மங்களூர் சிவா
"share market is a place where money gets transfers from un-patient people to patient people" - Warren Buffet
ஷேர் மார்க்கெட் பத்தியும்..பங்குகள் வாங்கும் விதம் பத்தியும் புரியும்படி வியாகச் சொல்லியிருக்கிறார். மங்களூர் சிவா, Think Big என்ற பதிவில்
ஷேர் பண்ணிக்குங்க
நெல்லை சிவா
ரியல் எஸ்டேட்டின் அசுர வளர்ச்சி பத்தி அசந்து போய் அவரிடிட்ட பதிவு. கனவு இல்லம்
கனவேவா? உண்மை நிலையை பிட்டுவைத்திருக்கிறார்.
மார்க்கெட்டில் அப்பப்ப வரும் புது பொருட்களுக்கு நல்ல விளம்பரம் கொடுப்பார். பொருளின்
ப்ளஸ்- மைனஸ்களையும் விலாவாரியாகச் சொல்லுவார். இங்கே புது செல்போன் பத்தி சொல்கிறார்.
டையல் பண்ணுங்க
வடிவேலு, கஞ்சா கருப்பு, மயில்சாமி, திருநெல்வேலி பெருசு. இந்த நாலு பேரை அவரர்களாகவே கதாபாத்திரங்களாக வைத்து 'வலைப்பூ..தலைப்பூ..வாழப்பூ!' என்ற தலைப்பில்
ஒரு காமெடிக் கதை எழுதியிருப்பார். க்ரேஸி மோகன் நாடகம் போல் கலகலவென்று ஓடும்.
ஒரு முழுநீள படமாகவோ அல்லது ஒரு படத்தின் காமெடி ட்ராக்காகவோ பயன் படுத்தினால்
பிச்சுக்கிட்டு ஓடும்.
சிரிங்க
இன்னொரு சிவாவும் இருக்கிறார். நாகை சிவா. இவர் பதிவுகள் படித்ததில்லை. மூன்று சிவாக்களுக்காக் இவர் பதிவு போய் பார்த்தேன். சென்ற பொங்கலுக்கு அழகான படங்களுடன்
பொங்கல் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.படங்கள் அருமை. பூஜை அறையும் பால் பொங்ககும்
படங்கள் நல்லாருக்கு. நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். பார்க்காதவர்கள் பாருங்கள்.15/1/08அன்று இட்ட பதிவு.
பொங்கல் வாழ்த்து
அரசாங்கம் தமிழைசெம்மொழி ஆக்குவது பற்றிய பலவிதமான முரண்பாடுகளை ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறார். அவரது கருத்துக்கள் எனக்கும் உடன்பாடுதான்.
செம்மொழி என்று பீத்திக்க்கிட்டு அவர்களது தொலைக்காட்சி செய்திகளிலேயே தமிழை கொலைசெய்வதும் இலக்கணப்பிழையோடு வாசிப்பதும் காதில் நாராசமாக ஒலிக்கும்
பதிவுகளில் தமிழ் வாழ்வது பற்றி ஆறுதலடைகிறார்.
இன்று தமிழில் தொடர்ந்து பலர் எழுதுவதற்கு பதிவுலகமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதற்கு நாம் எல்லாமே ஒரு உதாரணம் தான். இதே போல் வரும் சமுதாயமும் இருக்குமா? அவர்களில் பலரை(சிலரை) பொறுத்த வரை தமிழ் ஒரு பேச்சு மொழியாக மட்டும் தான் இருக்கிறது என்பது கண்க்கூடான உண்மை. அதை மாற்ற அரசாங்கமோ, தமிழ் வளர்ச்சி துறை, செம்மொழிக்கான துறையோ ஏதும் திட்டம் வைத்து செயல்ப்படுத்துகிறதா என்று எனக்கு தெரியலை. தெரிந்தவர்கள் கூறலாம். என்கிறார் நாகை சிவா.
செம்மொழி என மார்தட்டிக் கொள்ளும் நம் மொழியை ராஜ்யசபாவில் பேச முடியவில்லை.
செம்மொழி
சுட்டிகள் இடுவதில் இருந்த சிறு குழப்பத்தால் தாமதம். பொறுத்துக்கொள்ளவும். நன்றி!
ReplyDeleteமீ த செகண்ட்....
ReplyDeleteஇல்ல இல்ல மீ த பஸ்ட்டு :P
சிவ சிவ சிவ சங்கரா! நமக்கு எல்லாம் பயனுள்ளவை தான்! :D:D
ReplyDeleteரெண்டு சிவாக்களும் பொறுப்பா , பொறுமையா எழுதியிருக்காங்க :))
வாழ்த்துகள்.
