இந்த பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கும்போது, ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு
"நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க..." நம்ம வாத்தியார் பாட்டு!
சரி பாட்டு வரிய கொஞ்சம் ரீமிக்ஸ் பண்ணி நம்ம பதிவுக்கு தலைப்பா வச்சுட்டேன்.
செல்லமே விஷால், காதல் சந்தியா, பருத்திவீரன் கார்த்தி, பாய்ஸ் சித்தார்த், வாலி ஜோதிகா....இவங்களுக்கும் நான் அடுத்து சொல்ல போகும் பதிவர்களுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கு!
எப்படி விஷாலும், சந்தியாவும், கார்த்தியும், சித்தார்த்தும், ஜோதிகாவும் மேற்கொண்ட படங்களில் மூலம் புதுமுகங்களாக அறிமுகம் ஆனார்களோ, அதே போல
பொடி பொண்ணு, மது, ஸ்வேதா, கார்த்திகா, கார்த்திக் ஆகியோர் வலைப்பூ உலகிற்கு புதுசுங்கோ!!
பொடி பொண்ணு
கடி கவிதை, ஜோக், வீடியோ, சமூக சிந்தனை போன்ற விஷயங்களை பற்றி நல்லா எழுதுகிறார். இவர் எழுதிய 'பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் ஹீரோக்களுக்கு' என்னும் பதிவு என்னை மிகவும் கவர்ந்தது.
மது
இவர் மதுவின் பதிவுகள் என்ற வலைப்பக்கம் மூலம் அறிமுகமானவர். தொடர்கதை, சொந்த அனுபவங்கள், நகைச்சுவை போன்றவற்றை எழுதுகிறார். அறந்து போன காலணியும் அது தொடர்பான நினைவுகளும் என்ற பதிவில் தன் கருத்துகளை ரொம்ப நல்லாவே எழுதியிருப்பார்.
ஸ்வேதா
இவர் தற்போது MCA படித்து கொண்டிருக்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்னாடி தான் வலைப்பூ ஆரம்பித்தார். முதன் முதலாக தமிழ் பதிவு எழுதியிருப்பதை அவரே அழகாக சொல்லியிருக்கிறார் இப்பதிவில். இவரது ஸ் எம் ஸ் பதிவுகளை படித்து பார்த்தால், சிரிக்காம இருக்க மாட்டீங்க!
http://sshwetha.blogspot.com/2008/07/sms.html
http://sshwetha.blogspot.com/2008/06/sms-mokkais_29.html
http://sshwetha.blogspot.com/2008/06/sms.html
கார்த்திகா
நிறைய பெண் பதிவர்கள் அறிமுகமாகி கொண்டு வருகிறார்கள்.. அந்த வரிசையில் கார்த்திகா என்பவர் நல்ல பல கவிதைகளை தன் வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார். 'சிறுமிகள் நிறைந்த என் தெரு' என்று கவிதை சூப்பரோ சூப்பர்!!! அந்நியன் படத்துல ஒரு வசனம் சொல்லுவார் பிரகாஷ்ராஜ் 'இவன் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வறான்'. அந்த மாதிரி, கார்த்திகா தனது கவிதைகள் மூலம் ஏதோ ஒன்னு சொல்ல வறாங்க...:)
கார்த்திக்
கடைக்குட்டி பதிவர் என்றே சொல்லலாம். இப்போதான் காலேஜ் முதல் ஆண்டு சேர்ந்து இருக்கிறார். சென்னைக்கு வந்த தன் அனுபவங்களையும் வார இறுதி நாட்களின் அனுபவங்களையும் சுவைப்பட அழகா எழுதும் திறன் படைத்தவர். நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். ஏன் என்று இங்கே பார்த்து தெரிந்து கொள்ளுங்க
http://rainbowstreet-karthik.blogspot.com/2008/07/blog-post_22.html
இவரது பதிவுகள் அதிகமாக காலேஜ் பற்றியும், நண்பர்கள் பற்றியும், காலேஜ் கேண்டீன் பற்றியும் இருக்கும். ஆக, ஏதோ ஒரு இளைஞனின் டைரியை படிப்பதுபோல் தோன்றும். என்னை கவர்ந்த இவரது பதிவுகளில் ஒன்று தான் இது
http://rainbowstreet-karthik.blogspot.com/2008/07/blog-post_07.html
இவங்க புதுசா எழுதும் பதிவர்கள், ஆக நாம் அனைவரும் ஊக்குவிப்போம் அவர்களை!!
என்னது ஊக்கு 'விற்க' தெரியாதா???
சரி ஒரு hair pin?
அதுவும் தெரியாதா....
சரி ஒரு hair band??
அதுவும் தெரியாதா....
சரி ஏதாச்சு ஒன்ன வச்சு நம்ம ஆதரவை அவர்களுக்கு தெரிவிப்போம்!
me the first..!
ReplyDelete2nd
ReplyDeleteபுதுசா வந்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆமா ஸ்வேதாவுக்கு கோச்சர் நீங்கதானாமே...:)
ReplyDeleteதமிழ் மாங்கனி
ReplyDeleteவலைச்சர விதிமுறைகளை நன்கு படித்து, அதன்படி அருமையான புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் நல்ல பதிவுகளுக்குச் சுட்டிகள் கொடுத்து .......
