வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Thursday, August 21, 2008
முத்துச்சரம்
"ராமலகஷ்மி" என்பவர் தனது சிந்தனைச் சிப்பியிலிருந்து சிதறி விழும் எண்ண முத்துக்களை சேகரித்து சரமாக கோர்த்தளிக்கும் ஒரு வலைப்பூவை வைத்திருக்கிறார்; அதன் இனிய பெயர் "முத்துச்சரம்" - விலாசம் http://tamilamudam.blogspot.com
தன்னைப் பற்றி அவரது வலைப்பூவில் இப்படி குறிப்பிட்டுள்ளார். வாசிக்க மிகவும் இன்பமாக இருந்தது.
Interests
=========
Browsing in the net, Photography, கவிதைகள்
Favorite Music
==============
வாலி-கண்ணதாசன் வரிகளில் MSV வைரமுத்துவின் வரிகளை இழைக்கும் இளையராஜா;AR ரஹ்மான் மற்றும் இன்றைய பல இளம் கவிஞர்களின் வரிகளை மெருகேற்றி melodious மெட்டுக்களாகத் தரும் பலரின் இசை. அந்த வரிசையில் சமீபத்தில் கருத்துக்காகவும் விரும்பிக் கேட்கும் திரைப்பாடல்: "கடவுள் தந்த அழகிய வாழ்வு" படம்:மாயாவி
Favorite Books
==============
படித்ததில் வியந்தது:பாரதியார் பாடல்கள் பிடித்துப் படிப்பது: வைரமுத்து கவிதைகள் என்றும் பிரமிப்பது:திருக்குறள் ரசித்துப் படித்தவை:-எழுபதுகளில் அப்புசாமி சீதாப் பாட்டி முத்து & இந்திரஜால காமிக்ஸ் துப்பறியும் சங்கர்லாலும் தமிழ்வாணனும் -எண்பதுகளிலும் தொன்னூறின் தொடக்கங்களிலும் தொடராக வெளிவந்த சுஜாதா;ஸ்டெல்லா ப்ரூஸ்;பாலகுமரன் நாவல்கள் -தற்சமயம் S.ராமக் கிருஷ்ணனின் எழுத்துக்கள்.... என முடிக்கிறார், வலைப்பூவில் குறிப்பிட்ட அந்த பகுதியில் அதற்குமேல் எழுத இடம் இல்லை என்ற ஒரே காரணத்தால்!!!
மீண்டும் வலைப்பூவை கூர்ந்து கவனத்த போது சேகரித்த தகவல்கள்:
திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து, தற்போது பங்களூரில் வாழ்ந்து வரும் ராமலக்ஷ்மி இந்த வலைப்பூவில் குறைவானப் பதிவுகள் தான் பதிவு செய்திருக்கிறார் என்றாலும் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக ஒன்றுக்கு ஒன்று போட்டி போடும் அளவிற்கு அருமையாக உள்ளது.
1987 ஆம் வருடத்திலேயே இவருடைய பகிர்வு குங்குமத்தில் வெளிவந்து, அந்த மகிழ்ச்சியை பெற்றவர் இவர்.
வலைச்சர ஆசிரியராக இருக்கும் இந்த வாரத்தில் தான் நான் இவருடைய பின்னூட்டம் கண்டு, இவருடைய வலைப்பூ சென்று பார்த்தேன். இவரோடு தொடர்பு கொண்டு சின்ன ஒரு தொலைபேசி உரையாடல் முடித்த பின்னர் இவரைப் பற்றி எழுதலாமே என்று எனக்குத் தோன்றினது. ஆனால் என்னிடம் அவருடைய தொலைபேசி எண்களோ, மின்னஞ்சல் முகவரியோ, இரண்டிற்கும் மேலாக எனது நேரமோ இல்லை என்பதால் இவரின் வலைப்பூ பற்றியும் இவரைப் பற்றியும் நான் வலைப்பூவிலிருந்து வாசித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், இதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
ஒரு நல்ல எழுத்தாளரின் வலைப்பதிவுகளை வெறும் சுட்டியை மட்டும் போட்டுவிட்டு செல்வதில் ஏனோ எனக்கு பெரிய அளவு ஈடுபாடில்லை.
