'technology has very much improved' என்ற நகைச்சுவை வசனம் ஒன்னு இருக்கும் மகளிர் மட்டும் படத்துல. இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திலும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்களிலும் முக்கிய இடத்தை பிடித்து இருக்கு வலைப்பக்கங்கள்! டைரி எழுதி பழக்கிய நம்மில் பலரும் வலைப்பக்கத்தை ஒரு 'இண்டர்நெட் டைரி' என்று கூறுகிறோம்.
இப்படி இண்டர்நெட் டைரி வைத்திருக்கும் பல பிரபலங்களின் பக்கங்களை படிக்கும்போது சற்று வித்தியாசமா இருக்கும். இந்த ஷாருக் கான், அமிதாப் பச்சான் எல்லாம் வச்சுருக்காங்களாம் வலைப்பூக்கள்! ஆனா, இவர்களே எழுதுவதில்லை! அவங்க PA இல்ல.. PRO..இல்ல.. வேற ஏதாச்சு கம்பெனி எழுதும் அவர்களின் சார்பில். உண்மையில், தானே வலைப்பூ எழுதும் பாலிவுட் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான் தான் என்று கேள்விப்பட்டேன்!
அந்த வரிசையில், நமக்கு தெரிந்த சிலர்...
பாடகி சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டாள் பாடலை பாடி பிரபலம் அடைந்தவர். அதுக்கு அப்பரம் பல பாடல்களை பாடி இருக்கிறார். சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் வழிநடத்தும் வல்லமை படைத்தவர். தனது வலைப்பூவில் அவர் அனுபவங்களை பற்றி, குறிப்பா வெளிநாடு இசை நிகழ்ச்சிகளின் அனுபவங்களை பற்றி எழுதியிருக்கிறார். (ஆங்கிலத்தில் தான்)
பாடகி பாப் ஷாலினி. சிறு வயது முதல் பாடல் பாடி கொண்டு இருக்கிறார்.சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்கூட நடுவராக வந்துள்ளார். இவர் பாடிய 'உன்னை பார்த்ததுமே..." என்ற bit song காதல் படத்தில் பிண்ணனி இசையாக வரும்! எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்பபப பிடிக்கும் அது!!
ஆங்கில rap பாடல்களின் சாயலை தமிழ் பாடல்களில் கொண்டு வந்தவர்களில் இவர் ரொம்ம்ம்ம்ப்பப முக்கியமானவர். இவர் தான் பாடகர் blazze. நிறைய பிண்ணனி இசைக்கு rap பாடல் பாடியிருப்பார்!
"பாபா...B to the A to the B to the A! baba.. that's what we say!" என்று பாபா படத்தில் பாடியிருந்தார். அந்த குரலுக்கு சொந்தக்காரர் blazzeeeeeeee!
'என்னடி முன்னியம்மா' ரீமிக்ஸ் பாடல் காட்சியில் இவர் தோன்றியிருப்பார்!!
பாடலாசிரியர் யுகபாரதி அவர்களும் வலைப்பூ வைத்துள்ளார். இவர் எழுதிய 'பொறி' பட பாடல் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் என்ற பாடல் எனக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும். நிறைய கவிதைகள், தமிழ் சம்மந்தப்பட்ட செய்திகளை தாங்கி நிற்கிறது இவரது வலைப்பக்கம்.
'தமிழ் எம் ஏ' படத்தின் இயக்குனர் ராம் அவர்களுக்கும் ஒரு சொந்த வலைப்பக்கம் இருக்கு. அவரது முதல் படமான தமிழ் எம் ஏ படத்தின் திரைக்கதை வடிவத்தை தன் வலைப்பக்கத்தில் போட்டு இருக்கிறார்.. பாருங்க
http://directorram.blogspot.com/2008/06/blog-post_15.html
இவரது ஒவ்வொரு பதிவும் எனக்கு ஆச்சிரியத்தை தந்தது! இவருக்குள் இருக்கும் உணர்வுகளை அழகு தமிழில் எழுதவதை கண்டு நான் பிரமித்துபோய் இருக்கிறேன்.
http://directorram.blogspot.com/2008/06/blog-post_22.html
பிரபலங்கள் ரசிகர்களிடையே தொடர்பு வைத்து கொள்ள இதுபோன்ற வலைப்பக்கங்கள் உதவியாக உள்ளன!:)
me the first..!
ReplyDeleteசின்மயி எழுதறத எனக்கு படிக்கத்தெரியலை....
ReplyDeleteஅந்தப்பொண்ணு பாடறத பிடிக்கும்...
ReplyDeleteஇயக்குனர் ராம் பதிவுகள் எல்லாம் படிக்காவிட்டாலும் சிலது படிச்சிருக்கேன்...
ReplyDeleteஅது எனக்கும் பிடிச்ச பாட்டு...
ReplyDeleteஅழகான தருணம்...
பிரபலங்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. ராம் அவர்களின் வலைப்பதிவு படிக்கத் தூண்டுகிறது. :)
ReplyDeleteகலக்கிட்டீங்க!!!!
ReplyDelete
ReplyDeleteபாடகர் ஹரீஷ் ராகவேந்திரா's Blog.
thanks
சரவணன்னு சுசி கணேசனிடம் வேலைப் பார்க்கும் அஸ்ஸிட்டண்ட் டைரக்டரும் வலைப்பூ வச்சிருக்கார். திருட்டுப் பயலே படத்துல ஒரு காட்சியிலும் வந்திருக்கார்.
ReplyDeleteஇப்போ கந்தசாமி படத்துல பிஸியா இருக்காராம். ப்ளாக் அட்ரஸ் ஞாபகம் இல்லே.
நன்றி..
ReplyDeleteகோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் மை ஃபிரண்டுக்கும் புதிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி::)
ReplyDeleteசின்மயி நிகழ்ச்சித்தொகுப்புகள் எனக்குப் பிடிக்கும்....
ReplyDeleteராம் பக்கம் சென்றிருக்கிறேன்...
யுகபாரதி பக்கம் நேற்றுத்தான் அறிமுகம் எனக்கு...
மற்றவை விரைவில் முயற்சிக்கிறேன்....
வலையுலக பிரபலங்கள் பக்கம் செல்வதற்கே நேரம் பத்தவில்லை... என்ன செய்ய..?
இதில் யாருடைய வலைப்பக்கமும் நான் சென்றதில்லை. போய் பார்த்துட வேண்டியது தான். பதிவுக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteஓய் பாப்பா.. இங்க தமிழ் வலைப்பதிவுகள் தான் அறிமுகப் படுத்தனும்.. உதைபடுவ நீ.. :))... ஒரே கெட்ட சகவாசம்.. சினிமா பைத்தியம்.. :P
ReplyDelete//தமிழன்... said...
சின்மயி எழுதறத எனக்கு படிக்கத்தெரியலை....
//
அது எங்க எழுதுது.. எதோ மனசுல பெரிய மாடல்னு நெனைப்பு.. பாம்பு பாதிரி படமா எடுத்து தள்ளுது.. அந்த கொடுமைய ப்ளாக்ல போட்டு நம்மள வேற சாவடிக்கிது..
இதுக்கு ஷாலினி பரவால்லா.. நல்லா எழுதறாங்க.. கமெண்ட் போட்டா அதுக்கு பதிலும் சொல்றாங்க..