Friday, August 22, 2008

அழகி- தமிழ் மென்பொருட்களின் மகாராணி...

அழகியின் சிறப்புக்கள்:

அழகி
- புதுமை எளிமை வலிமை
ஒலிபெயர்ப்பு, தட்டச்சு, அச்சு, மின்னஞ்சல், மின்னுரையாடல், வலையாக்கம் - தமிழில்

ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் பெறலாம் - அனைத்து செயலிகளிலும்

உபயோகிப்பாளரின் பெரும் தோழி, அழகி - எல்லா வகையிலும்.

யூனிகோட்-ரெடி. ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 - 3 வகை கீபோர்ட் லே-அவுட்.

அழகியின் ப்ரொஃபஷனல் வெர்ஷன் கொண்டு, யூனிகோடில் கீழுள்ளனவையைச் செய்யலாம்:

தமிழில் தேடு/மாற்று (Find/Replace) - நேரடியாக Word, Excel, Powerpoint etc. செயலிகளில்.

தமிழில் வரிசைப்படுத்துதல் (Sorting) - நேரடியாக Excel, Access போன்ற செயலிகளில்.

கோப்புகள் (files) / டைரக்டரிகள் (folder) பெயர் தமிழில்

உங்கள் அஞ்சல்களைப் பார்க்க, WinXP/2K உபயோகிப்பாளர்கள் ஃபான்ட் ஏதும் பதிய வேண்டாம்.

உலகின் முதலாம் 'இரு திரை' தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்

ஈடிணையில்லா ஆங்கிலம்-தமிழ் சொல் இணைப்பு. உ-ம்: 'ஸ்ரீ' என்று டைப் செய்ய, sri, sree, shri, Mr என்று எப்படி வேண்டுமானாலும் டைப் செய்யலாம்

ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே டைப் செய்யலாம். உ-ம்: 'dear', 'easy', 'meals', 'queen' etc. 'diyar', 'eesi' etc. என்று டைப் செய்யத் தேவையில்லை.

அழகியின் flexibility பற்றி பல உதாரணங்களுடன் விளக்கம் காண, இங்கே சொடுக்கவும்.

தமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலியிலும்
MS-Word, Excel, Powerpoint, Access, Pagemaker, Photoshop, Outlook Express, Hotmail, MSN Messenger போன்ற எல்லா செயலிகளிலும் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு செய்யலாம்.

அனைத்து இலவச திஸ்கி[Tscii], டாப்[Tab] மற்றும் யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்கலாம்.

உங்கள் தமிழ் ஆக்கங்களை திஸ்கியிலிருந்து தாப் (TAB) எழுத்துருக்கு மாற்றம் செய்யலாம்.

அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரே ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.

நேரடியாக யூனிகோடில் ஒலிபெயர்ப்பு/தட்டச்சு (in WinXP/2K)

யூனிகோட் ஆற்றலினால்,

விண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சலை, ஃபான்ட் ஏதும் பதியாமலேயே பார்க்கலாம்.

தமிழில் Find/Replace - நேரடியாக Word, Excel etc. செயலிகளில் - சரளமாகச் செய்யலாம்.

தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.

உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் !!!

யூனிகோட் மாற்றி, 'Bulk Unicode Convertor' (multiple files converter) உட்பட.

இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு
(both Tscii/Unicode compliant) - வலைதளங்கள் அமைக்க.


மூன்று வகை கீ-போர்ட் லேஅவுட் - ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99
தமிழ்-ஆங்கிலம்-தமிழ் என்று கலப்பு ஒலிபெயர்ப்பு/தட்டச்சு.

தமிழில் சொல் எண்ணிக்கை (Word count).

நீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம் : வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் ஒலிபெயர்க்கலாம். மீண்டும் டைப் அடிக்க வேண்டியதில்லை.

மாற்று ஒலிபெயர்ப்பு - தமிழில் டைப் செய்து, ஆங்கிலத்தில் பெறலாம்.

தமிழ் எண்களை டைப் செய்யலாம்.

சமிஸ்கிருத எழுத்துக்களை டைப் செய்யலாம் - 'ஜ', 'ஷ', 'ஸ்ரீ', ... .

தமிழ் கற்க/கற்பிக்க, 'சிறுவர் கீ-பாட்' உண்டு.

மென்பொருளுடன் உள்ளடங்கிய முழுமையான, தெள்ளத் தெளிவான உதவிக்கோப்புகள்.

அழகி பெற்ற விருதுகள்.