சுட்டிகளை தட்டி பிறகு அதிலிருந்து வேறொன்று, இன்னொன்று என்று வாசகர்கள் சென்று வலைச்சரத்தின் இந்த வேர்களை மறந்து போகக்கூடாது என்பதால் நான் வெறும் சுட்டிகளை இட்டுவிட்டு சென்று விடுவதில்லை. அந்த மரியாதையை இந்த எழுத்தாளருக்கும் அளிப்பதில் நான் பெருமைப்படுகிறேன், நண்பர்களே!
காலைக் கதிரவனை இந்த கவிஞர் எப்படிப் பாடுகிறார் என்று பாருங்கள், அவருடைய இந்த அழகிய கவிதையில்:
காலைக் கதிரவனே, எம்
கண்ணின் ஒளி நீயே!
வேலையேதும் நடப்பதில்லை, நீ
வெண்கதிர் வீசி வாராயெனில்!
புத்தம்புது ஒளி வெள்ளமென
நித்தம் நீ தோன்றியே
வித்தைகள் பல புரிகின்ற
விந்தையை என் சொல்வேன்!
உறக்கம் நீங்கியதும் உலகமெலாம்
உற்ற துணைவனாம் உன்வரவை
உவகையுடன் நாடி நிற்கும்
உன் பெருமைதான் என்னே!
நீயில்லாது இயங்காது நானிலமே
நீவாராது வாழாது வையகமே!
விண்ணிலே உதிக்கின்ற பொன்னொளியே
மண்ணினை வாழவைப்பாய் உன்னொளியால்!
தங்கமென நீ மிளிர்ந்து
தாமரையை மலர வைக்கையில்
வைரமெனவும் நீ ஒளிர்ந்து
வாழ வைப்பாய் எங்களையும்!
1985-ல் கவிஞர் கண்ட காலைக் கதிரவனை அப்போதே (இளங்கலை இறுதி ஆண்டில் இருந்த போதே) இந்த கவிதை வரிகளுக்குள் பதியவைத்து அக்கவிதையை அவர் பயின்ற திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளிவரச்செய்து மகிழ்ந்தவர் இவர்.
இவருடைய வலைப்பூவை நீங்களும் வாசித்து உங்களுடைய இனிய பின்னூட்டங்களை இடவும். நிச்சயம் நீங்கள் இவர்களுடைய எழுத்துக்களை ரசிப்பீர்கள், இது நிச்சயம்.
இணையதள் இதழ்களில் ஏறத்தாழ எல்லாவற்றிலும் இவருடைய படைப்புகள் வந்துள்ளது. நல்ல புகைப்படக் கலைஞர், கவிஞர், சிறுகதை வடிப்பவர், என பன்முகம் கொண்ட இவரை கௌரவப்படுத்துவதில் நான் மகிழ்கிறேன்.... இதை வாசிக்கும் நீங்கள் ???????????
??????????? - களின்
!!!!!!!!! - பதில்களை எதிர்பார்த்து
இந்த வார வலைச்சர ஆசிரியர்
என் சுரேஷ்
ஒரு திறமைசாலியை இங்கு மீண்டும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சுரேஷ்! வலைசர ஆசிரியர் ஆனதையெல்லாம் சொல்றதில்லயா எங்ககிட்ட?:)
ReplyDeleteநான் சற்றும் எதிர் பாராதது. மிக்க நன்றி சுரேஷ். இன்னும் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்கிற ஊக்கத்தைத் தந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteசகோதரி ராமலக்ஷ்மியின் பதிவுகளை நான் தொடர்ந்தும் வாசித்து வருகிறேன். அவரது 'திண்ணை'ப்பதிவு அவரது எழுத்துத்திறமைக்கு இன்னுமொரு சான்று.
ReplyDeleteஅன்பினிய ஷைலஜா,
ReplyDeleteகவிதைகளால் நாம் ஒருவருக்கொருவர் எத்தனை காலமாக பேசி வருகிறோம். இதுவரை நான் சந்திக்காத நண்பர்களில் நீங்கள் கூட இருக்கிறீர்களே !!!
ஒருவாரத்திற்கு ஆசிரியர் என்று வந்திருக்கும் இப்பதவியிதை முரசடித்து சொன்னால் நீங்களே அதை விரும்பமாட்டீர்கள் - ஆதலால் சொல்லவில்லை.
