ்டமாகிதோ அத்தப்பத்தி ஒரு தபா நல்லா ரோசனை பண்ணிகினு அப்பால எலுவுறதி..

    ReplyDelete
  26. பரிசல், அப்துல்லா.. என்ன இங்கேயுமா? (சென்ற இடமெல்லாம் கும்மி)

    சரி சரி.. என்னியும் சேத்துக்கோங்கோ!

    ReplyDelete
  27. அன்புமிகு அண்ணா,

    தமிழ்ப் பிரியர் அன்புக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
    புதிய பதிவாளர்களின் வருகைக்கு நல்ல வரேவேற்பு நல்கியதற்கு அனைவரது சார்பிலும் மீண்டும் நன்றிகள்.
    தி.விஜய்

    ReplyDelete
  28. ///வெண்பூ said...
    //ஜூனில் இருந்து வலை பதிகின்றார். வந்த வேகத்தில் தமிழ் பதிவுகளை புரிந்து கொண்டு விட்டார். பின நவீனத்துவவாதியாக ஆகி விடுவதற்கான அறிகுறியும் தெரிகின்றது. காமெடியும் இயல்பாக வருகின்றது//
    ஹி..ஹி.. ரொம்ப புகழ்ந்துட்டீங்க.. எனக்கு வெக்க வெக்கமா வருதுண்ணே..
    வாழ்த்துக்களுக்கு நன்றி..///
    அப்படியாண்ணே! நன்றி!

    ReplyDelete
  29. ///ஆயில்யன் said...

    nalla irukuu

    pudhu pudhu aalungathan ippa thamizmanathula kalakuranga

    vazhthukaludan .....!//
    டாங்கீசு... :)

    ReplyDelete
  30. ///மங்களூர் சிவா said... அனைத்து புதிய வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  31. ///தமிழன்... said...

    நீங்க சொன்னா மாதிரி எல்லோருமே கலக்கறாங்க...///
    ஆமா தமிழன்!

    ReplyDelete
  32. // தாமிரா said...
    அழகான அறிமுகத்துக்கு நன்றி தமிழ் பிரியன்!, நன்றி வலைச்சரம்!///
    நன்றி தாமிரா! நல்லா எழுதுங்க தான் எங்களுக்கு வேண்டும்.

    ReplyDelete
  33. ///தமிழன்... said...

    வாழ்த்துக்கள் நண்பர்களே...!

    புதுசா வந்த எல்லோருக்கும்...:)///
    அதே!

    ReplyDelete
  34. ///தமிழன்... said...

    அண்ணே நானும் புதுசுதான்ணே...! அது மட்டுமில்லை தமிழ் பதிவுலகிலயே நான்தான் ரொம்ப சின்னவன்..;))///
    கமிஷன் கேட்டப்பா மட்டும் பெரிய ஆள் மாதிரி பேசின இப்ப என்ன... ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாருய்யா.. :)))

    ReplyDelete
  35. ///பரிசல்காரன் said...
    உங்கள் அன்புக்கு நன்றி!
    உங்கள் ஆதரவுக்கு நன்றி!
    உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமென்ற சுமை இப்போது என் கைகளில்! (கைலதானே பதிவு போடறோம்!)///
    இதுதாய்யா உங்ககிட்ட பிடிச்சது,,, :)

    ReplyDelete
  36. //பரிசல்காரன் said...
    (இந்தப் பின்னூட்டத்தை வெளியிடாதீங்க..)
    தமிழ்பிரியன்.. பேசின பணத்தை எங்க வந்து தர்றது?///
    வழக்கமா சொன்ன இடத்துக்கு வரலையே? இன்னும் இரண்டு நாளில் பணம் வந்து சேரலைன்னா தாக்கி சிறுவிளக்கம்(?) அப்ப்டின்னு பதிவு வரும்.. பாத்துக்கங்ண்ண்ணா

    ReplyDelete
  37. ///சினிமா நிருபர் said...
    தமிழ்சினிமா said...///
    சினிமா தொடர்பான விடயங்களில் ஆர்வம் குறைவு. எனவே அதனால் உங்கள் பதிவுகளைப் பார்க்கவில்லை... மன்னிக்கவும்... :)

    ReplyDelete
  38. ///நிஜமா நல்லவன் said...
    வாழ்த்துக்கள்...!
    புதுசா வந்த எல்லோருக்கும்...:)///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  39. /// rapp said...