5 comments:

  1. அழகி பதிவு அழகு.....ஆனாலும் அதன் முழுமையான அழகு அழகியைப் படைத்தவர் விஷியைப் பற்றியும் எழுதியிருந்தால் முழுமையடைந்திருக்கும்......என்ன?விஷி அவர்களுக்குத் தனியாக ஒரு பதிவு போடப்போகிறீர்கள் என்று நினைக்கிறேன்.....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. அன்புள்ள அருணா,

    படைப்பாளியை விட படைப்பே சிறந்தது, போற்றப் பட வேண்டியது என்று நினைப்பவர் என்/நமது அன்பு நண்பர் திரு விஸ்வநாதன்/விஷி அவர்கள்.

    ஆரம்பத்தில் இவரைப் பற்றித் தான் நான் அதிகமாக எழுதி வந்தேன்.

    ஆனால, தனக்கு பாராட்டோ அனுதாபமோ வேண்டாம், தன்னுடைய படைப்பு தன்னை வெல்ல வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் இவர் என்று பிறகு தான் புரிந்து கொண்டேன்.

    பகவத் கீதை எழுதயது யார் என்று கேட்டால் பலரும் உடனடியாக " கண்ணன்" என்று சத்தமாக சொல்லுவார்கள். இன்று கோகுலாஷடமி/கிருஷ்ணஜயந்தி. ஆதலால் அந்த பலரும் இன்று இன்னமும் சத்தமாக உறுதியாக கண்ணண் தான் பகவத் கீதை எழுதியது என்பார்கள்.

    பகவத் கீதை எழுதியது வியாசர் மகிர்ஷி என்பதை இந்த மானுடம் மறக்கும் அளவிற்கு தனது படைப்பை படைத்துள்ளார் அந்த மாபெரும் படைப்பாளி.

    அருஜுன உவாசா, கிருஷணா உவாசா.. என்றே செல்லும் பகவத் கீதையில் வியாசர் மகிர்ஷி என்ற பெயர் அப்படியே ஒளிந்து கொண்டது.

    இது தான் வியாசர் என்ற படைப்பாளியின் வெற்றி. படைப்பு வாசகனையும் படைப்பாளியையும் விட உயரவைத்து வெற்றியடைந்தவர் வியாசர் மகிர்ஷி.

    அப்படிப் பார்க்கப் போனால் நண்பர் விஷி இந்த காலத்தில் வாழும் ஓர் வியாச முனிவர் தான்.

    அருணாவிற்கு திரு விஷி மீதுள்ள அன்பை நான் மதிக்கிறேன், அதில் பெருமைப்படுகிறேன். அவர் சம்மதித்தால் அவரைப் பற்றி நிச்சயம் வலைச்சரத்திலே உங்கள் ஆசைப்படி எழுதிகிறேன். மேகத்தைப் பற்றி வர்ணனை மயிலுக்கு எப்போதும் மகிழ்ச்சியே!

    நல்லவர்களை வாழ்த்த வேண்டும். இது இந்த மண்ணின் பெருமையான போற்றுதலுக்குறிய நற்குணம். அது உங்களிடம் உள்ளதில் மகிழ்கிறாது என் மனம்.

    வாழ்த்துக்கள்

    பாசமுடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  3. அருமை நண்பர் விஷியைப் பற்றிஅய் பதிவென நினைத்தேன். ஆனால் அவரது அரிய கண்டுபிடிப்பான அழகியினைப் பற்றிய பதிவு. அக்டோபர் 2003ல் அழகியினை தரவிறக்கம் செய்தேன். தமிழ் மென்பொருளின் தேவை இல்லாத காரணத்தால் அதிகம் பயன் படுத்த வில்லை, இப்பொழுது மறுபடியும் பயன் படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.

    நண்பர்களே ! - விஷியைப் பற்றி சுரேஷ் அறிமுகப் படுத்தவில்லை எனினும் அவரது அரிய கண்டுபிடிப்பினை நாம் அறியக் கொடுத்ததற்கு பாராட்டுகள்

    ReplyDelete
  4. பின்னூட்டமிட்ட அருணாவிற்கு சீனா ஐயாவிற்கும் நன்றிகள் பல..

    அன்பர்களின் ஆசைப்படி நண்பர் விஷியைப் பற்றின பதிவினை வலைச்சரத்தில் இட்டுள்ளேன்.

    அன்புடன் என் சுரேஷ்

    ReplyDelete
  5. படைப்பாளியை விட படைப்பே சிறந்தது, போற்றப் பட வேண்டியது என்று படைப்பாளிகள் நினைக்கலாம்...ஆனால் படைப்பினால் பயன்பெறும் நாம் படைப்பாளியை மறந்து விடக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.என் கருத்துக்கு மதிப்பளித்து திரு.விஷி பற்றி பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.
    அன்புடன் அருணா

    ReplyDelete