கலக்குறீங்க போங்க !
நல்வாழ்த்துகள்
பட்டியலிடப்பட்ட புதுமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!கலக்குங்க!!!
ReplyDelete// என்னது ஊக்கு 'விற்க' தெரியாதா???
சரி ஒரு hair pin?
அதுவும் தெரியாதா....
சரி ஒரு hair band??
அதுவும் தெரியாதா.... //
அழகா ஆரம்பிச்சி, அருமையா அறிமுகப்படுத்துனீங்க...சரிஈஈஈ......க்ளைமேக்ஸ்ல ஏன் இப்படி க்க்கொலவெறியோட ஒரு மொக்க???
வாழ்த்துக்கள்..
ReplyDeleteநான் 8வது...!
ReplyDeleteநீங்க சொன்னீங்கன்னு போய் பாத்துட்டு வந்துட்டேன்.
எல்லாமே நல்லா இருக்கு!
@தமிழ்மாங்கனி அக்கா,
ReplyDeleteபொடியன் சஞ்சய் இணைய தொடர்புகளற்ற பிரதேசத்தில் இருக்கிறாராம். உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிட சொன்னார். அவர் என்கிட்டே சொல்லி ரெண்டு நாள் ஆகிடுச்சி. நான் சொல்ல மறந்துட்டேன்:)
பதிவு சூப்பர்! புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete@தமிழன்
ReplyDelete//ஆமா ஸ்வேதாவுக்கு கோச்சர் நீங்கதானாமே...:)//
அப்படிலாம் ஒன்னுமில்லங்க... தமிழ்ல எப்படி டைப் பண்ணலாம்னு கேட்டாங்க... கொஞ்சம் சொன்னேன். அவ்வளவு தான்!!
நாலு பேரு நல்லா இருக்கனும்ன்னா...
(பின்னாடி நாயகன் தீம் மியூசிக் கேட்குதா!)
@சீனா
ReplyDelete//கலக்குறீங்க போங்க !
நல்வாழ்த்துகள்//
வாழ்த்துகளுக்கு நன்றி! உங்க வார்த்தைகள் அதிக உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது! நன்றி!:)
@விஜய் ஆனந்த்
ReplyDelete//அழகா ஆரம்பிச்சி, அருமையா அறிமுகப்படுத்துனீங்க...சரிஈஈஈ......க்ளைமேக்ஸ்ல ஏன் இப்படி க்க்கொலவெறியோட ஒரு மொக்க???//
மொக்க எழுத தெரிஞ்சவன் மனிதன்
மொக்க படிக்க்க் தெரிஞ்சவன் பெரிய மனிதன்!
நீங்க பெரிய மனிதன், விஜய்! :))
அவ்வ்வ்வ்வ்......
@நிஜமா நல்லவன்
ReplyDelete//பொடியன் சஞ்சய் இணைய தொடர்புகளற்ற பிரதேசத்தில் இருக்கிறாராம். உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிட சொன்னார். அவர் என்கிட்டே சொல்லி ரெண்டு நாள் ஆகிடுச்சி//
நன்றி:)
//உங்களை பற்றி தமிழ்மாம்பழம் வலைசரத்தில் எழுதி இருக்கிறார்.//
ReplyDeleteஎன்று மேலே இருப்பவர்கள் அனைவருக்கும் போய் ஊக்குவிச்சிட்டு வந்துட்டேன்:)))
தமிழ்மாங்கனி
ReplyDeleteமிக்க நன்றி. (வேறு ஏதாவது வார்த்தை கண்டுபிடிங்கப்பா, 'நன்றி' மட்டும் போதவில்லை.)
//
ReplyDeleteசெல்லமே விஷால், காதல் சந்தியா, பருத்திவீரன் கார்த்தி, பாய்ஸ் சித்தார்த், வாலி ஜோதிகா....//
நீங்க bold பண்ண மிஸ் பண்ணிட்டீங்க. அதை ஞாபகம் படுத்துறேன். :-)
புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். :-)
ReplyDelete//என்னது ஊக்கு 'விற்க' தெரியாதா???
ReplyDeleteசரி ஒரு hair pin?
அதுவும் தெரியாதா....
சரி ஒரு hair band??
அதுவும் தெரியாதா....
:)))))
புதுசா வந்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதகவலுக்கு நன்றி
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
@மை ஃபிரண்ட்
ReplyDelete//நீங்க bold பண்ண மிஸ் பண்ணிட்டீங்க. அதை ஞாபகம் படுத்துறேன். :-)//
ஆரம்பிச்சுட்டாங்கய்யா...
உஷ்...யப்பா.....:))
தமிழ் மாங்கனி . என்ன ஒரு இன்ப ஆச்சர்யம் :) :) ரொம்ப டாங்க்ஸ் என்னஅறிமுகப்படுத்தி ஊக்குவைத்ததுக்கு :)
ReplyDeletehey gaya3,
ReplyDeletethanks for introducing my blog to other bloggers:))
என்னை மறந்ததேன் (அறிமுகப்படுத்த)
ReplyDeleteதமிழே தமிழ் மாங்கனியே!