நேற்று முப்பெரும் தேவியரை சிலாகித்திருந்தீர்கள். இன்று வலையுலகின் முப்பெரும் 'சிவா'க்களை..!
ReplyDeleteமங்களூர் சிவாவின் பதிவுகளை "ஷேர்" பண்ணிக்க, நெல்லை சிவாவின் பதிவுகளுக்கு "டயல்" பண்ணிக்க, நாகை சிவாவின் வாழ்த்து பதிவால் "வாழ்த்த" என சுட்டிகளைச் சுட்டியிருக்கும் விதமும் அருமை:)!
ம் எங்க வீட்டாண்டல்லாம் எட்டி பாத்திருக்கீங்க போல
ReplyDelete:)))
அன்பின் நானானி
ReplyDeleteமூன்று சிவா - பற்றிய பதிவு அருமை
நன்று
ஸ்ஸ்ஸ்...'மூன்று' சிவா...ஹி..ஹி..:D
ReplyDelete/
ReplyDeleteNewBee said...
ஸ்ஸ்ஸ்...'மூன்று' சிவா...ஹி..ஹி..:D
/
எங்க என்னைய கண்டுக்காம விட்டுட்டீங்களேன்னு பாத்தேன்
:)))))
நீதான் ஃபஸ்ட் தேனீ!
ReplyDeleteநாந்தான் கொஞ்சம் லேட்.
நீதான் ஃபஸ்ட் தேனீ!
ReplyDeleteநாந்தான் கொஞ்சம் லேட்.
சிவ..சிவ..சிவ..என்று மூன்று போட்டிருக்கிறேனே தேனீ?
ReplyDeleteகணக்கிலே வீக்கா?
நல்லாருந்துச்சா...ராமலஷ்மி?
ReplyDeleteநன்றிம்மா!!
எட்டிப் பாத்த போது நீங்க உள்ளே கூப்பிடலேயே சிவா?
ReplyDeleteநீங்க பாவம் சீனா! காலையில் நீங்க
ReplyDeleteபாத்திருப்பீங்க...நான் வந்திருக்கமாட்டேன். நீங்க சொன்ன அத்தனையும்தான் தாமதத்துக்கு காரணம்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லீட்டீங்க!நன்றி!
ஹி..ஹி..ஒரே வழிசல்?
ReplyDeleteகூட்டிக்கழிச்சுப் பாத்து கணக்கு சரியா வந்துச்சா...வந்துச்சா?
அதுதான் தேனீ தேனா வழிஞ்சுதே...!
ReplyDeleteவிட்டுடுங்க ம.சிவா!
நாகை சிவா பத்தி அதிகம் தெரியாதவங்களுக்கு...
ReplyDeleteஅவரை எல்லாரும் செல்லமா புலினு சொல்லுவாங்க.
புலி பின்னூட்டத்துல இறங்கிட்டா கச்சேரி கலை கட்டும். சும்மா மரண ஓட்டு ஓட்டி தள்ளிடுவாரு. அவரோட பின்னூட்டத்துல விளையாடும் போது சேதாரம் நிறைய ஏற்படும்.
நக்கல் நையாண்டி பின்னூட்டத்துக்கு ஒரு காலத்துல புலி தான் டாப்பு.. இப்ப இந்தியால இருக்காரா சூடான்ல இருக்காரானு தெரியல :-(
///NewBee said...
ReplyDeleteசிவ சிவ சிவ சங்கரா! நமக்கு எல்லாம் பயனுள்ளவை தான்! :D:D
மூன்று சிவாக்களும் பொறுப்பா , பொறுமையா எழுதியிருக்காங்க :))
வாழ்த்துகள்.///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
மங்களூர் சிவா என்று தலைப்பில் பார்த்ததும் அண்ணியோட பேரைத் தான் சொல்லப் போறீங்களோன்னு ஆவலா வந்தேன்........ :))
ReplyDeleteஹாட் டாக் ஆஃப் தான் வீக் நியூஸ் அதுதானே... ;)
நாகை சிவாவைப் பத்தி தெரியாத தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள்!
ReplyDeleteவெட்டிப்பயல்!!நன்றி!
நன்றி தமிழ்பிரியன்! உங்கள் விருப்பப்படி கூடுதல் பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கிறேன். சரிதானே?
ReplyDeleteமங்களூர் சிவா புதிதாக மணமானவரா?
ReplyDeleteஅப்படியானால் என் வாழ்த்துக்கள்!
அண்ணியைப்பத்தி நீங்கதான் சொல்லுங்களேன்.