இருப்பினும் ஆசிரியர் என்ற இந்த பணி அவ்வளவு எளிதல்ல என்பதை ஒருமுறை கூட உறுதியாக உணர்ந்து வருகிறேன். இன்னமும் இரண்டு நாட்கள் எனது சேவை இந்த வலைச்சரத்தில் தொடரும்
ராமலக்ஷ்மி அவர்களை நான் அறிமுகப்படுத்தவில்லை; அதற்கு தேவையும் இல்லை. நான் அவருடைய படைப்புகளை போற்றினேன், அவ்வளவு தான்!
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, ஷைலஜா!
பாசமுடன்
என் சுரேஷ்
பின்னூட்டத்திற்கு நன்றி ரிஷான்.
ReplyDeleteஅன்புடன்
என் சுரேஷ்
சுரேஷ்,
ReplyDeleteராமலஷ்மி அவர்கள் பற்றி அழகாக எடுத்து எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை, அறிமுகப் படுத்தவில்லை, அவர்கள் எழுத்துக்களைப் போற்றியிருக்கிறீர்கள். இதற்கு ஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய் ...
//லைப்பூவில் குறைவானப் பதிவுகள் தான் பதிவு செய்திருக்கிறார் என்றாலும் //
ஆனால் கை வசம் நிறைய வைத்திருக்கிறார் என மேலே இருக்கும் படம் ஒரு சாட்சி போலக் கூறுகிறது :)) எல்லாவற்றையும் வலை ஏற்ற வாழ்த்துகிறோம்.
காலை வேளையிலே என் கவிதையாகிய காலைக் கதிரவனை இப்பதிவிலே நீங்கள் வெளியிட்ட நேரம்.. அக்கவிதையுடன் வெளியாகியிருந்த காலைக் கதிரவன் புகைப் படம் PiT மெகா புகைப்படப் போட்டி முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சுரேஷ்.
ReplyDeleteஷைலஜா, ரிஷான், சதங்கா ஆகியோருக்கும் என் நன்றி.
நன்றி! சுரேஷ் நீங்கள் ராமாஷ்மியின் எழுத்தாற்றலைப் போற்றிய நேரம்...அவர் இம்மாத பிட் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ராமலஷ்மி!!!
எனது ஒவ்வொரு பதிவையும் ஆரம்பத்திலிருந்து விடாமல் படித்து பின்னூட்டங்கள் மூலம் உற்சாகமும் ஊக்கமும் அளித்து வரும் நானானி அவர்களின் வாழ்த்துக்களை இங்கும் வணங்கி ஏற்கிறேன்.
ReplyDeleteஉண்மையிலேயே நீங்கள் தேர்ந்தெடுத்தற்கு முற்றிலும் தகுதியானவரே ராமலக்ஷ்மி அவர்கள்.
ReplyDeleteதினம் ஒரு பதிவு போடும் பதிவுலகிலே பொறுமையாக ஒரு பதிவு எழுதினாலும் சிறப்பான பதிவாக எழுதுபவர். ரிஷான் அவர்கள் கூறியது போல இவரின் எழுத்து திறமைக்கு "திண்ணை" பதிவு ஒன்றே போதுமான சாட்சி.
இவை தவிர எனக்கு இவரிடம் கவர்ந்தது எளிமையான நடையில் எழுதும் கவிதைகள், அனைவருக்கும் புரியும் வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் எழுதும் இவரது கவிதைகளே என்னை மிக கவர்ந்தது. எந்த ஒரு அலங்கார ஆடம்பர வார்த்தைகளும் இல்லாமல் இயல்பான எழுத்துக்கள்.
ராமலக்ஷ்மி அவர்கள் குறைந்த பதிவுகள் எழுதினாலும் தொடர்ந்து இதை போல சிறப்பான பதிவுகள் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்.
அன்புடன்
கிரி
கிரி, உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொறுப்புணர்ச்சியுடன் செயல் படுவேன். தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து என்னை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தாங்கள் இடும் பின்னூட்டங்களுக்கும் இங்கு என் நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
ReplyDeleteஅன்புள்ள சதங்கா,
ReplyDelete//ஆனால் கை வசம் நிறைய வைத்திருக்கிறார் என மேலே இருக்கும் படம் ஒரு சாட்சி போலக் கூறுகிறது :)) எல்லாவற்றையும் வலை ஏற்ற வாழ்த்துகிறோம்.//
அடுத்தவர்களை வெற்றியடையச் செய்து மகிழும் உங்கள் உள்ளம் கண்டு மகிழ்கிறேன். பாராட்டுகிறேன்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
என் சுரேஷ்
அன்பினிய ராமலக்ஷ்மி அவர்களே,
ReplyDelete//புகைப் படம் PiT மெகா புகைப்படப் போட்டி முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சுரேஷ்.//
சந்தோஷத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, நானும் மகிழ்கிறேன்.