    ரொம்ப ரொம்ப நன்றிங்க. என் வலைபக்கத்திற்கு வந்து இவ்வளவையும் பொறுமையா படிச்சீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டதே ரொம்ப ரொம்ப சந்தோஷம். இப்போ பலருக்கும் இதன் மூலமா என் வலைப்பக்கம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். மீண்டும் உங்களோட ஆதரவை கேட்டுக்கறேன், நன்றி, வணக்கம்///
    நல்ல பதிவுகளாஅய் நிறைய எழுதுங்க... அதான் வேண்டும்... :)

    ReplyDelete
  40. ///ராமலக்ஷ்மி said...

    அழகுத் தமிழில் தாங்கள் செய்திருக்கும் அறிமுகம் இன்னும் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியைத் தருகிறது. தங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி தமிழ் பிரியன்.////
    கண்டிப்பா அக்கா! அதான் நாங்க எதிர்பார்ப்பது... :)

    ReplyDelete
  41. ///மங்களூர் சிவா said...

    /
    தமிழன்... said...

    அண்ணே நானும் புதுசுதான்ணே...! அது மட்டுமில்லை தமிழ் பதிவுலகிலயே நான்தான் ரொம்ப சின்னவன்..;))
    /
    சைக்கிள் கேரியர்ல பெல் அடிக்கிறவங்க எல்லாம் மூத்த பதவர்களாம்!!
    நீ புது பதிவர் கிடையாது! கிடையாது!! கிடையாது!!!///
    அண்ணே! அவர் சைக்கிள் கேப்பில் கடா வெட்ரவரு... அவர் புது பதிவராம்... என்ன கொடும சரவணா!

    ReplyDelete
  42. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    அண்ணே என்னாண்ணே ஆச்சு உங்களுக்கு? நல்லாத்தானே இருந்தீக? அப்புறம் ஏன்ணே எம் பேரையும் இதுல சேத்திக? நாம் பாட்டுக்கு ஏதோ வழிப்போக்கன் அண்ணே,சின்னப்பையன் அண்ணே,பரிசல்காரன் அன்ணே,தாமிரா அண்ணே,கிரி அண்ணே,மோகன் கந்தசாமி அண்ணே, சகோதரி ராப் இவங்களோட ஜாயிண்டப் போட்டு கும்மி போட்டுக்கிட்டு இருந்தேன். என்னையப் போயி பெரிய மனுசன் ஆக்கிட்டீங்களே? எனக்கு இப்போ உண்மையிலேயே பயமா இருக்குண்ணே...உங்க நம்பிக்கைய எப்படி காப்பாத்துறதுன்னு?////
    காப்பாத்துவீங்க என்ற நம்பிக்கை இருக்கு அண்ணே!

    ReplyDelete
  43. /// கயல்விழி said...

    மிக்க நன்றி தமிழ் பிரியன். தான் சார்ந்த துறையை அறிந்து பதிவிடுதல் என்றால் என்ன?///
    தாங்கள் இப்போது எழுதுவது பலதரப்பட்ட மக்கள் உள்ள தளத்தில்... தங்களுடைய பரந்து விரிந்த அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டு இன்னும் சிறப்பாக எழுத இயலும். ஆனால் உங்கள் எழுத்துக்களைப் படித்த போது குறுகிய வட்டத்துக்குள் தற்காலிக பரபரப்பில் எழுதுவது போல் இருக்கிறது. இன்னும் விசாலமான எண்ணங்களுடன் தங்களை எதிர்பார்க்கிறேன்... தவறாக இருந்தால் மன்னிக்கவும்... :)

    ReplyDelete
  44. //விஜய் said...
    ன்புமிகு அண்ணா,
    தமிழ்ப் பிரியர் அன்புக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
    புதிய பதிவாளர்களின் வருகைக்கு நல்ல வரேவேற்பு நல்கியதற்கு அனைவரது சார்பிலும் மீண்டும் நன்றிகள்.
    தி.விஜய்///
    நன்றி விஜய்!