இந்த இனியச் செய்தியை நான் உங்களுடைய வலைச்சரத்தைலேயே கண்டேன். சில புக்கைப்படங்களை எடுத்து வலைச்சரத்திலும் இட நினைத்தேன்.
ஆனாலு அங்கு வந்து பார்பப்வர்களுக்கு நான் சொல்லாத பல இருக்கவேண்டும் என்று அந்த புகைப்படங்களை போடாமல் விட்டு விட்டேன்.
புகைப்படத்திலும் நல்ல திறமை உள்ள உங்களை நான் மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
இறைவன் உங்களை தொடர்ந்து ஆசீர்வதிக்க என் இனிய பிரார்த்தனைகள்.
அன்புடன்
என் சுரேஷ்
அன்புள்ள நானானி அவர்களே,
ReplyDelete//நன்றி! சுரேஷ் நீங்கள் ராமாஷ்மியின் எழுத்தாற்றலைப் போற்றிய நேரம்...அவர் இம்மாத பிட் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறார்.
வாழ்த்துக்கள் ராமலஷ்மி!!!//
மிக்க நன்றி.
மிகவும் சந்தோஷமடைகிறேன்.
வாழ்க வளமுடன்
அன்புடன் என் சுரேஷ்
அன்புள்ள கிரி அவர்களே,
ReplyDeleteநல்லதோர் பின்னுட்டமிட்டு இந்த கவிஞரை வாழ்த்தியமைக்கு என் சார்பில் நன்றி சொல்கிறேன்.
அன்புடன்
என் சுரேஷ்
அன்பின் சுரேஷ்
ReplyDeleteராம்லக்ஷ்மி நான் விரும்பிப் படிக்கும் ஒரு வலைப்பூவின் உரிமையாளர். பன்முகம் கொண்டவர். பல்வேறு இதழ்களில் பலகாலமாக எழுதுபவர். தொடர்பு கொள்ள இயலாவண்ணம் - தொலைபேசி எண்ணோ, மின்னஞ்சல் முகவரியோ கொடுக்காதவர்.
அவரை வலைச்சர ஆசிரியராக்கி மகிழ வேண்டும் என்ற எனது நீண்ட நாளைய அவா இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது
நல்வாழ்த்துகள் ராம்லக்ஷ்மிக்கும் சுரேஷிற்கும்
ஒருவரைப் பற்றி ,ஒருவர் பாராட்டினாலும் ,அதை ஆமோதித்து வந்து விழும் அப்ளாஸ்கள்தான் அவரது புகழை மேன்மேலும் உயரே எடுத்துச் செல்கிறது.அந்த வகையில் ராமலஷ்மிக்கு அணியப்பட்ட புகழாரம் அத்தனையும் போலி அல்லாத, ஜொலிக்கும் முத்துக்கள்.வளர்க அவரது எழுத்துப் பணி,புகைப்படம் எடுக்கும் பணி
ReplyDeleteஎனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவதாகச் சொல்லியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்களை வணங்கி ஏற்கும் நான்
ReplyDelete////தொடர்பு கொள்ள இயலாவண்ணம் - தொலைபேசி எண்ணோ, மின்னஞ்சல் முகவரியோ கொடுக்காதவர்.// என்கிற தங்கள் வருத்தத்துக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை.
http://blogintamil.blogspot.com/2008/08/blog-post_03.html
நானானி அவர்களது இந்த வலைச்சர நன்றியுரை பதிவின் கடைசிப் பின்னூட்டமாக நான் கூறியிருந்த பதிலைத் தாங்கள் பார்த்தீர்களா என்று தெரியாது. இதோ இன்றே உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.
அதே பத்திரிகை இணைய இதழ்களில் எழுதி வந்தமையால் என் ஆரம்பக் கால எழுத்துகள் அத்தனையும் பரிச்சயமான கோமாவின் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்!
சுரேஷ் உங்களுக்கும் மறுபடி என் நன்றிகள்!
முந்தைய பின்னூட்டத்தில் முதலிரண்டு பத்திகள் சீனா சாருக்கான பதில்:)!
ReplyDelete