    ReplyDelete
  45. என்னைப் போல சின்ன்ன்ன்னவங்களுக்கு ஊக்கம் அளிக்கும்படியா இருந்தது உங்களுடைய இந்த அறிமுகம்.
    மிக்க நன்றி அண்ணா..!! :-)

    ReplyDelete
  46. //விஜய்
    கோவை விஜய் ஏபரல் முதல் பதிந்தாலும் நிறைய பதிவர்களின் பதிவுகளின் பின்னூட்டங்களாலேயே பிரபலமாகி விட்டார். சுற்றுப்புறச் சூழல் போராளி பற்றிய பதிவு நிறைய பேரை கவர்ந்தது. கோவையில் தேசப்பிதாவின் மறுபிறப்பு என்னை கவர்ந்தது//


    தமிழ் பிரியன் அண்ணா,
    ஒரு விண்ணப்பம்.
    வலிப்பூவில் விஜய்,vijay,vijay என் நண்பர்கள் பதிந்து வருவதால் விஜய் என்பதை கோவை விஜய் என ப்ளாக்கர் கணக்கில் மாற்றியுள்ளேன்.இந்த தகவலை உங்கள் வலைச்சரத்தில் மேலேயுள்ள ஹைபெர்லிங்கில் மாற்ற அன்புடன் வேண்டுகிறேன்

    அன்புடன்
    கோவை விஜய்

    ReplyDelete
  47. ///Sri said...

    என்னைப் போல சின்ன்ன்ன்னவங்களுக்கு ஊக்கம் அளிக்கும்படியா இருந்தது உங்களுடைய இந்த அறிமுகம்.
    மிக்க நன்றி அண்ணா..!! :-)///
    நன்றிம்மா தங்கச்சி!

    ReplyDelete
  48. ///கோவை விஜய் said...
    தமிழ் பிரியன் அண்ணா,
    ஒரு விண்ணப்பம்.
    வலிப்பூவில் விஜய்,vijay,vijay என் நண்பர்கள் பதிந்து வருவதால் விஜய் என்பதை கோவை விஜய் என ப்ளாக்கர் கணக்கில் மாற்றியுள்ளேன்.இந்த தகவலை உங்கள் வலைச்சரத்தில் மேலேயுள்ள ஹைபெர்லிங்கில் மாற்ற அன்புடன் வேண்டுகிறேன்

    அன்புடன்
    கோவை விஜய்///
    வலைச்சர அனுமதி அந்த வாரத்திலேயே முடிந்து விடும். இனி மாற்றம் செய்ய பொறுப்பாளர்களிடம் தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. மன்னிக்கணும் தமிழ் பிரியன். நானானி பதிவில் வரவேண்டிய பின்னூட்டம் தவறுதலாக...வருந்துகிறேன்:((! அதான் டெலிட் செய்தேன்.

    ReplyDelete
  51. ///ராமலக்ஷ்மி said...

    மன்னிக்கணும் தமிழ் பிரியன். நானானி பதிவில் வரவேண்டிய பின்னூட்டம் தவறுதலாக...வருந்துகிறேன்! அதான் டெலிட் செய்தேன்.///
    இதெல்லாம் அரசியலில் சகஜமக்கா.... ஃபீல் பண்ணாதீங்கோ... :)

    ReplyDelete
  52. நன்றி:)) தமிழ் பிரியன்!

    ReplyDelete